Friday, July 10, 2009

ஆ”நொ”ந்த விகடன்......ஒரு விமர்சனம்....(காரமான)

விகடன்...நூற்றாண்டை நெருங்கும் பாரம்பரியமான பத்திரிக்கை நிறுவனம்...இதன் ஒரு கிளையான ஜீனியர்விகடன் “தமிழ் மக்களின் நாடிதுடிப்பு”என்று விளம்பரபடுத்துகிறார்கள்...ஆனால் உண்மையில் ......

ஒரு தவறான திரைப்பட விமர்சனத்திற்காக வருந்தி “சினிமா விமர்சனம்’பகுதியையே சில காலம் மூடி வைத்திருந்தார்கள்..பின் ஷங்கரின் பாய்ஸ் படம் குப்பையென்று “சீ” என்று முதல் பக்கத்தில் விமர்சனம் செய்தார்கள்..
ஆனால் அந்த தகுதி விகடனுக்கு இருக்கிறதா? என்றால்...பெரிய கேள்விகுறிதான் மிஞ்சுகிறது...

ஆனந்தவிகடனைக் கூட விட்டுவிடலாம்...தூக்கி எறிந்து விடலாம்..இப்பல்லாம் விகடன் வரவில்லையென்றால் கூட மனசு படிக்க அலைவதில்லை(முன்பு தேடி போய் வாங்கி வரத் தூண்டும்)அப்படியே படித்தாலும் முழுவதும் (அட்டை டூ அட்டை சொத்தை) படிக்க முடிவதில்லை..அலுத்துப் போன செய்திகள்..சுவாரசியமே இல்லாத நடை...சினிமா பேட்டிகள் இன்னும் சுத்தம்(உதா”ரணம்”)இந்த வாரம் வேட்டைக்காரன் பட தகவல்கள்)..முடிவில் ட்விஸ்ட் இருக்கும் ஒரு பக்க கதைகள்,பரிகாரம்போல் கொஞ்சம் ஆன்மீகம்....

இன் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே வாசகர்களுக்கு இணையம் மூலம் தெரிந்த செய்திகள்(கமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு)..கொஞ்சம் அரசியல்(அதிலும் கருணாநிதியை தாக்குவதிலும்,ஆதரிப்பதிலும் இவர்களின் ஊசலாட்டம் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது..சரி பத்திரிக்கைதான் இப்படி என்றால் தொலைகாட்சி தொடர்கள்....கேவலத்தின் உச்சம்.....

சினிமாவை சீரழித்தவர்கள் மார்க்கெட்(டு) போனதும் சீரியல் என்ற சீரழிவை ஆரம்பித்தார்கள்.. சென்சார் ஒன்று சின்னத்திரைக்கு இல்லாததால் சீரழிவு தொடங்கியது..ஏவிம் வியாபர நிறுவனம்,,அது வும் தயாரிப்பில் இறங்கியது..நம்பிக்கை,நிம்மதி என்று பாசிட்டிவாக தலைப்பு இருக்கும்..கதை..அதே குடி கெடுக்கும் கதைதான்...அந்த சேற்றில்தான் விகடனும் விழுந்தது...முதலில் ஓரளவு தரமான (ஆனந்த பவனம்)கதைகளை கொடுத்தவர்கள் பின் ரேட்டிங் மாயையில் சிக்கி ”கல்சுரல் அசாசினேஷனை ”ஆரம்பித்தனர்...நான்கு வருடங்களுக்கும் மேல் வரும் “கோலங்கள்’ என்ற தொடரை ஒரு அரை மணி பார்த்தால்”முழுக்க,முழுக்க விபசாரம்’ செய்வதையே தொழிலாக கொண்ட ஒரு குடும்பத்துடன் நம் பொழுது கழிந்த உணர்வே உண்டாகிறது.. அம்மா,மகன்.அப்பா,மகள் இவர்களைத் தவிர யாரும்,யாருடனும் புணரலாம் என்கிறது அந்த கதை..

அந்த வரிசையில் இப்போது திருமதி செல்வம் என்ற இன்னொரு குப்பை...உணவுடன் சிறிது சிறிதாக மலத்தை சேர்த்து உண்டு வந்தால் கொஞ்ச நாளில் மலமே உணவாகி விடும்..அது இல்லாமல் உணவு சுவையாயில்லை என்றே தோன்றும்..டிவி சிரியல்களும் அப்படித்தான் ஆகிவிட்டது...

சராசரி இரத்த அழுத்த விகிதம் 80/120...இன்றைய வாழ்க்கை முறையில் 100/140 ..வரை நார்மல்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..ஆனால் நீங்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னும்,பின்னும் இரத்த அழுத்தத்தை சோதித்தால் தெரியும்..எந்த அளவிற்கு இவை பாதிப்பை ஏற்பத்துகிறது என்பது..

அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான்,சம்பந்தி என்று சொந்தங்களுடன் இந்த எபிசோட் கண்ரவிகளை பார்த்தால்,,,தற்செயலாக யாருக்காவது எதாவது பிரச்சனை வந்திருந்தால் கூட..இவன் தான் காரணமாயிருக்குமோ..இவள்தாள் சூன்யம் வச்சுட்டாளோ என்றெல்லாம் கூட உறவுகளை யோசிக்க வைக்கும்

ஜீனியர்விகடனில் வரும் கொலை,கற்பழிப்பு,பாலியல் பலாத்காரங்கள்,கள்ளதொடர்புகள் சம்பந்தப்பட்ட செய்திகளின் முடிவில் ஒரு அறிவுரை இருக்கும்..ஐயோ..இப்படி நடக்கிறதே..இளைய சமுதாயம் சீரழிகிறதே என்ற ஒரு போலி ஓலம் ..உண்மையில் இவை பெருகி போனதுக்கு தொலைகாட்சி தொடர்கள்தான் காரணம் என்று அனைவரும் கூறுகிறார்கள்..
ஆனால் இவர்கள் செய்வது என்ன? தூண்டியும் விடுவார்களாம்,,துப்பறிந்தும் கொடுப்பார்களாம்...எல்லாம் பணம்....நம்பர் 1 ஸ்தானத்திற்கான போட்டியில் ஜெயிக்க வேண்டும்...அது ஒன்றே தான் குறி..இல்லை...வெறி....

இப்ப திரைப்படம் வேறு எடுக்கிறார்கள்...டாஸ்மாக்,பிக்பாக்கெட்,பொறுக்கி...இப்படித்தான் பாத்திர படைப்பே இருக்கிறது...

எதாவது செய்து விட்டு போங்கள்...பத்திரிக்கைகளில் மக்களுக்கு அறிவுரை மட்டும் சொல்லாதீர்கள்..ஆனால் ஒன்று..விபச்சாரம் இதை விட நிச்சயம் இழிவான தொழிலில்லை...

68 comments:

Raju said...

நான் கூட அப்பிடித்தான் நினைக்கிறேன்..!
சும்மா ஒப்பேத்துற மாதிரிதான் தோணுது..!
18 ரூபாய்க்கு ஒரு Worth இல்லாத மாதிரிதான் தோணுது..!
அதுலயும் இன்பாக்ஸ் சுத்த வேஸ்ட்டு..!
பொக்கிஷம் ஓரளவு பரவாயில்லை..

Kumar.B said...

விகடன் பற்றி கமெண்ட் எழுதனும் வெயிட் பண்ணிஇட்டு இருந்தேன். இப்ப வர்ற விடகன் குப்பை. ஒன்னும் இல்ல . waste of time and waste of money. i fully agree your comment about vikatan. right now they only filling up the pages.

Bleachingpowder said...

//ராதிகா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒழுக்கமும் இல்லாதவர்கள்//

இந்த வரிக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். தனிப்பட்டவருடைய ஒழுக்கத்தை விமர்சிக்க இங்கே யாருக்கும் தகுதியில்லை.

//இப்ப திரைப்படம் வேறு எடுக்கிறார்கள்...டாஸ்மாக்,பிக்பாக்கெட்,பொறுக்கி...இப்படித்தான் பாத்திர படைப்பே இருக்கிறது...

எதாவது செய்து விட்டு போங்கள்...பத்திரிக்கைகளில் மக்களுக்கு அறிவுரை மட்டும் சொல்லாதீர்கள்..ஆனால் ஒன்று..விபச்சாரம் இதை விட நிச்சயம் இழிவான தொழிலில்லை...//

நெத்தியடி. விகடன் அதனுடைய பாரம்பரியத்தை இழந்த பல வருடங்கள் ஆயிற்று. இப்பொழுது அவர்களது ஒரே குறிக்கோள் பணம். ஷங்கர் என்ன தான் மசாலா படம் எடுத்தாலும், அவர் தயாரிக்கும் படங்களில் ஒரு தரம் இருக்கும். ஒரு கமர்சியல் இயக்குனர்க்கு இருக்கும் சமுதாய உணர்ச்சி கூட விகடனுக்கு இல்லாமல் இருப்பது கேவலம்.

தராசு said...

உள்ளேன் ஐயா,

ராதிகாவைப் பாற்றிய அறிமுகத்தை தவிர்த்திருக்கலாமே

மணிஜி said...

நான் விகடனுக்கு எதிரியில்லை...
ஆனாலும் அவர்களின் சிந்தனை,படைப்பு(தொலைகாட்சியில்)
பார்வையாளானைஒரு அதிர்ச்சி உறை நிலையிலேயே வைத்திருந்து பணம் பண்ண துடிக்கிறார்கள்(சுமார் 5 லட்சம் வரை ஒரு எபிசோடுக்கு),,நன்றி டக்ளஸ்.. குமார்..

மணிஜி said...

////ராதிகா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒழுக்கமும் இல்லாதவர்கள்//

இந்த வரிக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். தனிப்பட்டவருடைய ஒழுக்கத்தை விமர்சிக்க இங்கே யாருக்கும் தகுதியில்லை.//

தொடர்களீல் வரும் பாத்திர படைப்பை போல் தானே அவர் தனிப்பட்ட வாழ்க்கையும்..ராதிகாவை அந்த அடிப்படையில்தான் சொன்னேன்..அது உண்மைதானே....(உன் குழந்தையும்,என் குழந்தையும் நம் குழந்தையோடு விளையாடி கொண்டிருக்கிறார்கள்)

மணிஜி said...

/ஷங்கர் என்ன தான் மசாலா படம் எடுத்தாலும், அவர் தயாரிக்கும் படங்களில் ஒரு தரம் இருக்கும். ஒரு கமர்சியல் இயக்குனர்க்கு இருக்கும் சமுதாய உணர்ச்சி கூட விகடனுக்கு இல்லாமல் இருப்பது கேவலம்.//

அருமையான வரிகள்..சுட்டி எழுதியமைக்கு நன்றி பிளீச்சிங்..

ramalingam said...

இந்த லட்சணத்தில் ஆன்லைனில் பணம் கட்டிப் படிக்க வேண்டுமாம். இதைப் படிக்காவிட்டால் குடிமுழுகிப் போகாது. படித்தால்தான் குடிமுழுகிப் போகும்.

மணிஜி said...

//உள்ளேன் ஐயா,

ராதிகாவைப் பாற்றிய அறிமுகத்தை தவிர்த்திருக்கலாமே//

விகடன் போன்ற பாரம்பரியம் மிக்கவர்கள் சமுதாய சிந்தனை இல்லாமல் மீடியாக்களில் இயங்குகின்றனர்...ராதிகா போன்றவர்கள் செய்வார்கள்...அவர்கள் செயலுக்கு அவரின் பர்சனல் வாழ்க்கை ஒரு ஜஸ்டிஃபிகேஷன்..அதனால் தான் குறிப்பிட்டேன்..இதில் தவறு இல்லை என்றுதான் நினைக்கிறேன்..நன்றி தராசு...

வால்பையன் said...

//ராதிகா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒழுக்கமும் இல்லாதவர்கள்//

இது அதிகபடியான வார்த்தைகள்!
ஒழுகத்தின் எல்லைகள்களை வரையுறுக்க நாம் யார்!?

மர்லின் மன்றோ பத்து புருஷன் கட்டினாள்னு அங்கா யாரும் பேசி கொள்வதில்லை, நாம மட்டும் ஏன் இப்படி!

மணிஜி said...

///ராதிகா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒழுக்கமும் இல்லாதவர்கள்//

இது அதிகபடியான வார்த்தைகள்!
ஒழுகத்தின் எல்லைகள்களை வரையுறுக்க நாம் யார்!?

மர்லின் மன்றோ பத்து புருஷன் கட்டினாள்னு அங்கா யாரும் பேசி கொள்வதில்லை, நாம மட்டும் ஏன் இப்படி!//

இங்கொன்றும்,அங்கொன்றுமாய் நிகழ்ந்தவை மாறி...இன்று பத்திரிக்கை முழுவதும் இந்த மாதிரி செய்திகளே ஆக்கிரமித்திருக்கிறது..மீடியாவில் இருப்பவர்களே இதற்கு நிச்சயம் பொறுப்பு..ஆனால் அவர்களே அப்படி இருக்கும் பட்சத்தில் வேறு என்ன மக்களுக்கு சொல்லமுடியும்...இது தப்பே இல்லை என்ற மனோ நிலை மக்களிடம் வேறுன்றுவதற்கு இவர்கள் காரணமாகிறார்கள்..நாம் இங்குதான் வாழ்கிறோம்..மர்லின் மன்றோ தேசத்தில் இல்லை...

வால்பையன் said...

//.நாம் இங்குதான் வாழ்கிறோம்..மர்லின் மன்றோ தேசத்தில் இல்லை... //

அங்கே வாழ்பவர்கள் மனிதர்கள்!
நாம்!?................

Cable சங்கர் said...

தண்டோரா.. எனக்கு கூட ராதிகா பற்றிய தனிப்பட்ட கருத்தை நீக்கிவிடலாம் என்றே தோன்றுகிறது.. மற்றபடி நீங்கள் கூறியது சரியே..

Cable சங்கர் said...

என்ன ஒரு கோயின்
ஸிடென்ஸ்.. நானும் விகடன் பத்தி தான் ப்திவெழுதியிருக்கேன்.

மணிஜி said...

ராதிகாவை பற்றி எழுதியதினால்..விகடன் மீதான விமர்சனம் நீர்த்து போவது போல் தோன்றுவதாலும்,மர்லின் மன்றோ கற்புக்கு களங்கம் வந்துவிடும் அபாயம் இருப்பதாலும் குறிப்பிட்ட வரி நீக்கப்படுகிறது(இது என்ன பட்ஜெட்டா?)

மணிஜி said...

////.நாம் இங்குதான் வாழ்கிறோம்..மர்லின் மன்றோ தேசத்தில் இல்லை... //

அங்கே வாழ்பவர்கள் மனிதர்கள்!
நாம்!?................//

வால்... இங்கு வாழ்பவர்களும் மனிதர்கள்தானே..

வால்பையன் said...

//
வால்... இங்கு வாழ்பவர்களும் மனிதர்கள்தானே.. //

பக்கத்து விட்டை எட்டி பார்ப்பதை தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறோம்!

பத்திரிக்கையில் கூட கிசுகிசு என்றால் ஆர்வம் பொங்குகிறது!

நம்ம டவுசர் கிளிஞ்சி கிடக்குறத பார்க்குறதே இல்ல!

துளசி கோபால் said...

விகடனோ குமுதமோ இல்லை வேற ஒன்னோ.....அட்டையைக் கிளிச்சுட்டா வித்தியாசமே இல்லை.

குப்பைகளைப் படிப்பதை விட்டு வருசங்கள் பல ஆயிருச்சு.

பணம்தான் எல்லாமேன்னு ஆனதுக்கப்புறம் நீதியாவது நேர்மையாவது.....(-:

குடந்தை அன்புமணி said...

அடிமையாகிவிட்ட எந்தவித பழக்கத்திலிருந்தும் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவர முடியாது என்பது உண்மை. பிடிக்கிறதோ இல்லையோ வருகின்ற அத்தனை தொடர்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

நையாண்டி நைனா said...

இன்னும் பச்சை புள்ளையாவே இருக்கீங்க... உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...

மணிஜி said...

//வால்... இங்கு வாழ்பவர்களும் மனிதர்கள்தானே.. //

பக்கத்து விட்டை எட்டி பார்ப்பதை தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறோம்!

பத்திரிக்கையில் கூட கிசுகிசு என்றால் ஆர்வம் பொங்குகிறது!

நம்ம டவுசர் கிளிஞ்சி கிடக்குறத பார்க்குறதே இல்ல!//

அடுத்தவன் டவுசராவது நல்லாயிருக்கட்டுமேன்னுதான்..அப்புறம் நம்ம டவுசர் பின்னால கிழிஞ்சிருக்குன்னு பிறர் சொல்லட்டுமேன்னும் கூட...ஆமாம்..பிரியா இருக்கிங்க போல..

மணிஜி said...

//என்ன ஒரு கோயின்
ஸிடென்ஸ்.. நானும் விகடன் பத்தி தான் ப்திவெழுதியிருக்கேன்.//

உங்களை அங்க சந்திக்கறேன்..

மணிஜி said...

//விகடனோ குமுதமோ இல்லை வேற ஒன்னோ.....அட்டையைக் கிளிச்சுட்டா வித்தியாசமே இல்லை.

குப்பைகளைப் படிப்பதை விட்டு வருசங்கள் பல ஆயிருச்சு.

பணம்தான் எல்லாமேன்னு ஆனதுக்கப்புறம் நீதியாவது நேர்மையாவது.....(-://

வாங்க..நன்றி...எல்லாம் ஒரே குட்டைதான்..

நையாண்டி நைனா said...

/*நம்ம டவுசர் கிளிஞ்சி கிடக்குறத பார்க்குறதே இல்ல!*/

அன்பு வால் அவர்களே.

நம்ம டவுசர் கிளிஞ்சிருக்கிறதை நம்மை விட அடுத்தவன் தான் நல்ல பார்க்க முடியும். நாம திரும்பி பார்த்தா... நம்ம இடுப்பு எலும்பு சுளுக்கிக்கும்.

மணிஜி said...

//அடிமையாகிவிட்ட எந்தவித பழக்கத்திலிருந்தும் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவர முடியாது என்பது உண்மை. பிடிக்கிறதோ இல்லையோ வருகின்ற அத்தனை தொடர்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.//

நன்றி..அன்பு.கருத்துக்கும்,வருகைக்கும்

வந்தியத்தேவன் said...

ஆன்லைன் விகடனில் காமண்ட் என்ற பெயரில் வெளியாகும் சிலரின் கீழ்த்தரமான பின்னூட்டங்கள். ஒரு இனத்தையே ஒருவர் கேலி செய்திருந்தார் அந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கிறார்கள். விகடன் இப்போது செய்வது விபச்சாரமே ஒழிய வேறில்லை.

மணிஜி said...

//இன்னும் பச்சை புள்ளையாவே இருக்கீங்க... உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...//

“பாவம்” ம்ம்ம் எத்தனை அர்த்தம்..ஐயா நக்கலிஸ்ட் வாங்க..

மணிஜி said...

///*நம்ம டவுசர் கிளிஞ்சி கிடக்குறத பார்க்குறதே இல்ல!*/

அன்பு வால் அவர்களே.

நம்ம டவுசர் கிளிஞ்சிருக்கிறதை நம்மை விட அடுத்தவன் தான் நல்ல பார்க்க முடியும். நாம திரும்பி பார்த்தா... நம்ம இடுப்பு எலும்பு சுளுக்கிக்கும்.//

தபால்பெட்டி..

butterfly Surya said...

"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு"

Jackiesekar said...

இன்றளவும் விகடனிடம் பிடிக்காத விஷயம்... பாய்ஸ் படத்தை அவர்கள் விமர்சித்த விதம்தான்...

பதிவின் கடைசிவரை சூப்பர்

அகநாழிகை said...

//வண்ணத்துபூச்சியார் said...
"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு"//


இத.. இதத்தான் நானும் சொல்ல நினைக்கறேன்.

உங்க ஆதங்கம் புரியுது. கவலைப்படாதீங்க தண்டாரோ உங்களோட கதை விரைவில் ஆ.வி.யில் வந்துரும். உள்குத்துக்கு தயாரா இருங்க.

மணிஜி said...

/இந்த லட்சணத்தில் ஆன்லைனில் பணம் கட்டிப் படிக்க வேண்டுமாம். இதைப் படிக்காவிட்டால் குடிமுழுகிப் போகாது. படித்தால்தான் குடிமுழுகிப் போகும்//

உண்மைதான் ராமலிங்கம்..வருகைக்கு நன்றி..

மணிஜி said...

/ஆன்லைன் விகடனில் காமண்ட் என்ற பெயரில் வெளியாகும் சிலரின் கீழ்த்தரமான பின்னூட்டங்கள். ஒரு இனத்தையே ஒருவர் கேலி செய்திருந்தார் அந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கிறார்கள். விகடன் இப்போது செய்வது விபச்சாரமே ஒழிய வேறில்//

அரசியல் தலையங்கம் கூட அவர்கள் எழுத தகுதியில்லாதவர்கள்.வருகைக்கு நன்றி ..வந்திய தேவன்..

மணிஜி said...

/"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

உங்க கிண்டல் எனக்கும் பிடிச்சிருக்கு..
வண்ணத்துபூச்சி..

மணிஜி said...

/இன்றளவும் விகடனிடம் பிடிக்காத விஷயம்... பாய்ஸ் படத்தை அவர்கள் விமர்சித்த விதம்தான்...

பதிவின் கடைசிவரை சூப்பர்//

மாமியாராத்துல விருந்து பலமா?

மணிஜி said...

///வண்ணத்துபூச்சியார் said...
"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு"//


இத.. இதத்தான் நானும் சொல்ல நினைக்கறேன்.

உங்க ஆதங்கம் புரியுது. கவலைப்படாதீங்க தண்டாரோ உங்களோட கதை விரைவில் ஆ.வி.யில் வந்துரும். உள்குத்துக்கு தயாரா இருங்க//

வாசு...போன வாரம் குறும்படம் போட்டாங்க..அதுக்காக எழுதாம இருக்க முயுமா?புத்தகத்தை விட தொலைகாட்சி தொடர் ஏற்படுத்தும் பாதிப்பு?அதை பற்றிய விமர்சனமே இது..

முன்பெல்லாம் “ஆனந்த விகடன் வாசித்தீர்களா?என்ற விளம்பரம் பார்த்திருப்பீர்கள்....இப்பவும் வாசிக்கிறோம்..ஆனால் பழைய நேசிப்பில்லை

நாஞ்சில் நாதம் said...

\\\ முழுக்க,முழுக்க விபசாரம்’ செய்வதையே தொழிலாக கொண்ட ஒரு குடும்பத்துடன் நம் பொழுது கழிந்த உணர்வே உண்டாகிறது.. அம்மா,மகன்.அப்பா,மகள் இவர்களைத் தவிர யாரும்,யாருடனும் புணரலாம் என்கிறது அந்த கதை..

அந்த வரிசையில் இப்போது திருமதி செல்வம் என்ற இன்னொரு குப்பை...உணவுடன் சிறிது சிறிதாக மலத்தை சேர்த்து உண்டு வந்தால் கொஞ்ச நாளில் மலமே உணவாகி விடும்..அது இல்லாமல் உணவு சுவையாயில்லை என்றே தோன்றும்..டிவி சிரியல்களும் அப்படித்தான் ஆகிவிட்டது...\\\


//விபச்சாரம் இதை விட நிச்சயம் இழிவான தொழிலில்லை...\\

நல்ல கருத்துகளை எடுத்துவிட்டு வேண்டாததை விட்டுடுங்க.

துஷ்டரை கண்டால் தூர விலகு.

மணிஜி said...

நாஞ்சில்...உரைக்கரா மாதிரி சொல்லுவோம்..ஏன் தூர விலகணும்...

என்.கே.அஷோக்பரன் said...

ஓம்...ஓம்.... விகடனில் இப்போது பல பக்கங்கள் பிரயோசனமற்றவையாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படத்துறையில் வணிகம் புகுந்ததைப் போல இதழியல் துறையையும் அது கைப்பற்றிக்கொண்டது.

விகடன் தற்போது தடுமாறுகிறது என்பதற்குப் பெரிய உதாரணம் அவர்கள் விகடன் பொக்கிஷம் என்ற பெயரில் பழைய நல்ல படைப்புக்களை மீள்பதிப்பு செய்து பக்கங்களை நிரப்ப முயல்வதிலிருந்து தெரிகிறது - கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் ஏற்பட்ட பஞ்சம் தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மட்டுமல்ல இந்தத் தமிழ் இதழ்களிலும் தென்படுகிறது.

நீங்களாவது பரவாயில்லை வெறும் இந்திய ரூபாய் 18ல் விகடனை வாங்குகிறீர்கள். இலங்கையில் விகடனின் விலை இலங்கை ரூபாயில் 100 (ஏறத்தாழ 40 இந்திய ரூபாய்கள்)! - விலைக்குப் பயனுண்டா என்று கேட்டால் இல்லைதான்.

மேலும் இலங்கையிலிருந்து ஒரு தரமான இதழ் வெளிவருகிறது - பெயர் “இருக்கிறம்” - இதோ அதன் ஒரு பதிப்பின் இணையப்பக்க முகவரியைத் தருகின்றேன் படித்துப்பார்த்துவிட்டுக் கூறுங்கள்.

http://www.scribd.com/irukkiram

மணிஜி said...

/என்.கே.அஷோக்பரன்//

/மேலும் இலங்கையிலிருந்து ஒரு தரமான இதழ் வெளிவருகிறது - பெயர் “இருக்கிறம்” - இதோ அதன் ஒரு பதிப்பின் இணையப்பக்க முகவரியைத் தருகின்றேன் படித்துப்பார்த்துவிட்டுக் கூறுங்கள்.

http://www.scribd.com/irukkiram//

நன்றி நண்பரே..நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..

chennailocal said...

நாயகன் தொடர் ஒரு நல்ல கருத்துல்ல பக்கங்கள் - விகடனில்

நான் எல்லா பல தலைவர்களை பறறி தெரிந்து கொண்டது .
சேகு வாரா , ஃபிடெல் காஸ்ட்றோ , அம்பேக்தார், அன்னை தெரெசா, காரல் மார்க்ஸ், லெனின்.
. இந்த நாயகன் - விகடனை படித்ததுதான்

பல நல்ல செய்திகளை / முற்போக்கு கருத்துக்களை / சிந்தனைகளை சொல்ல வெண்டும் - விகடன்.


ஆனால் நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் நிதர்சனமான உண்மை.

"இன் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே வாசகர்களுக்கு இணையம் மூலம் தெரிந்த செய்திகள்(கமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு)..கொஞ்சம் அரசியல்(அதிலும் கருணாநிதியை தாக்குவதிலும்,ஆதரிப்பதிலும் இவர்களின் ஊசலாட்டம் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது
"

வீரபாகு said...

i am a vikadan fan.....but now days vikadan going worst.....its very bad.

Unknown said...

What you said is really wonderful. Now a days the quality is gone to vikadan.

உண்மைத்தமிழன் said...

ஓ.. இன்னிக்கு காலைலேயே சரக்கடிச்சாச்சா..?

முருகா..!

யூர்கன் க்ருகியர் said...

//சராசரி இரத்த அழுத்த விகிதம் 80/120...இன்றைய வாழ்க்கை முறையில் 100/140 ..வரை நார்மல்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..ஆனால் நீங்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னும்,பின்னும் இரத்த அழுத்தத்தை சோதித்தால் தெரியும்..எந்த அளவிற்கு இவை பாதிப்பை ஏற்பத்துகிறது என்பது..//

எப்படி சோதிப்பது என்பதை இங்க வந்து பாருங்க.
http://inthiyaa.blogspot.com/2009/07/blog-post_10.html

மணிஜி said...

/நாயகன் தொடர் ஒரு நல்ல கருத்துல்ல பக்கங்கள் - விகடனில்

நான் எல்லா பல தலைவர்களை பறறி தெரிந்து கொண்டது .
சேகு வாரா , ஃபிடெல் காஸ்ட்றோ , அம்பேக்தார், அன்னை தெரெசா, காரல் மார்க்ஸ், லெனின்.
. இந்த நாயகன் - விகடனை படித்ததுதான்

பல நல்ல செய்திகளை / முற்போக்கு கருத்துக்களை / சிந்தனைகளை சொல்ல வெண்டும் - விகடன்.


ஆனால் நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் நிதர்சனமான உண்மை.

"இன் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே வாசகர்களுக்கு இணையம் மூலம் தெரிந்த செய்திகள்(கமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு)..கொஞ்சம் அரசியல்(அதிலும் கருணாநிதியை தாக்குவதிலும்,ஆதரிப்பதிலும் இவர்களின் ஊசலாட்டம் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது//


ஓ.பக்கங்களை திடிரென்று நிறுத்தினார்கள்..நாஞ்சில் நாடனும் அப்படித்தான்..நாயகன் நல்லதொடர்தான்..ஆனால் விகடக் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல் குப்பைகளை பற்றிதான் முக்கியமாக இந்த பதிவு..பாரம்பரியம் மிக்க நிறுவனம் இப்படி மட்டமான ரசனையை வளர்க்கலாமா?

மணிஜி said...

நன்றி சிசுபாலன்..மற்றும் விவேக்..

உண்மைதமிழன் அண்ணே..உங்களூக்கு தெளிஞ்சிடுச்சா??இப்பதான் எந்திரிச்சிங்க போல..

சங்கணேசன் said...

இந்த பதிவை பார்த்தாவது ஆவி நிர்வாகிகள் வாசகர்களின் மனதை புரிந்துகொண்டால் சரி...
(பல வருடங்கள் தொடர்ந்து படித்துவந்த நான் ஆவி படிப்பதையே நிறுத்திவிட்டேன்...நம் பதிவர்களின் கதைகள் வெளியான சில இதழ்களை மட்டும் வாங்கினேன்..)

"உழவன்" "Uzhavan" said...

கோலங்கள் எனும் மொக்கைத் தொடருக்காக, என் கண்டனங்கள்.

மணிஜி said...

/இந்த பதிவை பார்த்தாவது ஆவி நிர்வாகிகள் வாசகர்களின் மனதை புரிந்துகொண்டால் சரி...
(பல வருடங்கள் தொடர்ந்து படித்துவந்த நான் ஆவி படிப்பதையே நிறுத்திவிட்டேன்...நம் பதிவர்களின் கதைகள் வெளியான சில இதழ்களை மட்டும் வாங்கினேன்.//

உண்மைதான்...ஆனால் மக்கள் மனசு அவர்களுக்கு புரியுமா?எத்தனையோ புகழ் பெற்ற படைப்புகள்..அவற்றை தொடராக தயாரிக்கலாம்...நன்றி நண்பரே..

மணிஜி said...

/எப்படி சோதிப்பது என்பதை இங்க வந்து பாருங்க.
http://inthiyaa.blogspot.com/2009/07/blog-post_10.html//

பார்த்துட்டு வந்துட்டேன்..நன்றி

Sukumar said...

இப்பதான் முதல் முறையா வலது காலை எடுத்து வச்சி உங்க பதிவுக்கு வரேன்.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கு போங்க....

மணிஜி said...

/இப்பதான் முதல் முறையா வலது காலை எடுத்து வச்சி உங்க பதிவுக்கு வரேன்.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கு போங்க....//

வாங்க..வாங்க..

உண்மைத்தமிழன் said...

///Sukumar Swaminathan July 10, 2009 5:24 AM
இப்பதான் முதல் முறையா வலது காலை எடுத்து வச்சி உங்க பதிவுக்கு வரேன்.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கு போங்க....///

மனுஷனுக்கு கெரகம் இன்னிக்குத்தான் ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம்..!

மணிஜி said...

/மனுஷனுக்கு கெரகம் இன்னிக்குத்தான் ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம்..//

அண்ணே உங்க பேருக்கு பக்கத்தில இருக்கிறது என்ன அது..கைதி நம்பரா அது..உங்க தலைப்பை விட பெரிசா இருக்கு..

மணிஜி said...

/கோலங்கள் எனும் மொக்கைத் தொடருக்காக, என் கண்டனங்கள்//

உழவன் அது அலங்கோலங்கள்..

சிநேகிதன் அக்பர் said...

என்ன செய்றது, எல்லாம் காசு படுத்தும் பாடு.

உண்மைத்தமிழன் said...

///தண்டோரா said...

/மனுஷனுக்கு கெரகம் இன்னிக்குத்தான் ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம்..//

அண்ணே உங்க பேருக்கு பக்கத்தில இருக்கிறது என்ன அது.. கைதி நம்பரா அது.. உங்க தலைப்பை விட பெரிசா இருக்கு..///

அது ஒரு பெரிய கதை தண்டோரா..

முழுசா தெரியணும்னா என்னோட பதிவுல போலி, போலிகள் ஜாக்கிரதைன்னு ரெண்டு லேபிள் இருக்கும். அதுக்குள்ளாற பூந்து படிங்க..

பத்தலைன்னா கூகிளாண்டவர்களிட்ட போலி டோண்டுன்னு போட்டுப் பாருங்க.. வந்து கொட்டும்..!

Chittoor Murugesan said...

அப்டி போடுங்கன்னா ..தாளி பீடிக்கட்டுல தேளு படம் போடனுமாம், கேன்சர் வரும்,சாவு வரும்னு எச்சரிக்கை பண்ணனுமாம். ஆ" நொந்த"விகடன் மாதிரி பத்திர்க்கைகள் மட்டும் எந்த வாசகமும் இல்லாம வருமாம் . அதை குழந்தை குட்டிங்க இருக்கிற வீட்ல வாங்கி படிப்பாங்களாம். இது போன்ற எச்சரிக்கை போட்டே ஆகனும்னு ரூல் வந்தா எந்த மாதிரி வாசகம் /படம் போடனும் அண்ணா ..தம்பி நீங்களே முடிவு பண்ணுங்க‌

Suresh said...

விகடன் இப்போ எல்லாம் வாங்குறதே இல்லை முன்னாடி தேடி பிடித்து வாங்குவேன் வேஸ்ட் ஆப் மணி

அஹோரி said...

காமடி பீசு கருணாநிதிய விமர்சனம் பண்ணும் வரை ஆனந்த விகடன் ஆகா. விமர்சனம் பண்ணினா உடனே லபோ திபோ ...

என்னை பொறுத்தவரை விகடன் பக்கம் பக்கமா விமர்சனம் பண்ணாமல் , ஒரு வார்த்தையில் விமர்சனம் பண்ணி இருக்கலாம் " .. ச்சீ ..."

Suresh said...

அட்டை படத்தில் பெண்கள் , சில பக்களில் பழசு காப்பி ஆனா பாய்ஸ் சீ போட்டது இன்னும் மனசு ஆறவில்லை என்ன செய்ய சில கதைகள் நல்லா இருக்கும் அதுக்கு காரணம் நல்ல எழுத்தாளர்கள்.. என்ன செய்ய விதி வலியது

கலையரசன் said...

உண்மையை சொல்லனுமுன்னா, நான் விகடனில் 1 வருஷ சந்தாதாரர். நான் பதிவுலகம் வந்ததுக்கு அப்புறம் விகடனை 2 மாதத்துக்கு படிக்கவே இல்லை.. இப்போதும் படிப்பது இல்லை. அதைவிட பதிவுலகம் கொடுக்கும் செய்திகளும், விமர்சனமும் நல்லாயிருக்கு!!

1 வருஷ பணம் வேஸ்டாபூச்சி மாமே! சொ.கா.சூ?

R.Gopi said...

காசுக்காக உடலை விற்கும் விலைமகள் கூட பவராயில்லை, அதே காசுக்காக, பத்திரிகை தர்மம் (அப்படி என்று ஒன்று உள்ளதா?) எல்லாவற்றையும் "விகடன்" விற்று ரொம்ப நாள் ஆச்சு "தண்டோரா".....

என்னவோ, ஊதற சங்க ஊதுங்க.... நம்ம நாட்டுல எல்லாருமே செவிடங்க இல்லையே...

மணிஜி said...

அஹோரி,சுரேஷ்,கலை,தல கோபி..நன்றி..வருகைக்கும்,கருத்துக்கும்...

அக்னி பார்வை said...

Why Tension Realax.ஆனா ரொம்ப காரம்

மணிஜி said...

/Why Tension Realax.ஆனா ரொம்ப காரம்//

அக்னி...விகடன் சிரீயல் பாருங்க..எட்டு ரிமோட் உடைச்சிருக்கேன்..அதான் அவ்ளவு கோபம்....

hamaragana said...

நண்பரே நிஜமாக அந்த சினிமா விமர்சனம் மிருதங்க சக்கரவர்த்தி என்ற படித்திற்கு என நினைக்கிறன் அதுவரை சினிமா பார்பதற்கு நான் அனந்த விகடன் வாங்கி அதில் வரும் விமர்சனம் மார்க் பார்த்து போவேன் படம் ...விமர்சனம் நிறுத்திய பின்பு விகடன் வாங்கவில்லை நானும் சுமார் இர்பதிஎட்டு வருடம் படம் அதிகம் பார்ப்பதில்லை ..மிக மிக நல்லா படம் என்றால் மட்டுமே பார்ப்பது ...ஆனால் தற்போது தரம் குறைந்த படத்திற்கு ஆகா... ஓஹோ ... என்று விமர்சனம் ....என்ன செய விதி