Tuesday, December 14, 2010

கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு


கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு...அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கிறது...வெளிப்படையான எழுத்துக்களும்...நீண்ட நாட்கள் கழித்து விசில் அடிப்பதை எனக்கு ஞாபகப்படுத்திய திருவிழா அது..சாருவின் தேகம் ... ஒரு இரவில் முழுவதும் ஆ(ரா)ய்ந்து படிக்க முடியாத நாவல்..எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் முதலில் போட்டுக் கொள்ளலாம்..கடைசி இரண்டு எழுத்துக்களில் கம் இருக்க வேண்டும்..மெதுவாக அனுபவித்து படித்து, தப்புவதோ..துப்புவதோ அப்புறம்...பொதுவாக ஒலிபெருக்கிகள் பார்வையாளர்களை பார்த்திருக்கும் . சாருவின் விழா என்பதாலோ என்னவோ..மேடையில் இருந்த பாவைகளை பார்த்து இருந்தது . வேறொன்றும் காரணம் இருக்காது ..வாஸ்துவாக இருக்கலாம் ..மேடையில் இருந்த இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.டிசம்பர் சீசன், கம்பன் விழா என்று எல்லா இடங்களிலும் புரவலரின் பேச்சு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல..1986 ல் கனிமொழியுடன் நிக்ழந்த உரையாடலை நியாபகம் வைத்திருந்தார் செட்டியார் .நடராஜன் சார் தினமலர் வாரமலரில் இளமை துள்ளும் ஒரு காதல் தொடர் எழுதுகிறார். யோசித்து வாசியுங்கள்..2011 ஆம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான ரவிக்குமார் சர்காஸ்டிக்காக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியே ஆக கடவது..தமிழச்சியின் பேச்சும் நன்றாக இருந்தது.. நிறைய பேர் அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்திமிருக்கும் , கர்வத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் என்று எங்கோ படித்த நியாபகம்... சாருவின் பேச்சு ..எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..மிஷ்கின்...விழாவில் பேசியதை அன்று விஜய் டிவிக்கு வந்து பேசியிருக்க வேண்டும்.. இன்னொருத்தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா..அங்கு வந்து தான் பிள்ளை பெற பட்ட பிரசவ அவஸ்தைகளை பேசினால்...சாரு எழுதியது சரிதான்ஒரு சந்தேகம்...சாருவின் வாசகர்கள் யாரும் ஜெமோவை இவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதில்லை..(எனக்கு தெரிந்து).. அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். சிவாஜியாக இருந்து விட்டு போகட்டும்.. இந்த ஜெமோவின் வாசகர்கள் ஏன் இப்படி சாருவை பிரித்து மேய்கிறார்கள்?ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...ஹேட்ஸ் ஆஃப் சாரு..கண்டினியூ ராக்கிங்..

Wednesday, December 1, 2010

அர்த்தமில்லாத கதை...


பாலு !

ஆஜர் சார்.

பாலு ஏன் நீ அவங்க கூட உட்கார்ந்திருக்க . எழுந்திரு.

இல்லை சார். இவனுக்கு கணக்கு பாடத்துல ஒரு சந்தேகம். அதான் சார். ஏன் சார் நான் இவன் பக்கத்தில் உக்கார்ந்தா தப்பா?

தப்பா ? தீட்டு. என் தலைதான் உருளும். இங்க வந்து உக்காரு.

பாலு என்கிற பாலசுவாமி.

இது ஆண்டவனுக்கே அடுக்குமா?
ஆண்டவனோட.. ஆள்றவாதான் பெரியவா?

இப்படியெல்லாம் நடந்திருக்குமா?

பாலு உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுடா முனியா ! நீ கத்து தர்றியா?

தருவேன். ஆனா யாராவது பாத்துட்டா? என் முதுகு தோல் இல்ல உரியும்.

ஏன் இப்படி பயப்படறீங்க ? நாமெல்லாம் ஒன்னுதானே.

இல்லை பாலு. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். அப்பறம் எங்கப்பாருதான் சொன்னாரு.

என்ன சொன்னாரு?

நீங்க என்ன சொல்றேள்? என்னால நம்பவே முடியலையே !

ஆமாம்டி. நம்ம சங்கரந்தான் சொன்னான். பெரியவர் முடிவு பண்ணிட்டாராம். எவ்வளவு பாக்கியசாலிடி நீ. லோகத்தை ரட்சிக்கிறப் போற ஒருத்தரை.

கனம் கோர்ட்டார் அவர்களே ! இந்த வழக்கு முற்றிலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என் கட்சிக்காரரின் மீது அபாண்டமாக தொடுக்கப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட விரோதம் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும்...

பாலு மகா கெட்டிக்காரன். படிப்பிலும் , விளையாட்டிலும். வில் விதையில் தேர்ச்சி பெற்றவனாக வேண்டும் என்பது அவன் கனவு. காண்டீபன் கதையை தினம் உறங்கும் முன் கேட்டதால் இருக்கலாம்.

பாலு . உனக்கு அதுக்குள்ள பழகிடுச்சே. குட்டிக்கரணம் வேற அடிக்கிற!

நீங்க இன்னொருவாட்டி பெரியவா கிட்ட பேசுங்களேன். ஒத்தை புள்ளையை ஊருக்கு கொடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே! தோ ஆச்சு. பொண்ணு வேற இடத்துக்கு போயிடுவா . அப்புறம் நீங்களும் நானும் மட்டும் தான் . மோட்டு வளையை பார்த்துண்டு உக்கார்ந்திருக்கறதா?

அடி அசடு . இதுக்கு நமக்கு கொடுப்பினை வோணும்டி .

நாட்ல இத்தனை பெரிய மனுஷாள் எல்லாரையும் தெரியும். ஒருத்தர் செல்வாக்கு கூடவா எடுபடலை. கேஸை ரொம்ப ஸ்டிராங்கா ஆக்கிட்டாளே.

அதுக்குத்தான் வேற ஸ்டேட்ல மாத்த சொல்லி அப்பீல் பண்ணியிருக்கோம். பாக்கலாம். இவா செஞ்ச பூஜைக்கு அந்த பகவான் என்ன கைமாறு பண்ணப்போறாறுன்னு!

அம்மா ! என்னம்மா இது ? நீங்க என் கால்ல விழறேளே ? நான் எங்கயும் போகலை. உங்க கூடவே என்னையும் கூட்டிண்டு போயிடுங்கோ . வயசுல பெரியவாள்ளாம் என் கால்ல.. எனக்கு பள்ளிக்கூடம் போகணும். வேணும்னா என்னை மிலிட்டரில கூட சேர்த்து விடுங்கோ !

இல்லை பாலு. நீ இனிமே சாதாரண மனுஷா மாதிரி இல்லை. இந்த லோகத்தை ரட்சிக்கிறதுக்குன்னே என் வயித்துல வந்து வாய்ச்சிருக்கே. உன் முகத்துல அந்த தேஜஸ் வந்துடுத்து.

அப்ப இனிமே நா விளையாட முடியாதா ? நம்ம ஊர் ஏரியில அவங்களோட குதிக்க முடியாதா?

பாலு என்கிற பாலகுரு. . ஒரு கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இனிமே உஷத் கால பூஜையை பாலுவே பண்ணட்டும்- பெரியவர்.

பாலுவிற்கு நாக்கு செத்து போச்சு. அம்மா பண்ணும் வற்றல் குழம்பிற்கும், புடலங்காய் கறிக்கும் மனசு ஏங்கியது. இந்த பழங்கள்..வெள்ளிக் கிண்ணத்தில் பால். வாழையிலையில் வெளிக்கி.. இன்னும் இத்யாதிகள்...இதெல்லாம் தூக்கத்தை வரவழைக்க வில்லை. மாறாக இனம் புரியாத சஞ்சலமும், வேதனையும்..

இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் யுவர் ஹானர் . சின்னவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மருத்துவ பரிசோதனை மாதிரியான விஷயங்கள் . அவரை பின் பற்றும் லட்சக்கணக்கான நபர்களை வேதனை படுத்தும்.

”சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்!

பாலுவிற்கு என்னன்னமோ தோண ஆரம்பித்திருந்தது. வேதம் , மந்திரம் எல்லாவற்றையும் மீறி உள்ளங்காலில் தைக்கும் முள் போல் ஒரு வித வலி. அது முட்டியில் தேங்கி என்னமோ செய்கிறது.கண்களை மூடி தியானம் .முடியவில்லை. இடுப்பு சளியின் இம்சை.

இவ என் பொண்ணு. வளர்ந்திருக்காளே ஒழிய, புத்திதான் அப்படியே இருக்கு. நமஸ்காரம் பண்ணுடி.

வயசுக்கு மீறி வளர்த்தியுடன் அந்த பெண் பாவாடை சட்டையுடன் குனிகிறாள். தொட்டு தூக்கி ஆதரவாய் தடவி கொடுக்கிறார் பாலு என்கிற பாலகுருசுவாமி.

நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கோ . நான் கொஞ்சம் பூஜை பண்ணனும். உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் புஷ்பம் மட்டும் கொடுத்து விடறேன். எல்லாம் அம்பாள் சித்தம்.

இந்த ஒரு பெண் மட்டுமில்லை யுவர்ஹானர் . இன்னும் நிறைய .... ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே..

பாலுவிற்கு இலை மறைவாய் காய் மறைவாய் பார்த்தவைகள் எல்லாம் மெல்ல புலப்பட ஆரம்பித்தது. வீட்டிலும், சமயங்களில் வெளியில். ஐந்து வயதில் வேதத்தை உருவேற்றும்போது இருந்ததை காட்டிலும் இன்னும் வேகம். உன்மத்தம். நாக்கு மடிந்து சொஷ்டமாய் சொல்லி கற்றுக் கொள்ள இது வேதமோ, மந்திரமோ இல்லையே. வழியில் இருக்கும் எந்த பாறையையும் உருட்டிக் கொண்டு பாயும் காட்டாறு போல் சீற ஆரம்பித்திருந்தது. அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுவான அந்த காமம் என்னும் சுகவேதம்..