Showing posts with label பதிவர் குழுமம். Show all posts
Showing posts with label பதிவர் குழுமம். Show all posts

Monday, March 29, 2010

ஜோரா கைத்தட்டுங்க.............


ஏதாவது எழுதணும் ..என்ன எழுதறது ? சரி சும்மாதானே இருக்கோம் . சும்மா எதாவது எழுதி வைப்போம்ன்னு ஆரம்பிச்சு . அட சும்மா பத்தி எழுதிட்டேன் .

நாம எல்லோரும் தினம் ஒரு தடவையாவது சும்மா ங்கிற வார்த்தையை சொல்லாம பயன் படுத்தாம இருக்கோமா? சும்மா சொல்லுங்க ..

எங்க எந்த பக்கம் ? சும்மாதான். என்னா மச்சான் இவ்வளவு நேரம் . எந்த ராத்திரியிலே போன்?. சும்மாதாண்டா ...

சரி எந்த சும்மாங்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பார்க்கலாம் ன்னு ஒரு தமிழ் அகராதியை தேடி பிடிச்சா ..அதுல சும்மாங்க்கிற வார்த்தையே காணும் ?

நான் தஞ்சையில் பிளஸ் ஒன் படிக்கும் போது , முத முறையா பொம்பளை புள்ளைங்க கூட படிச்சேன் ..அரை டிராயர் லேந்து வேட்டிக்கு மாறின பருவம் ..பயலுங்க எல்லாம் தேன் குடிச்ச நரியா திரிஞ்சோம் ...அப்பா இங்கிலீஷ் வாத்தியார் (ஹநிப் )டேய் ,என் கிளாஸ்லே ஒரு பயலும் தப்பி தவறி கூட தமிழ்லே பேசக் கூடாது. இங்கிலிஷ்லேதான் பேசனும்னு சொல்லி விட்டார் ..அதுலேந்து பயலுக ஒருத்தனும் வாயே தொறக்க மாட்டானே ..எதுக்கு பிள்ளைங்க முன்னாடி அசிங்கபட்டுக்கிட்டுனுதான் ?

ஒரு
நாள் நம்ம உலக்ஸ் (உலகநாதன் )கொட்டாவி விட்டான் ..வாத்தி பாத்துட்டு ..வாட் ஆர் யூ ட்யுஇங் மேன் ?ன்னாரு ? நம்மாளு உடனே சார் நான் பாட்டுக்கு சும்மா சிவனேன்னு இருக்கேன் சார் ன்னான் . வாத்திக்கு வந்ததே கோபம் ..சும்மா ன்னா என்ன ? சிவனேன்னு நா என்னன்னு போட்டு காயடிச்சுட்டார் .. நாம ஆளு க்கு அவமானமா போச்சு ..ஏன்னா அப்பத்தான் அவன் உமா ராணியை பிக்கப் பண்ணிக்கிட்டு இருந்தான் .. எப்படி ரா இவ்வளவு கன்பார்மா அவ உன்னை லவ் பண்றான்னு சொல்லறேன்னு கேட்டா ? பின்ன சும்மா என்னையே தான் பாத்துகிட்டு இருக்கா பாரேனாணன் ...

அப்புறம் ஒரு சினிமா பாட்டு சும்மா ..சும்மா ன்னு . சும்மா இருக்கும் போதெல்லாம் சும்மா சும்மா ன்னு கேட்டு அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு ....

சும்மா சொல்லக் கூடாது . சும்மா இருக்கிறதுலே ஒரு சொகம் இருக்கத்தான்யா இருக்கு சென்னை பாழையிலே சொம்மா கெட ...நை நை னுட்டு ..

சரி சும்மா இருக்கும்போது படிச்சுப் பாருங்க ...

கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான ஆலோசனைகளை வரவேற்கிறோம்.