என்ன?
நா போயிட்டு ஒரு நாள்ல திரும்பிடறனே..
எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல..
தெரியும்..இருந்தாலும்,ஊர் உலகம்னு ஒண்ணு இருக்கே..
இங்க பாருடி..எனக்கு அதை பத்தி கவலை இல்லை...பழசு எல்லாம்
மறந்துட்டியா நீ? பட்டு புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த வீட்டு பத்திரத்தை எடுத்து ரெட்டியார் கிட்ட கொடுத்து என் மானத்தை வாங்கினானே....அன்னையோட அந்தாளை வெட்டி விட்டுட்டேன்
இருக்கலாம்கா..ஆனா நமக்கு அவரு எவ்வளவோ உதவியும் செஞ்சிருக்காரு..அதை நினைச்சு பார்க்ககூடாதா?
என்ன பெரிய உதவி..பதிலுக்கு எவ்ளோ பணத்தையும் அடிச்சிருக்கான்.குத்தகை பணத்தையும் தராம,வயலையும் அவன் பேருக்கு எழுதிகிட்டானே..அதுக்கு என்ன சொல்றே?மதுரை ஆண்டியாரை கூட்டு சேர்த்துகிட்டு தோட்டத்தையே வளைக்க பார்த்தானே..அதுக்கு என்ன சொல்றே?
அக்கா என் நிலைமையையும் கொஞ்சம் பாரு..ஒரு கடை,கண்ணிக்கு போக முடியல...ஒரு காது குத்து,கல்யாணம்னு போக முடியுதா?எல்லாரும் நாக்கை புடுங்கறா மாதிரி பேசறாங்க..இம்புட்டு புடைவையும்,நகையும் இருந்து என்ன பிரயோசனம்?நீயும் நானும் போட்டுகிட்டு போஸ் கொடுத்ததுதான் மிச்சம்...
அடிப் போடி..பைத்தியம்..நீ பேப்பர் படிக்கிறது இல்லை..அட..”நம்ம” டிவியை கூட பாக்குறது இல்லை..சுப்ரீம் கோர்ட்லயே அதை சரின்னு சொல்லிட்டாங்கடி.போய் இளநீயை வெட்ட சொல்லு..
-------------------------------------------------------------------------------------------------
என்னங்க ..நாந்தான்..
ம்ம்..சொல்லு..
எவ்வளவு சேர்ந்திருக்கும்?
அதை எண்ணி முடிக்க இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்
சரி..அங்க,இங்கன்னு அலைஞ்சீங்க.. கூட அலையறவளை தொலைச்சிடுவேன்..
19 comments:
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே....
ஆவ்வ்வ்வ்வ்.....
/எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே....
ஆவ்வ்வ்வ்வ்...//
அடப்பாவி நைனா...
இப்பவும் சொல்றேன். உங்களுக்கு ஏதாவதுன்னா உடனே சொல்லுங்க நான் வந்து பாக்குறேன்.
ஐயையோ..
ரொம்ப ஓவரா முத்திருச்சுன்னு நினைக்கிறேன்..!
தண்டோராண்ணே.. உடனே ஒரு நல்ல டாக்டரா பாருங்க..
இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு பேப்பர், பத்திரிகை, டிவியெல்லாத்தையும் பார்க்காம இருங்கண்ணே.. புண்ணியமாப் போகும்..!
//சுப்ரீம் கோர்ட்லயே அதை சரின்னு சொல்லிட்டாங்கடி.போய் இளநீயை வெட்ட சொல்லு..//
எங்கயாவது ஒரு நாட் வச்சிபுடுறிங்களே!
ரெண்டாவது புரியல!
ஒருவேளை ரெண்டு தான் பிரச்சனையோ!
ரெண்டு மட்டுமா, அதற்கும் மேலயா!?
என்னா வில்லத்தனம்?
எவ்வளவு அழகா யோசிக்கிறாய்ங்க!
பின் நவீனத்துவத்தின் அருமையான கதைகள் இரண்டும்...
புரிஞ்சுக்கத்தான் சிரம்ப் படுகின்றேன்..
புரிஞ்சாலும், புரியாவிட்டாலும் நாங்க ஒழுங்கா ஒட்டு மட்டும் போட்டுவிடுவோம்.. (தமிழ்ஷிழ் நிச்சயமாக, தமிழ் மணம் - அவர்கள் மனது வைத்தால்... இப்ப ஐடி கொடுத்து மனுஷன் உயிரை எடுக்கிறாங்க...)
இப்பவும் சொல்றேன். உங்களுக்கு ஏதாவதுன்னா உடனே சொல்லுங்க நான் வந்து பாக்குறேன்.///
உன்னைய தெரியும்டி எனக்கு...
///நன்றி டிவிஆர் சார்...
/ஐயையோ..
ரொம்ப ஓவரா முத்திருச்சுன்னு நினைக்கிறேன்..!
தண்டோராண்ணே.. உடனே ஒரு நல்ல டாக்டரா பாருங்க..
இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு பேப்பர், பத்திரிகை, டிவியெல்லாத்தையும் பார்க்காம இருங்கண்ணே.. புண்ணியமாப் போகும்..!//
அதுக்குத்தாண்ணே இன்னைக்கு குற்றாலம் போயிட்டிருக்கேன்..
//வால்..உனக்கு புரியலைன்னா எனக்கும் புரியலை
/என்னா வில்லத்தனம்?
எவ்வளவு அழகா யோசிக்கிறாய்ங்க//
அவங்களைத்தானே சொல்றிங்க...
//ராகவன் சார் நன்றி(அதுக்கும்)
//அடிப் போடி..பைத்தியம்..நீ பேப்பர் படிக்கிறது இல்லை..அட..”நம்ம” டிவியை கூட பாக்குறது இல்லை..சுப்ரீம் கோர்ட்லயே அதை சரின்னு சொல்லிட்டாங்கடி.போய் இளநீயை வெட்ட சொல்லு..//
**********
"தல" தண்டோரா.....
யாருக்கு புரியுதோ இல்லையோ, எனக்கு புரியுதுடா "மக்கா".
எம்புட்டு அழகா எழுதி இருக்கீக!!!
அழிச்சாட்டியகாரர்களுக்கு புரியுது...
அப்பாவிகளுக்கு புரியலை...
ஏதாவது புரிஞ்சிதோ?
அண்ணே !!! எனக்கு ஒண்ணுமே புரியல !!! எதுனா நில ஆக்கிரமிப்பு பத்தி விழிப்புணர்வா?
தலைவரே எதாச்சும் டாக்குமெண்டரி-ஆ??
Post a Comment