Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts
Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts

Saturday, April 17, 2010

டாய்............


மூத்தவருக்கு முறைப்பு ஜாஸ்தியாயிடுச்சு
விறைப்புல இளையவரும் சளைச்சவரில்லை
நப்பாசைதான் நடுவில இருக்கிறவங்களுக்கும்
அமைதிக்கு பின்னாடி அணுகுண்டு இருக்குன்னு
அறிஞருக்கு தெரிஞ்சுதாம்ல இருக்கு

இப்பதான் புது வீடு முடிஞ்சுது
அடுத்தாப்ல பெண்சிங்கத்துக்கு
பிரசவம் பார்க்கணும்
ஐம்பாதாண்டு காலமா வாழவச்சவளுக்கு
கோவையில் கொண்டாட்டமாம்
அப்பாக்கள் மேடையில நடிக்க
பிள்ளைகளுக்கும் அரிதாரம் பூசும் ஆசையாம்
மருமகனுங்களுக்கு ஆப்பாம்
பேரம் முடியறவரைக்கும் புது கம்பெனிதான்

மூணு பேருக்கு முத பக்கத்துல
கண்ணீர் அஞ்சலி இந்தியாவின்
நம்பர் ஒன் தமிழ் நாளிதழில்

இன்னும் யாருக்கு விட்டுப்போச்சு பதவி
கொண்டு வா மேல்சபையை
கூட்டுக் களவாணிங்க வாயை அடை
கீழ இருக்கிறவனுக்கு எப்பவும் போல்
டீயும், தினத்தந்தியும்தான்

கதர் சட்டை கிழியுது
சுகர் ஏறுது
வாங்கப்பா உப்பு சத்தியாகிரக
ஊர்வலத்துக்கு

குறையொன்றும் இல்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
இதான் கருப்பு சட்டைகளின்
காலர்ட்யூன்
மேல் சபையில் மானமிகுக்கள்
உண்டா, இல்லையா?
மரம் வெட்டிக்கும் மனசு அடிச்சுக்குது
மைந்தனுக்கு தச்சு வச்ச சூட்டும், கோட்டும்
சும்மாவே இருந்துடுமோ?

தலைவிக்கும் தலைவலிதான்
கால்ல விழுந்து கிடந்தவனெல்லாம்
கரை வேட்டியை மாத்திடுகிறான்
உடன்பிறாவா உபத்திரத்தை கழட்டி விடலாம்னா
இளநி வெட்ட யாரை தேடறது?

கூத்துல கோமாளியாட்டாம் இன்னொரு
தொலைகாட்சியாம்
கொஞ்சநஞ்ச சிண்டையும் பிய்ச்சுக்கிறாருயா
சின்னக்கவுண்டரு

சுத்தி மொக்கயாயிடுச்சு
அறிவாள் சாணை பிடிக்க துட்டு தேத்தணும்
உண்டியல் ஓட்டையை அடைங்கப்பா

ஒரு பொண்ணு ஆனந்தம்
ரெண்டுன்னா பரமானந்தம்
சுத்தி ரவுண்டு கட்டினா
நித்தியானந்தமாம்
ரஞ்சிதாவா, ராகசுதாவா
சந்தேகம் தீர்ந்தாலும்
வயித்தெரிச்சல்தான் அடங்கலை
அவ்வளவு நேரம் எப்படிரா?
வயக்ராவா? இழவெடுத்தவனே

உலை கொதிக்குது பாரு
கொட்டு ஒரு ரூபா அரிசியை
அண்ணி கொழுந்தனோட ஓடினாளா?
மணி எட்டாச்சு பார்
இலவச டிவியை போடு
மண்டை வெடிச்சுட போகுது

கவலை ஜாஸ்திதான்
கட்டிங்க்கு பார்ட்னர் கிடைக்கலை
பணப்புழக்கம் அதிகமாமே

234 லேயும் திருவிழா வரணும்
108 ஐ அவனுக்கு போடு
காலி பண்ணு வவுத்தை
கறி கொடுப்பான்
கூடவே கால் கிலோ மயிறும் கேளு

என்னாது ? எழுத ஒன்னுமே இல்லையா?
கிளறுடா சாதிக்குப்பையை
அடிப்பட்டுச்சா? வைத்தியரைப் பாரு
அதுக்கும் முன்னாடி அவன் வர்ணாசிரமத்தை
தோண்டு.. சுயமரியாதையை சுவாசிச்சு
வளர்ந்தவன் டா நீ
ஊசிகூட போட விடாதே அவனை
இருப்பது ஒரே உயிர்
போனா போகட்டுமே
கொள்கைக்காக..............