
அப்பா.....
என்னடா மகனே..
நா வேணும்னா அத்தை வீட்டுக்கு போயிட்டு வரட்டா?
போய்..?
கேட்டுப் பார்க்கிறேன்...
தாராளாமா கேக்கலாம்..உனக்கு உரிமை இருக்கு..
மதிப்பாங்களா..?
அதை சொல்லமுடியாது..ஆனா உனக்குன்னு நிச்சயம் பண்ணதுதானே..அப்புறம் நீங்க கேக்கலைன்னு சொல்ல கூடாது
பாரு..போயிட்டு வா...பஸ்சுக்கு காசு இருக்கா..?
ம்ம்..நா போயிட்டு வர்ரேன்..
அத்தை வீடு பட்டணத்தில் இருக்கிறது..பெரிய கதவு வச்சு மாளிகை மாதிரி..
வாசல் காவல்காரன்...தம்பி எங்க இப்படி?
அத்தையை பார்ககணும்..
வரச் சொன்னாங்களா.?
இல்லை..ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..
என் பொழைப்பை கெடுத்திடாதீங்க தம்பி..நா உள்ளே போய் கேட்டு கிட்டு வர்ரேன்..
இந்த வீட்டுலதான் எப்படி விளையாடியிருக்கோம்..இப்ப..எல்லாம் விதி..
காவல்காரன் ..தம்பி அத்தை பூஜைல இருக்காங்க..இப்ப பார்க்க முடியாதாம்..
நா வந்திருக்கேன் சொல்லலையா..
சொன்னேன்..
அத்தை என்ன சொன்னாங்க..
அவன் கிடக்கான் சொத்தைன்னாங்க....அந்த சோம்பேறியை இனிமே இந்த பக்கம் வர வேணாம்னு சொல்லிடுங்கன்னாங்க...
அழுகை முட்டிக்கொண்டு வந்தது...செல் அடிக்க ..அப்பாதான்..
என்ன தம்பி ஆச்சு?
பேச்சு வரவில்லை..அழுகைதான் வந்தது..பின்ன இலவு காத்த கிளி கதையா போச்சே..
சரி விடு...வீட்டுல கலந்து பேசி அந்த அகங்காரி அத்தை உறவை முறிச்சிடலாம்
அப்பா..பெரியப்பா வீடு பக்கத்திலதான்..ஒரு எட்டு பாத்துட்டு வரவா?
அவர் உங்க அத்தைக்கு மேல ராங்கி பிடிச்சவர்டா..வேணாம்..நா அப்புறமா அவர் கிட்ட பேசறேன்..மஞ்ச துண்டை போர்த்தி காக்கா பிடிச்சு பார்ப்போம்
இல்லப்பா.. இப்பவே நான் முயற்சி பண்ணி பார்க்கிறென்..
அத்தை வீட்டுலேர்ந்து கூப்பிடு தூரம் தான் பெரியப்பா வீடு..ஆனால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை...சொத்து தகராறு..
வாடா அன்பு மகனே..பெரியப்பா வரவேற்பில் நக்கல் இருந்தது...அவர் அப்படித்தான் ..யாராயிருந்தாலும் கிண்டல்தான்..டில்லி
பெரிய அத்தை மட்டும்தான் அவருக்கு இப்ப உசத்தி..
நல்ல இருக்கீங்களா பெரியப்பா..?
நீங்க இந்த பக்கம் வர்ரதில்லை இல்ல..நல்லாதான் இருக்கேன்..ஆமாம் காபி,கீபி சாப்புடுறியா??ஆமாம் அத்தையை பார்த்துட்டு
வந்திருப்பே..அங்க விருந்தே ஆயிருக்கும்..உங்கப்பன் எப்படியிருக்கான்..வீட்டுல அடுப்புலாம் எரியுதா??
உங்களை அப்பா பார்த்துட்டு வர சொன்னார்..
எதுக்கு என் முதுகு எப்படியிருக்கு..குத்த இன்னும் இடம் இருக்கான்னா?
பெரியவன் வர்ர நேரம் பொழைச்சு போயிடு..உன்னையை இங்க பார்த்தா பொலி போட்ருவான்.
தெருவில் இறங்கி நடந்தான்..போன் அடித்தது..
மகனே என்னாச்சுடா?பெரியப்பா என்ன சொன்னார்?
அப்பா..குரல் கம்மியது..ஏம்பா நமக்கு இப்படி நடக்குது...
அது வேற ஒண்ணுமில்லடா தம்பி..இப்ப நம்ம சாதி சனத்து கிட்டயே நமக்கு
மதிப்பு போயிடுச்சு..அதான்.. நீ பஸ்சை பிடிச்சு வீடு வந்து சேர்..
பஸ் வந்தது..ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டான்..கண்டக்டர் வர “திண்டிவனம்” ஒண்ணு கொடுங்க.இப்படி யாருமே நம்ம கிட்ட ” அன்பு” காட்ட மறுக்கிறார்களே என்ற வேதனையுடன் கடிகாரத்தில் “மணி” பார்த்தான்.கெட்ட நேரம் ஆரம்பமாகியிருந்தது
டிஸ்கி :ஏற்கனவே அர்த்தமில்லாத கதை என்று போட்ட இடுகைதான் இது.இன்றைய செய்தியை படித்ததும்,சில மாற்றங்களுடன் மீண்டும்...