Tuesday, December 14, 2010

கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு


கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு...அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கிறது...வெளிப்படையான எழுத்துக்களும்...நீண்ட நாட்கள் கழித்து விசில் அடிப்பதை எனக்கு ஞாபகப்படுத்திய திருவிழா அது..சாருவின் தேகம் ... ஒரு இரவில் முழுவதும் ஆ(ரா)ய்ந்து படிக்க முடியாத நாவல்..எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் முதலில் போட்டுக் கொள்ளலாம்..கடைசி இரண்டு எழுத்துக்களில் கம் இருக்க வேண்டும்..மெதுவாக அனுபவித்து படித்து, தப்புவதோ..துப்புவதோ அப்புறம்...



பொதுவாக ஒலிபெருக்கிகள் பார்வையாளர்களை பார்த்திருக்கும் . சாருவின் விழா என்பதாலோ என்னவோ..மேடையில் இருந்த பாவைகளை பார்த்து இருந்தது . வேறொன்றும் காரணம் இருக்காது ..வாஸ்துவாக இருக்கலாம் ..மேடையில் இருந்த இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.



டிசம்பர் சீசன், கம்பன் விழா என்று எல்லா இடங்களிலும் புரவலரின் பேச்சு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல..1986 ல் கனிமொழியுடன் நிக்ழந்த உரையாடலை நியாபகம் வைத்திருந்தார் செட்டியார் .



நடராஜன் சார் தினமலர் வாரமலரில் இளமை துள்ளும் ஒரு காதல் தொடர் எழுதுகிறார். யோசித்து வாசியுங்கள்..



2011 ஆம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான ரவிக்குமார் சர்காஸ்டிக்காக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியே ஆக கடவது..



தமிழச்சியின் பேச்சும் நன்றாக இருந்தது.. நிறைய பேர் அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்



திமிருக்கும் , கர்வத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் என்று எங்கோ படித்த நியாபகம்... சாருவின் பேச்சு ..எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..



மிஷ்கின்...விழாவில் பேசியதை அன்று விஜய் டிவிக்கு வந்து பேசியிருக்க வேண்டும்.. இன்னொருத்தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா..அங்கு வந்து தான் பிள்ளை பெற பட்ட பிரசவ அவஸ்தைகளை பேசினால்...சாரு எழுதியது சரிதான்



ஒரு சந்தேகம்...



சாருவின் வாசகர்கள் யாரும் ஜெமோவை இவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதில்லை..(எனக்கு தெரிந்து).. அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். சிவாஜியாக இருந்து விட்டு போகட்டும்.. இந்த ஜெமோவின் வாசகர்கள் ஏன் இப்படி சாருவை பிரித்து மேய்கிறார்கள்?



ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...



ஹேட்ஸ் ஆஃப் சாரு..கண்டினியூ ராக்கிங்..

Wednesday, December 1, 2010

அர்த்தமில்லாத கதை...


பாலு !

ஆஜர் சார்.

பாலு ஏன் நீ அவங்க கூட உட்கார்ந்திருக்க . எழுந்திரு.

இல்லை சார். இவனுக்கு கணக்கு பாடத்துல ஒரு சந்தேகம். அதான் சார். ஏன் சார் நான் இவன் பக்கத்தில் உக்கார்ந்தா தப்பா?

தப்பா ? தீட்டு. என் தலைதான் உருளும். இங்க வந்து உக்காரு.

பாலு என்கிற பாலசுவாமி.

இது ஆண்டவனுக்கே அடுக்குமா?
ஆண்டவனோட.. ஆள்றவாதான் பெரியவா?

இப்படியெல்லாம் நடந்திருக்குமா?

பாலு உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுடா முனியா ! நீ கத்து தர்றியா?

தருவேன். ஆனா யாராவது பாத்துட்டா? என் முதுகு தோல் இல்ல உரியும்.

ஏன் இப்படி பயப்படறீங்க ? நாமெல்லாம் ஒன்னுதானே.

இல்லை பாலு. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். அப்பறம் எங்கப்பாருதான் சொன்னாரு.

என்ன சொன்னாரு?

நீங்க என்ன சொல்றேள்? என்னால நம்பவே முடியலையே !

ஆமாம்டி. நம்ம சங்கரந்தான் சொன்னான். பெரியவர் முடிவு பண்ணிட்டாராம். எவ்வளவு பாக்கியசாலிடி நீ. லோகத்தை ரட்சிக்கிறப் போற ஒருத்தரை.

கனம் கோர்ட்டார் அவர்களே ! இந்த வழக்கு முற்றிலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே என் கட்சிக்காரரின் மீது அபாண்டமாக தொடுக்கப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட விரோதம் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும்...

பாலு மகா கெட்டிக்காரன். படிப்பிலும் , விளையாட்டிலும். வில் விதையில் தேர்ச்சி பெற்றவனாக வேண்டும் என்பது அவன் கனவு. காண்டீபன் கதையை தினம் உறங்கும் முன் கேட்டதால் இருக்கலாம்.

பாலு . உனக்கு அதுக்குள்ள பழகிடுச்சே. குட்டிக்கரணம் வேற அடிக்கிற!

நீங்க இன்னொருவாட்டி பெரியவா கிட்ட பேசுங்களேன். ஒத்தை புள்ளையை ஊருக்கு கொடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரலையே! தோ ஆச்சு. பொண்ணு வேற இடத்துக்கு போயிடுவா . அப்புறம் நீங்களும் நானும் மட்டும் தான் . மோட்டு வளையை பார்த்துண்டு உக்கார்ந்திருக்கறதா?

அடி அசடு . இதுக்கு நமக்கு கொடுப்பினை வோணும்டி .

நாட்ல இத்தனை பெரிய மனுஷாள் எல்லாரையும் தெரியும். ஒருத்தர் செல்வாக்கு கூடவா எடுபடலை. கேஸை ரொம்ப ஸ்டிராங்கா ஆக்கிட்டாளே.

அதுக்குத்தான் வேற ஸ்டேட்ல மாத்த சொல்லி அப்பீல் பண்ணியிருக்கோம். பாக்கலாம். இவா செஞ்ச பூஜைக்கு அந்த பகவான் என்ன கைமாறு பண்ணப்போறாறுன்னு!

அம்மா ! என்னம்மா இது ? நீங்க என் கால்ல விழறேளே ? நான் எங்கயும் போகலை. உங்க கூடவே என்னையும் கூட்டிண்டு போயிடுங்கோ . வயசுல பெரியவாள்ளாம் என் கால்ல.. எனக்கு பள்ளிக்கூடம் போகணும். வேணும்னா என்னை மிலிட்டரில கூட சேர்த்து விடுங்கோ !

இல்லை பாலு. நீ இனிமே சாதாரண மனுஷா மாதிரி இல்லை. இந்த லோகத்தை ரட்சிக்கிறதுக்குன்னே என் வயித்துல வந்து வாய்ச்சிருக்கே. உன் முகத்துல அந்த தேஜஸ் வந்துடுத்து.

அப்ப இனிமே நா விளையாட முடியாதா ? நம்ம ஊர் ஏரியில அவங்களோட குதிக்க முடியாதா?

பாலு என்கிற பாலகுரு. . ஒரு கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இனிமே உஷத் கால பூஜையை பாலுவே பண்ணட்டும்- பெரியவர்.

பாலுவிற்கு நாக்கு செத்து போச்சு. அம்மா பண்ணும் வற்றல் குழம்பிற்கும், புடலங்காய் கறிக்கும் மனசு ஏங்கியது. இந்த பழங்கள்..வெள்ளிக் கிண்ணத்தில் பால். வாழையிலையில் வெளிக்கி.. இன்னும் இத்யாதிகள்...இதெல்லாம் தூக்கத்தை வரவழைக்க வில்லை. மாறாக இனம் புரியாத சஞ்சலமும், வேதனையும்..

இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் யுவர் ஹானர் . சின்னவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மருத்துவ பரிசோதனை மாதிரியான விஷயங்கள் . அவரை பின் பற்றும் லட்சக்கணக்கான நபர்களை வேதனை படுத்தும்.

”சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்!

பாலுவிற்கு என்னன்னமோ தோண ஆரம்பித்திருந்தது. வேதம் , மந்திரம் எல்லாவற்றையும் மீறி உள்ளங்காலில் தைக்கும் முள் போல் ஒரு வித வலி. அது முட்டியில் தேங்கி என்னமோ செய்கிறது.கண்களை மூடி தியானம் .முடியவில்லை. இடுப்பு சளியின் இம்சை.

இவ என் பொண்ணு. வளர்ந்திருக்காளே ஒழிய, புத்திதான் அப்படியே இருக்கு. நமஸ்காரம் பண்ணுடி.

வயசுக்கு மீறி வளர்த்தியுடன் அந்த பெண் பாவாடை சட்டையுடன் குனிகிறாள். தொட்டு தூக்கி ஆதரவாய் தடவி கொடுக்கிறார் பாலு என்கிற பாலகுருசுவாமி.

நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கோ . நான் கொஞ்சம் பூஜை பண்ணனும். உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் புஷ்பம் மட்டும் கொடுத்து விடறேன். எல்லாம் அம்பாள் சித்தம்.

இந்த ஒரு பெண் மட்டுமில்லை யுவர்ஹானர் . இன்னும் நிறைய .... ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே..

பாலுவிற்கு இலை மறைவாய் காய் மறைவாய் பார்த்தவைகள் எல்லாம் மெல்ல புலப்பட ஆரம்பித்தது. வீட்டிலும், சமயங்களில் வெளியில். ஐந்து வயதில் வேதத்தை உருவேற்றும்போது இருந்ததை காட்டிலும் இன்னும் வேகம். உன்மத்தம். நாக்கு மடிந்து சொஷ்டமாய் சொல்லி கற்றுக் கொள்ள இது வேதமோ, மந்திரமோ இல்லையே. வழியில் இருக்கும் எந்த பாறையையும் உருட்டிக் கொண்டு பாயும் காட்டாறு போல் சீற ஆரம்பித்திருந்தது. அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுவான அந்த காமம் என்னும் சுகவேதம்..

Friday, November 26, 2010

பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா


மாஸ் ஆடியன்சின் ரசனைக்கு இறங்கி வந்து கதை சொல்லுதல் ஒரு விதம் . தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதில்லை . வணிக ரீதியான சமரசங்கள் மற்றும் விமர்சனங்கள் இடையூறாகவே இருக்கும் . மேல் நாட்டு இயக்குநர்களின் நிலை வேறு . தமிழில் ஒரு சில இயக்குநர்களே இருக்கிறார்கள். மிஷ்கின் அதை அநாயாசமாகவே செய்திருக்கிறார் . அதற்கு முதலில் ஒரு “ரெமி மார்ட்டீன்” சல்யூட் மிஷ்கின்.

நாம் கடந்து செல்ல வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை . கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது . நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படிதான் இருப்பதாக எனக்கு தோன்றியது வெற்று ஃப்ரேம் முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது . அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள் . நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள் . நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது . காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது . மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல.. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது . பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது . சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம் . பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ் . ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார் .

எல்லோரும் நல்லவர்கள்தான் என்கிறார் மிஷ்கின் . உண்மைதான் . ஒரு லாரி டிரைவரின் பாத்திரம் அது உண்மைதான் என்கிறது . சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும் அந்த இளம்பெண்…(நொடியில் எத்தனை பாவம் காட்டுகிறாள் அவள்) அடுத்த காட்சியில் டிராக்டர் ஓட்டி வருவது பா. ராவின் கவிதை . ஒரு கால் இல்லாதவனின் ஊன்றுகோல் ஜாதிக் கலவரத்தில் வெட்டப்படுதல் , அவன் பேசும் வார்த்தைகளும் , முக பாவனைகளும் ,அறிவாளை தூக்கி கொண்டு வரும் இளநீர்க்காரர் .வெள்ளந்தியான மனிதர்களின் அடையாளத்தை நமக்கு உணர்த்துகிறார் . எங்கே? எதற்கு செல்கிறார்கள் என்பதே தெரியாமல் வரும் மோட்டார் பைக் இரட்டையர்கள் , ஹனிமூன் செல்லும் ஜோடிகள் என்று மனிதர்களின் தரிசனம் . காணப்புண்ணியம்.

அம்மாவை தேடி செல்லும் இரண்டு சிறுவர்களின் பயணம்தான் கதைக்களம் . அந்த மொழிப்படம் , இந்த மொழிப்படம் . நகலெடுத்தார் . பிரதியெடுத்தார் என்பதெல்லாம் வீண் வாதங்கள் . கையாடுவதற்கும், கையாள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

சினிமா ஒரு காட்சி ஊடகம்தான் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின் . வார்த்தைகளுக்கிடையே மெளனங்கள். அதுவும் இல்லாதபோது இசை . சில இடங்களில் இரண்டுமே இல்லை . இரண்டே பாடல்கள் . அதுவும் பார்வையாளனின் மனநிலைக்கேற்ப ஒலிக்கிறது . பிண்ணனி இசையில் மீண்டும் தான் ராஜாதான் என்கிறார் இளையராஜா. அம்மா பாடல் கிளிஷேதான். இருந்தாலும் உறுத்த வில்லை.

சிறுவன் அகி . கண்களுக்கிடையே அந்த வளையம் . அழுத்தம் திருத்தமாக பேசுதல் . பாட்டியை கை பிடித்து பராமரிக்கும் விதம் . மாமா என்றும் அம்மா என்றும் அழைக்கும் போது காட்டும் முகபாவம் . இந்த வருடத்திய சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்கலாம் . கிடைக்க வேண்டும் .

கதையில் நாயகிக்கு பெயர் இல்லை . பெயர் சொல்லும் அளவுக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் இல்லை.

பெயரில் என்ன இருக்கிறது . நாயகனின் (மிஷ்கினின் ) பெயரே படம் முடியும் போதுதான் நமக்கு தெரிகிறது . தெறித்து பிதுங்கும் விழிகள் , அரை மொட்டை தலை ,நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளில் கத்துவது..அதுவும் மெண்டல் என்று அவர் உச்சரிக்கும் போது ..கிளாஸ்.. ஒரு எளியவன் , வலியவனிடம் அடிபட்டு அழும்போது , அவனை சார்ந்தவர்கள் வந்து விட்டால் எப்படி ரியாக்ட் செய்வான் . சாமர்த்தியமாக இந்த காட்சியில் மிஷ்கின் முகத்தை காட்டாமல் ஃப்ரேம் வைத்திருக்கிறார் . கை ,காலை உதறி வெளிப்படுத்தும் இயலாமை, ஆக்ரோஷம், இப்ப வாங்கடா..அடித்து பாருங்கடா என்கிற அறைகூவல் மாதிரியான பாவனைகள்.சிம்ப்ளி சூப்பர்ப் மிஷ்கின் .


ரசிகர்கள் விரும்புவதை தருகிறோம் என்று புளித்த மாவில் செட் தோசை சுட்டு திரியும் இயக்குநர்கள் மத்தியில் எனக்கு பிடித்ததை மக்களுக்கு தருகிறேன் என்று கூறும் மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் . விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம் .


ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....



Wednesday, November 24, 2010

மானிட்டர் பக்கங்கள்.....24/11/10




கொஞ்சம் சினிமா . அண்ணன் உண்மைத்தமிழன் போனில் அழைத்தார் . நம் மேலான கருத்துக்களை இயக்குனர் திரு கரு . பழனியப்பன் எதிர்பார்க்கிறார் . நமக்காக சிறப்பு காட்சி என்றார் . படம் மந்திரப்புன்னகை . கிட்ட , தட்ட அனைத்து முன்னணி பிராண்டுகளும் சாரி ... பதிவர்களும் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் . ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார் உ.த . அட ! மிஸ் பண்ணிட்டமோ என்கிற ஏக்கம் ஜாக்கி சேகரின் முகத்தில் தோன்றியது . வாய் விட்டும் சொன்னார் . நான் ஜாக்கிக்கு அலெக்ஸாண்டர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன் . பக்கத்திலிருந்த ரமேஷ் வைத்யா “நெப்போலியன்” வைங்க.. நமக்கு எதுனா யூஸ் ஆகும் என்றார் .

மிக அடர்த்தியான கதையமைப்பு . இயக்குநரே துணிந்து நாயகனாகி விட்டார் . தன் பாத்திர படைப்பு இதுதான் . இதற்கான உடல்மொழி , உச்சரிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத முன் தீர்மானத்தில் அவர் இருந்திருக்க வேண்டும் . இறுகிய முகம் , கறுத்த உதடுகள் (இவ்வளவு சிகரெட் பிடித்தால் தமன்னா உதடா வரும்) , மிலிட்டரி நடை , படத்தில் அவர் ஒரு ட்ல்யூஷன் நோயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் . இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து , மாறுபட்ட நடவடிக்கைகளை செய்யும் குணாதிசயம் .


பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . படமும் கொஞ்சம் நீளம் . படத்துக்கு கத்திரி . கதாபாத்திரங்களுக்கு வாயில் பிளாஸ்திரி . படம் முழுக்க நகைச்சுவை என்கிற பெயரில் நோகடிக்கும் சந்தானமும் , தம்பிராமையாவும் திடீரென்று குணசித்திரமாக மாறி சாகடிக்கிறார்கள் . இரட்டை அர்த்த வசனத்தை சத்தமாக கூச்சமின்றி பேசும் சந்தானத்தால் , ஒரு கடையில் ஆணுறையை வாய் திறந்து கேட்க முடியவில்லையாம்.

“இயக்குநர் சொல்கிறார் : உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுவை வாய் விட்டு கேட்கிறோம் . ஆனால் நல்லது செய்யும் காண்டத்தை கேட்க முடியவில்லை . ஆங்காங்கே இது போல் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கிறது . ஆனால் பல இடங்களில் நீளமாக . அதை இயக்குநர் ஒரே முக் பாவனையுடன் , மாடுலேஷன் இன்றி பேசுவது எரிச்சலை உண்டாக்குகிறது (எனக்கு) . பாரதி , திருவள்ளூவர் , ஒளவையார் இவர்களது பாடல்களும் தப்ப வில்லை .


நடிக்க வருதோ இல்லையோ ? நன்றாக குடிக்க வருகிறது . காந்தி சிலை , கடற்கறை , கடைகள் , பப்ப்கள் எல்லா இடங்களிலும் குடிக்கிறார் . மீனாட்சியை நன்றாக அடிக்கவும் செய்தார்.


சைக்கியாட்ரிக்காக வருபவரும் , நகுலன் பொன்னுசாமியும் நன்றாக செய்திருக்கிரார்கள் . ஒரு காட்சியில் மருத்துவர் மீனாட்சியிடம் சொல்கிறார் .

உனக்கும் , கதிருக்கும் இருப்பது காதல்னு நீ சொல்ற.. நாங்க கெமிஸ்ட்ரின்னு சொல்வோம் . எனக்கு கலா மாஸ்டரும் , மானாட மயிலாடவும் நியாபகம் வந்தது

விஜயகாந்த் வெறும் எஸ். ஐயாகத்தான் இருப்பார் ஆனால் டிஐஜிக்கள் கூட்டத்தில் அவர்தான் எப்படி அதிகாரமாக பேசுவார் ? இதில் நாயகனும் அப்படித்தான் . மருத்துவமனையையே அடிமை போல் பேசுகிறார் . என்னதான் வியாதி என்றாலும் கொஞ்சம் த்ரீ மச்சுப்பா . அந்த நர்சுக்கு யார் கு(உ)ரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.


மீனாட்சி . ஹோண்டா ஷோரூமின் ஷோகேஸ் பொம்மை . முகம் கொஞ்ச்ஃஅம் முற்றலாக இருப்பது போல் தெரிகிறது . ஆனால் வளைவுகள் அபா(யக)ரம் . கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . ஸ்ரீகாந்தோடு பின்னி பிணைகிறார் ஒரு முறை . அதை நமக்கு பத்து முறை காட்டுகிறார்கள் . வருத்தம் ஒன்றும் இல்லை . வயித்தெறிச்சல்தான் .

அம்மாவை அழகாகவும் , பாடகியாகவும் காட்டும்போது துரோகம் செய்யப்போகிறார் என்று தெரிகிறது . கண்ணாடியில் மீனாட்சியும் , அம்மாவும் கதிருக்கு தலைசீவுவது கீளிஷே .

நிறைய பேசாமல் , உடல் மொழியில் சைக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம் . என்னோட சாய்ஸ் விக்ரம் . கரு .பழனியப்பன் இயக்கம் மட்டும் செய்திருந்தால் , நிச்சயம் இவ்வளவு தொய்வு கதையில் இருந்திருக்காது என்பது என் அபிப்ராயம் . ஆஃப்டர் ஆல் ஆடியன்ஸ்தானே எல்லாம் .

பார்த்திபன் மீண்டும் கனவு காணட்டும் . சதுரங்கம் என்னவாயிற்று ? பிரிவோம் ..சந்திப்போம் சார் ..


டிஸ்கி : (சம்பந்தமில்லாத)

7 ஜி. ரெயின்போ காலனியாம் ..அப்ப

2 ஜி. சி.ஐ.டி காலனியா?

டிஸ்கி : 2 கேப்டனுக்கு டாக்டர் பட்டமாம் . செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா...

Tuesday, November 9, 2010

மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10


சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் . திருச்செந்தூருக்கு போயிருக்கிறேன். ஒரு முறை மட்டுமே கோயிலின் உள்ளே சென்றேன் . அதுவே அலர்ஜியாகி விட்டது . கடலில் கால் நனைத்தல் , மானசீகமாக முருக தரிசனம் அவ்வளவுதான் . காரணம் ? கோயில் வாசலில் இருக்கும் லைசன் ரெப்ரசண்டட்டிவ்கள்தான் . டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டுசார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை .சரி விஷயத்து வருவோம் . வரும் 18ஆம் தேதி சல்லிப்ப்பயலுக்கு கல்யாணம் . காதலர்களாக இருந்தவர்கள் மணமக்களாக மாறுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னைப்போன்றவர்களுக்கு தெரியும் .(பொண்டாட்டி பிளாக் படிப்பாங்க இல்ல) .செல்வேந்திரன் கேண்டியின் கைத்தலம் பற்றுகிறார் முருகன் ஸ்தலத்தில் . மஹா திருமணத்திற்கு பிறகு நடக்கும் இன்னொரு பதிவுலக நிகழ்வு . கோவை , திருப்பூர், ஈரோடு , மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பதிவுலக நண்பர்களும் , இலக்கிய ஜாம்பவான்களும் சங்கமிக்க இருக்கிறார்கள் . பா.ராவும் வருவதாக சொல்லியிருக்கிறார் . அவர் வீட்டு விசேஷத்தை தவற விட்டவர்கள் , இந்த நிகழ்வை மிஸ் பண்ணாதீர்கள் .

நான் பதிவுலகம் வந்த புதிதில் கேபிள் மட்டுமே நன்கு அறிமுகம் . ஒரு மாலை செல்லடித்தார் . ஒரு சந்திப்பு இருக்கிறது . வருகிறீர்களா ? என்றார் . செல்வா விஜய் டிவியின் நீயா , நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . பாஸ்கர் சக்தியின் வீட்டில் சந்திப்பு . நர்சிம் , இரவுப்பாடகன் ரமேஷ் வைத்யா . மிக இனிமையான சந்திப்பு . அப்போதுதான் செல்வா அறிமுகம் . அதன் பின் இரண்டொரு முறை சந்தித்திருப்போம் . குறிப்பிட்ட இடைவெளியில் அலைபேசி உரையாடல்கள் உண்டு . சொல்லுங்க தண்டோரா அண்ணே என்று வாய் நிறைய அழைப்பார் . மழை பெய்த பின் காளான் முளைக்கும் . செல்வாவின் மனக்காளான் படித்துப் பாருங்கள் . மனதிற்குள் மழையடிக்கும் . மண் சட்டியில் ஆக்கிய மீன் குழம்பை போன்ற எழுத்துக்கு சொந்தக்காரன் . வச்சிருந்து சுவைக்கலாம் . அப்புறம் திருச்செந்தூர் தீர்த்தவாரியில் சந்திக்கலாமா?

நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் . மிஸ் பண்ணலாமா என்று வா ..குவார்ட்டர் கட்டிங் பார்த்தேன் . புஷ்கர் , காயத்ரி ஜோடிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் . அவர்களிடம் பேசியிருக்கிறேன் . சந்தானம் நடிக்கும் அக்சார்செம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள் . அது அவர்கள் இயக்கியதுதான். ஆனால் "வ" வில் போதையே வரவில்லை . 90 நிமிடங்களில் அந்த கதையை சொல்லியிருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் .


ஒரு முக்கிய தகவல் . கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . கூட்டம் ஜே..ஜேதான் . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர் மஃப்டியில் இருப்பார் . என்னை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தால் , நான் கொஞ்சம் சுவாரசியபடுத்தியிருப்பேன் .சரி உடுங்க..நம்ம அப்பன் வீட்டு காசுதானே ?.

ஜொள்ளர்கள் என்றால் ஆண்கள் மட்டும்தானா என்ன ? விஜய் மல்லையாவின் நிறுவன காலண்டர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . எல்லாம் அழகை ரசிக்கத்தான் . இப்போது பெண்களுக்கும் அந்த வாய்ப்பு . சகோதரம் என்ற அமைப்பு . ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ் .(பஞ்சாயத்து உண்டா? )

சின்ன வயதில் யானை சாணத்தை மிதிக்க போட்டியே நடக்கும் . நல்லது என்று என் பாட்டி சொல்வார் . இப்போது யானை சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கிறார்களாம் . பஞ்சாப்பில் .

“பிள்ளையார் சுழி “ போட்டு விட்டு எழுத ஆரம்பிப்போமா?

காலண்டர் மேட்டர் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

யாணை சாணம் : தினமலர்

காப்பி & பேஸ்ட் இல்லைப்பா . இன்ஃபர்மேஷன் .



பட்டுவேட்டித் தலைவரின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்ட வெற்றிகொண்டான் திருக்கடையூரில் பீமரதசாந்தி செய்து கொண்டு மனைவிக்கு மங்களநாண் பூட்டினாராம் . தலைவர் தலைமையில் செய்து கொண்டிருக்கலாமே...


சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்

Wednesday, November 3, 2010

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10


ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது என்றால் ஏதோ நடந்தது என்று அர்த்தமா?


காமல்வெல்த் கல்மாடியை இனி , கம்மணாட்டி என்று அழைக்கலாமா ?# டவுட்டு (இப்ப இதான் லேட்டஸ்ட் !!)


ஞாயிறு அன்று தா.பாண்டியனின் ஜெயா டிவி பேட்டியில் அரசை பற்றிய சொன்ன குற்றசாட்டுகள்...நேற்று சன்நியூஸின் தமிழகம் செய்தி தொகுப்பில்..விரிவாக அலசினார்கள் . இன்னும் சொல்லப்போனால் ஜெயாவை விட கடுமையாக . எந்திரர்களுக்கு மக்கள் மேல் அக்கறை வர சான்ஸே இல்லை . என்ன நடக்கிறது ? வரும் முன் காப்போம் திட்டமா?


சமீபத்திய குழந்தை கடத்தல் , கொலை , பாலியல் குற்றங்களுக்கு அஞ்சாதே , நான் மகான் அல்ல போன்ற படங்கள்தான் முக்கிய காரணம் என்கிறார் நண்பர் . உண்மைதானோ என்றும் தோன்றுகிறது...

மைனா திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் .... அடுத்த தீபாவளிக்கு “மைனா” ரிட்டி அரசு இருக்குமா ? # டவுட்டு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி சீசன் ... ஓணான் அடிக்கும் (எத்தனை நாளைக்குத்தான் ஆணி ?) வேலை அதிகம் . பதிவு எழுதவே முடிவதில்லை . (மேட்டரும் சிக்க வில்லை என்பது ஓணானுக்குத்தான் தெரியும் ) அவ்வப்போது பஸ்சில் வித்தவுட்டில் (அட..டிக்கெட் வாங்காமல் போறதை சொன்னேன் . பப்பி ஷேம் இல்லை ) பயணித்து விட்டு இறங்கி ஓடி விடுகிறேன் . ஒன்றும் “குடி” மூழ்கி விடாது என்பது வேறு விஷயம் . அதனால் கொஞ்சம் பஸ்சியதும் , ட்விட்டியதும் கலந்து கொஞ்சம் ரீமிக்ஸ் .


தாளிக்கும் ஓசை..பொறிக்கும் ஓசை..உன் குரல்தான் எத்தனை இனிமை ....முடிப்பதற்குள் அப்படியா என்றாள் ? சாப்பிடும்போது மங்கேஷ்கர் நினைவில் வந்ததை தவிர்க்க இயலவில்லை

மானிடராய் பிறத்தல் அரிது . கூன் , குருடு , செவிடின்றி பிறத்தல் அரிதிலும் அரிது என்கிறாள் ஒளவையார் . ஊமையாய் , குருடாய் , செவிடாய் இருப்பது எப்பேற்ப்பட்ட பாக்கியம் என்கிறான் பாரதி


கவிதை எழுதலாம்னு தேடினால் , கழுதை... கிடைக்கவேயில்லை ஒரு காகிதம் கூட

ஒரு காகத்துடன் வாக்கிங் போன அனுபவம் பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்..அநேகமாக அடுத்த அம்மாவாசைக்குள் வெளி வரலாம்..(கையடி என்ற ஊரில் முகாம்)

104 பேர்களிடம் வில் இருந்தது......ஒருவனிடம் மட்டுமே இருந்தது....காண்டீபம்


கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


சூட்சுமம் சுண்டுவதில் இருக்கிறது...காற்றை வசப்படுத்தும் கயிறும்.


திடீரென்று கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்திருந்தது அந்த குட்டி , இத்துணுண்டு ஜீவன் . ஊர்வதாக தெரியவில்லை. கால் பாவாமல் , காற்றில் மிதப்பது போல் இருந்தது . கடிக்கவில்லை..லேசாக கிச்சு ,கிச்சு மூட்டியது. மனைவிதான் சொன்னாள் .பிள்ளையார் சதுர்த்தி வருதுல்ல ..அதான் என்றாள் .இருந்தாலும் சர்வ சுதந்திரத்துடன் எல்லா இடங்களிலும் அது வியாபிக்க தொடங்கியது . மனைவி யோசித்து விட்டு சொன்னாள் . ரெட்டை பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு , உண்டியல்ல காசு போட்டுட்டு வாங்க..அதுவா போயிரும் . செய்தும் பலனில்லை. உடைத்த தேங்காய் துண்டு ஒன்றை பூஜையறையில் வைத்தோம் . பூசாரி சொன்னது . வீட்ல நாலு கேலண்டர் இருக்கு . பிள்ளையார் சதுர்த்தின்னு கொட்டை எழுத்துல இருக்கு . அப்புறம் ஏன் இது கூட்டமா வந்து நினைவூட்டுதுன்னு எனக்கு டவுட்டு . ஹிட் அடிக்கலாமான்னு கேட்டேன். கொன்னுடுவேன் என்றாள் தங்கமணி .கொஞ்சம் , கொஞ்சமாக அதுவே மறைந்து போனது . அந்த தேங்காய் துண்டை மறந்து விட்டோம் . அதிலும் இப்போது இன்னொரு ஜீவன் . ஆனால் சிகப்பாய்..சுள்ளென்று கடிக்கிறது


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்


கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்



செம்மொழி வேந்தே ! செகப்புத் தோல் சிங்கமே ! முத்தமிழே ! அம்மாவே ! ஐயாவே ! மருத்துவரே ! கேப்டனே ! புயலே ! சேரி தங்கமே ! தஞ்சை வேந்தரே !.ஈரோட்டு சிங்கமே ! இத்தாலிய தியாகியே ! அப்புறம் எனக்கு கடன் கொடுக்க வேண்டியவர்களே !

ப..சி...க்..கு....தய்யா


நாய் , பூனை குட்டிகளை தத்தெடுக்கும்படி த்ரிஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் . நான் இரண்டு முயல் குட்டிகளை தத்தெடுக்கலாம்னு இருக்கிறேன்..(சாக்குப் பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா)


கடந்து சென்றவள்
பறித்து சென்றாள் இதயத்தை
கடவுள் மீது கோபம் வந்தது
பின்னால் வருகிறாளே இன்னொருத்தி
அவளுக்கு எதை கொடுப்பது?

இமைகளை இப்படி இப்படி
திறந்தாள்
மின்னல் வெட்டியது
சிரிப்பினால் குழிகள்
பறித்தாள்
தவறாமல் விழுந்தேன்
குழியில்
ஓ...லைலா.


உயிர் போய்
உயிர் வருகிறது
ஒவ்வொரு முறையும்
எப்படி உயிர் போய்
உயிர் வருகிறது
என்பதை சொல்வதற்குள்



கொஞ்சம் காமெடி .. (வேற யாரு பட்டு வேட்டி வகையறாத்தான்)


காட்சி-1 எஸ்வி சேகரை பத்து அடி அடிக்கிறார்கள் .சந்திரசேகர் சொல்கிறார். இப்படி கேட்டா சொல்லமாட்டே ! இன்னொரு அடி அடிக்கிறார். சொல்லிவிடுகிறார்.

காட்சி-2 சுகுமாரி ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறார். அவர் முன்னால் ஒரு பாம்பு படம் எடுக்கிறது. உள்ளே வரும் சுகாசினி தன் கையை பாம்பின் முன் நீட்ட, பாம்பு சுகாவை கொத்தி விட்டு போய் விடுகிறது.

காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது.”டயாலிசிஸ் ரூம்” கலைஞர் டிவி மேட்னி!


ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை, அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''சிங்- சாங்-பங்'' குன்னு பேர் வச்சாங்க.
இரண்டாவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''ரீங்- சாங்- சிங்''குன்னு பேர் வச்சாங்க.
ஆனா... மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

''தெரியலையே''
''சம்- திங்-ராங்''குன்னு.


பிரபல பதிவர் : நான் எழுதிய “அதிகாலை விடியல் “ கவிதை படிச்சிருக்கீங்களா?

பேட்டியாளர் : ஏன் சார் ? அதிகாலைன்னாலே விடியல்தானே ..

பி .ப : படிச்சீங்களா ? இல்லையா ?

பே : இல்லீங்க ..தூங்கிட்டேன் .



புதுப்பித்துக் கொள்.. நித்தம் புதிய மலர்கள்..பழைய செடியில்


தீபாவளி மற்றும் “விடுமுறை தின” வாழ்த்துக்கள் .


டிஸ்கி : நாளை புதிய தலைமுறை மறக்காமல் வாங்கி உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்

Saturday, October 23, 2010

கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் .



சீமை நெருங்கி கொண்டிருந்தது . அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது . ராமேஸ்வரம் விரைவு வண்டி . அதிகாலை அவஸ்தை . அந்த சங்கிலியை இன்னும் கொஞ்சம் நீளமாகத்தான் வைத்தால் என்ன ? பர்ஸை திறந்து சில்லறையாக ரூ 200 இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன் . இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன் . வெளியில் கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் . பா .ரா என்னும் நிழலை . ம(ஹா) களின் திருமணம் .


சிவகங்கை சீமையில் கால் வைத்தோம் . நான் , பொன் .வாசுதேவன் , ராஜசுந்தர்ராஜன் ஐயா . மலர்ந்த முகத்தோடு சரவணன் , கும்க்கி , தோளோடு தோளாய் முத்துராமலிங்கம் ..அப்புறம் பா .ரா . எளிமையான சிரிப்போடு அணைத்துக்கொண்டார் மக்கா .


சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் . ஹோட்டல் அறைக்கு போனோம் . அதிரசம் , முறுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணும் வேலை மட்டுமே பாக்கியிருக்கிறது மக்கா என்றார் பா .ரா . கிட்ட தட்ட முக்கால் கிணறை தாண்டி விட்ட அவனை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையே வந்தது .

நீங்க வேலையை பாருங்க மக்கா .ஒரு வண்டி மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுங்க போதும் என்றோம். இதே சிவகங்கையில்தான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன் . ஒரு விஜயதசமி நாளில் மேளம் முழங்க மாலையுடன் என்னை அப்பா மன்னர் பள்ளிக்கு அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . உடன் அப்பாவுக்கு (தஞ்சை ) போன் போட்டேன் . 45 வயதில் 81 வயது அப்பாவிற்கு அதை நினைவுபடுத்தினேன் . அது இன்னும் ஒரு சந்தோஷம் . அதற்காக பா.ராவிற்கும் , மகாவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி


செட்டிநாடு வீடுகள் , கம்பர் சமாதி , காளையார் கோயில் எல்லாம் சுற்றி விட்டு பா .ரா வீட்டிற்கு போனோம் . இந்த தெருவில் எந்த இடத்தில் அந்த வறட்டியை தட்டியபடி முன் முடியை புறங்கையால் ஒதுக்கியபடி அந்த அம்மணி பேசியிருப்பார் என்று தேடிப்பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் மாசாவை ருசித்து விட்டு அடுத்த கட்டத்துக்கு தயாரானோம் . மக்கா ..சுக்கா என்று முன்பு எழுதியதை நினைவில் வைத்திருந்தான் தோழன் முத்துராமலிங்கம் . வள்ளாலாருக்கு ஒரு முன் மன்னிப்பு கடுதாசி எழுதி கொடுத்தேன் ...நீங்க முன்னாடி போங்க மக்கா..நான் பின்னாடியே வரேன் என்றார் பா.ரா . வந்தவுடன் கையில் வைத்திருந்தார் போனபார்ட்டை (நெப்போலியன்) ... தொடர்ந்து ஜீவகாருண்ய சங்க தலைவர் பழனியும் வந்தார் ... அம்மாவை தத்தம் மொழியில் அழைத்து உயிரை விட்டிருந்த ஜீவராசிகள் ஆவி பறக்க அடைப்பட்டிருந்தன...


இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? சரக்கு உள்ளே போனது . அறை முழுவதும் பிரியங்களினால் நிரம்பி வழிந்தது . உண்டு , உறங்கி , விழித்து மீண்டும்.....


முகூர்த்தம் . குறித்த நேரத்திற்கு வண்டி வந்தது . முதல் நாள் இரவே வந்து அல்வா கொடுத்த அக்பரை விட்டு விடவில்லை என்பதை அவரிடம் சொல்லுங்கள். கா.பா . ஸ்ரீ , மதுரை சரவணன் , பாலா இவர்களிடமும் . மாதவ்ராஜ் சொன்னது போல் மண்டப திருமணங்கள் போல் இல்லாமல் வீட்டோடு நடந்த விசேஷம் .


எல்லாத் திசைகளிலிருந்தும் ஆசி வழங்குவதைப் போல் நண்பர்கள் அழைத்துக் கொண்டேயிருந்தனர் . ஒரு நண்பரிடம் நான் சரியாக பேச முடியாமல் நேர்ந்ததற்கு மன்னிக்கவும் . பாழாய் போன ...

மாது , கா மு இன்னும் வெற்றி, சிவாஜீ , ஜெர்ரீ மற்றும் நண்பர்களுடன் நடத்திய கச்சேரியை மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..


மக்கா... தீபாவளி நெருங்குகிறது . மஹாவுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் . பால்யத்தில் தீபாவளி முடிந்தவுடன் கூட அந்த கடந்து போன திருவிழா ஏக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும் . இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன் ..சொன்னது போல் அடுத்த மாதம் ....ஏழுகடை...பாற்கடல் ... கொண்டாட்டம்.. அதுவரை .....

Monday, October 18, 2010

நான் ஆணாதிக்கவாதியா?




ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.

இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.

பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.

மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.

ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் அவனை உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.


ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.
மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.

உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )

டிஸ்கி : நான் ஆணாதிக்கவாதி இல்லை

Thursday, October 14, 2010

அழிக்கப்படும் புராதானங்கள்.....மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்



ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\

Tuesday, October 12, 2010

அர்த்தமில்லாத கதைகள் ...5



அந்த தெருவில் நுழையும் போது முதல் வீட்டில் இருந்து வந்த வாசனை மூக்கை துளைத்தது . சாப்பிடவே வேண்டாம் . சும்மா சமைக்கறவங்களை பார்த்தாலே போதும் என்று தோன்றியது . பொடுகு வேறு அரித்து தொலைக்க வறட்டு , வறட்டு என்று சொறிந்து கொண்டாள் . வழக்கமாக எல்லோரைம் போல் அம்மா தாயே என்று அவள் ஆரம்பிக்க மாட்டாள் . ரொம்ப உரிமையுடன் என்ன சமையல் நடக்குதா ? என்று பத்து வருட பழக்கக் காரியை போல் கேட்பாள் . அப்படியே தான் பிச்சை எடுக்க வந்த கதை ... எந்த ஊரில் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறேன் ..யார் , யாரிடம் எப்படி பிச்சை கேட்பது ? என்றெல்லாம் சுவாரசியமாக விளக்குவாள் . வீட்டுக்காரர்களுக்கும் ஒரு சுவாரசியம் வந்து விடும் . அவர்களும் தாங்கள் என்ன என்ன மெனு என்றெல்லாம் அவளிடம் விளக்குவார்கள் . ஒரு விஷயம் . அவளலால் சாப்பிடாமல் கூட இருக்க முடியும் . ஆனால் பிச்சையெடுக்காமல் இருக்க முடியாது . ஆனால் இது நடந்தது எல்லாம் வேறு ஊரில் . இப்போது அந்த ஊரில் பிச்சைகாரர்கள் ஒழிப்புக்கு குழு அமைத்து கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்கள் . அதனால் தொழில் நிமித்தம் இப்போது வேறு ஊர் . இந்த தெருதான் முதல் போணி.


வழக்கம் போல் தன் பாணியில் யாசகத்தை ஆரம்பித்தாள் . எல்லாருமா அப்படி இருப்பார்கள் .

முதல் வீட்டில் பழைய சோறுதான் இருக்கிறது என்றார்கள் . வேண்டுமென்றால் பக்கத்து பாய் வீட்டில் முந்தா நாள் பிரியாணி போடுவார்கள் என்று பரிந்துரை வேறு . ஆனால் அதையும் கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் தெரு நாய்க்கு போட்டார்களாம் . கொஞ்சம் முந்தி வந்தி ருக்க கூடாதா என்று விசனப்பட்டார்கள் . இவள் கேட்டாள் . அந்த நாய் எந்த வழியாக போனது என்று ?

இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் இதே பிரச்சனை .. அந்த ஊரில் ஒரு மடம் இருந்தது . ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம் அது . அதில் ஒரு திண்ணை காலியாக இருந்தது . பக்கத்து திண்ணையில் ஒரு பைத்தியக்காரன் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . அவளை பார்த்ததும் அவனுக்கு என்னவோ தோன்றியது . நிச்சயம் இவள் பிச்சைக்காரி இல்லை . தன்னைப்போல்தான் என்று நினைத்தான் . அவளை அழைத்து என்னம்மா பிரச்சனை என்றான் ?

அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .
பொழைப்பு இப்போதைக்கு நல்லா ஓடுதாம் . எழவு எங்கயோ இருக்கட்டும் . இந்த பக்கம் வராம இருந்தா சரி..

Sunday, October 10, 2010

மானிட்டர் பக்கங்கள்.....10/10/10

(வால் , ஜாஃபர் , கதிர்...அப்புறம் )

சென்ற வாரம் ஈரோடு போயிருந்தேன் . சில விளம்பர விவாதங்களுக்காக .

1 . வாகனமும் , அறையும் ஏற்பாடு செய்து கொடுத்த அன்பன் ஆரூரானுக்கு நன்றி .

2 . சரக்கு.. உபயம் வால் . ஆச்சர்யம் குடிப்பதை விட்டு விட்டதாம் வால் . அதனால் தலை கொஞ்சம் ஓவராக போக நேர்ந்தது . வால் குடிக்காததற்கு காரணம் .காதலாம் .. தோல்வியென்றால் குடிக்கலாம் . வெற்றியென்றால் விட்டு விடலாமா ?

3 . எளிமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரன் அன்பு தம்பி பாலாசி ..(பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?) . வயிற்றில் புளியை கரைக்காமல் . காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு பேடண்ட் ரைட் வாங்காத அகல் விளக்கு .

4 . ஜாஃபர் தம்பி...அன்புக்கு மிக்க நன்றி..கொஞ்சம் ஓவராத்தான் போனோமோ ? சென்னை வரும்போது அவசியம் சந்திக்க தண்டோரா ஆபீசுக்கு வர வேண்டும் . அது பதிவுலக அறிவாலயமாம் . ( நன்றி வெயிலான் )

5 . கார்த்திக் . நந்தாவில் ராஜ்கிரண் சூர்யாவிடம் சொல்லும் வசனம் ஒன்று உண்டு . என்னைய பார்க்கிறாப்ல இருக்கு . கார்த்திக் .. நானும் அப்படி உணர்ந்தேன் . ஹோட்டல் வாசலில் நாம் உரையாடியது ...இன்னும்....

6. கதிர் . கிராமத்து வேர் . நான் இவரது ஜெயா தொலைக்காட்சி பேட்டியை ஈரோட்டில்தான் பார்த்தேன் . 9.30 மணிக்கு வரேன் அண்ணே ! என்றவர் 9.40 க்கு வந்தார் . அதுவா முக்கியம் .உண்மையில் பேட்டி . அந்த சமூக அக்கறை . வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் சிறக்க ..சரக்குல பேசியதையெல்லாம் சாக்குல போட்டு மூட்டை கட்டணும் .. புரியுதா ?




ப்ரிபெய்டு உலகம் . மளிகை கடை வைத்திருந்த நண்பரின் கடையில் சரக்கே இல்லை . (மளிகை சாமான்களை சொல்றேன் ) பதிலாக எங்கும் செல்போன் மயம் . விரல் நுனி ரேகைகள் அநேகமாக அழிந்து போயிருந்தன . (ஈ சார்ஜாம் )

இட்லி மாவு மட்டும் விற்கறேன் . உங்களை மாதிரி சில நண்பர்களுக்காக என்றார் .

மக்களால் பேசாம இருக்கவே முடியாது . 200 ரூ சம்பாதிக்கற ஒருத்தர் டெய்லி 50 ரூபாய்க்கு டாப் - அப் பண்ணுகிறாராம் . பிஸினஸ் சூப்பரா போயிட்டிருக்கு என்றார் . பின்னூட்டமும் , ஓட்டும் போடறதுக்கு எதாவது ப்ரிபெய்டு ஸ்கீம் கொண்டு வரலாமா ? இந்த மாதிரி எல்லாம் அச்சு , பிச்சு கேள்வியெல்லாம் வினவ கூடாது . (ஈரோட்டு நண்பர்கள் ஃபேஸ் புக்கில் சில புகைப்படங்களும் , மற்றவைகளும் காட்டினார்கள் .. பார்த்தேன் ... வியர்த்தேன் ) காமெடி ஃபீஸ்களை பற்றி என்னத்த பேச ? ஈரோடு , கோவை எல்லா இடங்களிலும் இந்த நகைச்சுவை திரைப்படம் சூப்பர் ஹிட் .


கோவையில் அன்புடன் வந்து சூடாக இட்லியும் , தோசையும் (தானே ) வாங்கி கொடுத்த அண்ணாச்சிக்கும் , காங்கிரசின் நம்பிக்”கை” நட்சத்திரம் சஞ்சய் மாப்ளைக்கும் நன்றி .


அடுத்த வாரம் சிவகங்கையில் மட்டன் சுக்கா சாப்பிட போகிறேன் . அன்பு மக்கா பா . ரா வின் மஹாவிற்கு திருமணம் . ஏதோ என் மிக நெருங்கிய சொந்தம் வீட்டு திருமணத்திற்கு போக இருக்கும் உணர்வில் இருக்கிறேன் . காரணம் பா . ரா . எளிமையான மனுஷன் . ஆனால் மனுஷன் இப்பல்லாம் என் வேலையை எடுத்து கிட்டாரு . சரக்கு போட்டா , குரல் கேக்கணும்னு ....நீ எப்ப வேணா கூப்பிடு மக்கா ..நாங்க எல்லாம் இரவு பாடகனையே பார்த்தவன் ..(ர . வை) ..உப்புமா இல்லை .


என்னதான் இறுக்கமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
உன் உதடுகளின் வழியே
கசியும் அந்த ஒரு துளி
மெளனத்தில் எனக்கான
சம்மதம் ஒளிந்திருக்கிறது


(கதிரின் பாதிப்பு )



சென்னை விமான நிலையத்தில் சொக்க வைக்கும் அம்மையாரை சந்தித்தாராம் பட்டு வேட்டி தலைவர் . ( சும்மா எத்தனை நாளைக்குத்தான் மஞ்சள் துண்டையே அடையாளம் சொல்றது ) . இலங்கை தமிழர் பிரச்ச்னை..கோரிக்கை மனு .. கூட்டணிக்கு உத்தரவாதம்..

ஆமாம்...உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா ?

போய்யா...நாங்க சோத்துலயே உப்பு சேர்க்கறது இல்ல.. (இது தமிழ்குடிதாங்கியின் வசனம்பா ...விரைவில் விருதகிரிக்கு சாமரம் வீச நேரலாம் )

Friday, October 1, 2010

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?


ஒரு “சிட்டி” கை போட்டால் நாட்டுக்கு நல்லதையே செய்யும் சாஃப்ட்வேர் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மந்திரித்த தகடு...அதாங்க எந்திரம்..இரும்பை கரும்புக்கு அறிமுகப்படுத்த , அது இளக ஆரம்பிக்கிறது. வசீகரமான ஆரம்பம்..அப்புறம் ஆரம்பம்..அங்கங்கே மானே..தேனே மாதிரி..அப்பாஸ்டுபி . டபுள் கோட்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணிக்கங்க..ஐஸ்வர்யா ராவணன் கடத்தலில் இருந்து மீண்ட பிறகு மெருகேறியிருப்பதாக எனக்கு பட்டது. அசுரன் கடைந்ததில் வெளியான ஆலகாலம் உஜாலா சேர்த்த எஃபெக்ட்...நூலிடை....அதன் கீழ் ஆலிலை...அமிதாப்பின் கபர்தார் ...ரஜினி என்கிற காந்தம்.

அடிக்கடி படத்தில் வரும் மானிட்டரில் மேக்னட் என்ற வார்த்தையை பார்த்ததாக நியாபகம்.. பிரசவத்துக்கு இலவசம் ஆட்டோக்காரன் பாட்ஷா மட்டுமல்ல..ஆட்டோமேட்டிக்காரனும் கூட.. ஐஸ் சிட்டியை கிஸ்ஸடிக்கும் காட்சியில் , உண்மையில் ரஜினியின் ரியாக்‌ஷன் மால்வேர் தாக்கின எஃபெக்ட் இருந்தது.. லேசாக வலது புருவம்.. என் பார்வையில் இடது புருவம்...உயர... இருவரில் அவளை நினைத்து..இடம் சரியாக நினைவில் இல்லை.. ஆலகாலம்.

அப்புறம் ஷங்கர்...இறையருள் பெற்றவர்.. ஆசிர்வதிக்கப்பட்டவர் ... ராசியான கலைஞர்.....(மஞ்ச துண்டு இல்லைங்க...)


பழசை மறக்காதவர் ரஜினி என்று சொல்வார்கள் . வில்லனாய் அவர் குழையும் போது அது உண்மைதான் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் ஐஸ்சுடன் ரத்தம் நிரப்பப் பட்ட பியுரெட் இதயத்துடன் , குறைவான எடை கொண்ட காதல் மொழிகளை இன்குபேட்டரில் பொத்தி , பொறித்து கொடுக்கும் போது....லேப்பில் ராஜலக்‌ஷ்மி எதிரில் என்னை திட்டிய பி. வி. வெங்கட்ராமனை மன்னித்து விட்டேன். (அவர் எஸ்.வி. சேகரின் மாமனார்..தஞ்சை)


இறுதியில் ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள்.. பொது சொத்து 200 கோடி நாசம்... அது யாருடையது ? கம்மியாக சொல்கிறார்களோ?


சானா.....சீட்டாட்டத்தில் 12 கேம் முடிந்தவுடன் , கட்ஃபார் போடுவார்கள். மீண்டும் சீட்டு எடுத்து இடம் மாறி உட்கார வேண்டும்.. ராவணனில் விட்டதை.... 66 கிலோ எடை.. மீண்டும் ஒரு தேவதையுடன் டெம்ப்ரவரி கனவு..எந்திரம் துப்பிய சீட்டு ...ஒரு ரூபா காயின் இல்லை முழுசா..... அமவுண்ட் வேண்டாம்... ஒரு 10 ஓட்டு வாங்க ஆகும் செலவு. காசா முக்கியம்... அப்ப வேற எது முக்கியம்னு சொல்றவங்களுக்கு......கிளிமாஞ்சாரோ...கரும்பு சாரோ...உண்டு.....

Tuesday, September 21, 2010

பா.ராஜாராம்




அகநாழிகையும் , கருவேல நிழலும்



(சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் )

என்ன தம்பி.யாருப்பா நீ ? பெரியவங்க யாரும் துணைக்கு வரலையா ? விலாசம் , போன் நம்பர் எதாவது இருக்கா? நான் கொண்டு விடட்டுமா ? இப்படியெல்லாம் கேட்க நினைத்தேன்.. அந்த பையனை பார்த்தது. நல்லவேளை..சரவணகுமாரும் , ஜ்யோவும் அருகில் இருந்தார்கள் . அண்ணே..இவர்தான் பா.ரா. என்றார்கள் . பாராமுகம் பார்த்த சுகம் . அவரது கவிதைகளை போலவே எளிமையாயும் , கருத்தாயும் இருந்தார் ராஜாராம் . பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையேயும் பேரன்பை ஒளித்து வைத்திருக்கிறார் மனுஷன் . அப்படியென்றால் காட்ட வில்லையா என்று எவராவது எதிர் கேள்வி கேட்டால் , கேட்பவரை பற்றி ஒரு புனைவும் கூடவே இலவச இணைப்பாக ஒரு சொற்சித்திரமும் எழுதப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் .

ஊரைப் பார்க்க கிளம்பியவரை ஊரப்பாக்கத்தில் ஓரங்கட்டி இலக்கிய விசாரணைகளை ஆரம்பித்தோம். இடது சாரி முத்திரை குத்தப்பட்டிருந்த அந்த கண்ணாடி ஜீவன் தனக்குள் சலனமற்று கிடந்த பொன்னிற வியர்வையை பிளாஸ்டிக் குப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தது . (யாருக்காவது புரிஞ்சதுன்னு சொன்னீங்க..தொலைச்சுபுடுவேன்...ஆமாம்..


வரிசையாக நண்பர்கள் அழைப்பு பா.ராவுக்கு. அவரை வைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் , புரட்சித்தலைவி பாணியில் கொளப்பாக்கத்தில் பெரிய பந்தல் போட வேண்டியிருக்கும் போல . கருவேலநிழலின் சூட்சுமம் அதுதான் என்று நினைகிறேன் .


அடுத்த மாதம் எங்க... மன்னிக்க...நம்ம வீட்டு பொண்ணுக்கு கலியாணமுங்கோ...பா.ரா மின்னஞ்சல் அனுப்புவார்...வந்திருங்கோ...

Sunday, September 12, 2010

நீ கேளேன்....




இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...

Thursday, September 9, 2010

சாரு , வாசு மற்றும் மதுரை



உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானாந்தாவும் நினைவுக்கு வந்தார்கள் . அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது . அவை இரண்டும் மதுரையில் உள்ள பிரபல சாப்பாட்டு கடைகள் .(கேபிள் நோட் இட்) . அப்புறம் சோம மற்றும் சுராபானம் .விடு ஜீட் என்று ரயில் ஏறினோம் . ஏங்க நானும் வேலையை விட்டுட்டேன் . நீங்களும் இப்படி உருப்படாம போறீங்களே என்று தங்கமணி விசனப்பட்டது வேண்டாம் .

குளித்து..அட குளித்து முடித்து சுப்ரீம் ஹோட்டலுக்கு போனோம் . அங்குதான் எழுத்தாளர்”கள்” தங்கியிருந்தார் “கள்” . முதலில் தவறுதலாக பிரபஞ்சனின் அறைக்கதவை தட்டி விட்டு பின் சாருவின் அறைக்குள் நுழைந்தோம் . மனிதர் அடித்துக் கொண்டிருந்தார் . அட.தண்ணீயோ இல்லை அதுவோ இல்லை. டைப் அடித்துக் கொண்டிருந்தார் . சாருவுக்கும் தினம் எதுவாவது எழுதா விட்டால் “சாமி கண்ணை குத்தி விடுமோ என்று தோன்றியது . கேட்டேன் . யார் சொன்னது என்று பதிலுக்கு கேட்டார் . எல்லாம் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் என்று அவர் பெயரை சொன்னேன் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்று கேட்டார் . எது நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ , அது நடக்கட்டுமே சாரு என்றேன் . நடந்தது .

பத்து மணிக்கு கோயில் வாசல் திறந்தது . நாங்கள் மூன்றாவது ஆள்தான் . அங்கு மீ த பர்ஸ்ட் போட முடியவில்லையே என்று சின்னதாக எனக்கு ஒரு வருத்தம் . வாசு ஒரு சோக ஸ்மைலி போட்டார் . சாரு வழக்கம் போல் ஃபைண்ட் த கேஃப் பிட்வீன் த பிளவுஸ் அண்ட்... பிஸியாக இருந்தார் . அறைக்கு திரும்பினோம் . கிட்ட தட்ட ஒரு மாதம் சந்திர மண்டலத்தில் தங்கி வசிக்க தேவையான பொருட்களுடன் . ஜெர்ரியிடமிருந்து கால் . அண்ணே ..ஆன் தி வே.. சரவணகுமாரும் அக்தே (ஆயுதஎழுத்து வரவில்லை)


முதல் சுற்று பேச்சின்றியும் , இரண்டாம் , மூன்றாம் சுற்றுகள் வாயை மூடாமலும் கழிந்தது . மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது . இதோ நான் இருக்கிறேன் எடியூரப்பா என்று ஜெர்ரீ வந்தார் . சென்றார் . வென்றோம் . அஞ்சு வருடமாக காய்ந்து கிடைக்கும் அதிமுக காரன் போல் இருந்தோம் . எவ்வளவு வந்தாலும் தீர்ந்து கொண்டே இருந்தது . பிரபஞ்சன் கையில் ஒரு கிளாஸ் பீருடன் வந்தார். அன்பிற்குறிய மனுஷ்யபுத்திரன் வந்தார் . விமர்சகர் ஷாஜி வந்தார் . பேச ஆரம்பித்தார்கள் . நான் ரசிக்க ஆரம்பித்தேன்


சரவணக்குமார். செ வந்தார் . ஜோதியில் அவரும் ஐக்கியமாக சாப்பாடுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் . ஜெர்ரீ நான் தான் சாப்பாடு ஏற்பாடு பண்ணுவேன் என்று அடம் பிடிக்க , நானும் அவரும் ஆட்டோ பிடித்தோம் அருளானந்தா மெஸ்சுக்கு. ஒரு டிஸ்கவரி சேனலை அள்ளிக் கொண்டு , அப்படியே மீண்டும் அரசுக்கு வருமானம். ஒரு முழு... அறைக்கு வந்தோம்.. அதகளம் மீண்டும் ஆரம்பமானது..

டிஸ்கி : அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்

சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .

“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “


டிஸ்கி : 2

நர்சிம் சொன்னது போல் இல்லை . அந்த ஓட்டல் அங்குதான் இருக்கிறது .
வெயிலான் , முரளிகுமார் , கா.பா . ஸ்ரீ தருமி ஐயா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி ..