
ஜனவரி 30
பிப்ரவரி 24
மார்ச் 1
ஜுன் 3
ஆகஸ்ட் 25
இதெல்லாம் தமிழ் நாட்டில் சில முக்கியமான நாட்கள்.என்ன அது என்று பிறகு பார்க்கலாம்.நாம் ஒரு நாளில் எத்தனை முறை நம் கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்கிறோம்?சராசரியாக ஒரு பத்து முறை??கூட குறைய இருக்கலாம்.
வீட்டில் ,வெளியில்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ,நம் முகத்தை பார்த்துக் கொள்ள நாம் தவறுவதில்லை.
சில சமயம் அருகில் ஒரு கண்ணாடி தெரியும்..அதில் நம் முகத்தை பார்க்கும் அந்த இடத்தை அடைவதற்க்குள் நமக்கும் அதற்க்கும் விகிதம் மாறி போய் நம் முகம் அதில் தெரியாமல் போகும் போது ஒரு சின்ன ஏமாற்றம் நமக்குள் எழும்.அனேகமாக நம்மில் பலரும் இதை அனுபவித்திருப்போம்.
ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும் அறையில் தனித்திருக்க நேரிடும் ஒருவன் செய்யும் முக பாவங்கள்...நம் முன்னோரை நினைவூட்டுவதாகவே இருக்கும்.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் நாம் இவ்வளவு அழகா??என்று தன்னை தானே வியந்து...சட்டென்று அன்னியர் யாராவது அவனை பார்த்து விட்டால் அவன் முகத்தில் தெரியும் நவரசம்......(அசடு)
நம் முகத்தை வேரொரு இடத்தில் பார்க்க நேரும் போது..(புகைப்படம்,பத்திரிக்கை,.....)நமக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு..வரும்..ஒரு சின்ன (அல்ப)சந்தோஷம்...சார் உங்களுக்கு போட்டோ ஜெனிக் ஃபேஸ் என்று யாராவது சொல்லும்போது ஒரு வித கர்வம் தவிர்க்க முடியாததாகிறது.
சரி... ஜனவரி 30 அழகிரி
பிப்ரவரி 24 ஜெயலலிதா
மார்ச் 1 ஸ்டாலின்
ஜுன் 3 கருணா நிதி
ஆகஸ்ட் 25 விஜயகாந்த்
இதெல்லாம் தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள்.ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் என்னவோ இவனுக மட்டும்தான் உலகத்தில பொறந்த மாதிரியும் நம்மளை எல்லாம் செஞ்சா மாதிரியும் இல்ல இருக்கு
இந்த கண்றாவி நாளுங்க வர்ரதுக்கு ஒரு மாசம் முன்னடியே ஆரம்பிச்சிடும் எல்லா கூத்தும்...
உயிரே....உணர்வே....இதயமே...உதயமே
வாழும் வரலாறே ...நிகழ் கால பூகோளமே.....
தங்க சரித்திரமே.....எங்கள் தரித்திரமே...
இதில் பெரிய கொடுமை....வயசு வித்தியாசமில்லாமல் ஒரு வசனம்...."வாழ்த்த வயதில்லை....வணங்குகிறோம்.."எனன எழவுடா இது..
இதில் கூ ட புலி,சிங்கம்,தேர்,படை எல்லாம் ...அதிலும் கீழே போஸ்டர் அடிச்சவன் பண்ற அலப்பறைய பார்க்கனுமே...செல் போன் இல்லாம எவனும் போஸ் கொடுக்க மாட்டான்....
சரி போய் தொலையுது.... சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் "இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்" இப்படி ஒரு அறிக்கை வேற....அப்பத்தான் இன்னும் தூள் பறக்கும்...நாத்திகம் பேசறது ஊருக்குத்தான்....சில பேர்...அடுத்தவன் நெத்தியிலே இருந்தா அது ரத்தம்..ஆனா இவங்க வீட்டு பொம்பளைங்கள பாருங்க ஒவ்வொருத்தியும் ஒரு ரூபா காசு அளவு பொட்டு வச்சிகிட்டு தெய்வீகமா...அபிஷேகம் என்ன..ஆராதனை...தங்கத் தேர்...கொடுத்து வச்சவனுங்க.....
பேரை எல்லாம் பாருங்களேன்...
அந்தம்மா வந்தா கரண்(சி )பாஸ்/சுதா/தின
தலைவர் வந்தா ஊருக்கே தெரியுமே ....நிதி
ஆனா நம்ம விதி.....
காமெடி த்திரை
சிரிப்பொலி
ஆதித்யா
என்னவோ எழுத ஆரம்பிச்சேன்....எங்கையோ போயிடுச்சு......
தலைவர் வாழ்க...தலைவி வாழ்க....தமிழரெல்லாம் ஒழிக......