Showing posts with label விபரீதம்/விகடன்/விமர்சனம். Show all posts
Showing posts with label விபரீதம்/விகடன்/விமர்சனம். Show all posts

Friday, July 10, 2009

ஆ”நொ”ந்த விகடன்......ஒரு விமர்சனம்....(காரமான)

விகடன்...நூற்றாண்டை நெருங்கும் பாரம்பரியமான பத்திரிக்கை நிறுவனம்...இதன் ஒரு கிளையான ஜீனியர்விகடன் “தமிழ் மக்களின் நாடிதுடிப்பு”என்று விளம்பரபடுத்துகிறார்கள்...ஆனால் உண்மையில் ......

ஒரு தவறான திரைப்பட விமர்சனத்திற்காக வருந்தி “சினிமா விமர்சனம்’பகுதியையே சில காலம் மூடி வைத்திருந்தார்கள்..பின் ஷங்கரின் பாய்ஸ் படம் குப்பையென்று “சீ” என்று முதல் பக்கத்தில் விமர்சனம் செய்தார்கள்..
ஆனால் அந்த தகுதி விகடனுக்கு இருக்கிறதா? என்றால்...பெரிய கேள்விகுறிதான் மிஞ்சுகிறது...

ஆனந்தவிகடனைக் கூட விட்டுவிடலாம்...தூக்கி எறிந்து விடலாம்..இப்பல்லாம் விகடன் வரவில்லையென்றால் கூட மனசு படிக்க அலைவதில்லை(முன்பு தேடி போய் வாங்கி வரத் தூண்டும்)அப்படியே படித்தாலும் முழுவதும் (அட்டை டூ அட்டை சொத்தை) படிக்க முடிவதில்லை..அலுத்துப் போன செய்திகள்..சுவாரசியமே இல்லாத நடை...சினிமா பேட்டிகள் இன்னும் சுத்தம்(உதா”ரணம்”)இந்த வாரம் வேட்டைக்காரன் பட தகவல்கள்)..முடிவில் ட்விஸ்ட் இருக்கும் ஒரு பக்க கதைகள்,பரிகாரம்போல் கொஞ்சம் ஆன்மீகம்....

இன் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே வாசகர்களுக்கு இணையம் மூலம் தெரிந்த செய்திகள்(கமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு)..கொஞ்சம் அரசியல்(அதிலும் கருணாநிதியை தாக்குவதிலும்,ஆதரிப்பதிலும் இவர்களின் ஊசலாட்டம் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது..சரி பத்திரிக்கைதான் இப்படி என்றால் தொலைகாட்சி தொடர்கள்....கேவலத்தின் உச்சம்.....

சினிமாவை சீரழித்தவர்கள் மார்க்கெட்(டு) போனதும் சீரியல் என்ற சீரழிவை ஆரம்பித்தார்கள்.. சென்சார் ஒன்று சின்னத்திரைக்கு இல்லாததால் சீரழிவு தொடங்கியது..ஏவிம் வியாபர நிறுவனம்,,அது வும் தயாரிப்பில் இறங்கியது..நம்பிக்கை,நிம்மதி என்று பாசிட்டிவாக தலைப்பு இருக்கும்..கதை..அதே குடி கெடுக்கும் கதைதான்...அந்த சேற்றில்தான் விகடனும் விழுந்தது...முதலில் ஓரளவு தரமான (ஆனந்த பவனம்)கதைகளை கொடுத்தவர்கள் பின் ரேட்டிங் மாயையில் சிக்கி ”கல்சுரல் அசாசினேஷனை ”ஆரம்பித்தனர்...நான்கு வருடங்களுக்கும் மேல் வரும் “கோலங்கள்’ என்ற தொடரை ஒரு அரை மணி பார்த்தால்”முழுக்க,முழுக்க விபசாரம்’ செய்வதையே தொழிலாக கொண்ட ஒரு குடும்பத்துடன் நம் பொழுது கழிந்த உணர்வே உண்டாகிறது.. அம்மா,மகன்.அப்பா,மகள் இவர்களைத் தவிர யாரும்,யாருடனும் புணரலாம் என்கிறது அந்த கதை..

அந்த வரிசையில் இப்போது திருமதி செல்வம் என்ற இன்னொரு குப்பை...உணவுடன் சிறிது சிறிதாக மலத்தை சேர்த்து உண்டு வந்தால் கொஞ்ச நாளில் மலமே உணவாகி விடும்..அது இல்லாமல் உணவு சுவையாயில்லை என்றே தோன்றும்..டிவி சிரியல்களும் அப்படித்தான் ஆகிவிட்டது...

சராசரி இரத்த அழுத்த விகிதம் 80/120...இன்றைய வாழ்க்கை முறையில் 100/140 ..வரை நார்மல்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..ஆனால் நீங்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னும்,பின்னும் இரத்த அழுத்தத்தை சோதித்தால் தெரியும்..எந்த அளவிற்கு இவை பாதிப்பை ஏற்பத்துகிறது என்பது..

அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான்,சம்பந்தி என்று சொந்தங்களுடன் இந்த எபிசோட் கண்ரவிகளை பார்த்தால்,,,தற்செயலாக யாருக்காவது எதாவது பிரச்சனை வந்திருந்தால் கூட..இவன் தான் காரணமாயிருக்குமோ..இவள்தாள் சூன்யம் வச்சுட்டாளோ என்றெல்லாம் கூட உறவுகளை யோசிக்க வைக்கும்

ஜீனியர்விகடனில் வரும் கொலை,கற்பழிப்பு,பாலியல் பலாத்காரங்கள்,கள்ளதொடர்புகள் சம்பந்தப்பட்ட செய்திகளின் முடிவில் ஒரு அறிவுரை இருக்கும்..ஐயோ..இப்படி நடக்கிறதே..இளைய சமுதாயம் சீரழிகிறதே என்ற ஒரு போலி ஓலம் ..உண்மையில் இவை பெருகி போனதுக்கு தொலைகாட்சி தொடர்கள்தான் காரணம் என்று அனைவரும் கூறுகிறார்கள்..
ஆனால் இவர்கள் செய்வது என்ன? தூண்டியும் விடுவார்களாம்,,துப்பறிந்தும் கொடுப்பார்களாம்...எல்லாம் பணம்....நம்பர் 1 ஸ்தானத்திற்கான போட்டியில் ஜெயிக்க வேண்டும்...அது ஒன்றே தான் குறி..இல்லை...வெறி....

இப்ப திரைப்படம் வேறு எடுக்கிறார்கள்...டாஸ்மாக்,பிக்பாக்கெட்,பொறுக்கி...இப்படித்தான் பாத்திர படைப்பே இருக்கிறது...

எதாவது செய்து விட்டு போங்கள்...பத்திரிக்கைகளில் மக்களுக்கு அறிவுரை மட்டும் சொல்லாதீர்கள்..ஆனால் ஒன்று..விபச்சாரம் இதை விட நிச்சயம் இழிவான தொழிலில்லை...