Wednesday, July 8, 2009

ராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....


பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்....ராமதாஸ் வாசலில் ஈசிசேரில் தமிழோசை படித்துக்கொண்டிருக்கிறார்..அவர் பேரன்கள் ஒருவருக்கொருவர் காலை வாரி “அட்டாக்” சொல்லி விளையாடி கொண்டிருக்கிறார்கள்..காடுவெட்டி குருவும்,கோ.க மணியும் வருகிரார்கள்..

என்னய்யா எங்க வந்திங்க..

சின்னய்யா கூட்டிகிட்டு பம்பு செட்டுக்கு குளிக்க போலாம்னு..

அவர் பின்னாடி உக்கார்ந்து அழுதுகிட்டு இருக்கார்..

ஏன் அய்யா?

நேத்து திருவிழாவுக்கு போனோம்..பலூன் கேட்டான்..வாங்கி தரலை..அப்ப அழ ஆரம்பிச்சவந்தான்....போய் சமாதான படுத்துங்க...

சின்னய்யா..என்ன இது...வாங்க பம்புசெட்டுல குளிச்சுட்டு டெண்ட் கொட்டாயில விஜயகாந்த் படம் பாத்துட்டு வருவோம்..

அன்பு அழுகையை அடக்கி..என் கிட்ட காசு இல்லையே..அய்யா கிட்ட கேட்ட வெய்யராரு ..

அதை விடுங்க..உங்க வீட்டுல ஒரு டிவி இருக்குல்ல..அதை விலை பேசி வச்சிருக்கேன்..காசு தேத்திடலாம்..

அப்படியே அச்சடிச்ச தமிழோசை பேப்பரும் நிறைய இருக்கு,,அதையும் போட்டுட்டா..சரக்குக்கும் தேத்திடலாம்..

ராமதாசு..குரு அன்பை பாத்து கூட்டிகிட்டு போயிட்டு வாங்க..அரசாங்க ஆஸ்பத்திரி வழியா போகாதீங்க.. ஏங்கய்யா.. பழைய ஞாபகத்துல உள்ளே போய் பெட்ல படுத்துகிடுறான்..நா போய் சமாதானபடுத்தி கூட்டிகிட்டு வரவேண்டியதாயிருக்கு..அப்புறம் எனக்கும் பொழுது போகலை..என் பழைய ஆஸ்பத்திரியை ஓட்டல்காரனுக்கு வாடகைக்கு விட்டிருந்தோமில்ல ..அவனை காலி பண்ண சொல்லிடு...நா திரும்பவும் வைத்தியம் பார்க்கப் போறேன்..

பாட்டாளி கிளினிக்....டாக்டரின் மனைவி சோறு கொடுக்க வருகிரார்..

என்னம்மா குழம்பு..?


காய்கறி என்ன விலை விக்குது..வீட்டுலயேயும் வருமானத்தை காணும்..

அப்புறம் என்ன பண்ண?


கொடநாட்லேர்ந்து உங்க தங்கச்சி வந்துச்சு..அங்க தோட்டத்துல காய்ச்சதுன்னு ஏழு வன்னிக்காய் கொடுத்திச்சு..அதை போட்டு குழம்பு வச்சேன்..

அன்புக்கு அடுத்த வருஷம் சுரைக்காய் தாரேன்னுச்சே நிணைப்பூட்டினியா?


ம்ம்ம்..ஆனா அது ஏட்டு சுரைக்காயாம்...இனி கூட்டுக்கு உதவாதுன்னு சொல்லிட்டாங்க..

அடடா..வடையும் போச்சே..இது என்ன சாம்பார்ல உப்பே இல்ல..

இனிமே உப்பு சேர்க்காதீங்க..திமுக வோட திரும்ப கூட்டுக்கு கெஞ்சனும் இல்ல..அதான்..

அதுவும் சரிதான்.. வைத்தியத்துக்குன்னு ஒரு பய வரமாட்டேங்கிறான்..ஓட்டல்காரன் சூன்யம் வச்சுட்டானா? ராமதாசின் மணைவி வெளியில் சென்று பார்க்கிறார்..

என்னங்க இங்க வாங்க..
தமிழ்குடிதாங்கி கால் தாங்கி நடந்து வெளியில் வருகிறார்..

ஓட்டல் பெயர் பலகையை மாத்தினிங்க....இந்த போர்டை கழட்டாம விட்டுட்டீங்க..எவன் வருவான்..

அந்த போர்டில் இருந்த வாசகம்”வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது..

31 comments:

நையாண்டி நைனா said...

MEE FIRSTE...

நையாண்டி நைனா said...

/*பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது*/

இதென்னா? என்னுடைய பதிவை இப்படிலாம் கிண்டல் பண்ண கூடாது... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

நல்ல இருந்தது..... "ஏட்டு சுரைக்காய்" மற்றும் கூட்டுக்கு "நோ"

வால்பையன் said...

நல்லாயிருக்குறவன் போனாலே வியாதியோட தானே திரும்பி வருவான்!

நையாண்டி நைனா said...

பார்த்து சாமியோ.... ஆட்டோ வரப்போகுது...

Cable சங்கர் said...

/பார்த்து சாமியோ.... ஆட்டோ வரப்போகுது..//

வரட்டுமே நான் "பாத்துக்க" மாட்டேன்..

Cable சங்கர் said...

தண்டோரா வர வர தைரியம் ஓவராயிட்டேவருது.. ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்

நாஞ்சில் நாதம் said...

// இது என்ன சாம்பார்ல உப்பே இல்ல
இனிமே உப்பு சேர்க்காதீங்க..திமுக வோட திரும்ப கூட்டுக்கு கெஞ்சனும் இல்ல..அதான்..\\

இப்படியெல்லாம் ஒரு Item அரசியல் வியாதிகளுக்கு ஒத்துக்காது

நர்சிம் said...

//பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்//

செம ஓப்பனிங் பாஸ்

அன்புமனி & ராமதாஸ், அல்லது கலைஞர் & ஸ்டாலின் கூட்டணி தேவர்மகன் கமல் சிவாஜி பேசிக்கொள்ளும் ஸீனை உல்ட்டா செய்தா நல்லா இருக்குமோ?

நையாண்டி நைனா said...

பதிவுலே படம்....

அண்ணே... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...

R.Gopi said...

Thala

This is another Super Punch post from you............

Goyya, Kuruma ellaam danger THALA..


Paaththu, soodhaanama nadandhukkonga. Sollitten.

கும்மாச்சி said...

தண்டோரா, ரொம்பத்தான் கலாய்கிரிங்க

மணிஜி said...

///*பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது*/

இதென்னா? என்னுடைய பதிவை இப்படிலாம் கிண்டல் பண்ண கூடாது... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஐயா..நக்கலிஸ்ட் வாங்கய்யா..

மணிஜி said...

//நல்லாயிருக்குறவன் போனாலே வியாதியோட தானே திரும்பி வருவான்!//

வால்..நீங்க எங்க போனா சொல்றீங்க?

மணிஜி said...

// /பார்த்து சாமியோ.... ஆட்டோ வரப்போகுது..//

வரட்டுமே நான் "பாத்துக்க" மாட்டேன்..


Cable Sankar said...

தண்டோரா வர வர தைரியம் ஓவராயிட்டேவருது.. ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்//

தலைவா...காப்பாத்துவியா?

மணிஜி said...

//// இது என்ன சாம்பார்ல உப்பே இல்ல
இனிமே உப்பு சேர்க்காதீங்க..திமுக வோட திரும்ப கூட்டுக்கு கெஞ்சனும் இல்ல..அதான்..\\

இப்படியெல்லாம் ஒரு Item அரசியல் வியாதிகளுக்கு ஒத்துக்காது//

வாங்க நாஞ்சில் நாதம்...நன்றி..

மணிஜி said...

//நர்சிம் said...//

செம ஓப்பனிங் பாஸ்

அன்புமனி & ராமதாஸ், அல்லது கலைஞர் & ஸ்டாலின் கூட்டணி தேவர்மகன் கமல் சிவாஜி பேசிக்கொள்ளும் ஸீனை உல்ட்டா செய்தா நல்லா இருக்குமோ?

வாங்க பாசு...உல்ட்டா செஞ்சுடலாம்...நன்றி

மணிஜி said...

//Thala

This is another Super Punch post from you............

Goyya, Kuruma ellaam danger THALA..


Paaththu, soodhaanama nadandhukkonga. Sollitten.//

கோபி.வாங்க..அக்கறைக்கு நன்றி..

மணிஜி said...

//தண்டோரா, ரொம்பத்தான் கலாய்கிரிங்க//

தலைவா..சட்டையர் காமெடிதான்....

முரளிகண்ணன் said...

தண்டோரா

சேவாக் அடி போல அட்டகாச ஓப்பனிங்.

பின்னீட்டீங்க

கலையரசன் said...

ஆட்டோ எல்லாம் இல்ல..
ஸ்டிரைட்டா வீச்சு தான்டியோ!

நான் ஏற்கனவே சொல்லிதான்
போன் வந்து, பதிவை எடுத்தீங்க...
இப்ப மறுபடியும் சொல்லியிருக்கேன்
என்னவாக போகுதோ?

புது பதிவு போட்டிருகேன்!!

மணிஜி said...

//தண்டோரா

சேவாக் அடி போல அட்டகாச ஓப்பனிங்.

பின்னீட்டீங்க//

அடி..அடி..ங்கிறிங்க..அடி வயித்துல...

மணிஜி said...

//ஆட்டோ எல்லாம் இல்ல..
ஸ்டிரைட்டா வீச்சு தான்டியோ!

நான் ஏற்கனவே சொல்லிதான்
போன் வந்து, பதிவை எடுத்தீங்க...
இப்ப மறுபடியும் சொல்லியிருக்கேன்
என்னவாக போகுதோ?

புது பதிவு போட்டிருகேன்!!//

பாத்துக்குவோம்....படிச்சுடுவோம்..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்//
//ராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....//

அண்ணே உங்க ரவுசு தாங்கல... அந்த "வன்னிக்காய்" குழம்பு ரொம்ப ருசி ...

மணிஜி said...

// //பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்//
//ராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....//

அண்ணே உங்க ரவுசு தாங்கல... அந்த "வன்னிக்காய்" குழம்பு ரொம்ப ருசி ...
//

வாங்க கவி..நன்றி..

butterfly Surya said...

super... super.. super...

Raju said...

அதான் ஓச்சு ஓரத்துல உக்காத்தி வச்சுட்டீங்க்ளே..!
அப்பறம் என்ன காமெடி..?

குடந்தை அன்புமணி said...

//இனிமே உப்பு சேர்க்காதீங்க..திமுக வோட திரும்ப கூட்டுக்கு கெஞ்சனும் இல்ல..அதான்..//

கலக்கலான நக்கலு.

ரமேஷ் வைத்யா said...

அய்யா... அய்யா... முடியலையா... சூப்பர்!

Jackiesekar said...

பின்னுட்டமே வராத இடுகை போல் வெறிச்சோடி கிடக்கிறது தைலாபுர தோட்டம்....ராமதாஸ் வாசலில் ஈசிசேரில் தமிழோசை படித்துக்கொண்டிருக்கிறார்..--//

ஆரம்பமே அசத்தல் தலை..

மணிப்பக்கம் said...

i love u :)