கழிவறை ஒன்று புதிதாக திறக்கிறார்கள்
வருகிறாயா?
இல்லை...இங்கேயும் ஒன்று
இரண்டு நாளில் வருகிறது
’இருக்க”வேண்டும்..
அல்சூர் காக்கையும்
அயனாவரம் காக்கையும்
”கா”மெயிலில் சாட்டியது
---------------------------------------------------------------------------------------------------
வள்ளுவருக்கு சிலை
காவிரிக்கு சமாதி
உழவென்னும் தலைப்பில்
உள்ள பத்து குறட்பாக்கள்
நீக்கம்..அரசு உத்தரவு
-------------------------------------------------------------------------------------------------
நண்பரின் மகளை சந்திக்க நேர்ந்தது..அங்கிள் என்று வாய் நிறைய அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.”நா சின்ன பிள்ளையா இருந்தப்ப என்று சில நிகழ்ச்சிகளை சொன்னாள்.ஆச்சர்யமாக இருந்தது.இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா?அவளுக்கு இப்ப வயசு அஞ்சுதான்...குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யபடுத்துபர்கள்தான்..
-------------------------------------------------------------------------------------------------
பஞ்சாப்பில் சிறைகைதிகளுக்காக புது திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி இருக்கிறார்களாம்..அதன் படி சிறை வளாகத்தில் குடில்கள் கட்டப்படும்.கைதிகள் வருடத்திற்கு ஏழு நாட்கள் தங்கள் குடும்பத்தோடு கழிக்கலாமாம்..காவலர்கள் விளக்கு பிடிப்பார்களோ?ஏற்கனவே நம்மூரில் கோழியெல்லாம் போட்டு அசத்துகிறார்கள்..தலைவர் அடுத்து என்ன அறிவிக்க போகிறாரோ?
-------------------------------------------------------------------------------------------------
அனுமாஷ்யமான சூழல்.அடர்த்தியான இருள்.பொட்டல்வெளியில் மரங்கள் உதிர்த்த சருகுகளின் மேல் ஒரு பிரம்ம ராட்ஸசன் நடந்து வரும் பேரோசை..
ஊடுருவி பார்த்தாலும் புலப்படாத விருட்சங்கள் வாழ்வின் பயங்கரத்தை பறைசாற்றுகிறது..பகல் பொழுதுகளில் பொசுக்கிய அக்னி இருள் கவ்வியதும் பொழியும் உமிழ்களில் அந்த நீர்நிலை உறைந்தே கிடந்தது..காரிருளிலும் மேல் வானக்கண்ணாடியாய் நிலாவை ஏரி பிரதி
எடுத்துக் கொண்டிருந்தது எனலாம்.
என்ன செய்கிறான் அவன்..மாலை நேர நிழலைப் போல் நீண்டு உயரமாய் தெரிந்தவன்..அடுத்த வரியில் முரண்படும் எழுத்தாளனாய்,மதிய வெயிலின் நிழலாய் மாறுகிறான்.
இப்போது அவன் உருவன் சுருங்கியது,கர்ப்பத்தில் இருக்கும் சிசுவாய் காட்சியளித்தான்..என்னவோ பிரசவ அவஸ்தை அவன் முகத்தில் அவதானித்தது..அவன் தன் பாய்மர துடுப்பு போன்ற கரங்களால் ஏரி நீரை விலக்குகிறான்..அடடா..இப்போது அவன் தோற்றம் நீரில் முன்னும்,பின்னும் நீந்தும் அன்ன பட்சியாய்....
ஒண்ணுமில்லீங்க...ஒருத்தன் ஏரி கரைல பேண்டுட்டு,கழுவிகிட்டு இருக்கறதைதான் நம்ம நவீனத்துவங்கள் மேஜிக்கல் ரியலிசம் நடைல எழுதியிருக்காங்களாம்...
-------------------------------------------------------------------------------------------------
இந்த இடுகைக்கு இதை தலைப்பா வச்சதுக்கு காரணம், பின்னூட்டம் போடவும் வசதியா இருக்கும் பாருங்க..அப்படியே ஒத்தி போடலாம். வெட்டியும் போடலாம்..வசதிப்படி செய்ங்கய்யா..