ஜனவரி 30
பிப்ரவரி 24
மார்ச் 1
ஜுன் 3
ஆகஸ்ட் 25
இதெல்லாம் தமிழ் நாட்டில் சில முக்கியமான நாட்கள்.என்ன அது என்று பிறகு பார்க்கலாம்.நாம் ஒரு நாளில் எத்தனை முறை நம் கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்கிறோம்?சராசரியாக ஒரு பத்து முறை??கூட குறைய இருக்கலாம்.
வீட்டில் ,வெளியில்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ,நம் முகத்தை பார்த்துக் கொள்ள நாம் தவறுவதில்லை.
சில சமயம் அருகில் ஒரு கண்ணாடி தெரியும்..அதில் நம் முகத்தை பார்க்கும் அந்த இடத்தை அடைவதற்க்குள் நமக்கும் அதற்க்கும் விகிதம் மாறி போய் நம் முகம் அதில் தெரியாமல் போகும் போது ஒரு சின்ன ஏமாற்றம் நமக்குள் எழும்.அனேகமாக நம்மில் பலரும் இதை அனுபவித்திருப்போம்.
ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும் அறையில் தனித்திருக்க நேரிடும் ஒருவன் செய்யும் முக பாவங்கள்...நம் முன்னோரை நினைவூட்டுவதாகவே இருக்கும்.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் நாம் இவ்வளவு அழகா??என்று தன்னை தானே வியந்து...சட்டென்று அன்னியர் யாராவது அவனை பார்த்து விட்டால் அவன் முகத்தில் தெரியும் நவரசம்......(அசடு)
நம் முகத்தை வேரொரு இடத்தில் பார்க்க நேரும் போது..(புகைப்படம்,பத்திரிக்கை,.....)நமக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு..வரும்..ஒரு சின்ன (அல்ப)சந்தோஷம்...சார் உங்களுக்கு போட்டோ ஜெனிக் ஃபேஸ் என்று யாராவது சொல்லும்போது ஒரு வித கர்வம் தவிர்க்க முடியாததாகிறது.
சரி... ஜனவரி 30 அழகிரி
பிப்ரவரி 24 ஜெயலலிதா
மார்ச் 1 ஸ்டாலின்
ஜுன் 3 கருணா நிதி
ஆகஸ்ட் 25 விஜயகாந்த்
இதெல்லாம் தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள்.ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் என்னவோ இவனுக மட்டும்தான் உலகத்தில பொறந்த மாதிரியும் நம்மளை எல்லாம் செஞ்சா மாதிரியும் இல்ல இருக்கு
இந்த கண்றாவி நாளுங்க வர்ரதுக்கு ஒரு மாசம் முன்னடியே ஆரம்பிச்சிடும் எல்லா கூத்தும்...
உயிரே....உணர்வே....இதயமே...உதயமே
வாழும் வரலாறே ...நிகழ் கால பூகோளமே.....
தங்க சரித்திரமே.....எங்கள் தரித்திரமே...
இதில் பெரிய கொடுமை....வயசு வித்தியாசமில்லாமல் ஒரு வசனம்...."வாழ்த்த வயதில்லை....வணங்குகிறோம்.."எனன எழவுடா இது..
இதில் கூ ட புலி,சிங்கம்,தேர்,படை எல்லாம் ...அதிலும் கீழே போஸ்டர் அடிச்சவன் பண்ற அலப்பறைய பார்க்கனுமே...செல் போன் இல்லாம எவனும் போஸ் கொடுக்க மாட்டான்....
சரி போய் தொலையுது.... சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் "இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்" இப்படி ஒரு அறிக்கை வேற....அப்பத்தான் இன்னும் தூள் பறக்கும்...நாத்திகம் பேசறது ஊருக்குத்தான்....சில பேர்...அடுத்தவன் நெத்தியிலே இருந்தா அது ரத்தம்..ஆனா இவங்க வீட்டு பொம்பளைங்கள பாருங்க ஒவ்வொருத்தியும் ஒரு ரூபா காசு அளவு பொட்டு வச்சிகிட்டு தெய்வீகமா...அபிஷேகம் என்ன..ஆராதனை...தங்கத் தேர்...கொடுத்து வச்சவனுங்க.....
பேரை எல்லாம் பாருங்களேன்...
அந்தம்மா வந்தா கரண்(சி )பாஸ்/சுதா/தின
தலைவர் வந்தா ஊருக்கே தெரியுமே ....நிதி
ஆனா நம்ம விதி.....
காமெடி த்திரை
சிரிப்பொலி
ஆதித்யா
என்னவோ எழுத ஆரம்பிச்சேன்....எங்கையோ போயிடுச்சு......
தலைவர் வாழ்க...தலைவி வாழ்க....தமிழரெல்லாம் ஒழிக......
26 comments:
இனிமே கண்ணாடியே பார்க்க கூடாதா..???
தண்டாரோ,
முகத்தை மாத்திட்டா விட்டுருவோமா ?
ரெடியா இருங்க. வந்திட்டே இருக்கோம்.
//அந்தம்மா வந்தா கரண்(சி )பாஸ்/சுதா/தின
தலைவர் வந்தா ஊருக்கே தெரியுமே ....நிதி
ஆனா நம்ம விதி....//
ரெண்டும் சேர்ந்து
கரண்நிதியோ அல்லது
நிதிகரணோ ஆக வாய்புண்டா!?
அப்படியே வெளிய வந்து பாரு தெரு முக்குல ஆட்டோ நிக்குது பாரு...
//சில சமயம் அருகில் ஒரு கண்ணாடி தெரியும்..அதில் நம் முகத்தை பார்க்கும் அந்த இடத்தை அடைவதற்க்குள் நமக்கும் அதற்க்கும் விகிதம் மாறி போய் நம் முகம் அதில் தெரியாமல் போகும் போது ஒரு சின்ன ஏமாற்றம் நமக்குள் எழும்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. ஒண்ணும் இல்ல.... தலை சுத்துது "தல".....
//நம் முன்னோரை நினைவூட்டுவதாகவே இருக்கும்.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் நாம் இவ்வளவு அழகா??என்று தன்னை தானே வியந்து...சட்டென்று அன்னியர் யாராவது அவனை பார்த்து விட்டால் அவன் முகத்தில் தெரியும் நவரசம்......(அசடு)//
யப்பா......... ஆ......ஹா..... இன்னிக்கி காலைலேயே தொடங்கிட்டான்யா.......
//நம் முகத்தை வேரொரு இடத்தில் பார்க்க நேரும் போது..(புகைப்படம்,பத்திரிக்கை,.....)நமக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு..வரும்..ஒரு சின்ன (அல்ப)சந்தோஷம்...சார் உங்களுக்கு போட்டோ ஜெனிக் ஃபேஸ் என்று யாராவது சொல்லும்போது ஒரு வித கர்வம் தவிர்க்க முடியாததாகிறது..//
சார்..... உங்களுக்கு நல்ல "போட்டோஜெனிக் ஃபேஸ்"... இது மேல உள்ள போட்டோவ பார்த்த உடனே நான் சொன்னது.....
//என்னவோ இவனுக மட்டும்தான் உலகத்தில பொறந்த மாதிரியும் நம்மளை எல்லாம் செஞ்சா மாதிரியும் இல்ல இருக்கு//
சரியாதானே சொன்னாரு நம்ம கவுண்டரு.........
//உயிரே....உணர்வே....இதயமே...உதயமே
வாழும் வரலாறே ...நிகழ் கால பூகோளமே.....
தங்க சரித்திரமே.....எங்கள் தரித்திரமே...//
இதெல்லாம் பரவாயில்லை..... இத பாருங்க..... நான் நம்ம "தல"ய பார்த்து சொன்னது.
தமிழே - தமிழின்
குமிழே - குமிழின்
சிமிழே
புவியின் பூகோளமே
அழிவின் ஆரவாரமே
அராஜகத்தின் அச்சாரமே
முரண்பாட்டின் மூட்டையே
நீ நாட்டை போட்டது ஆட்டையே
நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது
நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது
நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்
கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்
தேன்தமிழ் நாட்டின் தீந்தமிழே - நீ
தமிழ்நாட்டுக்கு ஊதுவது சங்கே
அகில உலக டகால்டியே - நீ
அடிப்பது அந்தர் பல்டியே
தொல்காப்பிய பூங்காவில் கல்லா கட்டியவரே
மக்கள் அனைவருக்கும் குல்லா போட்டவரே
மஞ்சள் துண்டணிந்த மாபெரும் விரசகவியே
உன் ஆட்டத்திற்கு தாங்காதப்பா இந்த புவியே
எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே
முதுமையின் இளமையே
இன்று புதன்கிழமையே
முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே
பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே
தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி
ராஜ்ஜியத்தின் மெத்தகையே
பூஜ்ஜியத்தின் குத்தகையே
நீ டகால்டிகெல்லாம் டகால்டி - உன்னை
வணங்கி வரவேற்போம் துதிபாடி
//நாத்திகம் பேசறது ஊருக்குத்தான்....சில பேர்...அடுத்தவன் நெத்தியிலே இருந்தா அது ரத்தம்..ஆனா இவங்க வீட்டு பொம்பளைங்கள பாருங்க ஒவ்வொருத்தியும் ஒரு ரூபா காசு அளவு பொட்டு வச்சிகிட்டு தெய்வீகமா...அபிஷேகம் என்ன..ஆராதனை...தங்கத் தேர்...கொடுத்து வச்சவனுங்க.....//
நான் நம்ம "தல"ய பார்த்து சொன்னது ....
"தல"யின் முரண்பாடு நாத்திகவாதம்
நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
அவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.
//இனிமே கண்ணாடியே பார்க்க கூடாதா..???//
சூர்யா.உங்க கண்ணாடியை கார்ல விட்டுட்டு போயிட்டீங்க..வேணாமா?
அவனுகளே விட்டாலும், இங்க இருக்குற நல்லவங்க விட மாட்டாங்க போலிருக்கு..!
தண்டோரா உமக்கு எதிரிகளே உம்மைச் சுற்றித்தான்.. ஜாக்கிரதை..!
//தண்டாரோ,
முகத்தை மாத்திட்டா விட்டுருவோமா ?
ரெடியா இருங்க. வந்திட்டே இருக்கோம்.//
சரக்கோட வாங்க(வலி தெரியாம இருக்கத்தான்)
///அந்தம்மா வந்தா கரண்(சி )பாஸ்/சுதா/தின
தலைவர் வந்தா ஊருக்கே தெரியுமே ....நிதி
ஆனா நம்ம விதி....//
ரெண்டும் சேர்ந்து
கரண்நிதியோ அல்லது
நிதிகரணோ ஆக வாய்புண்டா!?//
அதோ கதிதான்...
//அப்படியே வெளிய வந்து பாரு தெரு முக்குல ஆட்டோ நிக்குது பாரு...//
அடப் பாவி காட்டி கொடுத்திடுவே போலிருக்கே..(உனக்கு ஒரு பாலோயர் குறைஞ்சுடுமே)
கோபி..பின்னூட்டம் போடுறேன்னு ஒரு பதிவையே போட்டுட்டியே...துபாய்லயும் எங்க மாபியா கோஷ்டி இருக்கு...(மேட்டர் சூப்பர்)
:)))))
// போங்கடா..போங்க.. //
என் காலம் வரும் பின்னே அப்ப வாங்கடா வாங்க .....
எங்க போறது.... எங்க போனாலும், எந்த வனத்துல போய் மேய்ஞ்சாலும் இங்க வந்துதானே ஆகணும்...
ம்ம்..தலைவரே அந்த கண்ணாடின்னு சொன்னீங்களே..
அது அந்த ஆட்டோ கண்ணாடி தான..?
ரைட்டு
ஆட்டோவுக்கு பயந்து, வேஷம் கட்டாதீங்கப்பு... தீவிரவாதின்னு அள்ளிட்டு போயிடப் போறானுங்க...
நாஞ்சில்..
ராகவன்..
தம்பி டக்ளஸ்
தல நர்சிம்...
அன்பு...
நன்றி.....
என்னதான் இலவசம்னாலும் மூணு தடவையா தமிழிஷ் வாக்கௌப் பட்டையை இணைப்பார்கள்.
:-)
//என்னதான் இலவசம்னாலும் மூணு தடவையா தமிழிஷ் வாக்கௌப் பட்டையை இணைப்பார்கள்.//
அண்ணாச்சி..அது எப்படி ஆச்சு? தெரியலையே...
அன்பு ..வருகைக்கு மகிழ்ச்சி..
போட்டோவுல பாத்தா, சர்தார்ஜி மாதிரியே இருக்கீங்கப்பு,
எங்கள் முரசே,
நாளைய அரசே,
காலின் கொலுசே,
நீ ஓரு தினுசே.
திரும்பவும் சொல்றேன். நீங்க ஆட்டோவுக்கெல்லாம் பயப்படாதீங்க.. வ்ந்தவுடனே அவங்க கிட்ட சொல்லி கொஞ்சம் வெயிட் பண்ண சொல்ல்லுங்க.. நான் வந்திடறேன். அதுக்கு அப்புறம் பாருங்க..:)
//போட்டோவுல பாத்தா, சர்தார்ஜி மாதிரியே இருக்கீங்கப்பு,
எங்கள் முரசே,
நாளைய அரசே,
காலின் கொலுசே,
நீ ஓரு தினுசே.//
உஸ்..அப்பாடா...
//திரும்பவும் சொல்றேன். நீங்க ஆட்டோவுக்கெல்லாம் பயப்படாதீங்க.. வ்ந்தவுடனே அவங்க கிட்ட சொல்லி கொஞ்சம் வெயிட் பண்ண சொல்ல்லுங்க.. நான் வந்திடறேன். அதுக்கு அப்புறம் பாருங்க..:)//
அடப்பாவி..அவனா நீயி.
சூப்பரப்பூ
Post a Comment