Wednesday, July 29, 2009

குளிச்சா “குற்றாலம்’

கந்தையானாலும் கசக்கி கட்டு..
கூழானாலும் குளித்து குடி
ஆனால்,குற்றாலத்தில்..
குடி.குளி..குடி..குளி

ஒரு முடிவோடுதான் கிளம்பியது எங்கள் வாலிபர்(???) படை..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது..சீனியர் எடுக்கப் போகும்(எப்பன்னு கேக்காதீங்க..அவருக்கே தெரியாது)..படத்தின் கதையை என்னுடன் விவாதித்துக் கொண்டு வந்தார்..இன்னொரு பதிவரும்,நண்பரும் காலையில் டாஸ்மாக்கில் பிளாக்கில் வாங்கிய சரக்கின் புண்ணியத்தில் இருவரும் தமக்குள் பேசியபடி அமர்ந்திருந்தனர்..என் தலைக்கு மேல் என் பையில் சாதுவாக படுத்துக் கொண்டிருந்த அந்த 1.5 லிட்ட ர் எம்டன் என் கண்ணை உறுத்தியபடி இருந்தது..அது “பின்னூட்ட பெருந்தகை’ராகவன் அன்பளிப்பாக கொடுத்த வி.எஸ்.ஒ.பி சீமை சரக்குத்தான்..அதை நைட்டுக்கு வச்சுக்கலாம்னு கேபிள் சொன்னதற்காக மனதை தேற்றிக் கொண்டேன்.

டாஸ்மாக் சரக்கும்,நேத்து வச்ச நெத்திலி மீன் குழம்புக்கும் உண்டான ஈகோ பிரச்சனை சக பதிவரை பாதிக்க,மேல் முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க,திருநெல்வேலி ஆஸ்பத்தியில் அவருக்கு உடனடி அனுமதி..(மது அருந்தியவருக்கு உள்ளெ அனுமதி இல்லை என்ற ஆஸ்பிடல் அறிவிப்பு எங்களை கேலி செய்தது வேறு விஷயம்)...இவ்வளவு களேபரத்திலும் கேபிள் அங்கிள் அந்த பிரெஞ்சுக் காரியை கரெக்ட் செய்ய பார்த்தது அந்த நீரோ மன்னனுக்கே அடுக்காது...

அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)

நைஜிரியா சரக்கை ஒரு ரவுண்டு முடித்து “வைரமாளிகை’ என்ற ஓட்டலுக்கு சாப்பிட போனோம்..மீராஜாஸ்மின்” புரோட்டா(அவ்வளவு மென்மை),தேங்காஎண்ணெயில் பொறித்த ‘நாட்டுக்கோழி’ வறுவல்..கட்டு கட்டி முடித்தவுடந்தான் அங்கே”சீக்கு கோழியாய்’ சுருண்டிருந்த நம்மாள் ஞாபகம் வந்தது...அவருக்கு துணைக்கு ஒரு நண்பரை விட்டு விட்டு குற்றாலத்துக்கு ஜீட்....
வழக்கம் போல்”குடியும்,குளித்தனமும்”தான்..அங்கிருந்து கேரளா பார்டரில் “பாலருவி”என்ற இடத்துக்கு போனோம்...செக்போஸ்டில் கேரளா போலிஸ் தமிழனை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ,அவ்வளவு படுத்துகிறார்கள்...
அருவி சுமார் 200 அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலோடு விழுகிறது..குளிக்க சுகம்..இருந்தாலும் மூச்சு திணறுகிறது...நானும்,கேபிளும் மட்டும் குளித்தோம்..மற்றவர்கள்..டித்தார்கள்..ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.

இரவு வழக்கம் போல் கச்சேரி என்றால் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு கோபம் வரலாம்..ரமேஷ் வைத்யா ஒரு ஆங்கில சிறுகதையை அற்புத பாவனைகளுடன் சொன்னார்..குரலில் உணர்ச்சி பொங்க சில கவிதைகளும் கூட..ஒரு வழியாக அவர்கள் சென்னைக்கு கிளம்ப,மறுநாள் என் குடும்பத்தினர் வருவதாக இருந்ததால் நான் மட்டும் தங்கிவிட்டேன்..

குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”

அருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...


மதுரையில் 8.45 க்கு பாண்டியன்...பதிவுலக நண்பர் யாரையாவது சந்திக்கலாம் என்று நமீதா ஊருக்கு போன் போட்டேன்..டக்ளஸ் தம்பி(ராஜீ) அண்ணே ஸ்டேஷன்ல இருங்க.கார்த்திகை பாண்டியனும்,ஸ்ரீயும் வருவார்கள் என்று கூற “மூவர் சந்திப்பு”கார்த்திகை பாண்டியன் சமூக அக்கறையுடன் பேசினார்..ஸ்ரீயும் கலந்து கட்ட ’அ” முதல் பல விஷயங்கள் விவாதித்தோம்......நல்ல சந்திப்பு(மதுரைகார பாசக்கார பயபுள்ளைங்கப்பா)..

ஒரு ரெண்டு நாளு எதையாச்சும் கிறுக்கலைன்னா வால்மீகி(அதாங்க பிக்பாக்கெட்)மாதிரி கை அரிக்குதப்பா..உங்களுக்கும் அப்படியா?ஒரு டாக்டரிடம் கேட்டதுக்கு’இது பதிமோபியா”மற்றும் பின்னுட்டரைடிக்ஸ்”இப்ப நிறைய பேரு இப்படித்தான் திரியராங்க......என்கிறார்..

ஞானசேகரன் அரசாங்க வீடு ஓசியில் கேட்டதை எல்லாரும் எழுதி விட்டனர்..ஆனால் அவருக்கு கொடுக்கலாம்..வீடு அல்ல..”வீடுபேறு’

38 comments:

நாஞ்சில் நாதம் said...

:)))

Cable சங்கர் said...

ஆரு அந்த கேபிள் அங்கிள்.. தண்டோரா..?

தராசு said...

//..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது//

ஒரு யூத்தை இப்படியெல்லாம் சொல்வதை, வன்மையாக, மென்மையாக, இடமாக, வலமாக, மேலாக, கீழாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,

இன்னொரு யூத்.

payapulla said...

நிறைய விஷயங்களை தண்டோரா போட்டு சொல்லி இருக்கீறீர்கள் .

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)//

ஒரு டூர் போயிட்டு வந்தமாதிரி இருக்கு ... கடைசி வரைக்கும் சஷ்பன்சிலய வச்சிட்டிங்களே ...

நையாண்டி நைனா said...

present sir. ( Naalaikku vanthu kummuren)

நான் said...

குடி இல்லாத குற்றாலமா?

குப்பன்.யாஹூ said...

where r the pictures of Coutralam Main falls, 5 falls, tenkasi...

துபாய் ராஜா said...

குற்றாலம் குற்றாலம்தான்.

//குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”


அருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...//

காட்சிகள் கண்முன்.

அகநாழிகை said...

தண்டாரோ,
என்னை விட்டுட்டு போயிட்டீங்களே.
(கூப்டீங்கதான். என்னால வர முடியல)

ஜாலியா இருந்தா சரி,

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

வாசுவை ரிப்பீடுகிறேன்..

ஸ்ஸ்ஸ்

மணிஜி said...

/
:)))//
நாஞ்சில் நாதம்..உங்களுக்கு எப்பவும் சிரிச்சமுகம்தான்

மணிஜி said...

/ஆரு அந்த கேபிள் அங்கிள்.. தண்டோரா..?

கேபிள்..நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சதை பூர்ணம் விஸ்வநாதன் ரேடியோவில சொன்னதை கேட்டப்ப உடம்பு புல்லரிச்சு போச்சுன்னு சொன்னீங்களே.உங்க தேசபக்திய மெச்சரன்யா?(ஆமாம்..நாளைக்கு பிறந்த நாளு இல்ல..தல..இன்னும் ஒரு 45 அடிச்சு சதம் தாண்டுங்க..

மணிஜி said...

///..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது//

ஒரு யூத்தை இப்படியெல்லாம் சொல்வதை, வன்மையாக, மென்மையாக, இடமாக, வலமாக, மேலாக, கீழாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
//

விட்டா துலாபாரத்திலயே உக்காருவீங்க போல்..

மணிஜி said...

/நிறைய விஷயங்களை தண்டோரா போட்டு சொல்லி இருக்கீறீர்கள் //

வாங்க பெரியண்ணே..

மணிஜி said...

//அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)//

ஒரு டூர் போயிட்டு வந்தமாதிரி இருக்கு ... கடைசி வரைக்கும் சஷ்பன்சிலய வச்சிட்டிங்களே//

எலேய்..உங்க ஊருக்குத்தான்யா வந்தோம்..

மணிஜி said...

/present sir. ( Naalaikku vanthu kummuren)//

என்னாச்சு...

மணிஜி said...

/குடி இல்லாத குற்றாலமா?//

நடுவில ஒரு எழுத்தை விட்டியே மக்கா...

மணிஜி said...

/குற்றாலம் குற்றாலம்தான்.

//குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”


அருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...//

காட்சிகள் கண்முன்//

நன்றி நண்பா..

மணிஜி said...

/தண்டாரோ,
என்னை விட்டுட்டு போயிட்டீங்களே.
(கூப்டீங்கதான். என்னால வர முடியல)

ஜாலியா இருந்தா சரி,

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

”வா” என்று சொன்னேன்..நீ ”சு” என்று சொன்னாய்

மணிஜி said...

சூர்யா..நம்ம கணக்கே வேற இல்ல..

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...

விடுமுறையை இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையே எழுதிட்டீங்களே...

Raju said...

SUper thala...!
naanga eppavumee pasakarangeethaan...!

R.Gopi said...

//..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).//

ஏய் தண்டோரா.... நான் யூத்து..... இன்னும் கூட நான் யூத்துதான்..... ஏ டண்டனக்கா.... டணக்கு டக்கா...

//இவ்வளவு களேபரத்திலும் கேபிள் அங்கிள் அந்த பிரெஞ்சுக் காரியை கரெக்ட் செய்ய பார்த்தது //

செய்ய பார்த்ததா?? இல்ல கரெக்ட் செய்ததா?? அவரு, அவரோட வேலைல பிசி "தல"

கலக்கல் தல.....

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க கூட குற்றாலம் வர முடியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு நண்பா.. இருந்தாலும் உங்க கூட ஒரு மணி நேரம் செலவிட முடிந்ததில் சந்தோசம்..

மணிஜி said...

/ஆஹா... அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...

விடுமுறையை இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையே எழுதிட்டீங்களே..//

"BONVOYAGE" ராகவன்..

மணிஜி said...

/SUper thala...!
naanga eppavumee pasakarangeethaan.//

ஆமாம்யா...ஆமாம்...

மணிஜி said...

கோபி...
கார்த்திகை..

நன்றி..

மணிஜி said...

/where r the pictures of Coutralam Main falls, 5 falls, tenkasi.//

குப்பன்..அங்க கேமராவை எடுத்தாலே சந்தேகமா பாக்குறாங்க..வருகைக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

//முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க//

அந்த பாவப்பட்ட நண்பர் இத படிச்சிட்டாரா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.//

வித்தியாசமான கற்பனை.

நர்சிம் said...

வந்தாச்சா? ரைட்டு.. கலக்கல் பயணக்கட்டுரை தலைவா..ம்.

மணிஜி said...

///முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க//

அந்த பாவப்பட்ட நண்பர் இத படிச்சிட்டாரா//


படிச்சிருக்கணும்...பதிலை காணும்...

மணிஜி said...

///ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.//

வித்தியாசமான கற்பனை.//

நன்றி..ஆமாம் நீங்க மதுரையா? சென்னையா?

மணிஜி said...

/வந்தாச்சா? ரைட்டு.. கலக்கல் பயணக்கட்டுரை தலைவா..ம்//

நன்றி..நர்சிம்..”கலக்கினது’ உண்மைதானே

வால்பையன் said...

வந்துருக்கலாம்!
வந்துருந்தா தலைய பாத்துகுற பதவி எனக்கு தான் கிடைச்சிருக்கும்!

மணிஜி said...

/வந்துருக்கலாம்!
வந்துருந்தா தலைய பாத்துகுற பதவி எனக்கு தான் கிடைச்சிருக்கும்//

வால்..உன்னைய பாத்துக்கவே ஆள் தேவைபட்டிருக்குமே(மதுரைகாரங்க சொன்னாங்க0

வால்பையன் said...

//வால்..உன்னைய பாத்துக்கவே ஆள் தேவைபட்டிருக்குமே(மதுரைகாரங்க சொன்னாங்க0 //

இல்ல நான் சமாளிச்சுகுவேன்!
ஏன்னா சுத்தி பாக்க முடியாதே!
ஆனா இரவில் கழுத்து வரைக்கும் குடிப்பேன்!