Showing posts with label டயானா/அஞ்சலி. Show all posts
Showing posts with label டயானா/அஞ்சலி. Show all posts

Tuesday, August 4, 2009

டயானாவின் காதல்...

டயானாவை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.வசீகரிக்கும் அந்த முகம்.அவரது மனிதாபிமானம்.எல்லாம் பாழாய் போன ‘பேப்பரசி”யால் சிதைந்து போனது கொடுமை.வெள்ளைக்காரர்களை கண்டாலே எனக்கு ஆகாது.ஆனால் டயானா விதிவிலக்கு.பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆடம்பரமாக அவள் திருமணம் நடந்த அன்று என் நண்பன் ஒருவன் சார்லஸின் படத்தின் மேல் குடித்து விட்டு சிறுநீர் கழித்தான்.ஆகஸ்டு 31 டயானாவின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம்.அவரது பர்சனல் வாழ்க்கை குறிப்பை படித்தேன்..அது உங்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே..(டயானாவின் செக்யூரிட்டி ஆபிசரின் பேட்டியிலிருந்து)

அரச குடும்பத்தவர்கள் தங்களது அந்தரங்க விஷயங்களை முழுமையாக மறைத்து விட இயலாது. மறைப்பதும் கடினம். இதற்கு டயானாவும் விதி விலக்கானவர் அல்ல. அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் அவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.

இளவரசி தோழிகள் யாருடனாவது தியேட்டருக்கு செல்ல விரும்பினாலோ, அல்லது ஆண் ஆதரவாளர் எவருடனாவது சாப்பிட விரும்பினாலோ அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப நான் பணிபுரிய வேண்டும்.

ஹைகுரோவ் மாளிகையில் இருந்த தலைமை இன்ஸ்பெக்டர் கிரஹாம் சுமித் நான் டயானாவிடம் பணிபுரிய வருவதற்கு முன்பே என்னிடம் ரகசியமாக சொன்னார். "இளவரசிக்கு ஒரு ஆணுடன் தொடர்பு உண்டு. அவர் குதிரை பயிற்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் ஹெவிட்."

அரச குடும்பத்தில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி மெய்க்காப்பாளர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே எங்கள் பணி.

இளவரசி டயானாவிடம் வேலைக்கு சேரும் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜேம்ஸ் ஹெவிட்டை இளவரசி சந்தித்து இருக்கிறார். டயானாவின் மெய்க்காப்பாளரான பின்பு `ஹெவிட்' உடன் பேசிய விஷயங்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஹெவிட் உடனான முதல் சந்திப்பு இயல்பாக இருந்ததாக என்னிடம் டயானா கூறுவார். அதனால் அவர் மீது டயானாவுக்கு ஈர்ப்பு உண்டு என்பதை அறிவேன்.

ஹெவிட் அரச குடும்பத்தின் குதிரையேற்ற பயிற்சியாளர். குதிரையில் சவாரி செய்வதில் உள்ள சிக்கல் பற்றி டயானா கூறும்போதெல்லாம் அதை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று ஹெவிட் விளக்கி கூறுவார். இயல்பாக இருந்த இவர்களது பேச்சு சந்திப்பு `உறவு' வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாறிப்போனது.

இளவரசர் சார்லஸ் மீது டயானா உயிரையே வைத்திருந்தார். ஆனால் உடல் டயானாவிடமும் உயிர் காமில்லா பார்க்கரிடமும் இருந்தது. இதனால் நொறுங்கி போயிருந்த டயானாவுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அந்த வடிகாலாய் வந்து வாய்த்தார் ஜேம்ஸ் ஹெவிட். ஏற்கனவே பெண் பித்தர் என்று பெயரெடுத்தவர் அவர். அதனால் இளவரசி டயானா போன்றவர் கிடைத்தால் விடுவாரா என்ன? தனது உடல் இச்சைகளை தணித்துக் கொள்ள தயாராகி விட்டார்.

நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்தால் எனக்கு வைக்கத் தெரியாதா? என்பது போல இருந்தது டயானாவின் தேடுதல்.

ஒரு புறம் சார்லஸ், காமில்லா பார்க்கர் ஜோடி காதல் களியாட்டம் போட இன்னொரு பக்கம் ஹெவிட், டயானா சல்லாபம் என்று ஹைகுரோவ் மாளìகை காதல் சண்டைக்களமாக மாறிப்போனது. ஆனால் சார்லஸ் கொஞ்சம் அடங்கிப் போவார். இளவரசியை சமாதானப்படுத்துவார். ஆனால் எதுவும் எடுபடாது.

பல தடவை சார்லஸ் பிரச்சினைகளை மறந்து தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்து வருவார். "டயானாவோ உங்கள் அழுகிப்போன நண்பர்களை நான் எதற்கு கவனிக்க வேண்டும்.? அவர்கள் எனது நண்பர்களே அல்ல!" என காட்டு கத்தாக கத்துவார்.

இருவருக்குமìடையே பனிப்போர் நீடித்தது.

ஹெவிட்டை முதன் முதலாக நான் மத்திய லண்டனில் உள்ள `நைட்ஸ்' பிரிட்ஜ் பாரக்ஸில் சந்தித்தேன். கூடவே டயானாவும் இருந்தார். என்னை இளவரசியின் மெய்க்காப்பாளன் என்று நினைத்தாரோ, அல்லது காதலியின் காவலன் என்று நினைத்தாரோ எனக்கு ஏக மரியாதை கொடுத்தார். தனது காதலுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கூட அவரது உபசரிப்புக்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஹெவிட் மீது இருந்த காதலை டயானா என்னிடம் எடுத்த உடனே கூறி ஒப்புக் கொள்ளவில்லை. வெளிப்படையாகவும் பேசத் தயங்கினார். எனக்கு தர்ம சங்கடமாகிப் போனது.

இந்த சூழ்நிலையில்தான் ஹெவிட்டின் தாயார் ஷெர்லியை டேவன் நகரில் உள்ள அவரது வீட்டில் டயானா சந்தித்துப் பேசி பரபரப்பை உண்டு பண்ணிவிட்டார்.

நான் "இதெல்லாம் வேண்டாம் அம்மா உங்களுக்கு சரிப்பட்டு வராது." என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன். எதையும் கேட்கவில்லை.

இன்னொரு நாள்.

குதிரை சவாரிப் பயிற்சிக்காக இளவரசி அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அப்படிபோன போது ஷெய்லிங் காட்டேஜில் நாங்கள் தங்கியிருந்தோம்.

அன்று மாலை நான் சமையல் செய்து கொண்டிருந்தேன். (இந்த பொறுப்பும் எனக்கு உண்டு) இளவரசியும், ஹெவிட்டும் வெளியே ஹாலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரே கூத்து, கும்மாளம்தான். அதன் பின் இரவு வரை நான் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் சீட்டு விளையாடுவதில் மும்முரமாக இருந்தேன். இளவரசி வந்ததும் அவர் எழுந்து கொண்டார். இருவரும் மாடிப்படியில் ஏறி படுக்கை அறைக்குச் சென்றனர்.

மறு நாள் காலை டயானா வெகுநேரம் கழித்து எழுந்தார். வெளியே வந்த போது அவர் தலைமுடி கலைந்து இருந்தது.

சிறிது நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவர் வெளியே கிளம்பி விட்டார். ஜேம்ஸ் ஹெவிட்டுடன் தனியாகத்தான் புறப்பட்டார். அந்த காட்டேஜில் தங்கியிருந்த நாட்களில் ஜேம்சும், டயானாவும் எங்கு போனாலும் தனியாகத்தான் போவார்கள். வாக்கிங் போனால் கூட அவருக்குத் துணை ஜேம்ஸ் ஹெவிட்தான்.

இவர்களது ரகசிய காதல் வெளியுலகத்திற்கு தெரிய வந்த போதுதான் சார்லசும், டயானாவும் பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஹெவிட்டுடன் இருந்த தொடர்பால் டயானாவின் 2-வது மகன் ஹாரி ஹெவிட்டுட்டுக்கு பிறந்திருக்கலாம் என்று கூட வதந்திகள் வெளியாயின.

ஆனால் ஹாரி பிறந்த பிறகுதான் ஹெவிட்- டயானா உறவு மலர்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.

--------------------------------------------------------------------

ஏஞ்சலுக்கு அஞ்சலிகள்..நீங்களும் செலுத்துங்களேன்