சிலரால் சுட்டியும், பலரால் கோயில் கட்டியும் கொண்டாடப்பட்ட முற்போக்கு “பெண்சிங்கம்” முன்னாள் கனவுக்கன்னி இன்னொரு ஜாக்பாட் அடித்தார். அது திருமாவளவனின் பாக்கெட்டிலிருந்து அடிக்கப்பட்டது இன்னும் விசேஷம். பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒரே கட்சி திமுகதான் என்று திருவாய் மலர்ந்தளியவர் சொல்லாமல் விட்டதும் “விழி” மொழி” என்ற பெயரில் முடியும் மாதர்களுக்கு என்பதைதான். சற்குணங்களும். ஜகதீசன்களும் விதிவிலக்கு. தூத்துக்குடி பண்ணையாரினிக்கு அடித்தது ஜாதி யோகம். போதும் . அது. இனி ஓவர் டூ குஷ்பூ. தலைவர் சொன்னது. “முற்போக்கு” சிந்தனை உள்ள குஷ்புவின் ”பணி” கழகத்திற்கு பெரிதும் உதவும் . கோயில் கட்டி கொண்டாடப்பட்ட ஒரு தெய்வத்தை கருவறையிலிருந்து கழகத்துக்கு கொண்டு வந்த பணி ஆஹா...91.9 ஆமாம் ..திருமா என்ன சொல்லுவார்? ஒன்னும் சொல்ல முடியாது. சக்தி கொடு என்று கேட்கலாம்.. அவ்வளவுதான். ஆமாம் தேசிய கட்சியில் ஏன் சேரவில்லையாம் ? பின்ன இட்லிதானே தமிழனின் தேசிய உணவுடிஸ்கி:இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளநீரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும் (ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)