
கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு...அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கிறது...வெளிப்படையான எழுத்துக்களும்...நீண்ட நாட்கள் கழித்து விசில் அடிப்பதை எனக்கு ஞாபகப்படுத்திய திருவிழா அது..சாருவின் தேகம் ... ஒரு இரவில் முழுவதும் ஆ(ரா)ய்ந்து படிக்க முடியாத நாவல்..எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் முதலில் போட்டுக் கொள்ளலாம்..கடைசி இரண்டு எழுத்துக்களில் கம் இருக்க வேண்டும்..மெதுவாக அனுபவித்து படித்து, தப்புவதோ..துப்புவதோ அப்புறம்...
பொதுவாக ஒலிபெருக்கிகள் பார்வையாளர்களை பார்த்திருக்கும் . சாருவின் விழா என்பதாலோ என்னவோ..மேடையில் இருந்த பாவைகளை பார்த்து இருந்தது . வேறொன்றும் காரணம் இருக்காது ..வாஸ்துவாக இருக்கலாம் ..மேடையில் இருந்த இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.
டிசம்பர் சீசன், கம்பன் விழா என்று எல்லா இடங்களிலும் புரவலரின் பேச்சு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல..1986 ல் கனிமொழியுடன் நிக்ழந்த உரையாடலை நியாபகம் வைத்திருந்தார் செட்டியார் .
நடராஜன் சார் தினமலர் வாரமலரில் இளமை துள்ளும் ஒரு காதல் தொடர் எழுதுகிறார். யோசித்து வாசியுங்கள்..
2011 ஆம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான ரவிக்குமார் சர்காஸ்டிக்காக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியே ஆக கடவது..
தமிழச்சியின் பேச்சும் நன்றாக இருந்தது.. நிறைய பேர் அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்
திமிருக்கும் , கர்வத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் என்று எங்கோ படித்த நியாபகம்... சாருவின் பேச்சு ..எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..
மிஷ்கின்...விழாவில் பேசியதை அன்று விஜய் டிவிக்கு வந்து பேசியிருக்க வேண்டும்.. இன்னொருத்தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா..அங்கு வந்து தான் பிள்ளை பெற பட்ட பிரசவ அவஸ்தைகளை பேசினால்...சாரு எழுதியது சரிதான்
ஒரு சந்தேகம்...
சாருவின் வாசகர்கள் யாரும் ஜெமோவை இவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதில்லை..(எனக்கு தெரிந்து).. அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். சிவாஜியாக இருந்து விட்டு போகட்டும்.. இந்த ஜெமோவின் வாசகர்கள் ஏன் இப்படி சாருவை பிரித்து மேய்கிறார்கள்?
ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...
ஹேட்ஸ் ஆஃப் சாரு..கண்டினியூ ராக்கிங்..