நினைவு தெரிந்து முதலில் எழுத முயற்சித்தது கவிதைதான்..அதன் பின் சிறுகதை...சினிமா ஆசை வந்த பின் எழுத நினைப்பதை எல்லாம் சீன் ஆர்டரிலேயே எழுதி பழகி கொண்டேன்.முன்,பின்,நடு நவீனத்துவமாக கவிதை கலர் மாறிப் போயிற்று..அகநாழிகை,யாத்ரா,தமிழரசி,ஜ்யொராம் எல்லாம் படிக்கும்போதுதான் நம் கவிதையின் லட்சணம் தெரிகிறது.(சலங்கை ஒலியில் கமலின் கேமரா போல்).நினைவு இடுக்குகளில் தேடி பிளஸ் 2 படிக்கும் போது எழுதிய? சில கவிதைகளில் எனக்கும்,என் காதலிக்கும்(இது வேறயா)பிடித்த ஒரு கவிதை ..சில திருத்தங்களோடு..
(தலை வாரி பூச்சூடி உன்னை...பாடசாலைக்கு செல் என்றாள் அன்னை.. இந்த பாட்டு மெட்டில் எழுத ஆரம்பித்து இலக்கில்லாமல் அலை பாய்ந்து திரிந்தது)
பூ வந்து அமர்கின்ற கொண்டை..கண்கள்
புரள்கின்ற,நெளிகின்ற கெண்டை..
வா..என்று நான் சொன்னால் சண்டை..
வரச் சொல்லி ஒலிக்குதோ உன் கால் தண்டை..
எதை படித்துக் கொண்டுள்ளாய்?
என்ன பாடம்..என்னிடம் வா..
நான் உனக்கு பள்ளிக்கூடம்..
புக்ககமாய் என் அகத்தை எண்ணிடாமல்
புத்தகத்தில் இன்னும் என்ன மோகம்?
புழுங்கி தவிக்குதே என் தேகம்...
மானை எதிர்நோக்கும் புலி நானென்று
மனநடுக்கம் வேண்டாம்..இசை மீட்ட
வீணைக்கு ஏங்கும் விரல் நான்.
பாலாடை பிடிக்காது..ஆடை நீக்கி
பருகிடுவேன் பசும்பாலை..இன்று
உன் மேலாடை நீக்கிடுவேன் என்ற அச்சம்
மேற்கொண்டா தயங்குகிறாய்..
பட்டு நூலாடை போன்றவளே..
இருக்கின்ற கண் ..உன்னை பார்க்க..என்றன்
இதழ் உன் இதழோடு சேர்க்க..
வெறுக்காதே நீ என்னை நோக்க....உன்
வீட்டார்கள் வருவாரோ தாக்க...
சிரிக்கும் கண்மணி,தா..உந்தன் நெஞ்சு
இன்றேல் சிந்தித்து தா...கொஞ்சம் நஞ்சு...
(அலைகள் ஓய்வதில்லையில் வரும்”செவ்வரி ஓடிய உன் பாத நகங்களுக்கு என்ற கவிதையின் பாதிப்பில் எழுதியது?