Showing posts with label நடை. Show all posts
Showing posts with label நடை. Show all posts

Sunday, June 7, 2009

ஆகட்டும்டா தம்பி ராஜா

சின்னதா ஒரு பொழைப்பு ஆரம்பிச்சேன்.
நடையா நடந்தேன்..நாயா திரிஞ்சேன்..
நாலு காசு கையில சேர்த்தேன்.
சொந்தமா ஒரு சைக்கிள் வாங்குனேன்..

சைக்கிள்ல சுத்தாத இடமில்ல..
சைக்ளோன் மாதிரி ....பறந்தேன்..
ஒரு கட்டு ரூபா பார்த்ததும்
ஒரு மோட்டார் சைக்கிள் சொந்தமாச்சு.

அப்புறம் ராவில்ல..பகலில்ல..
நேரத்துக்கு சோறு இல்ல..
சரியா உறக்கமும் இல்ல.முடிவெல்லாம்
ஒரு கார் வாங்குறதிலயே தான்

வாங்கிட்டேன் ..புது கார்..புது வீடு எல்லாம்

இப்ப எல்லாம் முன்ன மாதிரி ஓட முடியல
மூச்சிரைக்குது..முழங்கால் குடையுது
டாக்டராண்டை போனேன்..
எல்லாம் கேட்டு ஒரு சீட்டுல இப்படி எழுதி கொடுத்தாரு..

"தினம் காலை,மாலை ஐந்து கிலோ மீட்டர் நடக்கவும்"



டில்லியில் சோனியாகாந்தி,ராகுல்காந்தி,வருண்காந்தி,மேனகாகாந்தி இருக்காங்க.இப்ப ஒரு புது காந்தி.நம்ம ஊருல இருந்து..யாரு?காந்தி அழகிரிதான்..மதுரை மச்சான் பதவி ஏற்கறதை அவிங்க குடும்பதோடு கண்டு களிச்சதை சில டிவிக்கள் குறிப்பாக காட்டினார்கள்."ம் தூக்கிடு..வெட்டிடு..எஸ் ஆயிடுங்க" இப்படிபட்ட வார்த்தைகளையே(ரன் பட அதுல் குல்கர்னி மாதிரி)கேட்டிருந்தவருக்கு "ஐ அழகிரி என்று அவர் ஆரம்பித்ததும்" ஐகளில்..அதாங்க கண்களில் ஆனந்த கண்ணீர்.என்ன எழவு பெட்ரோலியம் கேட்டாங்காளாம்..கொடுத்திருக்கலாம்.சும்மா கொளுத்தியிருப்பாருல்ல?