அவர் சொன்னவை: விவசாயம் கட்டுபடியாகவில்லை.ஏற்ற விலை கிடைப்பதில்லை.இலவச மின்சாரம் இல்லையென்றால் எங்கள் குடும்ப தேவை வரை பயிர் செய்து கொள்வோம்.நீங்க எல்லாம் பிஸ்ஸா சாப்பிட வேண்டியதுதான்.

வார்த்தைகள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது வார்த்தைக்கு கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற வார்த்தை.
ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர். இந்த வகையில், ஆங்கில வார்த்தைகள் 10 லட்சத்தை தொடத்தயாராகி விட்டது. இன்று பத்து லட்சமாவது வார்த்தையை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது வார்த்தையாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 வார்த்தைகள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த வார்த்தைகள் அனுப்பப் பட்டுள்ளன.
இதில், இந்தியாவில் இருந்தும் சில வார்த்தைகள் அனுப்பப்பட்டுள்ளன. பெண் கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படுகிறது.ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில வார்த்தை அறிவிக்கப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் பிரபலமானது.
"ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல பத்திரிக்கைள், புத்தகங்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே பிரபலமான ஒரு வார்த்தை, வழக்கமாக கவுரப்படுத்தப்படுவதுண்டு; அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வார்த்தையாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு சம்பந்தமில்லாத வார்த்தையாக இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி வார்த்தைகளும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது வார்த்தையாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
சமீபத்தில் ரசித்த குறுஞ்செய்தி:
காதலி :நீ என்னை எவ்வள்வு நேசிக்கிறாய்?
காதலன் : ஷாஜகானைப் போல் நான்..
காதலி : அப்போ எனக்காக தாஜ்மஹால் கட்டுவாயா?
காதலன் ; நிச்சயமாக..இடம் எல்லாம் வாங்கிவிட்டேன்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி
ஆதலினால் காதல் செய்யாதீர்.
ஒரு "கேபிள் சங்கர்" ஜோக்(அதாங்க ”ஏ”)
இரு நணபர்கள் தத்தம் மனைவிகளுக்கு கார் டிரைவிங் சொல்லி கொடுத்தனர்.ஒரு இரவு ஒருவன் வீட்டை விட்டு வெளியில் வந்து தம் அடித்து கொண்டிருக்க,அடுத்தவனும் வருகிறான்.
முதல் நபர் : காரோட்ட பழக சொன்னது பெரிய தப்பா போச்சு?
ஏன் என்னாச்சு?
“” “” முத கியரை போடுறென்,இரண்டாவது கியரை போடுறேன்னு .வலி தாங்க முடியல..
அட அது பரவாயில்லப்பா...என் பொண்டாட்டி பத்து லிட்டர் ஊத்து..பதினஞ்சு லிட்டர் ஊத்துன்னு ரோதனை..
அப்புறம் என்ன பண்ணே.....
என்ன பண்ண..காத்து மட்டும் அடிச்சு விட்டேன்...