Showing posts with label கூட்டாஞ்சோறு ...... 27/06/09. Show all posts
Showing posts with label கூட்டாஞ்சோறு ...... 27/06/09. Show all posts

Saturday, June 27, 2009

கூட்டாஞ்சோறு ...... 27/06/09



அன்றும் வழக்கம் போல் அவன் காலையில் கிளம்பும்போது அவள் சொன்னாள்...எப்போ நீங்க நினைக்கிறது எல்லாம் நடந்து நமக்கு விடியறது...இன்னும் ஒரு 7 மாசம்..அப்புறம் வீட்டுக்கு ஒரு புது ஜீவன் வந்துடும்..ஞாபகம் வச்சுக்கங்க..அவனும்,அவளும் காதல் திருமணம்..வழக்கம் போல் வீட்டுடன் மோதல்,ஓடிப் போதல்...அவள் ஒரு தனியார் பள்ளியில் மிக குறைந்த சம்பளத்தில் டீச்சர்.அவன் திரையுலகில் முன்னுக்கு வர போராடும் ஒரு சராசரி கனவாளி..லட்சியம் நிறைவேறிய பின் தான் திருமணம் என்பதே முடியாதபோது,குழந்தைக்கு கேட்கவா வேண்டும்...ஆனால் அவனுக்கு நம்பிக்கை ..கரு ஜனித்த வேளை ..கனவு நனவாகும் என்று உறுதியாக இருந்தான்..அன்றும் வழக்கம் போல் இரவு வீடு திரும்பும்போது கையிருப்பு 10 ரூபாய்தான்....கதவு தாளிடாமல் இருந்தது..ஒரே ஒரு ஹால் மட்டுமே வீடு...உள்ளே...வலியில் முனகியபடி அவள்...சுற்றிலும் குளமாய் ரத்தம்....மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுக்கு அன்று இரவு அவனுக்கு நிகழ்ந்தவையே சாட்சி...பெண் மருத்துவர்”நீங்க எல்லாம் படிச்சவங்கதானே..அவளோட ரத்த பிரிவு ஆர் எச் நெகடிவ்...மூணாவது மாசத்திலேர்ந்து கட்டாயமா ஹீமோகுளோபின் இங்ஜெக்‌ஷன் போடணும்..என்ன பண்ணிகிட்டிருந்தீங்க..ஆமாம்..என்ன பண்ணிகிட்டிருந்தான் அவன்..கனவுகளை காசாக்கும் முயற்சியில் இருந்தான்...அவள் தீர்மானமாக சொன்னாள்..உங்க லட்சியத்துக்காக நீங்க பட்டினி யிருக்கலாம்..உங்க கூட வந்ததுக்கு எனக்கும் வேற வழியில்லை..ஆனா நம்மளை நம்பி இந்த உலகத்தை பார்க்க இருந்த ஜீவன் என்ன பாவம் பண்ணிச்சு...இப்படி பாதியிலேயே கலையறதுக்கு...அந்த ஒரு வார்த்தை அவன் மனதை மாற்றியது என்றால் அது ஒரு பக்க கதையாய் விடும்...சின்ன வயதிலிருந்து வளர்த்த ஆசை,லட்சியம்,கனவு அத்தனையையும் ஒரே நாளில் குழி தோண்டி புதைத்து விட முடியாது ..என்றாலும் யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? அவன் பாதை மாறிற்று...ஆண்டுகள் பல கடந்தாயிற்று...இன்று ஒரு சின்ன விளம்பர கம்பெனி…. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் அசதிகள் இல்லை.....மீண்டும் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது அந்த கனவு..நிறைவேற வாழ்த்துங்கள் முகம் தெரிந்த / தெரியாத நண்பர்களே...

”நாடோடிகள்”... மேலே நீங்கள் படித்த கதைக்கும்(நிகழ்வுக்கும்) இந்த திரைப் படத்திற்கும் ஒரு ஓற்றுமை இருக்கிறது..அது காதலின் வெற்றி முழுமையாக வாழ்தலில்தான் என்பதே....ஒரு இயக்குனர் நண்பர் தொலைபேசியில் அழைத்து (நன்றி மகேந்திரன்..)டிக்கெட் வந்திருக்கிறது..நண்பர்கள் வந்தாலும் அழைத்து வாருங்கள் என்றார்..வேலை இருந்தாலும் கேன்சல்...கேபிள்,ரமேஷ வைத்யா இணைந்து கொண்டார்கள்..(இடை வேளையில் அண்ணன் உண்மைத்தமிழனை சந்தித்தோம்)..சசிகுமார் தன் குழுவினருடன் வந்திருந்தார்...ஆர்ப்பாட்டமான வரவேற்பு..படம்..ஆஹா,ஓஹோ...என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லைக்கும் சற்று மேல்..இளையதளபதி,புரட்சிதளபதி,சின்னதளபதி,தல,,அடித்து நடிக்கும் கண்றாவி குப்பைகளுக்கு இந்த படம் பல மடங்கு உசத்திதான்..விரிவான விமர்சம் கேபிள் எழுதுவார்...விவிவிவிவிரிரிரிரிரிர்ர்வா......................ன விமர்சனம் அண்ணன் உண்மைத்தமிழன் எழுதிக் கொண்டிருக்கிறார்...
சட்டசபையில் உறுப்பினர்களுக்கு மூலிகை ”வயக்ரா” கொடுக்கப்பட்டுள்ளது..உபயோகித்து பார்த்து ”ரிசல்ட்”எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டுமாம்..ஏன் கூடவே உருப்படியும் கொடுத்து விட்டால் என்ன? கூடவே இன்னொன்றும் சொல்கிறார்கள்..உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை இருந்தால் உயிருக்கு ஆபத்தாய் முடியுமாம்..பரவாயில்லை..மக்களுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நல்ல மகசூல்தானே...
சிகாமணி சென்னைக்கு கிளம்பும்போதே சொல்லி விட்டார்கள்..அங்கு அநியாய விலைக்கு விற்பார்கள்..அதனால் எதுவானாலும் சொல்லும் விலையில் பாதிக்கு கேள் என்று..சிகாமணி எக்மோரில் இறங்கும் போதே மழை..குடை வாங்கலாம்னு கடைக்கு போகிறான்..
குடை எவ்வளவுங்க?
100 ரூபா..
50ரூபாக்கு தர்றியா?
சரி 80ரு கொடு..
அப்பன்னா 40ரூபாய்க்கு கொடு..
என்னடா இது ரோதனை..முத போணி வேற..சரி நீ முதல்ல கேட்டியே ..50 கொடு..
அப்ப 25 ரூபாதான் தருவேன்..
கடைகாரனுக்கு கோபம் வந்து சும்மாவே தர்றேன்..வாங்கிக்கயேன்
ம்ம்..அப்ப ரெண்டா கொடு....

முன் எச்சரிக்கை : மிக கஷ்டப்பட்டு ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் சந்திக்க வைத்தேன்..அது அடுத்த பதிவில்........