
நடந்த நிகழ்வுகளில்
எனக்கும்
உடன்பாடில்லைதான்
நூறு சதம்
குறி வைத்து
குதறுகிறார்களே
என்ற கோபம்
நிதானமிழக்க
வைத்தது
பிரித்தாளும்
சூழ்ச்சியை விட
மோசமான குயுக்தி
செயலிழக்க
வைப்பது
புரிதல் உள்ள
நண்பர்கள்
சுட்டியதும்
உணர்ந்து கொண்டேன்
கருமத்தை
தொலைத்து விட்டு
காரியத்தில்
கவனம் தேவை
நடந்தவை
மறந்து போகட்டும்
நடப்பவை
இனிதாகட்டும்
வேதனையிருந்தாலும்
வேலை கெடும்
சூழல் உருவாகிறது
தெளிந்து கொண்டேன்
தெரிந்து கொண்டேன்
அறிவுறுத்திய
அன்பு நெஞ்சங்களுக்கு
நன்றியும்
வந்தனங்களும்