Showing posts with label நாட்டுநடப்பு/புனைவு. Show all posts
Showing posts with label நாட்டுநடப்பு/புனைவு. Show all posts

Thursday, November 5, 2009

அர்த்தமில்லாத கதைகள்----3..


என்னதான் சொல்றான் பெரியவன்?

என்னத்தை சொல்றது.அவனுக்கு அந்த கம்பெனி வேலை பிடிக்கலையாம்.தஸ்புஸ்சுனு பேசிக்கறாங்களாம்.மதிக்கறதே இல்லையாம்.போதாத குறைக்கு இந்த புறம் பேசறவங்க வேற தொல்லை.கேள்வி மேல கேள்வி கேக்கறாங்களாம்.அவங்க பேசறது இவனுக்கு புரியலை.இவன் பேசறது அவங்களுக்கு புரியலை

அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?

அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.விவசாயம்,பஞ்சாயத்து எல்லாத்தையும் பாத்துக்கிறேன் அப்படிங்கிறான்.எதாவது செய்யுங்க..

பெரியவர் யோசனையில் ஆழ்ந்தார்.சின்னவன் கிட்ட எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்னா விட மாட்டாங்க போலிருக்கு.இதுவரைக்கும் குடும்ப சண்டை வெளியே தெரியாம பூசி மறைச்சாச்சு.இனிமே கஷடம்தான்.ஏற்கனவே ஊர் பிரச்சனை நிறைய தீக்காம இருக்கு..யாரும் ஏதும் பேசாதபடிக்கி ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் சோறு,புது துணி எல்லாம் ஓசியில கொடுத்து வாயை மூடி வச்சிருக்கோம்.பட்டணத்து பங்காளியோட இப்ப உரசல் கூடி கிட்டே போகுது.அவன் பிராது கொடுக்கற அளவுக்கு போயிட்டான்.நமக்கு தெரியாம நிறைய நடக்குது.முன்ன மாதிரி குடும்பம்,வேலையாளுங்க எல்லாம் நம்ம பேச்சை கேக்கறதில்லைன்னு நினைக்கும் போது அவருக்கு ஆத்திரமாக வந்தது.பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு காசி ,ராமேஸ்வரம் போயிடலாமான்னு கூட நினக்க தோணுது.
போன் அடிக்க நம்பரை பார்த்தார்..அந்த வீட்டிலிருந்துதான்

அது அடுத்த பிடுங்கல்.என் பொண்ணு மட்டும் என்ன ஏப்ப,சாப்பையா?அக்கா மகன்,பேரன் வரைக்கும் எல்லாருக்கு வாரி இறைச்சீங்க.சும்ம ஒப்புக்கு சப்பாணியா எங்களுக்கு ஏதோ .. அதோட கடமை முடிஞ்சதுன்னு கையை உதறினா என்ன அர்த்தம்..இத்தனைக்கும் சமீபத்திய சம்பாத்தியம் முழுக்க இவஙகதான் எடுத்துக்கிட்டாங்க.பட்டணத்துபங்காளி பிராது கொடுக்க காரணமே அதான்.இப்ப நம்ம நிலைமையை அனுசரிச்சு நடந்துக்கணும்னு தோண மாட்டேங்குது யாருக்கும்.வேதனையுடன் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.இவர் செய்யறதும் தப்பு.பட்டணத்து பங்காளியை வீட்டுக்குள்ள சேர்க்கமாட்டார்.திண்ணையிலேயே உக்கார வச்சு அஞ்சோ,பத்தோ கொடுத்து வாசலோட அனுப்பிடுவாரு .அதான் அவன் இப்ப ஆட்டம் காட்டரான்...

அம்மா..எத்தனை வாட்டி உனக்கு சொல்றது?அப்பாவை அனாவசியமா தொந்தரவு பண்ணி டென்ஷன் ஏத்தாதேன்னு.இப்ப பாரு காலை டிபனை சாப்பிடுட்டு வெளியில போயிட்டாரு.கிட்ட,தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு..சாப்பிட வராம ஏரிக்கரையாண்ட போய் உட்கார்ந்து அடம் பிடிச்சுகிட்டு இருக்காரு..வா..போய் சமாதானம் பண்ணி கூட்டிகிட்டு வரலாம்.

அண்ணே..திருப்பாச்சி காரங்க எல்லாம் புலம்பறாஙக.தொழிலே நொடிச்சு போச்சாம்.நம்மதான் காரணம்னு திட்டறாங்க.பட்டணத்தை விட்டு வந்துடுங்க அண்ணே..நீங்க இங்க இருந்தப்ப அத்தனை பேரும் பல்லு கூட விளக்காம எந்திரிச்சதும் வந்து உங்களுக்கு வணக்கம் போட்டுட்டு போவனுங்க.அந்த மரியாதை அங்க வருமா?அங்கல்லாம் நீலக்கலர் சட்டை.டை.புல் பேண்ட் இதுக்குதான் மதிப்பு சாஸ்தி.நமக்கு சரிபட்டு வராது..இஙக தம்பியை பாருங்க..ஊரே மெச்சுது.புரோட்டா,கால்,கறி எல்லாம் அவர் இலையிலதான் வக்கிறாங்க.யோசிங்க அண்ணே..

அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.தம்பி வீட்டுலயயும் இதே பேச்சுதான்.முன்னயே பேசித்தானே பட்டணத்துக்கு போனாரு.இப்ப தீடீர்னு நானும் இங்கய வரேன்னா என்ன அர்த்தம்.உங்களுக்கு சரியா போட்டி போடத்தானே.நீங்க அப்பாகிட்ட கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க.இல்லை நம்ம குடி மூழ்கிடும்.தம்பி யோசிக்க ஆரம்பித்தார்.

ஊர் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க காத்திருந்தது.