
சமீபத்தில் மதுரையில் உயிர்மை 10 புத்தகங்கள் வெளியிட்டார்கள். விழாவிற்கு வாசு,சூர்யா மற்றும் நான் சென்று சிறப்பித்தோம். சாருவும் வந்திருந்தார்(அடப்பாவி..அவர் சிறப்பு விருந்தினர்டா..) மறுநாள் எங்களுக்கு 12 மணிக்கு ட்ரெயின். 8 மணிக்கே கள்ள மார்க்கெட்டில் தீர்த்தவாரி ஆக தொடங்கியிருந்தது.. காலை உணவிற்காக ஒரு ஓட்டலுக்கு போன போதுதான் சாருவுடனான சரித்திர சந்திப்பு. உணவு என்னவோ சைவம்தான்.. ஆனால் பேசின விஷயங்கள் ஒரு மூணு முனியாண்டிவிலாசுக்கு சமம். மனுஷன் எந்த விகல்பமும், போலித்தனமும் இல்லாத ஆள்.(இப்போது காற்றுக்காக திடீரென்று கதவை திறந்து வைத்திருக்கிறார்..அவர் அப்படித்தான்..)..மலேசியா சாண்ட்விச்சிலிருந்து இத்தாலி பிஸ்ஸா வரை..நடுவில் கொஞ்சம் தாய்லாந்து, பிரான்ஸ் என்று ஒரு கட்டு கட்டியிருக்கிறார்.. கொடுத்து வைத்த மனுஷன்
சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். குமுதம் சொன்னதெல்லாம் சும்மா..சென்சேஷனுக்காக சாருவிடம் சொல்லி விட்டே செய்திருப்பார்கள்..(தலைவரும் சும்மா எல்லாம் தலையாடியிருக்க மாட்டார்..)
சாரு.. போட்டோவை தாமதமாக போடுகிறேன்.. நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்..(பவுன்சர்லாம் வர்றாங்களாமே)