Saturday, July 11, 2009

அர்த்தமில்லாத கதைகள்....1 (11/07/09)

அர்த்தமில்லாத கதைகள்....1 (11/07/09)


அப்பா.....

என்னடா மகனே..

நா வேணும்னா அத்தை வீட்டுக்கு போயிட்டு வரட்டா?

போய்..?

கேட்டுப் பார்க்கிறேன்...

தாராளாமா கேக்கலாம்..உனக்கு உரிமை இருக்கு..

மதிப்பாங்களா..?

அதை சொல்லமுடியாது..ஆனா உனக்குன்னு நிச்சயம் பண்ணதுதானே..அப்புறம் நீங்க கேக்கலைன்னு சொல்ல கூடாது பாரு..போயிட்டு வா...பஸ்சுக்கு காசு இருக்கா..?

ம்ம்..நா போயிட்டு வர்ரேன்..

அத்தை வீடு பட்டணத்தில் இருக்கிறது..பெரிய கதவு வச்சு மாளிகை மாதிரி..

வாசல் காவல்காரன்...தம்பி எங்க இப்படி?

அத்தையை பார்ககணும்..

வரச் சொன்னாங்களா.?

இல்லை..ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..

என் பொழைப்பை கெடுத்திடாதீங்க தம்பி..நா உள்ளே போய் கேட்டு கிட்டு வர்ரேன்..

இந்த வீட்டுலதான் எப்படி விளையாடியிருக்கோம்..இப்ப..எல்லாம் விதி..

காவல்காரன் ..தம்பி அத்தை பூஜைல இருக்காங்க..இப்ப பார்க்க முடியாதாம்..

நா வந்திருக்கேன் சொல்லலையா..

சொன்னேன்..

அத்தை என்ன சொன்னாங்க..

அவன் கிடக்கான் சொத்தைன்னாங்க....

அழுகை முட்டிக்கொண்டு வந்தது...செல் அடிக்க ..அப்பாதான்..

என்ன தம்பி ஆச்சு?

பேச்சு வரவில்லை..அழுகைதான் வந்தது..பின்ன இலவு காத்த கிளி கதையா போச்சே..

அப்பா..பெரியப்பா வீடு பக்கத்திலதான்..ஒரு எட்டு பாத்துட்டு வரவா?

அவர் உங்க அத்தைக்கு மேல ராங்கி பிடிச்சவர்டா..வேணாம்..நா அப்புறமா அவர் கிட்ட பேசறென்..

இல்லப்பா..முயற்சி பண்ணி பார்க்கலாம்..

அத்தை வீட்டுலேர்ந்து கூப்பிடு தூரம் தான் பெரியப்பா வீடு..ஆனால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை...சொத்து தகராறு..

வாடா அன்பு மகனே..பெரியப்பா வரவேற்பில் நக்கல் இருந்தது...அவர் அப்படித்தான் ..யாராயிருந்தாலும் கிண்டல்தான்..டில்லி பெரிய அத்தை மட்டும்தான் அவருக்கு இப்ப உசத்தி..

நல்ல இருக்கீங்களா பெரியப்பா..?

நீங்க இந்த பக்கம் வர்ரதில்லை இல்ல..நல்லாதான் இருக்கேன்..ஆமாம் காபி,கீபி சாப்புடுறியா??ஆமாம் அத்தையை பார்த்துட்டு வந்திருப்பே..அங்க விருந்தே ஆயிருக்கும்..உங்கப்பன் எப்படியிருக்கான்..வீட்டுல அடுப்புலாம் எரியுதா??

உங்களை அப்பா பார்த்துட்டு வர சொன்னார்..

எதுக்கு என் முதுகு எப்படியிருக்கு..குத்த இன்னும் இடம் இருக்கான்னா?
பெரியவன் வர்ர நேரம் பொழைச்சு போயிடு..

தெருவில் இறங்கி நடந்தான்..போன் அடித்தது..

மகனே என்னாச்சுடா?பெரியப்பா என்ன சொன்னார்?

அப்பா..குரல் கம்மியது..ஏம்பா நமக்கு இப்படி நடக்குது...


அது வேற ஒண்ணுமில்லடா தம்பி..இப்ப நம்ம சாதி சனத்து கிட்டயே நமக்கு
மதிப்பு போயிடுச்சு..அதான்.. நீ பஸ்சை பிடிச்சு வீடு வந்து சேர்..

பஸ் வந்தது..ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டான்..கண்டக்டர் வர “திண்டிவனம்” ஒண்ணு கொடுங்க..

23 comments:

butterfly Surya said...

அடிக்கடி வீடு மாத்தினா எப்படி மரியாதை இருக்கும்..??

மரியாதையா இதை புரிஞ்சுக்கணும்..

ரமேஷ் வைத்யா said...

ஐயய்யப்பா...

நர்சிம் said...

வண்ணத்துப் பூச்சியார் கருத்துதான்..என்னுடையதும்.கலக்கல்

மணிஜி said...

/அடிக்கடி வீடு மாத்தினா எப்படி மரியாதை இருக்கும்..??


நீங்க தப்பா அர்த்தம் புரிஞ்சுகிட்டீங்க போல..நா வீடு மாத்தறதை போல எதுவும் எழுதலையே...

மணிஜி said...

/ஐயய்யப்பா.//

ஏம்பா....

மணிஜி said...

/வண்ணத்துப் பூச்சியார் கருத்துதான்..என்னுடையதும்.கலக்கல்//

நன்றி நர்சிம்....

Unknown said...

அண்ணே, சொந்த ஊருக்குப் போறதா இருந்தா இனிமே ராக்போர்ட்ல மட்டும் போங்க. பஸ்ல போனா வழில திண்டிவனம் வரும்... வேண்டாத வில்லங்கம் வரும்... எதுக்கு வம்பு....

Raju said...

ம்ம். ந‌டத்துங்க.

மணிஜி said...

/அண்ணே, சொந்த ஊருக்குப் போறதா இருந்தா இனிமே ராக்போர்ட்ல மட்டும் போங்க. பஸ்ல போனா வழில திண்டிவனம் வரும்... வேண்டாத வில்லங்கம் வரும்... எதுக்கு வம்பு...//

அண்ணே..நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ஊர்தானே...

குடந்தை அன்புமணி said...

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது....

தராசு said...

படிச்சேன், கொஞ்சம் விளக்கம் வேணும்

அகநாழிகை said...

தல,
நல்லாயிருக்கு. தொடர்ந்து நடத்துங்க.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

R.Gopi said...

கதை மிகவும் கனமாக உள்ளது... அந்த பையனின் ஏமாற்றம் மிக அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது....

படிச்ச எனக்கே மனசு கொஞ்சம் சங்கடமாதான் இருந்தது.

கையில் காசு, பணம் இல்லாத இவர்களுக்கு சொந்தம், பந்தம் தரும் மரியாதையை
எண்ணுகையில், கண்ணில் நீர் வருகிறது.

நல்லா எழுதி இருக்கீங்க "தல".

//நீங்க தப்பா அர்த்தம் புரிஞ்சுகிட்டீங்க போல..நா வீடு மாத்தறதை போல எதுவும் எழுதலையே...//

ஒ..... வீடு மாத்தறதை பத்தி கூட எழுதி இருக்கீங்களோ?? எனக்கு தெரியவே இல்லையே......

Jackiesekar said...

அத்தை பூஜையில இருக்காங்கன்னு சொன்னதுமே புரிஞ்சி போச்சி..

யோவ் உனக்கு செம நக்கல்யா....

Cable சங்கர் said...

இங்க வந்தவங்க எல்லாம்.. வீடு மாத்திரது.. ஒரே விட்ல இருக்கணும், அப்பிடி இப்படின்னு ஏதோதோ சொல்றாங்க.. ஒரே எளக்கியவாதி எழுத்தா போச்சு.. நம்ம இடமில்ல இது.. நான் வரேன்..

முரளிகண்ணன் said...

கலக்கீட்டிங்க தண்டோரா.

மணிக்கு அன்பு கிடைக்காம போயிடுச்சே.

மணிஜி said...

அகநாழிகை
அன்புமணி
தராசு
கேபிள்
ஜாக்கி
கோபி
முரளி
டக்ளஸ்..
அனைவரின் வருகைக்கும் நன்றி...விடுமுறை நாள் வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

//வாடா அன்பு மகனே//

எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்!

உண்மைத்தமிழன் said...

அத்தை இனி சொத்தை..!

பெரியப்பா என்னோட வாப்பா..!

அடுத்த எலெக்ஷன்ல இதுதான் கோஷமா இருக்கும்..

ஆனாலும் நீங்க இப்படி அடிக்கடி வீடு மார்றது நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

மணிஜி said...

////வாடா அன்பு மகனே//

எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்!//

வாலு.. ஊட்டி மலை ஏறினியா??

மணிஜி said...

//அத்தை இனி சொத்தை..!

பெரியப்பா என்னோட வாப்பா..!

அடுத்த எலெக்ஷன்ல இதுதான் கோஷமா இருக்கும்..

ஆனாலும் நீங்க இப்படி அடிக்கடி வீடு மார்றது நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..!//



தலைவா...வணக்கம்....

மணிஜி said...

//கலக்கல்//

நன்றி நண்பரே...