
கவிதை எழுத கற்றுதரும் பட்டறை ஒன்று நடக்கிறது.அதில் நமது பதிவர்கள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.பெயர் இல்லை.மொழி,நடையை வைத்து இன்னார் என்று அடையாளம் காணலாம்.முழுக்க நகைச்சுவைக்காகவே...
முதல்ல ஒரு விஷயம்...இதுக்கு யாரும் ஆசிரியர் கிடையாது.நீங்களே,ஏன் நாமேதான் ஆசிரியர்கள்.இன்னும் சொன்னா நாமதான் மாணவர்களும் கூட.தயங்காம,வெளிப்படையா,ஓப்பனா உரையாடலாம்.ஆனா அதிகாரம் பண்ணக்கூடாது.யாரும்,யாரையும்..
இதை நீங்க அதிகாரமா சொல்றிங்களா?இல்ல தோழமையுடனா?
அது..அப்படிங்கும்போதே இது அப்படின்னு ஞாபகம் வருது.அது கூடாது.இது தான் முதல் பாடம்.இந்த இடத்துல கூர்ந்து கவனிச்சீங்கன்னா, இடத்துல அர்த்தமற்ற வார்த்தை பிரயோகமா இருக்கு..
யூத்து..
யூ டூ
மி ஒன்லி...
இது எப்படியிருக்கு?அப்புறம் ஒரு நிதர்சனகவிதை.ஒரு பிராஸ்ட்டியூட் பத்தி பின்நவீனத்துவ கவிதை ..
தலைவரே..அப்ப அது முன் நவீனத்துவ கதையால்ல இருக்கணும்..சரி எஃப் டிவி சரியா தெரியல..பாத்துட்டு போங்க
ஒரு மயிறும் இல்லை..அந்த கதையை கதராடை சிறுகதை போட்டிக்கு அனுப்புங்க...இப்ப மேஜிக்கல் ரியலிசம்
அப்படின்னா ஜேம்ஸ் மேஜிக் ஷோவா குருவே?
மண்ணாங்கட்டி.உனக்கு உடம்பு பூரா கொழுப்புத்தான் குடிகாரா..
மூணாவது தெரு
முண்டகண்ணி
முனியனோட போனா
ஓடி
முந்தா நா ராத்திரி
திரும்பி வந்தா
தாலியோட
ஆனா
கழுத்து இல்லை
ஏ அப்பா..நா ஒண்ணு எழுதியிருக்கேன் கேளுங்கப்பா..
அரசு கோப்புகள் பார்க்க ஆசை
அரசின் கோப்பைகளை
உரசியதால் இன்று
ஆல்ப்ஸ் மலை உச்சியில்
ஆல்கஹாலின் அபத்தம்
எப்பூடீடீயீஈஈஈ
கவிஞர் காத்தமுத்துவிடம் 32 கேள்விகள் எழுதியிருக்கேன்..படிங்க..நானே பர்சனலா வந்து கிச்சு,கிச்சு மூட்டறேன் சிரிங்க
1921 ல வந்த ஒரு திரைப்படம்..கவிதை பத்தி.இதை பத்தின ஒரு கல்வெட்டு தேனி நாகராஜன் சந்துல இருக்கு
நான் எழுதியதையும் கேளுங்க மக்கா
படகில் விரிசல்
துறையில் நெரிசல்
மனதில் மெரிசல்
இப்படிக்கு.......
திருப்பூருக்கு கள்ளத்தோணி இருக்காப்பு?
பழனி பஞ்சாமிர்தம்
குற்றால குறவஞ்சி
கோவை கொண்டாட்டம்
எப்படி இருக்கு நண்பா..அப்புறம் ஜப்பான்லேர்ந்து ஒரு மிஷின் வாங்கியிருக்கேன்.ஆனா அதுல ஒன்லி ஹைக்கூ மட்டும் தான் அச்சடிக்க முடியும்..
முருகா சரணம்..முடிந்தால் வரவும்
நீங்க எங்க இங்க?வரமாட்டீங்களே அண்ணே?
எவனோ ஒரு திரிசமம் புடிச்சவன் நா டைப் அடிக்க கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்கான்.லாயரை பாரக்கலாம்னு சேம்பருக்கு போனா அவரை காணும்?
நீங்க பிலிம் சேம்பருக்கு போயிருப்பிங்க..சரி கவிதை சொல்லுங்க
போலி பாண்டு அவனுக்கு
ரெண்டு வாண்டு..ஹால்ல
வச்சிருக்கு பேண்டு நீ
மிதிக்காம தாண்டு
முருகா..
அந்த வேலை எடுத்து இவருக்கு அலகு குத்தி விடுங்கப்பா..வாயை திறக்காம இருக்கட்டும்..
நா கடலூர்ல ஐஞ்சாவது படிக்கிறப்ப எழுதினது..கேக்கறிங்களா?
சார் சார் ஒண்ணுக்கு
தட்டான் மேல ரெண்டுக்கு
நான் போறேன் ஊட்டுக்கு
நாளைக்கு வாரேன் ஸ்கூலுக்கு
அலெக்சா ரேங்கிங் பத்தி தெரியுமா உங்களுக்கு?
சாரி பாஸ்..பிளைட் லேட்.டெல்லி போயிருந்தேன்.அப்புறம் நம்ம பதிவுல ஒரு அலுமினிய தட்டு படம் சைடுல இருக்கும்.அதை சுட்டு பாருங்க ..அது ஒரு நலிந்த கவிஞர் அமைப்புக்கு போகும்.உங்க கிட்ட மீந்து போன பழைய கவிதைகள் இருந்தா கொடுக்கலாம்.அவிங்களுக்கு உதவியா இருக்கும்.எதாவது செய்யணும் பாஸ்..
டிஸ்கி: ஒருத்தர் விட்டு போயிட்டாரு..அதான்..
தலை நானும் கவிதை எழுதுவேன் தல
சுருட்டிகிட்டு எழுதணும் சரியா?
சரக்கு
கையிருப்பு
அரைமூடி
மோந்துக்கோ
இல்ல
கவுந்துக்கோ
ஒட்ட நறுக்கணும்...