Showing posts with label சினிமா /பொது. Show all posts
Showing posts with label சினிமா /பொது. Show all posts

Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை....













திருவிழா அல்லது பண்டிகை நேரங்களில் மட்டுமே இட்லிக்கு மாவு அரைப்பார்கள்சில கிராமங்களில்..அ.சாமியின் குதிரையில் திருவிழா அறிவிப்பும் , தொடர்ந்து தஞ்சை செல்வியின் கணீர் குரல் .

கம்மலோ , மூக்குத்தியோ அடகு வைக்கப்படும் காட்சியும் , மாவு அரைபடும் காட்சியும் .

சாதி வேறுபாடுகள் . தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஊர் கோடாங்கி, சாமி வந்த சாக்கில்  உசந்த சாதி பிரசிடெண்ட்டை ஏகவசனத்தில் விளிக்கிறார் .

சாமி வந்துருக்கா ? இல்ல பேய் பிடிச்சிருக்கா? ஒரு சிறுவனின் கேள்விக்கு இன்னொரு சிறுவன் பதில் சொல்கிறான்

“ரெண்டும் ஒண்ணுதான் :

எப்பயாச்சும் மழை வருது . வாசல் தெளிச்சாப்ல தெளிச்சிட்டு போகுது

பளிச் ..வசனங்கள் ..பாஸ்கர் சக்தி..

புரோட்டா சாப்பிடும் காட்சி அருமை . பாஸ்கர் சக்தியின் புரோட்டா என்று தலைப்பிட்டு ஒரு சிறுகதை எழுதலாம்.


ஊர் மைனர் ஒட்டவில்லை..சுப்பிரமணியபுரம் காட்சிகளை நிணைவூட்டுகிறது .

திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருக்கலாம் . உ.தா. முதல் பாடல் .அதற்கு முன் நடக்கும் ஊர் விவாதம் . பாடலை மாண்டேஜாக்கி , விவாதத்தை இன்னும் சூடேற்றி ,இண்டர் கட்டில் காட்டியிருக்கலாம் .

டப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது . டைட் குளோசப்பில் வசனங்கள் . இயல்பு மிஸ்ஸிங்.

அறிவாள் இல்லை. மதுரை ஸ்லாங் இல்லை (தேனி வட்டார வழக்கு ). ஆபாசம் இல்லை . சூரியை டைட்டில் ரோலில் நடிக்க வைத்திருந்தால் என்ன? என்று தோன்றியது.. அப்புகுட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இருந்தாலும் ..தோன்றியது .


ராஜா ..ராஜாதான் ..குதிரைக்குட்டி பாடலில் கிராமத்தான் துள்ளுகிறான் . பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் . இரண்டாம் பாதியில் மட்டும் லேசான கவனமின்மை எனக்கு தெரிந்தது.

உரையாடல் பாஸ்கர் சக்தி . மிக இயல்பாக வட்டார வழக்கை கையாண்டிருக்கிறார் பாஸ்கர் ..

அழகர்சாமியின் குதிரை .. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..அந்த எளிய சனங்களுக்காக..

படங்களுக்கும் ,பதிவிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க வேண்டாம் ..கோடைக்கேற்ற கிராமத்து விருந்து .. அழகர்சாமியின் குதிரையும்தான்...

(படங்கள் நன்றி : https://profiles.google.com/111554861917664287627#buzz) தமிழ் அமுதன்.

இந்த சுட்டெரிக்கும் வெய்யிலில ஒரு மண்சட்டி நிறைய பழைய சோறு, அதுல ஜில்லுன்னு பசும் தயிரை ஊத்திக்கணும். பிறகு பச்சை வெங்காயத்த அதுல உரிச்சு போட்டு,உப்பு மிளகாய் பொடி போட்டு ஊற வைச்ச மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,சுண்டைக்காய் வத்தல்,கொத்தவரங்காய் வத்தல்,மோர்மிளகாய், பழைய மீன் குழம்பு, வறுத்த கருவாடு, உப்பு புளி வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்ச துவையல்,சுண்டவைச்ச கருவாட்டு குழம்பு, அடை மாங்காய் ஊறுகாய். இன்னும் என்ன என்ன வகை தொட்டு கொள்ளும் ஐட்டம் இருக்கோ அதெல்லாம் சுத்தி வைச்சுகிட்டு வக்கணையா உக்காந்து சாப்பிட்டா அடடா..அடடா...! இன்னிக்கு முழுக்க சாப்ட்டுகிட்டே...! இருக்கலாம்...!

Tuesday, June 16, 2009

மானிட்டர் பக்கங்கள்....3

அந்த குடும்பம் அப்போது மதுரையில் வசித்தார்கள்..வறுமை வாட்டி வதைத்தது...ஏற்கனவே மூன்று பிள்ளைகள்..குடும்பத்தலைவி மீண்டும் கருவுற்றார்.வறுமையின் காரணமாக அக்கருவை கலைக்க முடிவு செய்து மருத்துவரிடம் போனார்கள்..காலதாமதம் ஆகிவிட்டதால் முடியாது என்று மருத்துவர் கை விரித்துவிட்டார்.வேறு வழி தெரியாமல் தெய்வத்திடம் போனார் அக்குடும்பத் தலைவி.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தினமும் காலை,மாலை அங்கபிரதட்சணம் செய்தார்.கரு தானாக கலைந்துவிடும் என்று நம்பினார்.ஆனால் கரு கலையவில்லை....சரி..தெய்வம் நம்மை சோதிக்கிறது என்று விட்டு விட்டார்.குழந்தையும் பிறந்தது..அக்குழந்தை யார் ?பிரபல திரைப்பட இயக்குனர் திரு.மணிரத்னம் தான்..அவர் படம் போலவே வாழ்க்கை கதையும்..

மணிரத்னமும்,வைரமுத்துவும் ஒரு பாடல் கம்போஸிங்கில் இருந்தார்கள்.லஞ்ச் பிரேக் விட்டதும்,மணி வீட்டுக்கு கிளம்பினார்...வைரமுத்து மணி வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்கு..சேர்ந்து சாப்பிடலாமே என்று கூற..சரி..நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்னுட்டு வீட்டுக்கு போன் பண்ணி நா சாப்பிட வரலபோனை வைத்து விட்டிருக்கிறார்.வைரமுத்துக்கு ஆச்சர்யம்..மணீ இவ்ளொ சுருக்கமா பேசி முடிச்சுட்டாரேன்னு..வாயை விட்டு கேட்டும் விட்டார்..ஏன் சார் வேற எதுவுமெ பேசறதுக்கு இல்லையா?வேற எதாவது கால்,விசிட்டர் வந்தாங்களா?மணி சொன்னார்.நானாவது மூணு வார்த்தை சொன்னேன்.எதிர் முனையில் என்ன பதில் சொன்னார் தெரியுமா?ம்ம்....

ஒரு குறும்படம் பார்த்தேன்.மகளிர் கிறித்துவ கல்லூரி விஸ்காம் மாணவி இயக்கிய படம்.தலைப்பு “முடிவு”கதை இதுதான்..சூரியும்,ரெனியும் காதலர்கள்...வெவ்வேறு மதம்.காதலுக்கு கடும் எதிர்ப்பு.தீவிரமாக யோசித்து அந்த முடிவை எடுக்கிறார்கள்..வீட்டுக்கு திரும்புகிறார்கள்.இரவாகிறது.உணவு முடிந்தவுடன் பால் வருகிறது.செல்போனில் பேசுகிறார்கள்.”பயம் இல்லியே?ம்ம்..பயமாத்தான் இருக்கு..ரெனி...நம்ம காதல் ஜெயிக்கணும்” அவங்களுக்கு இது பாடமா இருக்கணும்...இருவரும் பாலில் தூக்க மாத்திரைகளை கலக்குகிறார்கள்.மீண்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டே பாலை எடுத்து.................நான் நிச்சயம் குடிக்க மாட்டார்கள் நன்று நம்பினேன்..அதுதான் நடந்தது..ஆனால் அதன்பின் அவர்கள் செய்த காரியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..”பாலை” இருவரும் தத்தம் தந்தையிடம் கொடுத்து குடிக்க செய்கிறார்கள்....

அந்த மாணவியிடம் உன் காதலுக்கு உன் தந்தை சம்மதிக்காவிட்டால் இப்படித்தான் செய்வாயா?என்று கேட்டேன்..”சான்ஸே இல்லை”எவனோ ஒரு மடையனுக்காக அப்பாவை போய்..இது சும்மா ஒரு வித்தியாசமா இருக்கட்டும்னு இப்படி முடிச்சேன்...


நண்பர் ஒருவர் வீடு பார்க்க சொன்னார்..பெரிசா இல்லாவிட்டாலும் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான்களை எதாவது ரூமில் போட்டு விட்டு நான் எதாவது மேன்ஷனில் தங்கி கொள்வேன் என்றார்.ஒரு வீடு காலியாக இருந்தது.விசாரித்தேன்”ஏங்க வீடு வாடகைக்கு வேணும்” எத்தனை பேர்”....ஆள் தங்க மாட்டாங்க” பொருளையெல்லாம் போட்டு வைக்க இடம் வேணும்”... சாரி..”சாமான் போட இடம் தர மாட்டோம்..வேணும்னா குடித்தனம் நடத்திக்கலாம்”” இதில் ஏதோ தப்பு இருப்பதாக மனசு சொல்கிறது..புத்தி மறுக்கிறது.."(நன்றி லக்கி”குறியீடுகள்”பதிவு)

ஒரு டவுட்(மொக்கையா)....

நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?