
Monday, January 24, 2011
மானிட்டர் பக்கங்கள் ...... 24/01/11

Wednesday, November 24, 2010
மானிட்டர் பக்கங்கள்.....24/11/10

Tuesday, November 9, 2010
மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10

சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் . திருச்செந்தூருக்கு போயிருக்கிறேன். ஒரு முறை மட்டுமே கோயிலின் உள்ளே சென்றேன் . அதுவே அலர்ஜியாகி விட்டது . கடலில் கால் நனைத்தல் , மானசீகமாக முருக தரிசனம் அவ்வளவுதான் . காரணம் ? கோயில் வாசலில் இருக்கும் லைசன் ரெப்ரசண்டட்டிவ்கள்தான் . டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டு “சார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை .சரி விஷயத்து வருவோம் . வரும் 18ஆம் தேதி சல்லிப்ப்பயலுக்கு கல்யாணம் . காதலர்களாக இருந்தவர்கள் மணமக்களாக மாறுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னைப்போன்றவர்களுக்கு தெரியும் .(பொண்டாட்டி பிளாக் படிப்பாங்க இல்ல) .செல்வேந்திரன் கேண்டியின் கைத்தலம் பற்றுகிறார் முருகன் ஸ்தலத்தில் . மஹா திருமணத்திற்கு பிறகு நடக்கும் இன்னொரு பதிவுலக நிகழ்வு . கோவை , திருப்பூர், ஈரோடு , மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பதிவுலக நண்பர்களும் , இலக்கிய ஜாம்பவான்களும் சங்கமிக்க இருக்கிறார்கள் . பா.ராவும் வருவதாக சொல்லியிருக்கிறார் . அவர் வீட்டு விசேஷத்தை தவற விட்டவர்கள் , இந்த நிகழ்வை மிஸ் பண்ணாதீர்கள் .
நான் பதிவுலகம் வந்த புதிதில் கேபிள் மட்டுமே நன்கு அறிமுகம் . ஒரு மாலை செல்லடித்தார் . ஒரு சந்திப்பு இருக்கிறது . வருகிறீர்களா ? என்றார் . செல்வா விஜய் டிவியின் நீயா , நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . பாஸ்கர் சக்தியின் வீட்டில் சந்திப்பு . நர்சிம் , இரவுப்பாடகன் ரமேஷ் வைத்யா . மிக இனிமையான சந்திப்பு . அப்போதுதான் செல்வா அறிமுகம் . அதன் பின் இரண்டொரு முறை சந்தித்திருப்போம் . குறிப்பிட்ட இடைவெளியில் அலைபேசி உரையாடல்கள் உண்டு . சொல்லுங்க தண்டோரா அண்ணே என்று வாய் நிறைய அழைப்பார் . மழை பெய்த பின் காளான் முளைக்கும் . செல்வாவின் மனக்காளான் படித்துப் பாருங்கள் . மனதிற்குள் மழையடிக்கும் . மண் சட்டியில் ஆக்கிய மீன் குழம்பை போன்ற எழுத்துக்கு சொந்தக்காரன் . வச்சிருந்து சுவைக்கலாம் . அப்புறம் திருச்செந்தூர் தீர்த்தவாரியில் சந்திக்கலாமா?
நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் . மிஸ் பண்ணலாமா என்று வா ..குவார்ட்டர் கட்டிங் பார்த்தேன் . புஷ்கர் , காயத்ரி ஜோடிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் . அவர்களிடம் பேசியிருக்கிறேன் . சந்தானம் நடிக்கும் அக்சார்செம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள் . அது அவர்கள் இயக்கியதுதான். ஆனால் "வ" வில் போதையே வரவில்லை . 90 நிமிடங்களில் அந்த கதையை சொல்லியிருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் .
ஒரு முக்கிய தகவல் . கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . கூட்டம் ஜே..ஜேதான் . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர் மஃப்டியில் இருப்பார் . என்னை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தால் , நான் கொஞ்சம் சுவாரசியபடுத்தியிருப்பேன் .சரி உடுங்க..நம்ம அப்பன் வீட்டு காசுதானே ?.
ஜொள்ளர்கள் என்றால் ஆண்கள் மட்டும்தானா என்ன ? விஜய் மல்லையாவின் நிறுவன காலண்டர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . எல்லாம் அழகை ரசிக்கத்தான் . இப்போது பெண்களுக்கும் அந்த வாய்ப்பு . சகோதரம் என்ற அமைப்பு . ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ் .(பஞ்சாயத்து உண்டா? )
சின்ன வயதில் யானை சாணத்தை மிதிக்க போட்டியே நடக்கும் . நல்லது என்று என் பாட்டி சொல்வார் . இப்போது யானை சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கிறார்களாம் . பஞ்சாப்பில் .
“பிள்ளையார் சுழி “ போட்டு விட்டு எழுத ஆரம்பிப்போமா?
காலண்டர் மேட்டர் : டைம்ஸ் ஆஃப் இந்தியா
யாணை சாணம் : தினமலர்
காப்பி & பேஸ்ட் இல்லைப்பா . இன்ஃபர்மேஷன் .
சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்
Wednesday, November 3, 2010
மானிட்டர் பக்கங்கள்.....03/11/10

ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது என்றால் ஏதோ நடந்தது என்று அர்த்தமா?
நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)
கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.
நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..
பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்
ப..சி...க்..கு....தய்
பறித்து சென்றாள் இதயத்தை
கடவுள் மீது கோபம் வந்தது
பின்னால் வருகிறாளே இன்னொருத்தி
அவளுக்கு எதை கொடுப்பது?
திறந்தாள்
மின்னல் வெட்டியது
சிரிப்பினால் குழிகள்
பறித்தாள்
தவறாமல் விழுந்தேன்
குழியில்
ஓ...லைலா.
உயிர் வருகிறது
ஒவ்வொரு முறையும்
எப்படி உயிர் போய்
உயிர் வருகிறது
என்பதை சொல்வதற்குள்
காட்சி-2 சுகுமாரி ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறார். அவர் முன்னால் ஒரு பாம்பு படம் எடுக்கிறது. உள்ளே வரும் சுகாசினி தன் கையை பாம்பின் முன் நீட்ட, பாம்பு சுகாவை கொத்தி விட்டு போய் விடுகிறது.
காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது.”டயா
அதுக்கு ''சிங்- சாங்-பங்'' குன்னு பேர் வச்சாங்க.
இரண்டாவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''ரீங்- சாங்- சிங்''குன்னு பேர் வச்சாங்க.
ஆனா... மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?
''சம்- திங்-ராங்''குன்னு.
Sunday, October 10, 2010
மானிட்டர் பக்கங்கள்.....10/10/10
Thursday, August 19, 2010
மானிட்டர் பக்கங்கள்.....19/08/10
பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்
தங்கமணி: ஏங்க, பெப்பர் சிக்கன் பண்ணட்டுமா?
நான்: வேணாம்மா
தங்கம்: இல்லன்னா, பட்டர் சிக்கன்?
நான்: நோ.
தங்கம்: செட்டினாடு சிக்கன்?
நான்: அதல்லாம் வேணாம்மா, வெறும் குழம்பு மட்டும் வை, போதும்.
தங்கம்: இப்படி ஒரு புருசன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும், நான் கஷ்டப்படக்கூடாதுன்னு ஒன்னும் வேணாம்னு சொல்றீங்களே.
நான்: அது நீ கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக இல்லம்மா, நான் கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக
Saturday, July 17, 2010
மானிட்டர் பக்கங்கள் 17/07/10

சன் டிவியில் (கலைஞரிலும்) முதல்வரின் கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியிருப்பதாக சொன்னார்கள் . அதாவது ஜீலை 3 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அது. கிட்ட தட்ட 15 நாட்களில் பதில் வந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழ எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது . சந்தோஷம் நடந்தால் . சரி இந்த கடிதம் அடிக்கடி எழுதுகிறாரே . அதன் நடை முறை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை . நம்மைப்போல் தபாலாபீசுக்கு போய் கார்டு , கவர் வாங்கி வந்து எழுதுவாரோ ? ஆனால் ஆ.ராசா துறை மந்திரி எதற்கு இருக்கிறார் ? அண்ணனுக்கு அடுத்த வினை 2 ஜீ அலைவரிசையில் சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாம் . இந்த முறை நிச்சயம் கீரிடம் கிட்ட தட்ட கழலும் நிலையில்தான் இருக்கிறதாம் .(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 17/07/10)
அரசு உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் சொன்ன நடைமுறை . முதல்வரின் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு . அவரால் தமிழில் கையெழுத்திடப்பட்டு , ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் டெல்லிக்கு கொடுத்தனுப்பப்படுமாம் . அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி செம்மொழியை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம். எப்படியிருந்தாலும் சிங் ஒன்றும் செய்யப்போவதில்லை . ஒரு சம்பிரதாய பதிலை தவிர . பின் அந்த மெசஞ்சர் டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் கனையாழியை காட்டி , கடிதத்தை சேர்த்து விட்டு பதிலுக்கு காத்திருப்பார் . சவுத் பிளாக்கில் குரங்குகள் தொல்லை அதிகம் . அதற்கு ஒருவர் சொன்ன காரணம் . ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்ததுதானாம் . பின் அரசு செலவில் (வெட்டி) தலைநகரில் உண்டு , உறங்கி பதிலை பெற்றுக் கொண்டு கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு திரும்புவாராம். அவர் திரும்பி வருவதற்குள் இவர் இன்னொரு கடிதம் தயாராக வைத்திருப்பார் என்பது வேறு விஷயம் .
நானும் , காமராஜிம் ஒன்றுதான் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . இனிமே காமராஜ் ஆட்சின்னு யாரும் பேசாதீங்கப்பா கதர் கிழிசல்களே . இல்லா விட்டாலும் தலைக்கு மேல் சபை தொங்குகிறதே . மூச்...
இந்த வாரம் ஆனந்த விகடன் கொஞ்சம் சூடும் , சுவையுமாக இருந்தது என்று சொல்லலாம் . சாருவின் மனங்கொத்தி பறவை அட்டகாசம் . ஆனந்தவிகடனுக்கு சன் சார்பு அதிகமோ என்று தோன்றுகிறது . துணை முதல்வரின் தேநீர் விருந்து அமர்க்களம் . ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பற்றிய ஸ்கேனிங் . ஆங்காங்கே முதல்வருக்கு சில பச்சை மிளகாய்கள் . செழியனின் மார்க் கதையும் மனதை தொட்டது . எனக்கும் அந்த மாதிரி நண்பர்கள் இருந்தார்கள் . தியாகராஜன் என்றொரு இயக்குனர் நண்பர் . இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை . சினிமா ..
மைக்ரோ சாஃப்ட் துணைத் தலைவரின் பர்சையே அடித்த கில்லாடிகள் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் . கும்பலாக கிளம்ப வேண்டியது . அண்டை மாநிலங்களில் ஆட்டையை போட வேண்டியது . திரும்ப இங்கு வந்து ஆட்டம் போட வேண்டியது . இவர்கள் குறவர் என்ற பிரிவு என்றும் ,சேர்வை என்ற பிரிவை சேர்ந்த மக்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுக்கு சிறையில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது . சுய உதவி குழுக்கள் மூலம் மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . 50 க்கும் மேற்ப்பட்டோர் மனம் மாறியிருக்கிறார்களாம் . நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது
பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் பற்றி லக்கிலுக் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனாயசமான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களும் . அப்படியே கொஞ்சம் பால்யமும் , பாலகுமார விமர்சனமும் .....
செம்மொழி மாநாட்டில் முதல்வர் அதிகம் புகழப்பட்டது அவருக்கு இருந்த ஒரே வீட்டையும் தானமாக ஈன்றதற்கு .உண்மைதான் .
இல்லம் தானம்
உடல் தானம்
சுய பெருமிதம்
நாட்டையே நாம்
தானமாய் தந்ததை
கண்டு கொள்வாரில்லை
யாரும்.....
Tuesday, June 15, 2010
மானிட்டர் பக்கங்கள்.........15/06/10

முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது . முத்துசாமி சொல்கிறார் . அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம் . அதிமுக ஆட்சியில் இருந்தால் , அதால் அடித்தால் கூட பெருமையாக வாங்கி கொண்டிருப்பார் . மக்கள் சேவைக்காக அணி மாறியதாக அவர் பேட்டியை படிக்கும்போது , அந்த செருப்பாலேயே ரெண்டு சாத்தினால் என்ன என்று தோன்றியது . சின்னசாமி சமயம் பார்த்து தாவியிருக்கிறார் . அமைச்சராக , கரூர் எம்பியாக இருந்தவர் . திமுகவின் மாவட்டசெயலாளர் திருமதி வாசுகி முருகேசனின் அகால மரணம் , அந்த இடத்தை தான் பிடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் இந்த முன்னாள் அடிமை . பார்க்கலாம். இந்த அடிமைகள் புது குட்டையில் விழுந்த நாள் , சென்னை திக்குமுக்காடியது . டிராஃபிக் நெரிசல் .
Friday, May 28, 2010
மானிட்டர் பக்கங்கள்.........28/05/10

Monday, April 19, 2010
மானிட்டர் பக்கங்கள்.............19/04/10

கொலையில் நேரடியாக ஈடுபட்ட நளினியையே மன்னிக்கும் மனம் கொண்ட சோனியாவால் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கும் மனம் வந்திருக்கும்? இதென்னவோ அதிகாரிகள் மட்டத்தில் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது கூட அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்றார்கள். சில பாகிஸ்தான் தலைவர்கள் உள்பட. வரதராஜ பெருமாளுக்கு பாதுகாப்பு. அவர் மகள் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்புக்கும் பாதுகாப்பு. சரி . தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?
தமிழக மக்களின் நாடிதுடிப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆக்ஷன் செல்லுக்கு சொல்லுங்கள் என்கிறார்கள். அது கூட நிறைய பேர் சொல்ல வேண்டும். எது எப்படியோ வாரம் இரண்டு முறை கல்லா கட்டுகிறார்கள். கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுரண்டும் அரசியல்வாதிகளுக்கு குறைந்ததில்லை. செய்திகள் எந்த அடிப்படையில் வருகிறது? சாமியார், சரசம், சல்லாபம் இதெல்லாம்தான் இப்ப செம்ம ஹாட் மச்சி. அப்புறம் பழைய கிளு கிளு சினிமா கிசுகிசுக்கள். மதில் ஏறி குதித்த பூனையின் நேரடி ஒளிபரப்பு. தலைவரின் குடும்பத்தில் நடக்கும் லேட்டஸ்ட் முறைப்பும், விறைப்பும்.
சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வேலூரில் அரசு அதிகாரியாக பணிபுரியும் ரங்கராஜன். இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவருக்கு பதவி உயர்வு. ஆனால் மார்ச் 26ஆம் தேதி ஒரு விபத்தில் சிக்கினார். அது துரதிர்ஷ்டமென்றால், அதில் அவர் உடனே இறக்காதது இன்னும் துரதிர்ஷ்டவசமே. வேலூரில் பிரபலமான பேருந்து நிறுவனம் பாரதி மோட்டார் சர்விஸ். வழக்கம் போல் அதில் அலுவலகம் போகிறார். இடையில் இரண்டு நபர்கள் ஒரு கேனுடன் ஏறுகிறார்கள். இவர் அமர்ந்திருக்கும் இருக்கையின் கீழ் அதை வைக்கிறார்கள். அதற்கு 100ரூ லஞ்சம் கொடுக்கிறார்கள். (அது தினம் நடக்கும் நிகழ்ச்சியாம். எவ்வளவு ஆபத்து !)அது ஒரு கெமிக்கல் கேன். பேருந்தின் குலுங்கலில் அது வெடிக்கிறது. ரெங்கராஜன் மற்றும் சிலர் தீப்பிடித்து எரிகிறார்கள். விபத்து பதிவு செய்யபடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பேருந்து காவல் நிலையத்துக்கே கொண்டுவரப்படவில்லை.. பணம்..
ரங்கராஜன் இறக்கவில்லை. பிழைக்க வாய்ப்பே இல்லை . ஆனால் எப்போது உயிர் போகும் என்று சொல்ல மருத்துவர்களால் முடியவில்லை. உடம்பெல்லாம் எரிகிறது . தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார். அதற்கு சட்டம் அனுமதிக்காது என்கிறார்கள். தினப்பத்திரிக்கையில் ஒரு மூலையில் இந்த செய்திவந்தது. ஜீனியர் விகடனை தொடர்பு கொண்டு இந்த செய்தியை பதிவு செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.
“இது டெய்லி பேப்பருக்கான நியூஸ் ஆச்சே ! என்றார்கள். பிறகு இதில் மேட்டர் இருக்கிறாப்ல தோணுது. வேலூர் நிருபரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள். அவர் துணை முதல்வர் விசிட்டில் பிஸியாக இருந்தார். ரங்கராஜனும், இன்னும் ஆறு பேர்களும் இறந்து போகும் வரை யாரும் வரவில்லை. பாரதி பேருந்து உரிமையாளரின் பவர் அப்படி என்று சொன்னார்கள். ” சபாஷ். எவனாவது சாமியார் சரசமாடற போட்டோவோ, செய்தியோ கிடைச்சா, அவங்களுக்கு ஸ்கூப்.. இது தினம் அங்கங்ககே நடக்கறதுதானே என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் எதாவது கற்பழிப்பு நடந்தால் உடனே நியூஸ். பெயரை மாற்றி, முகத்தை மறைத்து. அப்புறம் அதற்கு ஃபாலோஅப் வேறு. அதில் ஒரு கிக் இருக்கும் போல்.
சென்னை காவல்துறை சமீபத்தில் ஒருவனை கைது செய்தார்கள். விசாரித்த போதுதான் தெரிந்ததாம். அவன் மீது 1000 வழக்குகள் இருக்கிறதாம். போலிஸ் தரப்பில் அவனை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். கன்னம் வைப்பதில், சத்தம் வராமல் ஷட்டரை திறப்பதில், சங்கிலி அறுப்பு, பிக்பாக்கெட் இதிலெல்லாம் பார்ட்டி கில்லாடியாம். விட்டால் கமிஷனர் ஆஃபிசில் சிலையே வைப்பார்கள் போல.
சுறா படத்தின் ஆடியோ ரிலீஸ். தொடர்ந்து ட்ரெயிலர் தாக்குதல். விழாவில் பேசிய அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற்போல் விஜய் நடிச்சா வெற்றிதான் என்றார்கள். கூடவே ஒருவர் விஷாலையும் சேர்த்துக் கொண்டார். மீண்டும் சன் டிவிக்கு ஒரு வெற்றிப்படம். இந்த முறை வடிவேல் காப்பாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. வழக்கம் போல் பார்த்திபன் தமண்ணாவை ஜொள்ளினார். பவர் கட்டின் போது தமனா வீட்டில் மெழுகுவர்த்தி கூட ஏற்ற வேண்டியிருக்காது என்றார். நடக்கட்டும்..
கலைஞர் டிவியில் தசாவாதாரம். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் காட்சியை கவனமாக தூக்கியிருந்தார்கள். நான் முதல் முறை ஒளிபரப்பியபோது பார்க்கவில்லை. இந்த முறைதான் கவனித்தேன். சீப்பை ஒளித்து வைப்பதில் கில்லாடிகள்.
மொண்ணை கத்தியுடன்
சுயம்வரம் நோக்கி..
காலை பதம்
பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.
அவையோருக்கு ஆச்சர்யம்
அவனா “இவன்” என்று.
அமைதியாய் புன்னகைத்தேன்..
நான் தானே“அவனாயிருந்தேன்”
Wednesday, March 31, 2010
மானிட்டர் பக்கங்கள்........31/03/10

புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் ஜானகி அம்மையார் கொஞ்ச நாள் கோட்டையில் கொலுவீற்றிருந்தார். எந்த புண்ணியவான் மதியூக மந்திரியோ கொடுத்த ஆலோசனையின் படி அம்மையார் கொண்டு வந்த புரட்சி திட்டம்தான் இலவச பல்பொடி திட்டம் . பல்பொடி கொடுத்தது பெரிய சங்கதியில்லை. கூடவே ஒரு பிட் நோட்டீஸ். அதை நான் படித்திருக்கிறேன். கைவசம் இப்போது இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை .
1. பல்பொடியை இடது உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .
2.வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு பற்களில் வைத்து ,மேலும்,கீழும் தேய்க்கவும்.
3. பின், வாயினுள் விரலை விட்டு மேல் மற்றும் கீழ் பற்களை சுத்தம் செய்யவும்.
4.நீரைக் கொண்டு நன்றாக கொப்பளித்து வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.
நல்லவேளை ! புண்ணியவதி ஆட்சி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு. இல்லைன்னா என்னவெல்லாம் கொடுத்திருப்பாங்களோ ?