Showing posts with label ரீமிக்ஸ். Show all posts
Showing posts with label ரீமிக்ஸ். Show all posts

Monday, May 31, 2010

நானும் வடை பெறுகிறேன்




அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி


அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..

விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...


அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

சிறுதாவூர் சீமாட்டி . .. நம் பிரச்சனை அப்புறம் .முதல்லில் இவனை தீர்த்துவோமா?

ஆமாம் ...அதுதான் முக்கியம்....ஸ்டார்ட் ம்யூசீக்..

கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...

அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது..தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான்..அப்பவே சொன்னென் ..ஆட்டோ வரும்னு..பார்த்தா புல் டோசர் ஏறினமாதிரி இருக்கு..


ரமேஷ் வைத்யா : ஏ அப்பா..யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா..எந்திரிச்சுருவான்..

லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...

அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....

முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன்..

கேபிள் :பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே..ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?

பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்..

ஜ்யோவ்ராம்...: இனியும் ஒவ்வொரு சனியும்

எண்ணெய் தேய்த்து குளியும்..

எழுதும் வாழ்நாள் முழுதும்,

அவர்தமை தொழுதும்

நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ்..

டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல ..இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன்..

வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?

ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிரார்...ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்..போய் சூடா பதிவு போடனுமில்லே. ..

Monday, May 10, 2010

கை அரிக்குதே...என்ன பண்றது....




ஏண்டா நீ கவுஜை எழுதலேன்னு யார் அழுதா என்று கேட்டார் ரமேஷ் வைத்யா. இனிமே கவிதைன்னு வாயை திறந்தே, பாருன்னு ஒரே டார்ச்சர். ஆனா அந்த கவிதை கொஞ்சம் பரவாயில்லைடா என்றார். பேருந்தில் காணவில்லை என்றொரு நோட்டிஸ் பார்த்து எழுதிய கவிதை.. மீண்டும்..

அம்மா எனக்கு கடைசியாக
வாங்கி தந்தது
அந்த ஆரஞ்சு கலர் சட்டை

வெளியில் போகும்போதெல்லாம்
அதைத்தான் போட்டுக்குவேன்
அம்மா செத்துபோன
அன்னிக்கு கூடத்தான்

அப்பா கூட சிலசமயம்
தோசை சாப்பிட போவேன்
சித்திக்கு தெரியாமல்

அந்த ஆரஞ்சு கலர் சட்டைக்கு
சாம்பார் ஊத்துப்பா...
அப்பாவை பெருமையாக
பார்த்துப்பேன்

இந்த சனியனை எங்கயாவது
ஒழிச்சுடுங்க

சித்தி திட்டும்போது..
ஆரஞ்சு சட்டையால்தான்
கண்ணை துடைத்துக்
கொண்டிருந்தேன்

பொருட்காட்சிக்கும்
அதே சட்டைதான்

அப்பாவுடன் எடுத்துக்கொண்ட
போட்டோவில்
சட்டை ஏனோ வெள்ளையாயிருந்தது

பேர் என்ன தம்பி?
ஆரஞ்சு கலர் சட்டைன்னு சொல்லுங்க

ஆரஞ்சு கலர் சட்டை பையன்
இங்கு இருக்கிறான்....

திரும்ப,திரும்ப
கேக்கும்போது எனக்கு
பெருமையாயிருந்தது

ஏனோஅப்பாதான்
வரவே இல்லை.....


ஒரு மொக்கை கவுஜை


அட்சய த்ருதியை
ஆண்மைக்குறைவு
இரட்டை இலையின் கதி
ஈசல் கனவுகள்
உன்மத்த காமம்
ஊத்த வாய் நாற்றம்
எத்தனுக்கு எத்தன்
ஏறு மயில் முருகன்
ஒரு முறை சொன்னால்
ஓட்டுக் களவாணி
ஒளவையார் தற்கொலை
ஓடுறா ஓசியில் குவார்ட்டரும்
பிரியாணியும் தர்றாங்களாம்

Monday, April 26, 2010

சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு


எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

எளக்கியம்


அய்யா இருக்காரா?

அட நீங்களா? உங்களுக்கு கடுதாசி எழுதிகிட்டிருக்காரு. இருங்க போனை கொடுக்கறேன்

அய்யா புள்ளையை எங்க காணலையே. பள்ளிக் கூடம் ஆரம்பிச்சப்ப வந்தது. அப்புறம் கண்லயே பார்க்கலை.

அப்படியா? வெயில் அதிகம்னு பீச்சுக்கு போறேன்னாரு. வந்தாக்க சொல்றேன்.

இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க

---------------------------------------------------------------------------

ஐந்து பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்.. மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)