Showing posts with label தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம். Show all posts
Showing posts with label தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம். Show all posts

Wednesday, August 5, 2009

கூட்டாஞ்சோறு-----05/08/09





வழக்கு ஒன்று:(கோர்டில் பணிபுரியும் நண்பர் சொன்னது)

கும்பகோணம் நீதிமன்றம்.திருட்டு குற்றம் சாட்டப்பட்டு ஒரு பெண் கூண்டில் நிறுத்தப்படுகிறாள்.பெரிதாக ஒன்றுமில்லை.பக்கத்து வீட்டில் ஒரு கால் பவுன் கம்மலை திருடிவிட்டாளாம்.முதன் முறை என்பதால் குறைந்த பட்சமாக ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

ஐயா,நான் என் தரப்பை சற்று விளக்க அனுமதி வேண்டும்.

நீதிபதி கனிவுடன் சொல் என்கிறார்.

ஐயா,என் புருஷன் ஒரு பெருங்குடிகாரன்.இன்னொருத்தியுடன் ஓடி விட்டான்.ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு வைத்தியம் செய்யவதற்காகவே திருட நேர்ந்தது.எனக்கு வேறு ஆதரவும் இல்லை.நான் சிறைக்கு சென்று விட்டால் என் மகனின் கதி.?ஆனால் இனி ஒரு போதும் நான் திருடமாட்டேன்.பார்த்து செய்யுங்கள்..

நிதிபதி யோசிக்கிறார்.அம்மா.குற்றத்தை நீயே ஒப்புக்கொண்டு விட்டாய்.விடுதலை செய்ய முடியாது.உன் பிள்ளையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.நீயின்றி அச்சிறுவனால் இருக்கவும் முடியாது என்று தெரிகிறது.ஆகவே உன் தூண்டுதலின் பெயரில் உன் மகன் வீட்டுக்குள் புகுந்து நகையை எடுத்து வந்து உன்னிடம் கொடுத்ததாக வழக்கை மாற்றி ,உன் மகனையும் உன்னுடன் சிறைக்கு அனுப்புகிறேன்.உள்ளே அவனுக்கு கல்விக்கும் ஏற்பாடு செய்யப்படும்.தண்டனை முடிந்து வந்ததும் உனக்கும் ஒரு வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------வழக்கு இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)

16 வயது இளம் பெண் ரம்யா.காதல் வந்து விட்டது.காதலனுக்கு வயது 19 தான்.வீட்டில் எதிர்ப்பு.ஓடி போகிறார்கள்.பெண்ணின் தாய் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுகிறார்.கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர் செய்ய போலிசுக்கு கட்டளையிடப்படுகிறது.அதற்குள் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.போலிஸ் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள்.

மைனர் பெண்ணை கடத்திய குற்றத்துக்கு காதலனுக்கு சிறையும்,பெண்ணை தாயுடன் அனுப்பவும் தீர்ப்பாகிறது.

ஐயா நான் என் தரப்பை உரைக்க அனுமதி வேண்டும்--ரம்யா

சொல்லம்மா?

ஐயா,என் தாய்க்கு நாலு புருஷன்கள்.முதல் புருஷனுக்கு பிறந்தவள் நான்.அவர் பிரிந்து விட்டார்.வரிசையாக தெருவுக்கு ஒன்றாக வைத்திருக்கிறாள்.ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் செய்வாள்.நாலாவது புருஷனுக்கு என்னை விற்று விட இருந்தாள்.அதனால்தான் மனசுக்கு பிடிச்சவனுடன் ஓடிப் போனேன்.

சரியம்மா..நீ மைனராச்சே..காப்பகத்துக்கு போகிறாயா?இரண்டு வருடம் கழித்து புருஷனுடன் சேர்ந்து கொள்.

ஐயா..எங்களுக்கு திருமணம் மட்டுமல்ல,எல்லாமும் ஆகிவிட்டது.இந்நிலையில் அவரை பிரிந்து ,இரண்டு வருடம் கழித்து வந்தால் அவர் என்னை ஏற்று கொள்வார் என்ற உத்தரவாதத்தை கோர்ட் எனக்கு அளிக்குமா?

நீதிபதி யோசிக்கிறார்..சரியம்மா..நீ புருஷனுடன் போகலாம்.அவனையும் விடுதலை செய்கிறேன்..புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனப்தை போலிசார் தொடர் கண்காணிப்பில் உறுதி செய்து கோர்ட்டில் தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது..

-------------------------------------------------------------------------------------------------

திருவள்ளுவர் பிறந்த மயிலாப்பூரில் அவருக்கு ஒரு கோயில்உண்டு.பூஜை,பிரசாதம்,திருக்குறள் ஓதல் என்று அமர்க்களப்பட்ட கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.பெங்களுர் தமிழ்சங்கத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் அள்ளி கொடுத்திருக்கிறார்..ஆனால் மயிலை திருவள்ளுவர் கோயில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது.அங்கிருக்கும் வள்ளுவர் சிலை அடையாளம் தெரியாத அளவுக்கு அழுக்கடைந்து இருக்கிறதாம்.

இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்..

-------------------------------------------------------------------------------------------------
ஓபாமா தேசத்தில் ஒப்பாரி அதிகமாயிருக்கிறது.வீடு இல்லாமல் பரதேசியாய் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம்.அதனால் குடிமக்களே ..எங்காவது சென்று வாருங்கள்..விமான சீட்டு இலவசம் என்று கூவிக் கொடுக்கிறார்களாம்.வழிச்செலவுக்கு காசும் உண்டாம்.

-------------------------------------------------------------------------------------------------

லண்டனில் ஒரு பெண் ,தன் திருமணத்துக்கு விருந்தாளிகள் தேவை என்று விளம்பரம் கொடுத்திருக்கிறாள்.தான் ஒரு அனாதை என்றும் தன் திருமணத்தை சிறப்பிக்க ஆட்கள்தேவை..விருந்தாளிகள் நேர்முகத்தேர்வின் மூலம் அனுமதிக்க படுவார்கள்..தகுந்த சன்மானமும் உண்டாம்..(கையில் காசில்லை..வயிற்றில் பெரும் பசி..நண்பன் ஆலோசனைப்படி”மொய்” கவரை வாங்கி சட்டைப்பையில் வெளியில் தெரியும் படி வைத்துக்கொள்டு ஒரு கல்யாணத்தில் ஓசி சோற்றை கும்மியடித்தது நினைவுக்கு வருகிறது)

-------------------------------------------------------------------------------------------------

ஒரு குறும்படம்..நண்பர் பொன்.சுதா இயக்கியது..

மெல்லிய,உற்சாகமான ஹம்மிங்குடன் ஒருத்தி குளிக்கிறாள்.பின் பீரோவை திறந்து ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறாள்..பின் மேக்கப்..பார்த்து,பார்த்து அலஙகரித்து கொள்கிறாள்..பின் நகை,கடிகாரம் என்று ரசனையுடன் அணிகிறாள்..ஒரு முறை ஆளுயர நிலைகண்ணாடி முன் அழகை ரசித்து கொள்கிறாள்.பின் மீண்டும் பீரோவை திறந்து அந்த கறுப்பு அங்கியை எடுத்து முழுவதும் மூடிக்கொண்டு வெளியேறுகிறாள்....

-------------------------------------------------------------------------------------------------