Tuesday, November 3, 2009

கவிதை பலாப்பட்டறை----பதிவர்கள் கும்மி---பாகம்- 2


ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு பட்டறை நடத்தப்பட்டது.அது பற்றிய ஒரு மொக்கை பார்வை..

உங்க எல்லாரையும் பஸ்சுல வரசொன்னதுக்கு காரணம் தெரியுமா?

(கோரசாக) தெரியாது சார்

நீங்க பஸ்சுல வாங்கின டிக்கெட் பின்னாடித்தான் பட்டறை முடிஞ்சவுடனே ஹைக்கூ கவிதை எழுதணும்

தண்டோரா : சார் ,நான் வித்தவுட்ல வந்தேனே.

ஆரம்பத்துலயே கிளப்பாதய்யா..நம்ம ஊர்சுற்றிகிட்ட நேத்து டிக்கெட் இருக்கும்.அதை வாங்கிக்க.இப்ப பொத்திகிட்டு உக்காரு.

அனுஜன்யா..என் பஸ் டிக்கெட் ரொம்ப பெரிசா இருக்கே..அதுவுமில்லாம அதுல ஏற்கனவே யாரோ எழுதியிருக்காங்க.

அப்படியா?நீங்க எந்த பஸ்சுல வந்தீங்க?

ஏர்பஸ்சுல

உக்காருங்க யூத்து.எப்படியும் நீங்க எழுதறது யாருக்கும் புரியபோறதில்லை

சாரி..கொஞ்சம் அக..சாரி நாழிகை ஆயிடுச்சு..வர்ற வழியில வண்டலூர்ல ஒருத்தர் கட்டுரை தரேன்னாரு..அதான்.நான் கவிதை படிச்சுட்டு கிளம்பவா?
ஜி.எச் ல ஒரு கவிஞர் மரணவாக்குமூலம் தரேன்னாரு..இதழ் ரெடியாகிட்டு இருக்குல்ல...

சரி வாசுங்க..சீ..சீ வாசீங்க

சிறைபட்ட காற்றை
உள்வாங்கி
வெளியிட்டது
வால்குழவை

மூச்சின் வெப்பம்
தணித்தது
உள்ளாடை
வியர்வையை

மேல்பாதியில்
வந்தமர்ந்த
யட்சிணி
கீழ்பாதியை
கேட்டாள்
நடுநிசி
கனவில்
நாயூறும்
போர்வையானேன்..

வாசு..இதுக்கு அர்த்தம் அடுத்த அகநாழிகை இதழில் வருமா?

அதற்குள் உண்மைத்தமிழன் யார் கிட்டயாவது ஏ-3 சைஸ் பேப்பர் இருக்கா?

எதுக்கு?

இல்லை.பஸ் டிக்கெட்டை அதுல ஒட்டி பெரிசாக்கத்தான்..

பேப்பர் அடியில ஒட்டி அதுல உங்க பேரையும்,நம்பரையும் எழுதுங்க.உக்காருங்க..

ஹைக்கூ எழுதறது எப்படின்னு இப்ப ஜ்யோவ்ராம் சொல்லுவார்.

எல்லாருக்கும்..ம்ம் எதுக்கு எல்லாருக்கும்..அந்த வார்த்தை தேவையே இல்லை..
வணக்கம்..ம்ம்ம் வணக்கம்ன்னு சொல்லி வேஸ்ட் பண்ணாம கூட இருக்கலாம்
கையை கூப்புகிறார்.

கேபிள்..குரு ஒரு சந்தேகம்...அந்த நல்ல மீன்கள் காமெடி டிராக் நீங்க எழுதினதா?

ஜ்யோவ் கையை குறுக்கால் வீசி வாயை பொத்துகிறார்.

ஆதி...குறுக்கால பேசாதீங்கன்னு சொல்றீங்க..சரியா?

ஜ்யோவ் தலை ஆட்டி விட்டு அமர்ந்து விடுகிறார்..

மைக்கை பிடிக்கும் பைத்தியக்காரன்..இதுவரை ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படின்னு சுந்தர் அருமையாக வகுப்பு எடுத்தார்..அடுத்து அண்ணன் உண்மைத்தமிழன் வகுப்பு எடுப்பார்..

அண்ணே நானா?

ஆமாம் ..நீங்கதான்..ஆனா ஒரு சின்ன திருத்தம் .நீங்க எப்படி எழுதக்கூடாதுன்னு எடுக்கப்போறீங்க..

அண்ணே மன்னிச்சுடுங்க..இப்ப நான் பிஸியா ஒரு கவிதை எழுதிகிட்டிருக்கேன்..அதானால நர்சிம்..

பாஸ் எப்பவும்
நான் கடைசிகேஸ்
இப்ப முதலில்
ரேஸ்..

பரவாயில்லை நர்சிம்..பேசுங்க

பேசறதா?அதுதாங்க நான் எழுதின ஹைக்கூ

கிளிஞ்சது..அடுத்தது யாருப்பா?

கேபிள் வருகிறார்...

வாராவாரம்
சினிமா வியாபாரம்
சிக்சருக்கு சித்து
குத்துக்கு
கொத்து..

ஜ்யோவ்ராம்...உங்க யாருக்கும் கவிதை இலக்கணமே தெரியலை..பா.ராஜாராம் நீங்க வாங்க

சுந்தரா..அன்பு மக்கா..சிவகங்கையில சாப்பிட்டமே மட்டன் சுக்கா..

அது சரி நீங்க எழுதுங்க

கன்ன சுருக்கிலிருந்து
காசு கொடுத்தாள்
கூன் கிழவி

முக்கு கடையில்
வாங்கின முறுக்கு
வாசம் அவள்
இடுப்பு சுருக்கு
பையில்..

அடுத்து மும்பையிலிருந்து நையாண்டி நைனா.

தியேட்டருக்கு
கேபிள்
குவார்ட்டருக்கு
லேபிள்
அவ்வ்வ்வ்வ்..அவ்வள்வுதாங்க..யாராவது எழுதுங்க..நா ஊருக்கு போய் எதிர் கவுஜ போடறேன்..எந்தந்த வகையிலன்னா

அனுஜன்யா பற்றியும்,பற்றாமலும்

எதுங்க?

காலையில டிபன் பத்தலை.அதை சொன்னேன்

நிகழ்வொன்று
நிகழும்போது
நிகழ்ந்தது
நிகழாதென்று
சொன்னது
நிகழ்ந்தது...

ஜ்யோவ்ராம்.. சுத்தம்.இதுக்கு நீங்க என்னை...எனக்கே புரியலை..ஒருவேளை நேசமித்ரனுக்கு புரியலாம்..ஆனா நல்லவேளை .அவர் இங்க வரலை

ஜ்யோவ் உங்க கவிதையையும் படிச்சிட்டீங்கன்னா,நாங்க இருக்கிற ரெண்டு சிண்டையும் பிச்சுகிட்டு..

இந்த கவிதை இப்ப எழுதினது இல்லை.இப்பன்னா ஒரு மூணு நிமிழத்துக்கு முன்னாடின்னு வச்சுக்கலாம்.

அய்யோ..அய்யோ

பாதி படித்த எமிலி டிக்கின்ஸ்
மீதமிருந்த எல்கான்ஸா ரம்
படித்த போதையும்
மீதிக்கு குடித்த களைப்பும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்த
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
வெளியில் சென்று
அரை போத்தல் எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூணை

இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.

அன்புள்ள
என் இனிய வலையுலக
தமிழ் பெருங்குடி மக்களே.
நான் எழுதிய இந்த ஹைக்கூ...
சாரி ஹைட்கூ
உங்களுக்கு பிடிக்கும்...

தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க

இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்

சிவராமன்..அண்ணனுக்கு மூடு கிளம்பிடுச்சு.தொடருங்க அண்ணே

ஏனிந்த
ஏணிக்கு
இப்படி
ஆசை

எத்தனை
படிகள்
தனக்கென
எண்ணி
பார்க்க

இறங்கியவனை
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறேன்
என்றானாம்

இறங்கும்போது
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறென்
என்றானாம்

கோணிக்கு வந்த
கோணல் ஆசை
தோனிக்கு ஒரு
மசால் தோசை

குனிந்த தலையை நிமிராமல் படித்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தால்

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-

-
-
-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-
-
--
-
-
-
--
-
-
-

-

-
-






..

44 comments:

iniyavan said...

சார்,

கலக்கிட்டீங்க.

நேற்றுக் கொஞ்சம் கோபமா இருந்தா மாதிரி இருந்துச்சு (நேற்று பதிவுல)

இன்னைக்கு ஜாலி மூடு போல

Raju said...

ஹைக்கூ..ஹைட்கூ சூப்பர்.

Cable சங்கர் said...

கலக்கல் தண்டோரா. பதிவில் வரும் கவிதைகள் எல்லாம் படு சூப்பர்.. அதிலும் அந்த எமிலி டிக்கின்ஸன்.. ப்ரெஞ்சு பூனை.. உ.த ஹைட் கூ..

ஹா..ஹ.அ..சிரித்து மாளல..

தராசு said...

//அன்புள்ள
என் இனிய வலையுலக
தமிழ் பெருங்குடி மக்களே.
நான் எழுதிய இந்த ஹைக்கூ...
சாரி ஹைட்கூ
உங்களுக்கு பிடிக்கும்...


தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க//

கலக்கல் தல,

அதுவும், நர்சிம், சுந்தர்ஜி, எல்லாரும் அசத்தறாய்ங்க.

கே.என்.சிவராமன் said...

ஒரு மார்க்கமாத்தான் கெளம்பியிருக்கீங்க... :-)

ஆனா, சுவாரஸ்யமா இருக்கு... :-(

இதே ஜாலி மூட்ல எப்பவும் இருங்க... அப்பதான் பிபி நார்மலா இருக்கும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நையாண்டி நைனா said...

எல்லாமே.... டாப்பு...
hahahahaha...

GHOST said...

[[இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.
அன்புள்ளஎன் இனிய வலையுலகதமிழ் பெருங்குடி மக்களே.நான் எழுதிய இந்த ஹைக்கூ...சாரி ஹைட்கூ உங்களுக்கு பிடிக்கும்...
தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க
இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்]]


சிரிப்பை அடக்க முடியலை, எல்லாமே சூப்பர்

Unknown said...

அடாவடி ஹைகூ:

மீண்டும் ஒரு முறை
போட்டுத்தள்ளப்பட்டது
ஹைக்கூ


அற்புதமான ஹைக்கூ:
(அர்த்தம் தெரிந்தால் சொல்லலாம்)

one last tomato
in the bowl
overripe,skin wrinkled

_____________________

the flag unwraps itself
from the flagpole
noon heat

பித்தன் said...

aallitteenga.... kalakkal....

butterfly Surya said...

hahahahaa.... super.. super..

ஒரு வார டென்ஷன் ஒரேடியா போயிடுச்சு...

நன்றி.. ஜீ.

butterfly Surya said...

ஒட்டும் போட்டாச்சு...

Ashok D said...

//அப்படியா?நீங்க எந்த பஸ்சுல வந்தீங்க?
ஏர்பஸ்சுல// :B

Ashok D said...

//முக்கு கடையில்
வாங்கின முறுக்கு
வாசம் அவள்
இடுப்பு சுருக்கு
பையில்..//
சித்தப்ஸ் வாசம் தூக்குது

Ashok D said...

//நிகழ்வொன்று
நிகழும்போது
நிகழ்ந்தது
நிகழாதென்று
சொன்னது
நிகழ்ந்தது...//

காலமற்ற காலத்தில்

ஹிஹிஹிஹி

Ashok D said...

மொத்தத்தில நிறைவான கலாச்சல் ஆழ்ந்த அவதானிப்பு.

ஹேமா said...

எல்லாரையும் இப்பிடிக் கலாய்க்கிறீங்களே.கவனம்.

Beski said...

செம கலக்கல் அண்ணே,.

நித்யன் said...

தலைவரே...

இன்னைக்குதான் வரிசையா உங்க கடைசி 4 பதிவ படிச்சேன்.

மிகச் சிறப்பு.

உடம்ப பாத்துக்குங்க. EVKS மேட்டர் மிக மிக காமெடி.

அன்பு நித்யன்

பின்னோக்கி said...

:))

டிக்கெட், நர்சிம், கேபிள் எல்லாம் சூப்பர்.

கடைசிவரை ஹைக்கூ எப்படி எழுதுறதுன்னே சொல்லித்தரலையே..

உண்மைத்தமிழன் said...

ஹி.. ஹி.. ஹி..

தண்டோராஜி.. நீங்க சொல்ற அளவுக்காச்சும் எனக்கு கவிதை வந்து தொலைஞ்சா நல்லாத்தான் இருக்கும்..!

என் கவிதையைக் கேட்டே அத்தனை பேரும் அப்பீட்டா..?

இப்பல்லாம் என் பதிவைப் படிச்சாலும் அதேதான் நடக்குது..!!!

கலையரசன் said...

அருமை உடன்பிறப்பே! கலக்குங்க..
http://kalakalkalai.blogspot.com/2009/11/blog-post.html

ஜெட்லி... said...

//முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்
//

செம காமெடி

vasu balaji said...

அண்ணே இவ்வளவு சிரிக்க வைக்கிறீங்க. அப்புறம் எப்புடி இரத்த அழுத்தம். டாக்டர் சரியில்லண்ணே=))

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

முடியல... கலக்கிட்டீங்க...

இன்னமும் என்னால சிரிப்ப கண்ட்ரோல் பன்ன முடியல... :))

கலக்கல் தல.. :))

க.பாலாசி said...

பா.ரா.எழுதியதாக எழுதிய கவிதையை ரசித்தேன்...,இடுகை முழுதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

மண்குதிரை said...

-:)

நர்சிம் said...

hahaha.. கலக்கல் தல.

இப்பவும் கடைசியா..இப்போதைக்கு கடைசி..

ரசித்தேன்

வெண்ணிற இரவுகள்....! said...

ஏனிந்த
ஏணிக்கு
இப்படி
ஆசை


எத்தனை
படிகள்
தனக்கென
எண்ணி
பார்க்க


இறங்கியவனை
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறேன்
என்றானாம்


இறங்கும்போது
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறென்
என்றானாம்//

அற்புதாமான வரிகள் ......................அனைத்து கவிதைகளும் நன்றாய் உள்ளது

Sanjai Gandhi said...

ஹிஹி.. கலக்கல்..

//தண்டோரா : சார் ,நான் வித்தவுட்ல வந்தேனே.//

இன்னுமா இவர் வித்தவுட்ல சுத்திட்டு இருக்கார். ட்ரஸ் போடுங்க மாம்ஸ்.

தமிழ் அமுதன் said...

குத்துங்க ..குத்துங்க ...கொக்கரக்கோ கும்மாங்கோன்னு..!
கலக்குது ....!

தமிழ் அமுதன் said...

///அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.///


அரை நாள் உண்ணா விரதமா ? எப்படி தலைவரே ???

கால சாப்பாட்டுக்கும் மத்தியான சாப்பாட்டுக்கும் இடைப்பட்ட நேரம்தானே அது...?

இது நேத்தைய பதிவுக்கான கமெண்டு அங்கேயும் ஒன்னு இங்கேயும் ஒன்னு ..!

பா.ராஜாராம் said...

அடப்பாவி மனுஷா...

மகா கல்யாணத்துக்கு சிவகங்கை வருவீல...வாடி..

:-))))

R.Gopi said...

தலீவா

வழக்கம் போலவே கலக்கல்....

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கல்........


தொடருங்கள் உங்கள் நையாண்டி தர்பாரை....

இன்றைய கவிதை said...

இன்றைய கவிதை - அண்ணே! உங்களுக்கு நகைச்சுவை
ரொம்ப நல்லா வருதண்ணே!

தண்டோரா - சும்மார்றா! நாலு தலையா?!

-கேயார்

Romeoboy said...

இது எல்லாம் யூத் பதிவர்கள் கலந்து கொண்டதா ?? செம கலக்கல் தல

பா.ராஜாராம் said...

மக்கா,அழைப்பிருக்கு,நம் தளத்தில்...ஒரு,refernce..

அகநாழிகை said...

தண்டோரா,

நல்லாத்தான் போயிட்டிருந்தது.
000
அரசியல்வாதிகளுக்கு பினாமி மாதிரி உங்களை கவிஞர்களுக்கு பினாமியா ஆக்கிட வேண்டியதுதான்.

மணிஜி said...

கருத்து சொன்ன் நண்பர்களுக்கு நன்றிகள்.பெருந்தன்மையோடு சகித்துக்கொண்ட கவிஞர்களுக்கு சிறப்பு நன்றிகள்

பிரபாகர் said...

எல்லாத்தையும் விட்டு ரொம்ப நல்லா காலாய்ச்சிருக்கீங்க....ரொம்ப அருமையா இருக்குங்கண்ணே....

பிரபாகர்.

Kumky said...

அகநாழிகை said...

தண்டோரா,

நல்லாத்தான் போயிட்டிருந்தது.
000
அரசியல்வாதிகளுக்கு பினாமி மாதிரி உங்களை கவிஞர்களுக்கு பினாமியா ஆக்கிட வேண்டியதுதான்...

அதேதான்.....சிப்பு சிப்பா வர்ரது...

Kumky said...

ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல....

சீரியஸா எழுதறதக்காட்டிலும் இப்படி கலாய்ப்பது எவ்வளவு கடினம் பார்த்தீர்களா...

ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல யோசிக்க வேண்டியதிருக்கிறது.

பெசொவி said...

உங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு முன்னால் தயாராக ஒரு வயிற்றுவலி நிவாரணி வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே!

அருமை, வாழ்த்துகள்!

cheena (சீனா) said...

அன்பின் தண்டோரா

படித்தேன் ரசிச்சேன் - நல்லாவே இருக்கு கற்ப்னை

நல்வாழ்த்துகள்