Monday, November 9, 2009

மானிட்டர் பக்கங்கள்........09/11/09


ஆதித்யா நகைச்சுவை சானலின் பிரோமோ விளம்பரம்..காட்டில்”சிரிப்பொலி”கேட்டு காட்டுவாசி
ஒரு கூடாரத்தில் உள்ளே பார்க்க,சன் டிடிஹெச்சில் ஆதித்யா ஓடிக்கொண்டிருக்கும்..சிரிப்பொலியை இவர்கள் இப்படி மட்டம் தட்ட அவர்கள் சேனலில் கேண்டிட் கேமரா நிகழ்சி.இரண்டு பேர் ஒரு செய்திதாளை விரித்தபடி தெருவில் போவோரை கலாய்ப்பார்கள்..ஒருவர் அந்த பேப்பரை கடைசியில் கிழித்து விடுவார்.குளோஸ் அப்பில் அது எந்த பேப்பர் என்று பார்த்தேன்..அது தமிழ் முரசு(மொக்கையா பத்த வைக்கிறியே பரட்டை)

தலைவரோட இரக்க மனசுக்கு அளவே இல்லை.மானாட,மார்பாடவில் பங்கு பெறும் நடிகை ரம்பாவை ஒருவர் கொடுத்த கடனை கேட்டு தொந்தரவு செய்தாராம்.ஒரு மாநில முதல்வர் அதற்கு பஞ்சாயத்து செய்திருக்கிறார்.விஷயம் கேள்விபட்டவுடன் தானாட விட்டாலும் ,சதையாடியதை போல் கடன் கொடுத்தவரை அழைத்து..மானாட..மயிலாடவில் வரும் சம்பாத்தியத்தில்தான் ரம்பாவின் பொழைப்பு நடக்கிறது.அதனால் கொடுக்கறப்போ,கொடுக்கறதை வாங்கி கொள்ளுங்கள் என்றாராம்..இது எப்படி இருக்கு..

முல்லை பெரியார் பிரச்சனையில் மல்லுவின் கை ஓங்கியிருப்பது தெரிந்த செய்தி.லேட்டஸ்ட் தகவல்...புதிய அணை கட்ட தமிழகத்திலிருந்துதான் ஆற்று மண் போகிறதாம்...அப்புறம் தலைவர் இந்த பிரச்சனைக்காக மத்திய அரசுக்கு 18 கடிதங்கள் எழுதியிருக்கிறாராம்..வேறென்ன செய்வார்..நேரில் போய் டேரா போட்டு தீர்க்க கூடிய பிரச்சனையா இது?அட என்ன..இன்னும் ஏழு கடிதங்கள் எழுதி 25 ஆக்கி விட்டால்”கடிதத்தில் வெள்ளி...முல்லைப்பெரியாருக்கு கொள்ளீ” என்று வாலி வாலை ஆட்டிக்கொண்டே கவிதை பாட ஏதுவாயிருக்கும்.

நான் சலவை கணக்கு கொடுத்தால் கூட பிரசுரிக்கவும்,ப்டிக்கவும் ஆள் இருக்கிறது என்று ஒரு முறை சுஜாதா சொன்னார்..நம் பதிவுலக சூப்பர் ஸ்டார் கேபிள் அப்படித்தான் ஆகி கொண்டு வருகிறார்..பதிவர் சந்திப்பு ஒத்தி வைப்புக்கு 1500 ஹிட்ஸ் வருகிறது.எவ்வளவு பெரிய பிரச்சனையின்னா கூட சிரிச்சு கிட்டேதான் அதையும் சொல்பவர்....விரைவில் புத்தகங்கள் எழுதப்போகிறார்..வாழ்த்துக்கள் கேபிள்...என்ன..இப்ப அவருக்கும் நெகட்டிவ் ஓட்டு விழ ஆரம்பிச்சுடுச்சு...யார் குத்தறாங்கன்னு கண்டு பிடிச்சு சொல்பவங்களுக்கு சமீபத்தில் வந்திருக்கும் பத்திரிக்கைகு ஆயுள் சந்தா(அதன் ஆயூளுக்கு) கட்டப்படும்..

புகழ் பெற்ற கட்​டட கலை​ஞர் மறைந்த லாரி பேக்​கர். காந்​தி​ய​டி​க​ளைப் பார்​ப​தற்​கென்றே மும்பை வந்​த​வர். அவ​ரைப் பார்த்​த​தும் தனது கட்​டட கலை​யின் மூலம் எளி​மை​யான வீடு​களை இந்​திய ஏழை மக்​க​ளுக்கு கட்​டித்​தர வேண்​டும் என்று நினைத்​தார். தமி​ழ​கத்​தி​லும் அவர் பார்த்த கிராம வீடு​க​ளேல்​லாம் அவ​ருக்கு அதி​ச​ய​மா​கவே தோன்​றி​யது. அவர் பார்த்த அரு​மை​யான வீடு​கள்,​ வாழ்​வ​தற்கு
வச​தி​யா​க​வும்,​ காற்​றோட்​ட​மிக்​க​தா​க​வும்,​ குழந்​தை​கள் ஓடி விளை​யா​டு​வ​தற்கு ஏற்​ற​படி விசா​ல​மா​ன​தா​க​வும் இருந்​தன. அத்​த​கைய வீடு​களை தஞ்சை மண்​ட​லத்​தின்(எங்கூருப்பா)கோனே​ரி​ரா​ஜ​பு​ரம்,​ திப்​பி​ரா​ஜ​பு​ரம்,​ உடை​யா​ளூர்,​ விச​லூர்,​ செம்​மங்​குடி,​ தேதி​யூர்,​ விஷ்​ணு​பு​ரம் போன்ற பல கிரா​மங்​க​ளில் இன்றும் காண​லாம். ​
இவ்​வீ​டு​கள் இரு​ம​ருங்​கும் வரி​சை​யாக ஒவ்​வொன்​றாக தாய் சுவ​ரின் வழி​யாக
இணைக்​கப்​பட்​டுள்ளது வீட்​டின் முதல் பகுதி ஆளோடி என்று அழைக்​கப்​ப​டு​கி​றது. குழந்​தை​கள் இந்த ஆளோ​டி​யில் ஓடி விளை​யா​டு​வதை இரு​ம​ருங்​கும் காண​லாம். தலை சாய்​மா​னத்​து​டன்​கூ​டிய வீட்​டுத் திண்​ணை​கள் வீட்​டின் இரு​பு​ற​மும் அமைந்து வீட்டை இரு​பா​க​மா​கப் பிரிக்​கின்​றன.

​திண்​ணை​யில் வரும் சுதந்​தி​ர​மான காற்​றில் புழுக்​கம் இல்​லா​மல் நிம்​ம​தி​யாக படுத்​து​றங்க முடி​கி​றது. அக்​கா​லத்​தில் வீதி​யின் வழியே செல்​லும் வழிப்​போக்​கர்​கள் இப்​ப​டிப்​பட்ட வீட்டு திண்​ணை​யில் படுத்​து​றங்​கு​வர். உறங்​கு​வோ​ருக்கு குடிக்​கத் தண்​ணீர் ஒரு சொம்​பி​லும் அவ்​வீட்​டில் உள்​ளோர் வைத்​து​விட்டு செல்​வது ஒரு வழக்​க​மாக இருந்​தது. ​
வீட்​டின் மீது வேயப்​பட்ட செங்​கல் ஓடு​கள் கோடை​கா​லத்​தில் குளிர்ச்​சி​யா​க​வும்,​ குளிர்​கா​லங்​க​ளில் சற்று வெப்​ப​மா​க​வும் இருக்​கும்​ப​டி​யாக அமைக்​கப்​ப​டு​கி​றது. வீட்​டின் நடை​பாதை,​ அதனை அடுத்து ரேழி,​ அதன் பிறகு தாழ்​வா​ரம்,​ பின்​னர் நடு​வில் பெரிய முற்​றம். முற்​றம் மேலே தடுப்பு எது​வும் இல்​லா​மல் வானத்தை தரி​சிக்​க​லாம். ​

​பக​லில் சூரிய வெளிச்​ச​மும் இர​வில் நில​வின் ஒளி​யை​யும் வீட்​டின் முற்​றம் கொண்​டு​வ​ரு​கி​றது. இர​வில் தனி​மை​யின் ஏகாந்​தத்தை தனது வெளி​யின் மூலம் வீட்​டுக்​குக் கொண்​டு​வ​ரு​கி​றது அது.
அந் நாளில் மிள​காய் வத்​தல்,​ வட​கம்,​ உளுந்து பயிர்​கள் போன்​ற​வற்றை சூரிய ஒளி வீசும் முற்​றத்​தில் காய வைப்​பார்​கள். மாதந்​தோ​றும் தோன்​றும் நட்​சத்​தி​ரங்​களை இவர்​க​ளால் முற்​றத்தி​லி​ருந்தே பார்த்​துக் காலக் கணக்​கு​க​ளைச் சொல்​லி​வி​ட​மு​டி​கி​றது. சித்​திரை நட்​சத்​தி​ரத்தை சித்​திரை மாதத்​தி​லும்,​ விசாக நட்​சத்​தி​ரத்தை வைகாசி மாதத்​தி​லும் பார்த்து மாதத்தை கணக்​கி​டும் வழக்​கம் இன்​றும் இவர்​க​ளி​டம் உள்​ளது. முற்​றத்​தின் வழியே வரும் சூரிய ஒளி​யும் காற்​றும்,​ வீட்டை விசா​லா​மாக்கி காற்​றோட்​டத்தை வீட்​டின் சகல பகு​தி​க​ளுக்​கும் கொண்டு செல்​கி​றது. தாழ்​வா​ரத்​தைத் தாண்டி நடுக்​கூ​டத்​தில் ஊஞ்​சல் ஒன்று தொங்கி ஆடு​வது தனி அழகு..என் நண்பரின் வீடு ஊரில் இருக்கிறது...பழமை மாறாமல் புதுப்பித்திருக்கிறார்..ஒரு மழை நாளில் முற்றத்தில் அமர்ந்து இருவரும் சோமபானம் அருந்தினோம்...அக்னிநட்சத்திரம் படத்தில் வருவது போல்....பரம சுகம்

சென்னையில் கதையே வேறு..காங்கீரிட் காடுகளில் வசிக்கும் நாகரீக(??) மிருகம்தானே நாம்...

நெற்பயிருக்கு,வாழைக்கும் பிராண்டியும்,ரம்மும் ஊற்றுகிறார்களாம்.பயிர் நன்கு செழித்து வளர்வதோடு,உடலுக்கும் நல்லதாம்..சோத்துல போதையிருக்குமான்னு தெரியலை

34 comments:

நாகா said...

//?அட என்ன..இன்னும் ஏழு கடிதங்கள் எழுதி 25 ஆக்கி விட்டால்”கடிதத்தில் வெள்ளி...முல்லைப்பெரியாருக்கு கொள்ளீ”//

நெத்தியடி.. அங்க என்ன நடிகையவா கட்டறாங்க இவுரு நேருல போகறதுக்கு, அணையத்தான கட்டறாங்க அதுக்கு கடிதமே போதும்.

Cable சங்கர் said...

//அதனால் கொடுக்கறப்போ,கொடுக்கறதை வாங்கி கொள்ளுங்கள் என்றாராம்..இது எப்படி இருக்கு//

அதானே பார்த்தேன் எங்க தங்கையிலிருந்து கொடுத்து காப்பாத்திட்டாரோன்னு..:) நடந்திட்டாலும்.


முல்லை பெரியார் மேட்டர் சூப்பர்.. விரைவில் வெள்ளிவிழா கடிதம் எழுத கடவதாக.. தொண்டர்கள் எல்லோரும் போஸ்டர் அடிக்க காத்திட்டிருக்காங்க..

Cable சங்கர் said...

//சமீபத்தில் வந்திருக்கும் பத்திரிக்கைகு ஆயுள் சந்தா(அதன் ஆயூளுக்கு) கட்டப்படும்.. //

ஏன் இன்னும் ரெண்டு மைனஸ் ஓட்டு எக்ஸ்ட்ராவா விழுறதுக்கா..???:)

Cable சங்கர் said...

அப்புறம் அந்த மித்தத்தில் சரக்கடித்த மேட்ட்ர்.. ஆஹா.. ம்ம்ம்.. அதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும்..ம்ஹும்.

R.Gopi said...

//ஒரு மாநில முதல்வர் அதற்கு பஞ்சாயத்து செய்திருக்கிறார்.விஷயம் கேள்விபட்டவுடன் தானாட விட்டாலும் ,சதையாடியதை போல் கடன் கொடுத்தவரை அழைத்து..மானாட..மயிலாடவில் வரும் சம்பாத்தியத்தில்தான் ரம்பாவின் பொழைப்பு நடக்கிறது.அதனால் கொடுக்கறப்போ,கொடுக்கறதை வாங்கி கொள்ளுங்கள் என்றாராம்..இது எப்படி இருக்கு..//

அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பு...

//இன்னும் ஏழு கடிதங்கள் எழுதி 25 ஆக்கி விட்டால்”கடிதத்தில் வெள்ளி...முல்லைப்பெரியாருக்கு கொள்ளீ” என்று வாலி வாலை ஆட்டிக்கொண்டே கவிதை பாட ஏதுவாயிருக்கும்.//

ஹா...ஹா... படிக்கும் விஷயம் ம‌ன‌சுக்கு வ‌லித்தாலும், இதுதான் உண்மை... ஏற்க‌ன‌வே வாலி ப‌ல‌ நேர‌த்தில் "த‌ல‌"க்கு இதுபோன்ற‌ ஜ‌ல்லி அடித்திருக்கிறார்... உதார‌ண‌த்திற்கு ஒன்று...

"த‌லைவா உன் வ‌ருகை
க‌ண்ட‌தும் கூப்புவேன் என் இருகை
நீ ர‌ஜினியை விட‌ பாப்புல‌ர் ஃபிக‌ர்
உன்னை க‌ண்ட‌தும் ஏறுது என் ஷூக‌ர்.."

இன்னா த‌ல‌.... 5/6 பாரா ச‌ர‌க்கு அடிக்காம‌யே ஓவ‌ரா ஆடியிருக்கு.... ப‌டிச்சா ஒண்ணுமே பிரிய‌லியே த‌ல‌...

//நெற்பயிருக்கு,வாழைக்கும் பிராண்டியும்,ரம்மும் ஊற்றுகிறார்களாம்.பயிர் நன்கு செழித்து வளர்வதோடு,உடலுக்கும் நல்லதாம்..சோத்துல போதையிருக்குமான்னு தெரியலை//

அதான‌... இன்னாடா இன்னும் மேட்ட‌ருக்கு வ‌ர‌லியேன்னு பார்த்தேன்... க‌ல‌க்க‌ல் த‌லீவா....

ஜெட்லி... said...

//சென்னையில் கதையே வேறு..காங்கீரிட் காடுகளில் வசிக்கும் நாகரீக(??) மிருகம்தானே நாம்...//

கரெக்ட் ஜி

ரமேஷ் வைத்யா said...

//பதிவர் சந்திப்பு ஒத்தி வைப்புக்கு 1500 ஹிட்ஸ் வருகிறது.//

Stomach burning...

palukkiRavan pattaNi thuNRaan...

vasu balaji said...

அண்ணே லாரி பேக்கர் ஊடு சென்னைல கட்டினா ராத்திரியோட ராத்திரியா செங்கல உருவிட்டு போய்டுவானுங்கண்ணே=))

பிரபாகர் said...

அண்ணே பாத்துண்ணே, ஆளுங்கட்சிக்கு எதிராவே எழுதிட்டு வர்றீங்க.... ஜாக்கிரதை.

எல்லா விஷயமும் டாப் டக்கர்.

பிரபாகர்.

இளவட்டம் said...

///அட என்ன..இன்னும் ஏழு கடிதங்கள் எழுதி 25 ஆக்கி விட்டால்”கடிதத்தில் வெள்ளி...முல்லைப்பெரியாருக்கு கொள்ளீ” என்று வாலி வாலை ஆட்டிக்கொண்டே கவிதை பாட ஏதுவாயிருக்கும்.///

செம நக்கல் சார்.

மணிஜி said...

யாருப்பா மைனஸ் குத்தினது?விலாசம் கொடுங்க..தலைவலியை வீடு தேடி அனுப்பறேன்

அகநாழிகை said...

ம்ம்.. நடத்துங்க..

சுடுதண்ணி said...

மிகவும் ரசித்துப்படித்தேன். அருமை :)

Raju said...

அவருதான் நாலு நாள்ல மறுவாழ்வு அளிச்சவராச்சே..!

Thamira said...

யோவ்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் நடுவுல கோடோ, புள்ளியோ வச்சு பிரிச்சி எழுதுங்கன்னு எத்தினி வாட்டி சொல்றது. சும்மா ஸ்கூல் புள்ளைங்க எழுதுனா மாதிரி சொய்ய்ங்க்னு போனா என்ன அர்த்தம்.?

கலையரசன் said...

//காங்கீரிட் காடுகளில் வசிக்கும் நாகரீக(??) மிருகம்தானே நாம்...//

எங்கிருந்து புடிக்கிறிங்க இந்த மாதிரி வாக்கியங்களை? அருமையண்ணே!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

///அட என்ன..இன்னும் ஏழு கடிதங்கள் எழுதி 25 ஆக்கி விட்டால்”கடிதத்தில் வெள்ளி...முல்லைப்பெரியாருக்கு கொள்ளீ” என்று வாலி வாலை ஆட்டிக்கொண்டே கவிதை பாட ஏதுவாயிருக்கும்.///

25 லயாவது பிரச்சினை தீர்ந்துடுமா என்ன?

பித்தன் said...

அருமையண்ணே!!

iniyavan said...

தலைவரே,

இந்த வாரம் அரசியல் கொஞ்சம் தூக்கலா இருக்கு.

Beski said...

நல்லாயிருக்கு...

ஆதி அண்னனுக்கு ரிப்பீட்டு...

Beski said...

கேபிள்ஜி கமண்டு பப்ளிஸ் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசிக்கிறது நல்லது. அவரோட மொத கமண்டு மெதுவாத்தான் புரிஞ்சது...

Ashok D said...

தஞ்சை வீடுகளை பற்றி சொல்லும் போது ஒர் ஏக்கம் தழுவிச் சென்றது.

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
ஏன் இன்னும் ரெண்டு மைனஸ் ஓட்டு எக்ஸ்ட்ராவா விழுறதுக்கா..???:)]]]

இல்லையே.. நான் ஒரு மைனஸ் ஓட்டுதான போட்டேன்.. என்கூட தோஸ்த்து இன்னொருத்தன் இருக்கானா..? யார்ரா அவன்..?

இராகவன் நைஜிரியா said...

பாசிடிவ் ஓட்டு போட்டாசுங்க...

மானிட்டர் பக்கங்கள் எப்போதும் போல் அருமை.

முரளிகண்ணன் said...

நல்ல கிக். டெம்பிளேட் புது ஏசி பார் போல் இருக்கு.

பா.ராஜாராம் said...

அனியாயம் பண்றீங்கங்க.எவ்வளவு ஊர் ப்ரியம்!இது இருக்கணும் மக்கா.கேபில்ஜி,சந்தோசமா இருக்கு.வாங்க..

Unknown said...

இந்த ஆதித்யா சேனல் மேட்டர் நானும் நோட் பண்ணினேன்.

அண்ணா “பதினெட்டு” கிராமமா?எழுத்தாளர் மெளனியும் உங்க ஊர்தாண்ணா.

வாலி மேட்டர் சூப்பர்.

//ஆளோடி என்று அழைக்​கப்​ப​டு​கி​றது//
திஜா ஒரு கதையில் விவரிப்பார்.
திண்ணை,கொட்டடி,ரேழி,நடை,மச்சு,குதிர்,ஒண்ணாம் தாழ்வாரம்
...ரெண்டாம் தாழ்வாரம்...இப்படி போய் கொல்லையில் முடியும்.

Cable சங்கர் said...

யோவ்.. இப்ப உனக்கு சந்தோஷமா.. ஏதோ ஒண்ணு ரெண்டு மைனஸ் குத்திட்டிருந்தவங்க.. ஆறு ஏழுன்னு ஒரே நாள்ல ஏறிப்போச்சு.. ஹய்ய்யா.. நானும் ரவுடியாட்டேன்.

மர தமிழன் said...

முல்லை பெரியாரா? முல்லை பெரியாறா? சன் நியூஸ்லயே மாத்தி மாத்தி போடறாப்பல இருக்கு. பாண்டிச்சேரிய, புதுச்சேரி ன்னு சொல்லி அன்னைக்கே அல்வா கொடுத்தமாதிரி ஏதேனும் சதி நடக்குதோ? ஒரே குஷ்டமப்பா சீ கஷ்டமப்பா..

நேசமித்ரன் said...

//November 9, 2009 9:37 AM

ரமேஷ் வைத்யா said...
//பதிவர் சந்திப்பு ஒத்தி வைப்புக்கு 1500 ஹிட்ஸ் வருகிறது.//

Stomach burning...

palukkiRavan pattaNi thuNRaan...//

அண்ணே ஊர்லதான் இருக்கீங்களா?

+ வோட்டு போட்டாச்சு

:)

வால்பையன் said...

//சமீபத்தில் வந்திருக்கும் பத்திரிக்கைகு ஆயுள் சந்தா(அதன் ஆயூளுக்கு) கட்டப்படும்.//

இந்த நக்கல் தான் உங்ககிட்ட புடிச்சதே!

மணிஜி said...

நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றியும்,வந்தனமும்...

சென்ஷி said...

//Cable Sankar said...

யோவ்.. இப்ப உனக்கு சந்தோஷமா.. ஏதோ ஒண்ணு ரெண்டு மைனஸ் குத்திட்டிருந்தவங்க.. ஆறு ஏழுன்னு ஒரே நாள்ல ஏறிப்போச்சு.. ஹய்ய்யா.. நானும் ரவுடியாட்டேன்.///

ஹா ஹா ஹா :))))))))))))

Sanjai Gandhi said...

கேபிளாருக்கு வாழ்த்துகள்.. நெகட்டிவ் ஓட்டுகளால் யார் ’வருகை’யையும் தடுக்க முடியாது..