Monday, November 2, 2009

மானிட்டர் பக்கங்கள்........02/11/09
நீ‌ங்க‌ள் இளமையானவராக இரு‌க்க இதை‌ச் சா‌ப்‌பிடு‌ங்கள‌், இதை‌க் குடியு‌ங்க‌ள் எ‌ன்றெ‌ல்லா‌ம் சொ‌ன்ன கால‌ம் மலையே‌றி ‌வி‌ட்டது.

வள‌ர்‌ந்து வரு‌ம் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப வச‌திகளை ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள தயாராக இரு‌ப்‌பீ‌ர்களானா‌ல் ‌நீ‌ங்க‌ள் இளமையாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்தமா‌ம்.

அத‌ன்படி, ‌பிளா‌க்குக‌ள், பே‌ஸ்பு‌க், ட்வீட்டர் போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஆ‌ர்வமுட‌ன் ப‌ங்கெடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.

அத‌ன்படி ‌நீ‌ங்க‌ள் பல‌ரு‌ம் அ‌றி‌ந்தவராக மாறுவது‌ உ‌ங்க‌ள் உ‌ள்ள‌த்‌தி‌ற்கு ஒரு பு‌த்துண‌ர்‌‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம். இ‌ந்த ஆ‌ர்வ‌த்தை தொட‌ர்‌ந்து வெ‌ளி‌க்கா‌ட்டினால‌் எ‌ன்று‌ம் இளமையாக வாழு‌ம் ரக‌சிய‌த்தை ‌நீ‌ங்க‌ளாக‌ச் சொ‌ன்னா‌ல்தான உ‌ண்டு.(கேபிள்,அனுஜன்யா மற்றும் பலர் போல் யூத்தாய் இருக்கலாம்,

ம‌ற்றவ‌ர்களி‌ன் இடுகைகளை படித்து பின்னூட்டமும் மறக்காமல் ஓட்டும் போடுங்கள்.(சில சமயம் ட்வீட்டரில் தொடங்கும் அழைப்புகள் பிக்னிக்கில் உல்லாசமாக தொடங்கி கிளீனிக்கில் சங்கடமாய் முடிந்து விடும் ஆபத்தும் உண்டு)

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை

நம் முதல்வரின் கனவில்(இது தேவையா?)அடிக்கடி வரும் காயிதேமில்லத்,பெரியார்,அண்ணா ஆகியோர் தமிழகத்தை காப்பாற்ற உங்களை விட்டால் நாதியில்லை என்று சத்தியம் வாங்கிகொண்டதாக கூறுவார்.அதுவும் சத்யம் ராமலிங்கராஜீவின் வாக்குமூலம் போலத்தான்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ம‌த்‌திய அமை‌ச்சரை க‌ண்டி‌த்து தி.மு.க மதுரையில் கூட்டம் நடத்துவது போல ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை எதிர்த்து அவர்களுக்கு எதிராக காங்கிரசால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா என்று ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் கேள்வி எழுப்பியு‌ள்ளா‌ர்.

தமிழக காங்கிரஸ் ‌‌க‌ட்‌சியின் முன்னாள் தலைவ‌ர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட‌த்த‌ி‌ல் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுகை‌யி‌ல், கட்சித் தலைவர் சோனியா காந்தி நினைத்தால் பிரதமராக ஆகியிருக்கலாம். தன் மகன் ராகுல், மகள் பிரியங்கா மற்றும் மருமகனையும் அமைச்சராக்கியிருக்கலாம்.

ஆனால் தன் குடும்பத்திற்கு எந்த பதவியும் வேண்டாம் என்று இருக்கிறார். ஆனால் காஷ்மீர், பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் தந்தை முதல்வராகவும், அவரது வாரிசுகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஒரு கூட்டத்தில் நான் பேசினேன்.

நான் பேசியது வடமாநிலத்தைப் பற்றித்தான், ஆனால் இங்குள்ளவர்களுக்கு கோபம் வருகிறது. உடனே என்னைப் பற்றி டெல்லிக்கு புகா‌ர் செ‌‌ய்‌கிறார்கள். நான் என்ன கோபாலபுரத்தைப் பற்றியா பேசினேன். தங்களை கேட்காமல் பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் கேட்கிறார். இங்கு நாம் ஆதரவு கொடுத்தது முதல்வருக்கு மட்டும்தான். ஆனால் அதற்கு பிறகு துணை, இணை என்று போட்டார்களே அது நம்மிடம் கேட்டா செய்தார்கள்?

நம் ஆதரவில் இங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுபபோகமாக இருக்கிறார்கள். நாம் ஏக்கத்துடன் கைகட்டி அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு ஏழ்மையில் வாடும் காங்கிரஸ்காரர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு கூட நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இது தான் நம்முடைய இன்றைய நிலை.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக மக்கள் பாதிக்க கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அக்கறை உண்டு. அங்கு சர்வே எடுக்க மட்டும்தான் மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷம் அனுமதி கொடுத்துள்ளார். உடனே மத்திய அமைச்சரைக் கண்டித்து மதுரையில் கண்டன கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து காங்கிரசால் கண்டன கூட்டம் நடத்த முடியாதா?

அரசர்கள் காலத்தில்தான் புலவர்கள் கவிபாடி அரசரிடம் வெகுமதி பெற்றுச் செல்வார்கள். அதேபோன்று தமிழ்நாட்டில் தாளம் போடுவதற்கென்றே சில புலவர்கள் கூட்டம் உள்ளது. இந்த புலவர்கள் கூட்டம் ஜால்ரா கூட்டமாக மாறி புகழ்கிறது. இதையும் மணிக்கணக்கில் சிலர் கேட்டு ரசிக்கின்றனர் எ‌ன்று இள‌ங்கோவ‌ன் பே‌சினா‌ர்.சபாஷ்..இளங்கோவன் சோற்றில் நிறைய உப்பு போட்டுக்கொள்கிறார்.(கூட்டத்தை தலைவர் ரத்து செய்துவிட்டார்.சப்பை காரணம் சொல்லி..இல்லைன்னா அங்கன ஆப்பு விழுமடி..இப்போது மடி ஏந்தும் இடத்தில் இருப்பதால்,பதுங்கி பாயப்போகிறார்களாம்)

பெண்சிங்கம் படத்திற்கு வசனம் எழுதியதற்கு ரூ 50 லட்சம் கொடுத்தார்களாம்.மேலும் 12 லட்சம் போட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக்கு கொடுத்தாராம்.அதைதான் ஏற்கனவே 25லட்சம் ரூபாய் செலவில் பத்திரிக்கைளில் விளம்பரம் கொடுத்தார்.ஒரு பத்திரிக்கை குறிப்பில் இலவசமாக வரவேண்டியதை காசு கொடுத்து வரவழைத்துக்கொண்ட பெருமை நம் மு.கவிற்கு மட்டுமே சேரும்

ஆமாம்..இவர் வசனம் எழுத அவ்வளவு கிடைக்குமா?நீங்கள் வேறு.இவர் மட்டும் எழுதவில்லை என்று சொல்லட்டும்.ஒரு கோடி கொடுக்க ஆளிருக்கிறது.


முன்னாள் நிரந்தர முதல்வர் ஜெயின் துணிச்சல் அசாத்தியம்தான்.தலைமை கழகத்துக்கு 45 நிமிட பயணமாக வந்தவர்”அடுத்த ஆட்சி” நமதுதான்.மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்று பேசினாராம்.ஆச்சி மசாலா விநியோக உரிமை எடுத்தால்தான் உண்டு.ஓட்டு போடும் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களை குறி வைத்து திமுக ஏற்கனவே தன் பிரசார வேலைகளை துவக்கி விட்டனர்.ரூ 20,000 கோடி அளவிற்கு மேலும் இலவசங்கள் அணிவகுக்கப்போகின்றனவாம்.அதில் 12,000 கோடி மத்திய அரசின் நிதி(கணக்கு,வழங்கல் துறையில் உயர் அதிகாரியான நண்பர் ஒருவருடன் சமீபத்தில் உரையாட நேர்ந்தது.அவர் சொன்ன புள்ளி விவரங்கள்தான்)

உலக செம்மொழி மாநாட்டில் நம் கலை உலகத்தினர் தமிழ் காப்பியங்களை நாடகவடிவில் கொடுக்க இருக்கிறார்களாம்.கண்ணகி வேஷத்துக்கு போட்டி பலமாக இருக்கும் என்று பேச்சு.முதல் சாய்ஸ் புவனேஸ்வரியா?கோவலன் வேஷத்திற்கு அல்மோஸ்ட் எல்லா நாயகர்களும் பொருத்தமாயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் கிட்டதட்ட எல்லோருமே”உன் குழந்தையும்,என் குழந்தையும் நம் குழந்தையோடு விளையாடுகிறார்கள் கேஸ்தானே

தமிழின் புகழுக்கு காரணமாய் விஞ்சி நிற்பது”கலைஞரா...இல்லை கருணாநிதியா..இல்லை முத்தமிழ் அறிஞரா? என்ற பட்டி(கள்)மன்றம் நிச்சயம் உண்டு.தலைமை:ஆல் இந்தியா ஐஸ் வண்டி விற்போர் சங்கத்தலைவர் திரு.ஜெகத்ரட்சகன்.மற்றும் அனைத்து கவி ஜாலராக்களின் கூப்பாடும் உண்டு.கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பும்.. பாவம் டமில்மொளி.முடிந்தவரை வாள்க..அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.

டிஸ்கி: சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் இந்த மானிட்டரில் அது பற்றிய செய்தி எதுவும் இல்லை.தலைப்பில் இருக்கும் மானிட்டரை கம்ப்யூட்டர் மானிட்டர் என்று பொருள் கொள்க..

33 comments:

shortfilmindia.com said...

மானிட்டர் சரக்கடிக்காமலேயே ஜிவ்வென இருக்கிறது..

இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே.. நாங்க எல்லாம்யூத்துன்னு..

கேபிள் சங்கர்

Raju said...

நான் கூட ட்விட்டர், பேஸ்புக் இதெல்லாம் பார்த்தவுடனே இது தொழில்நுட்பப் பதிவோன்னு நெனைச்சுட்டேன்.அண்ணே, மதுரை வந்தா எந்த லாட்ஜுல ரூம் போடுவீங்க..? நல்ல ஆட்டோ பார்க்கிங் வசதி இருக்கணும். ஆமா சொல்லிப்புட்டேன்.

உண்மைத்தமிழன் said...

[[[(சில் சமயம் ட்வீட்டரில் தொடங்கும் அழைப்புகள் பிக்னிக்கில் உல்லாசமாக தொடங்கி கிளினிக்கில் சங்கடமாய் முடிந்து விடும் ஆபத்தும் உண்டு)]]]

ஒத்துக்குறோம்..

உண்மைத்தமிழன் said...

[[[இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே.. நாங்க எல்லாம் யூத்துன்னு..
கேபிள் சங்கர்]]]

இந்தாளு ஏன் போற இடமெல்லாம் இல்லாத ஒண்ணை இருக்குற மாதிரி சீன் காட்டுக்கிட்டே இருக்காப்புல..! ஏதாவது மேனியாவா?

GHOST said...

[[[(சில் சமயம் ட்வீட்டரில் தொடங்கும் அழைப்புகள் பிக்னிக்கில் உல்லாசமாக தொடங்கி கிளினிக்கில் சங்கடமாய் முடிந்து விடும் ஆபத்தும் உண்டு)]]]

உண்மைதான், மானிட்டர் ஜிவ்வென இருக்கிறது..

Cable சங்கர் said...

/இந்தாளு ஏன் போற இடமெல்லாம் இல்லாத ஒண்ணை இருக்குற மாதிரி சீன் காட்டுக்கிட்டே இருக்காப்புல..! ஏதாவது மேனியாவா?
//

நீங்களே சொல்லிட்டுதிரியும்போது நாங்கெல்லாம் யூத்துதான்.. நான் என்ன செய்யச் சொல்வேன்னு தெரியுமில்லை..:)

Cable சங்கர் said...

இல்லாட்டி உ.த உங்களுக்கு ஒரு கேள்வி.. நீங்க யூத்துனு நிருபிக்கிறதுக்கு..?

இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லுல்ங்க..

“அப்பம்மா விளையாட்ட விளையாடி பார்ப்போமா செல்லம்..” இது முதல் டெஸ்ட் பாஸ் பண்றீங்களான்னு பாப்போம்..:)

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar November 2, 2009 10:59 AM

/இந்தாளு ஏன் போற இடமெல்லாம் இல்லாத ஒண்ணை இருக்குற மாதிரி சீன் காட்டுக்கிட்டே இருக்காப்புல..! ஏதாவது மேனியாவா?//

நீங்களே சொல்லிட்டு திரியும்போது நாங்கெல்லாம் யூத்துதான்.. நான் என்ன செய்யச் சொல்வேன்னு தெரியுமில்லை..:)]]]

நீ சொல்றதையெல்லாம் எந்த வயசுக்காரனும் செய்வானாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...

இல்லாட்டி உ.த உங்களுக்கு ஒரு கேள்வி.. நீங்க யூத்துனு நிருபிக்கிறதுக்கு..? இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லுல்ங்க..
“அப்பம்மா விளையாட்ட விளையாடி பார்ப்போமா செல்லம்..” இது முதல் டெஸ்ட் பாஸ் பண்றீங்களான்னு பாப்போம்..:)]]]

இந்தக் கர்மத்தையெல்லாம் கட்டியாண்டாதான் யூத்துன்னு நீ நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லீங்கண்ணே..!

மணிஜி said...

உண்மைத்தமிழன் அண்ணே.நீங்க பாபா பிளாக்‌ஷீப் பாடி காமிச்சு கேபிளை விட உங்களுக்கு வயசு கம்மின்னு நிரூபிச்சுடுங்க..

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
உண்மைத்தமிழன் அண்ணே நீங்க பாபா பிளாக்‌ஷீப் பாடி காமிச்சு கேபிளை விட உங்களுக்கு வயசு கம்மின்னு நிரூபிச்சுடுங்க..]]]

பா.. பா.. பிளாக் ஷீப்பெல்லாம் எனக்குத் தெரியாதுங்கண்ணே..!

எங்கம்மா எனக்கு நிலவைக் காட்டி

நிலா நிலா ஓடி வா..
நில்லாமல் ஓடி வா..
மலை மீது ஏறி வா..
மல்லிகைப்பூ கொண்டு வா..

அப்படீன்னு சொல்லிக் கொடுத்ததுதான் ஞாபகத்துல இருக்கு..!

தராசு said...

கலக்கல்.

ஆமா, அது யாரு அது கேபிள் அண்ணன் யூத்தான்னு கேள்வி கேக்கறது. அப்புறம் அகில உலக யூத் சங்கத்துல இருந்து ஆட்டோ வரும், ஆமா, சொல்லிபுட்டேன்.

vasu balaji said...

டமிளினத் தலைவர்தான் யூத்து. உண்ணாவிரதத்துக்கு கட்டில்ல உக்காந்த ஆளு திரைப்பட விழாவில் மணிக்கணக்கில் ரசிச்சி நிரூபிச்சப்புறமும் யூத்து யாருன்னு போட்டி போடுறது சரியில்லை.

மணிஜி said...

/மல்லிகைப்பூ கொண்டு வா//

அப்படியே கொஞ்சம் அல்வாவும்

VISA said...

sema PUNCH!!!!!

R.Gopi said...

//பெண்சிங்கம் படத்திற்கு வசனம் எழுதியதற்கு ரூ 50 லட்சம் கொடுத்தார்களாம்.மேலும் 12 லட்சம் போட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக்கு கொடுத்தாராம்.அதைதான் ஏற்கனவே 25லட்சம் ரூபாய் செலவில் பத்திரிக்கைளில் விளம்பரம் கொடுத்தார்.ஒரு பத்திரிக்கை குறிப்பில் இலவசமாக வரவேண்டியதை காசு கொடுத்து வரவழைத்துக்கொண்ட பெருமை நம் மு.கவிற்கு மட்டுமே சேரும்//

அட்ரா அட்ரா அட்ரா ச‌க்கை... அட்ராட்ரா நாக்க‌ முக்க‌ நாக்க‌ மு.க‌...

//..இவர் வசனம் எழுத அவ்வளவு கிடைக்குமா?நீங்கள் வேறு.இவர் மட்டும் எழுதவில்லை என்று சொல்லட்டும்.ஒரு கோடி கொடுக்க ஆளிருக்கிறது. //

ஹா...ஹா...ஹா... இதுதான் உண்மை...

//ஆல் இந்தியா ஐஸ் வண்டி விற்போர் சங்கத்தலைவர் திரு.ஜெகத்ரட்சகன்.மற்றும் அனைத்து கவி ஜாலராக்களின் கூப்பாடும் உண்டு.கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பும்.. பாவம் டமில்மொளி.முடிந்தவரை வாள்க..//

த‌லீவா... க‌ல‌க்க‌ல்.... ஜ‌க‌த் அடிச்ச‌ ஜ‌ல்லியை ம‌ற‌க்க‌ முடியுமா... கூட‌வே ந‌ம்ம‌ இள‌மை க‌வி வாலியும்... "த‌லைவா உன் வ‌ருகை, க‌ண்ட‌தும் கூப்புவேன் என் இரு கை..." இது வாலியோட‌ ஜ‌ல்லிக்கு ஒரு சாம்பிள்...

//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் இந்த மானிட்டரில் அது பற்றிய செய்தி எதுவும் இல்லை.//

ந‌ல்ல‌ விஷ‌யம் தானே த‌லைவா... இப்போ உட‌ம்பு எப்ப‌டி இருக்கு?? ப‌ர‌வாயில்லையா?

பித்தன் said...

மப்பு இல்லாததால சூடு அதிகமோ....

ஜெட்லி... said...

செம ஹாட்

நையாண்டி நைனா said...

அடப்பாவமே... இங்கே ஒரு குத்தாட்டம் போடலாம்னு பார்த்தா...

பெருசுங்க ரவுசு... (சாரி 'டங்கு' சிலிப் ஆகிருச்சி...)

யூத்துங்க ஏற்கனவே போட்டுட்டாங்க போலே இருக்கே...

வவ்வால் said...

ஈ.வி.கே.எஸ்சு.எளங்கோ ஒரு துப்புக்கெட்ட தொடப்பக்கட்டை,அந்தாளு சொன்னதை வைத்து இம்மாம் பெரிய ஜல்லியா :))

ஆனாலும் கலிஞர் பத்தி சொன்னதுலாம் மெய்யாலுமே டாப்பு!மனுசன் பாடையில போற வரிக்கும் பதவியும் பாராட்டும் இல்லாம இருக்க மாட்டாரு!

காங்கிரசு தேசியக்கட்சினு தான் பேரு எல்லா மானிலத்திலயும் அங்குள்ள அரசியலுக்கு ஏத்த போல செயல் பட்டு தேசியத்த காத்துல விடுவாங்க.

உ.ம்:ஆந்திரா:அலமாட்டி, பாலாறு பிரச்சினை, கர்நாடகா:,காவேரி பிரச்சினை,மகா-கர்நாடகா எல்லை பிரச்சினை,கேரளா-முல்லைப்பெரியார் பிரச்சினை

ஆனால் எளங்கோவன் மாதிரி ஆளுங்க மட்டும் தமிழ் நாட்டுல நாங்க தேசிய கட்சினு சொல்லிக்கிட்டு சொந்த மண்ணுக்கு துரோகம் செய்வாங்க.சமீபத்தில் ஜெய்ராம் ரமேஷ் ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததால் தமிழ் நாட்டுக்கு குடியா மூழ்கிடுச்சுனு கேட்டுள்ளார் எளங்கோ!

நாடாளுமன்ற தேர்தலில் ஆப்படிச்சும் அடங்கலை, இனிமே கேராளாவில் போட்டியிருவாரோ!

Ashok D said...

உ.த. கேபிளை கலாய்ப்பதும்
தண்டோரா அங்கிள் கலைஞர கலாய்ப்பதும் நிறுத்தனும்.
உடனே நிறுத்தனும்.

நர்சிம் said...

பதிவின் நீளம் தெரியாவண்ணம் பகடியில் ஆழ்த்தியது நடை.அருமை.

அத்திரி said...

//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //

அதான் சென்னையில் வந்த மழையும் நின்னுடுச்சோ

Ashok D said...

//சரக்கடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால் //

வந்தது சோதனை வர்ற saturday evening :)

அகநாழிகை said...

மணிஜி,
ரசித்தேன். நன்றாக இருந்தது.

- பொன்.வாசுதேவன்

க.பாலாசி said...

அண்ணே....சரியான சாடல்....தமிழனுக்கா இல்லை நான்தான் தமிழன் என்று மார்தட்டுபவருக்கா என்றுதான் தெரியவில்லை.

விநாயக முருகன் said...

மணிஜி,

அந்த நோட்டீஸ்ல வரிகள் தப்பா வந்திருக்கு.

நாலே நாளில் தமிழ் ஈழம் வாங்கி தந்த தானைத்தலைவர்னு வந்திருக்கனும்

மணிஜி said...

நன்றி கேபிள்
நன்றி ராஜீ
நன்றி உண்மைத்தமிழன்
நன்றிசஹானா
நன்றி வானம்பாடிகள்
நன்றி ஜெட்லி
நன்றி நர்சிம்
நன்றி பாலாசி
நன்றி வவ்வால்
நன்றி தராசு
நன்றி விசா
நன்றி தம்பி கோபி
நன்றி பித்தன்
நன்றி நக்கலிஸ்ட் நைனா
நன்றி வாசு
நன்றி அஷோக்
நன்றி அத்திரி
நன்றி விநாயகமுருகன்

butterfly Surya said...

கலக்கல்.. ரசித்தேன்..

அமுதா கிருஷ்ணா said...

மன்னர்கள் சாதாரண மக்களின் நிலைமையை உணரவே மாட்டார்களா....

Unknown said...

பொறி பறக்குதுங்க..

தமிழ் அமுதன் said...

///அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.///


அரை நாள் உண்ணா விரதமா ? எப்படி தலைவரே ???

கால சாப்பாட்டுக்கும் மத்தியான சாப்பாட்டுக்கும் இடைப்பட்ட நேரம்தானே அது...?

பெசொவி said...

//அரை நாள் உண்ணாவிரதம் மூலம் ஐம்பதாண்டு போரையே நிறுத்திய தமிழினத்தலைவர்,நான்கே நட்களில் அவர்களுக்கு விடுதலையும் வாங்கி தந்து நகைச்சுவை சித்திரம் தீட்டியிருக்கிறார்.
//
இது குறித்து என் கருத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

http://blog.nilavan.net/2009/10/blog-post_19.html