அழகு என்பதற்கு சரியான இலக்கணம் எது? அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு நிரோஷா மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. மூஞ்சியா அது ? ஓட்டு மாங்காயை குறுக்கே வெட்டினாற் போல் என்பான்.. சற்றே இடது புறம் வகிடெடுத்திருப்பாள் அவள்..(உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவளுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) ஏழைஜாதி என்ற படத்தின் விஜய்காந்தை பார்த்தால் கேவலமாக இருப்பார்.. ஆனால் ஷத்திரியனில் ? மேன்லி & மெஜஸ்டிக்...ஏன்? இந்தியனில் சந்துரு பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் சேனாபதி.. அது அழகு..
சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்“ சிறந்த இயக்குனர்”விருது பெற்ற பாண்டிராஜின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன் முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது. அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.
அழகான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.. உதயம், அஸ்தமனம்,வயல் வரப்பு, நீர் நிலைகள்,பெண்கள்,கொலுசுக்கால்,பால் மழலை இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறாள். அவள் வீட்டில் ஒரு நாள் கழித்து விட்டு வா..
மூதாட்டியின் எளிமையான வீடு.. நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை.. அவளுக்கு எழுபது வயதிருக்கலாம். தோலெல்லாம் சுருங்கி, காதில் பெரிய ஓட்டை. கறையேறிய பற்கள்.. குழறும் பேச்சு என விகாரமாக இருந்தாள்.. இவளிடம் என்ன அழகியலை காண்பது என்று அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்..
மறுநாள் பொழுது விடிந்தது.. ஊருக்கு கிளம்பினேன்.. அந்த காலையில் கிராமம் அழகாய்த்தான் இருந்தது... மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் கூட அழகாய் ஈர்த்தன.. ஒரு மரத்தடி. அந்த கிழவியை பார்த்தேன்.. அவளா இவள்? என்னால் நம்பமுடியவில்லை.. குவிந்திருந்த களி மண்ணை ஒற்றை ஆளாய் மிதித்து கொண்டிருந்தாள்.. ராகத்துடன் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடல்.. செவிக்கினிமை... அவள் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் ஒரு நிழல் ஓவியம் போல் இருந்தாள்..
மண்ணை குமித்து, பதமாக பிணைந்து, சுழலும் அச்சின் மீது வைத்து, குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவள் கைகள் ஆதுரத்துடன் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட பேரழகியலை காண முடியாது என்றே தோன்றியது.. அவளை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட அழகானவன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்..(ஏதோ ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்ல கேட்ட ஒரு அயல் தேசத்து கவிதை..நினைவிலிருந்து கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்...
அழகு என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது..
ஈரோடு கதிர்
ரம்யா
அப்துல்லா
ராமலட்சுமி
டிஸ்கி : முன்பு எழுதிய ஒரு கவிதை :
அழகாய் இருக்கிறாய்!!
பயமாய் இருக்கிறது...
அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
மகளை பார்த்து!!
டிஸ்கி : 2
இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்....ஆஹா....எவ்வளவு அழகு!!
42 comments:
நான் அழகாயிட்டேனே..:)
/*இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்....ஆஹா....எவ்வளவு அழகு!!*/
தலைவரை பற்றி பதிவு போட்டு, போட்டு தலைவர் மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டீங்களே...
அஸ்கு புஸ்கு செல்லாது....
ஒழுங்கா... ஒரு ஓட்டுக்கு ரூபாய் முந்நூறை அஞ்சலில் அனுப்பி விடவும்.
அன்பின் தண்டோரா
அருமை அருமை - இடுகை அருமை
சொற்கள் தேர்ந்தெடுத்த சொற்களாய் இடுகையில் பளிச்சிடுகின்றன
அழகு என்பது அவரவரின் ரசனையைப் பொறுத்தது
அது ஒரு ஒப்பு நோக்கும் சொல்
விருது வாங்கும் பாண்டிய ராஜ் பார்க்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறார் - ஆனால் அவரின் திறமை பேசுகிறது அங்கு.
முதியவள் - விவரித்த விதம் நன்று
அழகியல் பேரழகியலாக மாறிய விதம் நன்று
டிஸ்கி - மகள் அழகாய் இருந்தால் பயம் தானாக வரும்
நான் அழகாய் மறுமொழி இட்டிருக்கிறேனா
நல்வாழ்த்துகள் தண்டோரா
இப்போதெல்லாம் இம்மாதிரி
தொடர்பதிவுகளுக்கு ,
இத்யாதி..இத்யாதியென
பின்னூட்டம் போடத்
தோன்றாமல், என்னையறியாமல்
என் கைகள், தானாய் கண்டக்டர்
ஆகி விடுகின்றன..ஆகவே..
ரை..ரை..ரைட் ரைட்டு போலாம்.
எப்பூடி..?
அண்ணே இதுக்கு நான் தொடர்பதிவுவேற எழுதனுமாண்ணே?!??
அழகுனா அழகாயிருக்குறதுதான் :)
// Cable Sankar said...
நான் அழகாயிட்டேனே..:)
//
சரிங்க யூத்து, நம்பிட்டோம்.
அசத்தல், அழகு இடுகை. தொடர அழைத்தவர்கள் சரியான தேர்வு.
அழகா இருக்கு.
அழகைப் பற்றிச் சொல்லியிருக்கும் விதம் வெகு அழகு. இத்தனை அழகாய் எனக்கு சொல்ல முடியுமா எனத் தெரியாவிட்டாலும் அழைத்திருக்கும் அன்பின் அழகை ரசித்து, அழகாய் நன்றி சொல்லிக் கொண்டு, அழகிய பின்னூட்டத்துடன் நிறுத்திவிடாமல் மிக அழகாய் ஓட்டும் போட்டு விட்டிருக்கிறேன் தமிழ் மணத்திலும் தமிழிஷிலும்:)!
நன்றி தண்டோரா!
அழகுப்பதிவு.
அழகபத்தி அழகா எழுதியிருக்கீங்க..
இப்போ நிரோஷா பாத்தாலும் சூப்பர்தான் ;)
எனக்கும் நிரோஷா பிடிக்கும்.
அழகு தான் ஜி...
அழகு அழகு!
/cheena (சீனா) said...
அன்பின் தண்டோரா
அருமை அருமை - இடுகை அருமை
சொற்கள் தேர்ந்தெடுத்த சொற்களாய் இடுகையில் பளிச்சிடுகின்றன
அழகு என்பது அவரவரின் ரசனையைப் பொறுத்தது
அது ஒரு ஒப்பு நோக்கும் சொல்
விருது வாங்கும் பாண்டிய ராஜ் பார்க்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறார் - ஆனால் அவரின் திறமை பேசுகிறது அங்கு.
முதியவள் - விவரித்த விதம் நன்று
அழகியல் பேரழகியலாக மாறிய விதம் நன்று
டிஸ்கி - மகள் அழகாய் இருந்தால் பயம் தானாக வரும்
நான் அழகாய் மறுமொழி இட்டிருக்கிறேனா
நல்வாழ்த்துகள் தண்டோரா//
நன்றி சீனா ஐயா.. தங்கள் முதல்(?) வருகைக்கும்,கருத்துக்களுக்கும், இணைந்ததற்கும்...
அழகு என்பது இடம் பொருத்து காலம் பொருத்து பார்வை பொருத்து பார்ப்பவர்கள் பொருத்து மாறுபடக்கூடியது... அழகாய் விளக்கினிர்கள்...
beutiful!
a இல்லாம நல்லா எழுதியிருக்கிங்கன்னு சித்தப்பு என்னா அழகா சொல்லியிருக்கு பாருங்க..
என்ன சித்தப்ஸு ரெய்டுங்களா.. ஹிஹிஹி
அழ்ழ்ழ்ழ்ழ்ழகு !!!
me the 20th
21
அண்ணே... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்...
வாங்க வந்து பாருங்க...
நீங்கதான்ணா அழகு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
/// அவளை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட அழகானவன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்.///
ரசித்தேன் இந்த வரிகளை....! அருமை தலைவரே..!
அழகை நல்லா ஆராதிக்றீங்க...
நானும் முயற்சிக்கிறேன்
எனக்கு உங்களின் இந்தப் பதிவு மிகப் பிடித்திருந்தது தண்டோரா. குறிப்பாக சொல்லிய நடை. கடைசிக் கவிதையும் நன்று.
azhai rasitha ezhuthazhagai rasikkiren
அழகைப் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். அழகைப்பற்றிய எனது கருத்துக்களும் இவையே...மகிழ்ச்சி.
பதிவு அழகு தொடர அழைத்தவர்களும் அழகாக எழுதுபவர்கள்....
beautifully written..!
அழகான பதிவு
//D.R.Ashok said...
இப்போ நிரோஷா பாத்தாலும் சூப்பர்தான் ;)//
அய்யய்யோ அண்ணே உங்களுக்கு என்ன ஆச்சி
//Cable Sankar said...
நான் அழகாயிட்டேனே..:)
//
அப்டியா சொல்லவேயில்லை
@ அத்திரி
உண்மைதான் அத்திர், ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடி பார்த்ததேன்.. full sleeves சுடில ht ஒரு 4 1/2 அடி தான் இருப்பாங்க.. really அழகான பெண் தான்ப்பா அவங்க ம்ம்ம்ம்ம்...
நல்ல இடுகை.
அருமை அருமை
அழகு பற்றி அழகான பதிவு
அழகு ஒரு relative term. உங்கள் கண்ணுக்கு அழகாய்த் தெரிவது, எனக்கு அசிங்கமாய்த் தெரியலாம். நம் மனத்தை ஈர்த்து, ஒரு நிமிடம் நம்மை மறக்க வைப்பது எதுவோ, அதுவே நமக்கு அழகு என்பது என்னுடைய (அழகான!!) கருத்து.
பைத்தியக்காரன் said...
நீங்கதான்ணா அழகு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்..
ஒரே போடா போட்டுட்டார்...
இதுக்கு மேல என்ன சொல்றது?
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்
இடுகை அருமை
அழகு இந்த வார்த்தை வைத்து பிரமாதமா பலவற்றை மிகவும் ரசனையுடன் விவரித்திருக்கீர்கள். எழுத்தின் அழகை அழகாய் ரசித்தேன், கவிதையும் அழகோ அழகு.
என்னை அழைத்திருக்கிறீர்கள், நீங்கள் எழுதியதுபோல் எனக்கு எழுத வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் உங்கள் அன்பான அழைப்பை ஏற்று முயற்ச்சிக்கின்றேன். அழைப்புக்கு மிக்க நன்றி!!
ரம்யா.ரொம்பதான் தன்னடக்கம் உங்களுக்கு..எழுதுங்கள்..அழகாய்த்தான் இருக்கும்
அருமையான கட்டுரை!
Post a Comment