Wednesday, November 11, 2009

ரெயின்...ரெயின்...கோ..அவே.....


வறுமையோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த காலம் அது.ஒரு சிறிய வீட்டில் குடி இருந்தோம். நான்,என் மனைவி,என் 6 வயது மகள்.. 150 சதுர அடி ஹால் ..அதில் சமைலறையாக ஒரு சிறிய தடுப்பு. அவ்வளவுதான்...வாசல் முன் புறம் சிமெண்ட் பூசப்படாமல் மண் தரையாகவே இருந்தது. மழைக் காலங்களில் மிக அவஸ்தையாக இருக்கும்..வெளியில் இருந்து உள்ளே வந்தால் ஹால் பூராவும் சேறாகி விடும்..வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சொல்லி அலுத்து போயிற்று.. பொறுமை மீறி ஒரு நாள் இரவு கேட்கப் போய் பெரிய சண்டை. (ஓல்டு மங்க் -ஓவர் டங்க்)

மறு நாள் விடிந்தது.. எழுந்திருக்கும் போதே குற்ற உணர்ச்சியில் கூனிப் போனேன். அவ்வளவு அவரை திட்டியிருக்கிறேன்..

சரி வேற வீடுதான் பார்க்கணும்னு வெளியில் வந்தால் ஹவுஸ் ஓனர் நின்று கொண்டிருந்தார்.... இரண்டு ஆட்கள் மண்ணை கொத்திக் கொண்டிருந்தனர்..அவர் முகத்தை நான் தவிர்த்து திரும்பும் போது மணி என்று கூப்பிட்டு மன்னிச்சுக்கப்பா.. என் தப்புதான் ..நா சொன்ன மாதிரி இதை முன்னயே செஞ்சு கொடுத்திருக்கணும்.. இன்னைக்கு முடிச்சிருவாங்க. சொல்லி விட்டு போயே விட்டார்....என்னை அவமானமும் குற்ற உணர்வும் அரித்தது..சே...நாம் அவருக்கு முன்னாடி ஒரு சின்ன சாரி சொல்லியிருக்கலாம்...மனைவி சொன்னாள்..இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க.....

பின் குறிப்பு.... 1.. அன்று இரவு நானும் அவரும் சேர்ந்து குடித்தோம்..

பின் குறிப்பு.....2... மற்றொரு மழை நாள்.. வாசலில் கையில் அதே oldmonk. பக்கத்தில் மனைவியும் மகளும்..ஆனந்தமாக இருந்தது..ஆனால் என் மகள் மட்டும் எதையோ பறி கொடுத்தது போல் இருக்க.. காரணம் கேட்டேன்.. எல்லாம் உன்னாலதான்பா.. முன்னே எல்லாம் மழை பேஞ்சா ஜாலியா இருக்கும். சேத்துல தொப்புனு குதிச்சு விளையாடுவேன்.. நம்ம வீட்டு வாசல்ல இதோ இங்க உக்கார்ந்து கிட்டே கப்பல் விடுவேன்.. இப்ப பாரு தண்ணி நிக்காம ஓடியேப் போயிடுது..நீ அன்னைக்கு சண்டை போடாம இருந்திருக்கலாம்..

சரி..மேட்டருக்கு வருவோம்.. மேகங்கள் கூடியதால் இரண்டு முறை கலைந்து போன சந்திப்பு மீண்டும்.. இந்த முறை மழை வந்தாலும், வராவிட்டாலும் நண்பர்கள் தவறாமல் வந்துவிடுங்கள்..

. சந்திப்பு நாள் : 14/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30

இடம் : Discovery Book Palace

No. 6. Mahaveer Complex

1st Floor, Munusamy salai,

West K.K. Nagar, Chennai-78

Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

சிறப்பு விருந்தினர்: திரு.சதீஷ்குமார்..பேராண்மை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்

மேலும் விபரங்களுக்கு

அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010

பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
முரளிகண்ணன் :9444884964


34 comments:

Cable சங்கர் said...

வர, வர பதிவர் சந்திப்புக்கு கூட உக்காந்து யோசிச்சி எழுத ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. ஓகே.. ரைட்.. வ்ந்திர்றேன்.

எறும்பு said...

அண்ணே என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்கனே...

சந்திப்புக்கு மட்டும் சாந்திக்கு (தாகம்) இல்ல......

மண்குதிரை said...

mela ulla ezhuththu nalla irukku

pathivar santhippukku en vaazhththukkal

இரும்புத்திரை said...

ஐயோ மறுபடியும் பேராண்மையா

T.V.ராதாகிருஷ்ணன் said...

present sir

க.பாலாசி said...

//இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க.....//

கவுந்தடிச்சாலே பேசமுடியாதுல்ல. சரி விடுங்க....இந்த முறை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

என் வீடு ரொம்பப் பக்கத்துல இருக்கு. நடந்து வந்தால்கூட ரெண்டு நிமிஷத்துல வந்திரலாம்..!

அதுனால...


வருவதற்கு முயற்சி செய்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
வர, வர பதிவர் சந்திப்புக்கு கூட உக்காந்து யோசிச்சி எழுத ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. ஓகே.. ரைட்.. வ்ந்திர்றேன்.]]]

வர.. வர.. பின்னூட்டம் போடக்கூட உக்காந்து யோசிச்சு போட ஆரம்பிச்சிட்டாங்கப்பா..!

ஓகே.. ரைட்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!

Unknown said...

//சந்திப்புக்குப் பின் தாகசாந்தியும் உண்டு..//

சூடா இஞ்சி டீ கிடைக்குமா?

Raju said...

உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..!

vasu balaji said...

/பின் குறிப்பு.... 1.. அன்று இரவு நானும் அவரும் சேர்ந்து குடித்தோம்../

ரொம்பதான் லொல்லு.

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

iniyavan said...

தலைவரே,

தண்ணியடிக்கறத பத்தி பேசுறதுனா உங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.........?

Unknown said...

மீள் பதிவா தலைவரே..

பதிவர் சந்திப்பு இந்தமுறையாவது நடக்க வாழ்த்துகள்.. :-)

Ashok D said...

//இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க//
:)

Beski said...

//ஓல்டு மங்க் -ஓவர் டங்க்//

அப்போ மேன்சன் ஹவுஸ் - மேக்கிங் ரவுசா?

கலையரசன் said...

ரெண்டு ரவுண்.. சாரி! ரெண்டு நிகழ்ச்சிக்கும், ஏத்த மாதிரி.. இடுகையோ தலைப்பு சூப்பர்!!

வாழ்த்துக்கள்... சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் நடக்கபோற சந்திப்புக்கு!!

நர்சிம் said...

//Cable Sankar said...
வர, வர பதிவர் சந்திப்புக்கு கூட உக்காந்து யோசிச்சி எழுத ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. ஓகே.. ரைட்.. வ்ந்திர்றேன்.
//

அஃதே..ஆஜர்.

பிரபாகர் said...

ஊருக்கு வரும்போது ஒரு சந்திப்பு வையுங்கண்ணா....

பிரபாகர்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

//(ஓல்டு மங்க் -ஓவர் டங்க்)//

அட.... இது நல்லா மேட்ச் ஆகுதே

Kumky said...

12,13 சென்னைதான் அண்ணாச்சி.
14 சவுகரியப்படுமாவென தெரியவில்லை.

சரி நமக்கென்ன..பதிவர்கள்தான் அது குறித்து கவலைப்படவேண்டும்.

மழை ஓய்ந்துவிட்டது....பேச்சுக்கள் ஓயாமல் தொடருங்கள்...வாழ்த்துக்கள்.

பித்தன் said...

நடக்கட்டும் அடுத்த முறை நான் இருப்பேன்...... இப்போ நான் ஜெயிலில்.....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நடத்துங்க.வாழ்த்துகள்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழைப்பே கிக்கோட.... அழைப்பிதழை ஆரம்பித்தவிதம் தண்டோரா "டச்" !!! (தண்டோ....ரா.. ..??)

அத்திரி said...

போன வாரம் பதிவர் சந்திப்புக்கு வரவே டேமேஜர் கையில கால்ல விழுந்து முதல்ஷிப்ட் வாங்கினேன்.....அது போயே போச்சு........இந்த வாரமும் கேட்டா......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முரளிகண்ணன் said...

அழைப்பு தண்டோரா டச்

இன்றைய கவிதை said...

உங்கள் பதிவு என்னுடைய பால்யத்தை
நினைக்க வைத்தது! நன்றி!!

அது சரி, பெங்களூர்ல எப்ப நடத்துவீங்க?!!

-கேயார்

butterfly Surya said...

உள்ளேன் அய்யா..... (ஊர்ல தான் இருக்கேன்)

நேசமித்ரன். said...

சமூகத்துக்கு வணக்கம் !

வாழ்த்து சொல்ர தூரத்துல இருக்குரதுனால வாழ்த்து மட்டும் சொல்லிக்கிரேன் .

நல்லபடியா நடக்கட்டும் எல்லாம் !

-நேசமித்ரன்

எம்.எம்.அப்துல்லா said...

nowadays little jonys are playing only computer games.

so... rain rain pls dont go away

:))

பா.ராஜாராம் said...

மழை பதிவு மிக நெகிழ்வு மணிஜி .மழை தேவையாக இருக்கிறபோது பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்யலாமே மணி.இப்ப ஊர் பூராம் நிறைஞ்சு கிடக்கே...:-).
வாழ்த்துக்கள்!

R.Gopi said...

//வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சொல்லி அலுத்து போயிற்று.. பொறுமை மீறி ஒரு நாள் இரவு கேட்கப் போய் பெரிய சண்டை. (ஓல்டு மங்க் -ஓவர் டங்க்)//

ர‌ண‌க‌ள‌த்திலும் ஒரு கிளுகிளுப்புதேன்....

//இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க.....

பின் குறிப்பு.... 1.. அன்று இரவு நானும் அவரும் சேர்ந்து குடித்தோம்..//

க‌ட்டுரையின் டெர்ர‌ர் ட‌ர்னிங் பாயிண்ட் இது த‌லீவா...

//உக்கார்ந்து கிட்டே கப்பல் விடுவேன்.. இப்ப பாரு தண்ணி நிக்காம ஓடியேப் போயிடுது..நீ அன்னைக்கு சண்டை போடாம இருந்திருக்கலாம்..//

ஹா...ஹா‌...ஹா...

ப‌திவ‌ர் சந்திப்பு சிற‌ப்பாக‌ ந‌ட‌க்க‌ வாழ்த்துக்க‌ள்...

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே....

☀நான் ஆதவன்☀ said...

சந்தப்பு வெற்றி பெற வாழ்த்துகள் :)

தலைவரே அந்த கதை மீள் பதிவா? ஏற்கனவே எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே?