Saturday, November 7, 2009

ஆட்டம்............... .சிறுகதை....


மணி பார்த்தேன். மாலை 5. இப்போதே இருட்டதொடங்கிவிட்டது.
8 மணிக்கு அவனை சந்திக்க வேண்டும். 10 வருடத்திற்கு முன்பே நாள் குறிக்கப்பட்ட சந்திப்பு.ஆனால் இன்றைய சூழல். சிரிப்பு வந்தது எனக்கு.என் தலைக்கு விலை வைத்திருக்கிறார்கள். லட்சங்களில். அது முக்கியமல்ல.யார் என்னை தேடி வேட்டைநாயாய் சுற்றிக் கொண்டிருக்கிறானோ, அவனைத்தான் சந்திக்கப்போகிறேன். துப்பாக்கி இல்லாமல். வேண்டாம். அந்த சனியன்.என்னையும் அறியாமல் அதை பயன்படுத்திவிட்டால். ஆனால்.. அவன் எப்படி வருவான்? நிராயுதபாணியாகவா.. தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் அவன் துப்பாக்கி பேசாது என்பது எனக்கு சர்வநிச்சயமாக தெரியும்.என் நண்பனை பற்றி எனக்கு தெரியாதா? கிளம்ப முடிவெடுத்தேன்..


யூனிபார்மை கழட்டினேன். சூடாக டீ தயாரித்தேன். மாலை செய்திதாளை மேய்ந்தேன்.. காலையில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி இஷ்டத்திற்கு எழுதியிருந்தார்கள்..எனக்கு தெரியும். இது அவன் வேலைதான். அவன் என்றால் என் முன்னாள் நண்பன்.. யாரை இன்று சந்திக்க வேண்டுமோ,அவனேதான்.. ஒரு தலைமறைவு இயக்கத்தின் கமாண்டர். ஆச்சர்யம்.. ஒரு அப்பாவி உயிர் கூட சாகவில்லை.அந்த அரசியல் தலைவரின் பண்ணை வீட்டில் குண்டு வெடித்திருந்தது.. ஏகப்பட்ட பொருள் நாசம்..அவரின் அடியாட்கள் சிலர் உடல் சிதறி போனார்கள்..உண்மையில் என்கவுண்டரில் கொல்லப்பட வேண்டியவர்கள்தான்.ஆனால் என்னால் அதை செய்ய முடியாது.அரசியல்.. ஆயாசமாக உணர்ந்தேன்.. எப்படிப்பட்ட மூளைக்காரன் என் நண்பன்.. ஒரு புரட்சிக்காரனை, கொள்ளைக்காரனாய் சித்தரிக்கும் அரசில் நான் அடியாளாய் கூலி வாங்குவதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருந்தது. ரிவால்வரை எடுத்து சேம்பரை கழட்டினேன். ஒரு தோட்டாவை மட்டும் விட்டு வைத்தேன்.. அவன் எப்படி வருவான்.. துப்பாக்கி கொண்டு வருவானா? மாட்டான்..கொண்டு வந்தாலும் எனக்கெதிராய் பயன்படுத்துவானா? மேசை டிராயரிலிருந்து சார்மினார் சிகரெட்டை எடுத்து பத்திரப்படுத்து கொண்டேன்.. எத்தனை நாளாயிற்று? நானும், அவனும் ஒரே சிகரெட்டை பகிர்ந்து கொண்டு..


இந்த இடத்தை அவன் தான் தேர்வு செய்தான்..அப்போது இந்த இடம் ஒரு கால்பந்து மைதானமாக இருந்தது. போலிஸ்.. இல்லை ராணுவம்..இதுதான் அவன் லட்சியமாக இருந்தது.. நீ போலிஸ்ல சேருடா..நான் மிலிட்டரி.. ரெண்டு பேரும் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்யலாம்..அவன் இன்று பெரிய போலிஸ் அதிகாரி... அரசாங்க நாய்...நான் அரசிடமிருந்து மக்களை காப்பாற்றும் புரட்சியாளன்..தனியாக வருவானா... கூட படையுடன் வந்து வீழ்த்தி விட்டால்? நிச்சயம் அதை அவன் செய்ய மாட்டான்.. அப்படி வீழ்ந்தாலும் எனக்கு பிறகு என் தளபதிகள் இருக்கிறார்கள்..இருந்தாலும் ஒரு அவநம்பிக்கை மெலிதாக அறுத்து கொண்டிருக்கிறது... கடமைதான் முக்கியம் என்று அவன் நினைத்து விட்டால்? இருக்கட்டுமே... இருக்கிற இடத்திற்கு விசுவாசமானவன் என் நண்பன் என்பதும் எனக்கு பெருமையைத்தான் தரும்...


நீண்ட மழைக்கோட்டுடன் நடக்க சற்று சிரமமாக இருந்தது.எப்படித்தான் அவன் இந்த காட்டில் சுற்றுகிறானோ? அவனுடன் கால்பந்து விளையாடிய நாட்கள் நினைவுக்கு வந்தது.. அவன் அடித்த பந்தை தடுக்கவே முடியாது..எத்தனை முறை தோற்றிருப்பேன். அவனிடம் தோற்பதில் எனக்கு சின்ன சந்தோஷம்.. நான் தோற்பதில் அவனுக்கு கொஞ்சம் வருத்தமே ஏற்படும்.. அப்படிப்பட்ட நட்பு.. இன்று.. காலம் போடும் கணக்கில் நாம் எதை குற்றம் சொல்வது?


வந்து நேரமாச்சா?

இல்லை இப்போதுதான் வந்தேன்.. மணி பார்.. சரியாக 8..என்ன சொல்கிறார்கள் உன் அரசாங்க ஓநாய்கள்?

நீ சரணடைவதை பற்றி எதாவது முடிவெடுத்தாயா?

நான் எப்போது சொன்னேன் சரணடைகிறேன் என்று?

இல்லை.. கேட்கிறேன்.. எத்தனை நாள் இப்படி? அரசு ஒரு பெரிய ராட்ஸசன்.. அதை எதிர்த்து என்ன செய்ய முடியும்? சின்ன, சின்ன சேதங்களை ஏற்படுத்துவதை விட..

நாம் இங்கு அதற்காக இங்கு சந்திக்க வில்லை.. இன்னும் ஐந்து நிமிடம் நான் கிளம்ப வேண்டும்...குழந்தை எப்படியிருக்கிறாள்?

அவளை பார்க்க வேண்டுமா? உன் பெயரைத்தான் வைத்திருக்கிறேன்..

தெரியும்

எப்படி?

எனக்கு குழந்தை இருந்தால், உன் பெயரைத்தான் வைத்திருப்பேன்.. உன் துப்பாக்கியில் ஒரு புல்லட் இருக்கிறதல்லவா?

ஆமாம்..நீ துப்பாக்கி கொண்டு வரவில்லையா?

எனக்கு ஆபத்து என்றால் அதை ஏற்படுத்துபவனும் நீதான்..அதே சமயம் இந்த பொழுதில் ஆபத்தென்றால் ரட்சகனும் நீதான்...


சற்று நேரம் கொடிய மெளனம் நிலவியது...

நான் என் துப்பாக்கியை எடுத்தேன்..உள்ளிருந்த அந்த ஒரு குண்டை உருவி... தூர வீசியெறிந்தேன்..


என் தூக்கி போட்டாய்...?

உன்னிடம் என் நம்பிக்கையை கெடுத்துக்கொள்ள மனமில்லை..

நன்றி.. நான் கிளம்புகிறேன்... அடுத்த முறை அநேகமாக என் பிணத்தின் மேல் நீ விழிக்க வேண்டியிருக்கலாம்.... நம் ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது..

ஒரு நிமிடம்.... இந்தா... சார்மினார் சிகரெட் பாக்கெட்டை நீட்டினேன்..


நான் தீப்பெட்டியை எடுத்தேன்..என் வாயில் ஒரு சிகரெட்டை பொருத்தினான்... இருவரும் பற்ற வைத்துக் கொண்டோம்...

ஒரு பெருமூச்சுடன் புகையை வெளியேற்றியவாறு அவரவர் பாதையில் பிரிந்தோம்.....




30 comments:

அத்திரி said...

நல்லாயிருக்கு கதை

Raju said...

அண்ணே..புதுப்பொலிவு நல்லா இருக்கு.

Raju said...

அண்ணே, இதுதான் வருகையா...?

VISA said...

விறுவிறுப்பு.....:) Super

மணிஜி said...

/அத்திரி said...
நல்லாயிருக்கு கதை//

அத்திரி..காலை வணக்கம்

மணிஜி said...

/ ♠ ராஜு ♠ said...
அண்ணே..புதுப்பொலிவு நல்லா இருக்கு//

நன்றி ராஜீ..பெஸ்கி உபயம்

Unknown said...

ஏதோ மிஸ்ஸிங்?

மணிஜி said...

/ VISA said...
விறுவிறுப்பு.....:) Super//

நன்றி விசா...

மணிஜி said...

/கே.ரவிஷங்கர் said...
ஏதோ மிஸ்ஸிங்?//

பிளாஷ்பேக்..?அது வேண்டாம்...என்றுதான் வேண்டாம் என்றுதான்...

Unknown said...

//பிளாஷ்பேக்..?அது வேண்டாம்...என்றுதான் வேண்டாம் என்றுதான்...//

பிளாஷ்பேக் இல்லை.தீவரவாதி செய்வது போலீஸ் நண்பனுக்கு மறைமுகமாகப் பிடித்துத்தானே இருக்கிறது.பின் எதற்கு ஆட்டம்?

கிருஷ்ண மூர்த்தி S said...

/பிளாஷ்பேக்..?அது வேண்டாம்...என்றுதான் வேண்டாம் என்றுதான்.../

மிக நல்ல தீர்மானம்! இப்படியே, நிகழ்காலத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் தொடர வாழ்த்துக்களுடன்!

Ashok D said...

அந்த போலிஸ்காரர் மோகன்லால் தானே.

பிரமாதம்,,, விறுவிறு

அகநாழிகை said...

கதை விவரணை வித்தியாசமாக இருக்கிறது.

template நல்லாயிருக்கு.

- பொன்.வாசுதேவன்

மணிஜி said...

கே.ரவிஷங்கர் said...
//பிளாஷ்பேக்..?அது வேண்டாம்...என்றுதான் வேண்டாம் என்றுதான்...//

பிளாஷ்பேக் இல்லை.தீவரவாதி செய்வது போலீஸ் நண்பனுக்கு மறைமுகமாகப் பிடித்துத்தானே இருக்கிறது.பின் எதற்கு ஆட்டம்?//

அவரவருக்கு விதிக்கப்பட்டது..இடையில் சில தனிப்பட்ட சங்கதிகள்...கொஞ்சம் சினிமாத்தனம்தான்..இருந்தாலும் .....

பிரபாகர் said...

கதை ரொம்ப நல்லாருக்குண்ணே.... அரசாங்கம் புரட்சி என அசத்துறீங்க, மழை பின்னணியில....

பிரபாகர்.

இன்றைய கவிதை said...

மிலிடரி ஓட்டலில் சாப்பிட்ட ·பீலிங்....
ஸாரி! மிலிடரி கதையில்லே?!!

-கேயார்

vasu balaji said...

நல்லாருக்குண்ணே புது வலைமனையும் கதையும்

பித்தன் said...

xcelant story as usual....

Sanjai Gandhi said...

இதன் மூலம் சொல்ல வரும் நீதி?

தமிழ் அமுதன் said...

///எனக்கு ஆபத்து என்றால் அதை ஏற்படுத்துபவனும் நீதான்..அதே சமயம் இந்த பொழுதில் ஆபத்தென்றால் ரட்சகனும் நீதான்...///

///சற்று நேரம் கொடிய மெளனம் நிலவியது...///

நான் ரசித்த வரிகள்....!

நன்றி தலைவரே ...!

ஜெட்லி... said...

//எனக்கு குழந்தை இருந்தால், உன் பெயரைத்தான் வைத்திருப்பேன்..//

பிடித்த வரி

ரவி said...

கதையோட முடிவு எங்க சார் ?

ஹேமா said...

வாசிச்சேன்.துப்பாக்கிக் கதை.
பிடிக்கல.வேணாம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சப்புன்னு முடிஞ்சு போச்சே.

Cable சங்கர் said...

//இதன் மூலம் சொல்ல வரும் நீதி?//

நீங்க என்ன சின்னப்பையன்னு நினைப்பா.. நீதிகதை சொல்ல.. :(

தலைவரே.. அருமையான விவரிப்பு.. இன்னும் கொஞ்சம் இருவருக்குமான ரிலேஷன்ஷிப் c ontradiction மிஸ்ஸிங் என்று தோன்றுகிறது..

thiyaa said...

நல்லாயிருக்கு கதை

பா.ராஜாராம் said...

பின்னூட்டம் வந்த பிறகே கதை புரிந்தது.உங்கள் பின்னூட்டம்....(அவ்வளவு பத்தாது நமக்கு-எனக்கு!)பிடிச்சுருக்கு மணிஜி!

மணிஜி said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்

பெசொவி said...

மிக மிக நல்ல கதை. இது போன்று ஒரு நல்ல கதையை.......

(மன்னிக்கணும், இதுக்கு மேல பொய் சொல்ல மனசு வரலை. அண்ணே, நாங்கல்லாம் புதுசுங்க, தயவு செய்து கதை மூலம் என்ன சொல்ல வர்றீங்கன்னு சொன்னா, எங்களுக்கு எல்லாம் உதவியா இருக்கும்.)

Thamira said...

இதுவரை படித்திருக்காத களமென்பதால் கதை எனக்குப்பிடித்திருந்தது.

கதை மாற்றி மாற்றி இருவரது கோணத்திலும் வருகிறதா? ஆரம்ப பாராக்கள் குழப்புகின்றன. எழுத்தின் பான்ட், கலர் அல்லது கதையில் ஏதாவது என வித்தியாசம் காண்பித்திருக்கவேண்டும்.