Thursday, November 5, 2009

அர்த்தமில்லாத கதைகள்----3..


என்னதான் சொல்றான் பெரியவன்?

என்னத்தை சொல்றது.அவனுக்கு அந்த கம்பெனி வேலை பிடிக்கலையாம்.தஸ்புஸ்சுனு பேசிக்கறாங்களாம்.மதிக்கறதே இல்லையாம்.போதாத குறைக்கு இந்த புறம் பேசறவங்க வேற தொல்லை.கேள்வி மேல கேள்வி கேக்கறாங்களாம்.அவங்க பேசறது இவனுக்கு புரியலை.இவன் பேசறது அவங்களுக்கு புரியலை

அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?

அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.விவசாயம்,பஞ்சாயத்து எல்லாத்தையும் பாத்துக்கிறேன் அப்படிங்கிறான்.எதாவது செய்யுங்க..

பெரியவர் யோசனையில் ஆழ்ந்தார்.சின்னவன் கிட்ட எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்னா விட மாட்டாங்க போலிருக்கு.இதுவரைக்கும் குடும்ப சண்டை வெளியே தெரியாம பூசி மறைச்சாச்சு.இனிமே கஷடம்தான்.ஏற்கனவே ஊர் பிரச்சனை நிறைய தீக்காம இருக்கு..யாரும் ஏதும் பேசாதபடிக்கி ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் சோறு,புது துணி எல்லாம் ஓசியில கொடுத்து வாயை மூடி வச்சிருக்கோம்.பட்டணத்து பங்காளியோட இப்ப உரசல் கூடி கிட்டே போகுது.அவன் பிராது கொடுக்கற அளவுக்கு போயிட்டான்.நமக்கு தெரியாம நிறைய நடக்குது.முன்ன மாதிரி குடும்பம்,வேலையாளுங்க எல்லாம் நம்ம பேச்சை கேக்கறதில்லைன்னு நினைக்கும் போது அவருக்கு ஆத்திரமாக வந்தது.பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு காசி ,ராமேஸ்வரம் போயிடலாமான்னு கூட நினக்க தோணுது.
போன் அடிக்க நம்பரை பார்த்தார்..அந்த வீட்டிலிருந்துதான்

அது அடுத்த பிடுங்கல்.என் பொண்ணு மட்டும் என்ன ஏப்ப,சாப்பையா?அக்கா மகன்,பேரன் வரைக்கும் எல்லாருக்கு வாரி இறைச்சீங்க.சும்ம ஒப்புக்கு சப்பாணியா எங்களுக்கு ஏதோ .. அதோட கடமை முடிஞ்சதுன்னு கையை உதறினா என்ன அர்த்தம்..இத்தனைக்கும் சமீபத்திய சம்பாத்தியம் முழுக்க இவஙகதான் எடுத்துக்கிட்டாங்க.பட்டணத்துபங்காளி பிராது கொடுக்க காரணமே அதான்.இப்ப நம்ம நிலைமையை அனுசரிச்சு நடந்துக்கணும்னு தோண மாட்டேங்குது யாருக்கும்.வேதனையுடன் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.இவர் செய்யறதும் தப்பு.பட்டணத்து பங்காளியை வீட்டுக்குள்ள சேர்க்கமாட்டார்.திண்ணையிலேயே உக்கார வச்சு அஞ்சோ,பத்தோ கொடுத்து வாசலோட அனுப்பிடுவாரு .அதான் அவன் இப்ப ஆட்டம் காட்டரான்...

அம்மா..எத்தனை வாட்டி உனக்கு சொல்றது?அப்பாவை அனாவசியமா தொந்தரவு பண்ணி டென்ஷன் ஏத்தாதேன்னு.இப்ப பாரு காலை டிபனை சாப்பிடுட்டு வெளியில போயிட்டாரு.கிட்ட,தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு..சாப்பிட வராம ஏரிக்கரையாண்ட போய் உட்கார்ந்து அடம் பிடிச்சுகிட்டு இருக்காரு..வா..போய் சமாதானம் பண்ணி கூட்டிகிட்டு வரலாம்.

அண்ணே..திருப்பாச்சி காரங்க எல்லாம் புலம்பறாஙக.தொழிலே நொடிச்சு போச்சாம்.நம்மதான் காரணம்னு திட்டறாங்க.பட்டணத்தை விட்டு வந்துடுங்க அண்ணே..நீங்க இங்க இருந்தப்ப அத்தனை பேரும் பல்லு கூட விளக்காம எந்திரிச்சதும் வந்து உங்களுக்கு வணக்கம் போட்டுட்டு போவனுங்க.அந்த மரியாதை அங்க வருமா?அங்கல்லாம் நீலக்கலர் சட்டை.டை.புல் பேண்ட் இதுக்குதான் மதிப்பு சாஸ்தி.நமக்கு சரிபட்டு வராது..இஙக தம்பியை பாருங்க..ஊரே மெச்சுது.புரோட்டா,கால்,கறி எல்லாம் அவர் இலையிலதான் வக்கிறாங்க.யோசிங்க அண்ணே..

அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.தம்பி வீட்டுலயயும் இதே பேச்சுதான்.முன்னயே பேசித்தானே பட்டணத்துக்கு போனாரு.இப்ப தீடீர்னு நானும் இங்கய வரேன்னா என்ன அர்த்தம்.உங்களுக்கு சரியா போட்டி போடத்தானே.நீங்க அப்பாகிட்ட கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க.இல்லை நம்ம குடி மூழ்கிடும்.தம்பி யோசிக்க ஆரம்பித்தார்.

ஊர் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க காத்திருந்தது.

24 comments:

ஆண்மை குறையேல்.... said...

பாஸ்... நாட்டுல‌ நெற‌யா மேட்ட‌ர் கீது...அத‌ப் பாரு.. புர்தா?

ஜெட்லி... said...

அண்ணே... இந்த விவகாரமான கதையால இருக்கு...
நான் வரலேப்பா இந்த விளையாட்டுக்கு... எஸ்கேப்!!

உண்மைத்தமிழன் said...

இந்த முடிவுறாத உண்மை மகாபாரதக் கதைக்கு ஏன் அர்த்தமல்லாத கதைகள் என்கிற தலைப்பு..?

தண்டோராஜி.. அண்ணன்காரன் சீக்கிரம் ஊருக்குத் திரும்பி தம்பிக்கு வேட்டு வைக்கத்தான் போறான்..

ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மரத்தடியை பிடிச்சிட்டு பஞ்சாயத்து பேசத்தான் போறாங்க..

அப்பன்காரன் கடைசீல ஏரிக்கரையோரமாத்தான் குடியிருக்கப் போறாரு.. வீட்டுக்குப் போகாம.. இதுதான் நடக்கப் போவுது..!

இரும்புத்திரை said...

கதை சரியா புரியலையே

vasu balaji said...

பெரியவரு கஷ்டம் உங்களுக்கெல்லாம் விளையாட்டாப் போச்சில்ல. =)). எத்தன வாட்டிதான் தீர்ப்ப மாத்திச் சொல்லுவாரு.

Beski said...

ஹி ஹி ஹி...
அர்த்தமில்லாத கதைகள்னு ஏன் தலைப்பு வச்சிருக்கிங்கன்னு இப்பத்தான் புரியுது....
அப்படியே இதுக்கு முன்னாடி எழுதின அர்த்தமில்லாத கதைகளையும் படிச்சுடுறேன்.

//ஆண்மை குறையேல்.... said...
பாஸ்... நாட்டுல‌ நெற‌யா மேட்ட‌ர் கீது...அத‌ப் பாரு.. புர்தா?//
இவரு புரிஞ்சு சொன்னாரா, இல்ல புரியாம சொன்னாரான்னு தெரியல.

//அப்பன்காரன் கடைசீல ஏரிக்கரையோரமாத்தான் குடியிருக்கப் போறாரு.. வீட்டுக்குப் போகாம.. இதுதான் நடக்கப் போவுது..!//
அண்ணே, என்ன சொல்ல வறீங்க? திரும்ப ஏரிக்கரைக்கு போனா உடம்பு தாங்கதுன்னு சொல்றீங்களா?

ஹேமா said...

கதை என்னமோ குழப்பமா இருக்கு.
அதான் ஒண்ணும் சொல்லாமப் போறேன்.

Raju said...

\\அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?\\

அவுக அப்பாதான பட்டண்த்துல இருக்காப்ல.. துரைக்கு என்னாவாம்..?
அர்த்தமில்லாத கதைலயும் அர்த்தம் கண்டுபுடிப்போம்ல.
:‍-)

மணிஜி said...

/\\அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?\\

அவுக அப்பாதான பட்டண்த்துல இருக்காப்ல.. துரைக்கு என்னாவாம்..?
அர்த்தமில்லாத கதைலயும் அர்த்தம் கண்டுபுடிப்போம்ல.
:‍-)//

அவர் பெரியவரால் அப்படியும் அழைக்கப்படுவார்

அகநாழிகை said...

தண்டோரா,
ஒண்ணுமே புரியலை.
கதையா.. கதையல்ல நிஜமா...

- பொன்.வாசுதேவன் (நட்புக்காக)

Ashok D said...

ஒத்துக்க முடியாது இது போங்கு ஆட்டம்.

ஹுஸைனம்மா said...

//அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.//

இப்படிச் சொல்ற அண்ணன் ஏன் அந்த ஊர்ல புது வீட்டுல குடி புகுந்தாரு?

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு மணிஜி!!!!

Cable சங்கர் said...

இதுக்கு தான் போற எடத்துல எல்லாம் முடிச்சவுக்க கூடாதுங்கிறது.. :)

நர்சிம் said...

மதுரை

கலையரசன் said...

//தம்பி யோசிக்க ஆரம்பித்தார்//

நானும்தான் அண்ணே!!

Unknown said...

பின்னூட்டம் பார்த்துதான் அர்த்தம் புரிந்தது.. :-)

அத்திரி said...

உள்ளேன் அண்ணாச்சி

இன்றைய கவிதை said...

Please read this also

http://nvmonline.blogspot.com/2009/11/blog-post_03.html

butterfly Surya said...

அர்த்தமுள்ள கதை.. அண்ணகாரன் இனிமே தான் வைக்கபோறான் ஆப்பு...

மணிஜி said...

கருத்துரைத்த நண்பர்களுக்கு நன்றிகள்.

Beski said...

முடிந்தால் தொடரவும்...
http://www.yetho.com/2009/11/blog-post_06.html

பெசொவி said...

//அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.விவசாயம்,பஞ்சாயத்து எல்லாத்தையும் பாத்துக்கிறேன் அப்படிங்கிறான்
//
//போன் அடிக்க நம்பரை பார்த்தார்..அந்த வீட்டிலிருந்துதான்
அது அடுத்த பிடுங்கல்
//
//இத்தனைக்கும் சமீபத்திய சம்பாத்தியம் முழுக்க இவஙகதான் எடுத்துக்கிட்டாங்க//
//கிட்ட,தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு..சாப்பிட வராம ஏரிக்கரையாண்ட போய் உட்கார்ந்து அடம் பிடிச்சுகிட்டு இருக்காரு
//

எதைப் பாராட்டுவது, எதை விடுவது,

கலக்கல், சூப்பர், வாழ்த்துகள்!

(ஒரு அவசிய ரகசியம் :இன்றைய கவிதை சுட்டிய ஒரு கதைதான் இந்த கதையையும் புரிய வச்சது.)

cho visiri said...

welldone,sir/madam