Monday, November 30, 2009

மானிட்டர் பக்கங்கள்.....30/11/09






ஆரம்பத்தில் மாறன் சகோதரர்களின் அசுர வளர்ச்சி அனைவரின் கண்ணையும் உறுத்தியபோது தலைவர் சொன்னார்.. அவர்கள் சிறு பிராயம் தொட்டே கடுமையான உழைப்பாளிகள். அதானால் அவர்களை குறை கூறுபவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்று..

குடும்பத்தில் குடுமிபிடி சண்டை முற்றி, வீதிக்கு வந்தபோது அவர்களே சொன்னார்கள்.. திமுக மட்டும் இல்லையென்றால், இவர்கள் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? பின் பனித்து, இனித்து எல்லாம் ஆறிப் போனது..இல்லை நீறு பூத்த நெருப்பாகத்தான் இருகிறது.. சன் ஸ்டாலினை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. அழகிரியின் மேல் இன்னும் கசப்பு இருக்கவே செய்கிறது. ஆழ்ந்து அவர்கள் செய்திகளை கவனித்தால் தெரியும். அழகிரி பற்றிய செய்திகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. அவர்களுக்கு நன்றாக தெரியும். எதிர்கால ஆட்சி ஸ்டாலின் கையில்தான் என்று. அதனால்தான் மதுரைகாரர் மாநில அரசியலுக்கு திரும்ப பெரும் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

சன் தன் ஏகபோகத்தை நிலை நாட்ட சகல முயற்சிகளீலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். புதிதாக நான்கு சேனல்கள் வரவிருக்கிறது. முதலில் சன் மெட்ரோ, பின் சன் பிளஸ். சன் மெட்ரோ சென்னைக்கு மட்டும். சூரியன் எஃப் எம் மாதிரி. பின் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும். சன் பிளஸ் விஜய் டிவிக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது... இதற்கு முட்டுகட்டை போட செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. அதனால் கலைஞர் தொலைகாட்சி தரப்பிலும் சில சானல்கள் தொடங்கப் போகிறார்கள். முதலில் வண்ணத்திரை என்ற மூவி சேனல். போட்டு தாக்குங்கப்பா.. நம்ம மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.. எவன் அப்பன் வீட்டு காசு..

வந்தவாசி தொகுதிக்கு திமுகவில் போட்டியிட ஆளே இல்லையா என்ன? அங்கும் வாரிசுக்குத்தான் சீட்டு. கேட்டால் அனுதாப அலையில் ஜெயிக்கலாமாம். அப்புறம் எதுக்கு சாதனை, மண்ணாங்கட்டி என்று முழு பக்க விளம்பரங்கள்?

அரசு இயந்திரம் துஷ்பிரயோகம் செய்யபட்டது.. வாக்குபதிவு இயந்திரத்தில் குளறுபடி... மைனாரிட்டி திமுக அரசு பணத்தை இறைத்தார்கள்.. அதிமுகவிற்கு ஓட்டு போட இருந்த வாக்காளர்கள் கடத்தப்பட்டனர்.. இன்னும் நிறைய காரணங்களொடு ஜெயலலிதா அறிக்கை தயார் செய்ய சொல்லிவிட்டார்.. பின்..இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சிதானே ஜெயிக்கப் போகிறது...

ஆட்சியில் பங்கு பெற்றால் நாம் பாத்திரம்தான் துலக்க வேண்டும். மப்பு பார்ட்டி இளங்கோவன் அறிக்கை.. வெறும் பாத்திரம் இல்லை தலைவரே. எச்சல் பாத்திரம்தான் மீதியிருக்கு..


மும்பை தாக்குதல் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்தது... மாட்டி கொண்ட கசாப்பிற்கு பிரியாணி சகிதம் விருந்து படைத்து மதசார்பின்மையை மார் தட்டி கொள்கிறது அரசு. (இதுவரை அவனுக்கு 31 கோடி ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.. ம்ம்ம்..ஒரு புல்லட்டில் முடிய வேண்டைய வேலை..) லாஜிக்கே புரியவில்லை. பக்கா ஆதாரங்கள் இருந்தும், ஏன் அப்பாவி மக்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க இவ்வளவு தாமதம் என்று.. போகட்டும். அப்சல் குருவே இன்னும் சிறையில் சுதந்திரமாகத்தானே இருக்கிறான்.. ஆனால் இந்த செய்திதான் உறுத்துகிறது. வீரமரணம் அடைந்த ஹேமந்த் கார்கரேவிற்கும், விஜய் சாலேஸ்கருக்கும் இன்னும் இன்ஷூரன்ஸ் பணம் வந்து சேரவில்லையாம்..





சென்னை 100 கி.மீ என்று மைல் கல் பார்த்திருப்பீர்கள். சரியாக சென்னையின் நகர எல்லை ஆரம்பம் .. அதாவது 0 கி.மீட்டர் எங்கு தெரியுமா? கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இருக்கும் பாலத்தின் மையப்பகுதிதான். அங்குதான் சென்னை 0 கி.மீ என்ற மைல்கல் இருக்கிறது..

இந்த வாரம் இரண்டு விபத்துகள். இரண்டுமே ஆட்டோ மீது ரயில் ஏறியது என்பதுதான் செய்தி.. ஏன்யா? ரயில் என்ன ? அண்ணா சாலையில் ஓடும் ஆட்டோ மீதா வந்து மோதியது. ரயில் போகும் பாதையில் ஆட்டோ குறுக்கே வந்தால் அது என்ன செய்யும்? இந்த ஊருக்குள் யானை வந்தது. வீடுகள் நாசம். இதுவும் அப்படித்தான். காட்டை அழித்து வீடு கட்டிக் கொண்டால் அப்புறம் யானை என்ன.. பிள்ளையார் கோயில்லயா போய் தேங்காய் தின்னுட்டு படுத்துறங்கமுடியும்??

மாயாவி என்ற படத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் சூர்யா பேசும் வசனம் “ஐயகோ ..காவல் துறை கலைத்துறையின் ஏவல் துறையாகி விட்டதே. இன்று அது உண்மையானது எவ்வளவு பொருத்தம்.. தலைவர் வேறு சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசுகிறார். சினிமா சம்பந்தபட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் போது தாய் வீட்டில் இருப்பதை போல் உணருகிறேன்.. அவர் அப்படித்தான். பத்திரிக்கைகாரர்களிடம் பேசினால் “1936 லேயே நானும் பத்திரிக்கையாளனாகி விட்டேன் என்பார்..

காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் செமத்தியாகத்தான் பூஜை செய்திருக்கிறார். தோண்ட, தோண்ட திடுக் செய்திகளாக வருகிறது..அதை பற்றி நாம் என்ன கருத்து சொல்ல முடியும் ? எதுவாக இருந்தாலும் அந்த சிடிக்களை போட்டு பார்த்துதான் சொல்லலாம்..

கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


37 comments:

Cable சங்கர் said...

காஞ்சிபுரம் அர்சகர் மேட்ட்ர் செம சூப்பர்.. வீடியோ அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஜூப்பர் மாலு.. :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

kalakkal thala
//(இதுவரை அவனுக்கு 31 லட்சம் ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.. ம்ம்ம்..ஒரு புல்லட்டில் முடிய வேண்டைய வேலை..

athu 31 kodi thala

ஜெட்லி... said...

//இதுவரை அவனுக்கு 31 லட்சம் ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு//

அண்ணன் 31 கோடின்னு பேப்பரில்
படித்ததாய் நினைவு...ஒரு நாளைக்கு
எட்டு லட்சம் செலவு ஆகுது என்று
போட்டிருந்தார்கள்......ஒரு வேலை நான் படிக்கிற பேப்பரில் போய் தகவல் போடுறாங்களா??>....

ஜெட்லி... said...

//எதுவாக இருந்தாலும் அந்த சிடிக்களை போட்டு பார்த்துதான் சொல்லலாம்..
//

கேபிள் அண்ணன் அதுக்குள்ள
கருத்து சொல்லிட்டாரே.....

ரமேஷ் வைத்யா said...

அவனவன் இருக்கிற இடத்தில்தான் வேலை செய்ய முடியும். அர்ச்சகன், ரூம் போட்டா சில்மிஷம் பண்ண முடியும்?

மணிஜி said...

ஜெட்லி & ஸ்ரீ.கிருஷ்ணா..தவறை சுட்டியமைக்கு நன்றி..திருத்திவிட்டேன்

Romeoboy said...

தல நேத்துதான் அந்த மைல் கல் பார்த்தேன், கொஞ்சம் விநோதமகதான் இருக்குது.

CS. Mohan Kumar said...

தல.. ரொம்ப தைரியமா எழுதுறீங்க.

vasu balaji said...

மானிட்டர் ரொம்ப பவர்ஃபுல்லாதான் இருக்கு. என்னாஆஆ அடி.=))

(Mis)Chief Editor said...

தங்களுடைய எல்லா பதிவுகளையும் விடாது படித்து வந்தாலும் சிலதுக்கே பதில் எழுத நேரம் கிடைக்கிறது!

தங்களுடைய எழுத்து வலிமையை 'அரசியல்' தவிர வேறு எதற்கேனும் பயன்படுத்தலாமே?!

ஆனாலும், தமிழனுக்கு பிடிச்சது 'பாலிடிக்ஸ¤ம், பயாஸ்கோப்பும் தானே?!' அதற்கு நீங்களும், நானும் விதி விலக்காயிருக்க முடியுமா என்ன?!

-பருப்பு ஆசிரியர்

க‌ரிச‌ல்கார‌ன் said...

மானிட்டர ராவா அடிச்ச‌ மாதிரி இருக்கு

க‌ரிச‌ல்கார‌ன் said...

//Cable Sankar said...
காஞ்சிபுரம் அர்சகர் மேட்ட்ர் செம சூப்பர்.. வீடியோ அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஜூப்பர் மாலு.. :)//

த‌ல‌ பார்த்த‌டோட‌ நிறுத்திக்கோங்க‌ .. வ‌ழக்க‌ம் போல‌ விம‌ர்ச‌ன‌ம் எழுதிர‌ப் போறிங்க‌

cheena (சீனா) said...

நல்லாருக்கே - மானிட்டர் ராவா அடிச்ச மாதிரியே இருக்காம் - நான் சொல்லலப்பா

ரசிச்சேன்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

கலகலப்ரியா said...

எனக்கு புரியாத மாட்டரா இல்ல இருக்கு..! ஆனா நல்லா இருக்கு...!

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

//ஆட்சியில் பங்கு பெற்றால் நாம் பாத்திரம்தான் துலக்க வேண்டும். மப்பு பார்ட்டி இளங்கோவன் அறிக்கை//

அது பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை என்று வேறெங்கோ படித்த ஞாபகம்.

//மும்பை தாக்குதல் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்தது... மாட்டி கொண்ட கசாப்பிற்கு பிரியாணி சகிதம் விருந்து படைத்து மதசார்பின்மையை மார் தட்டி கொள்கிறது அரசு. (இதுவரை அவனுக்கு 31 கோடி ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.. ம்ம்ம்..ஒரு புல்லட்டில் முடிய வேண்டைய வேலை..) //
மதசார்பற்ற அரசு என்றால் உலகத்துக்கு என்ன என்று புரிய வைக்கிறார்கள் போலிருக்கு.
எல்லாம் நம் தலை எழுத்து, வேறென்ன சொல்ல?

Raju said...

அண்ணே, ரொம்ப நாளைக்கப்புறம் BACK TO FORM...!

பூங்குன்றன்.வே said...

எல்.சி.டி.மானிட்டர் மாதிரி மேட்டர்ஸ் பளிச்சுன்னு இருக்கு தல.

Barari said...

kasappirkku piriyaani pottu matha sarbinmayai nirupiikirathu arasu//itharkkum matha sarbinmaikkum enna sambantham avalai ninaiththu uralai idikkiraai nee oru ? un peyarukku thaunthaarpol thaane un seikaiyum irukkum.

க.பாலாசி said...

//போட்டு தாக்குங்கப்பா.. நம்ம மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.. எவன் அப்பன் வீட்டு காசு..//

அவ்வ்வ்வ்வ்வ்......

Raju said...

அண்ணே, மாபெரும் வெற்றிண்ணெ..மாபெரும் வெற்றி..இத படிச்சு பாருங்க. http://www.envazhi.com/?p=13960

மணிஜி said...

/Barari said...
kasappirkku piriyaani pottu matha sarbinmayai nirupiikirathu arasu//itharkkum matha sarbinmaikkum enna sambantham avalai ninaiththu uralai idikkiraai nee oru ? un peyarukku thaunthaarpol thaane un seikaiyum irukkum.//

ஐய்யா..பரோபகாரி..விலாசம் எங்கப்பா?

மணிஜி said...

/ பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//ஆட்சியில் பங்கு பெற்றால் நாம் பாத்திரம்தான் துலக்க வேண்டும். மப்பு பார்ட்டி இளங்கோவன் அறிக்கை//

அது பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை என்று வேறெங்கோ படித்த ஞாபகம்.//

பீட்டர் அல்போன்ஸ் ஒரு காக்கா..அவர் இப்படியெல்லாம் பேசமாட்டார்.இதை சொன்னது பெரியாரின் பேரன் தான் நண்பரே,,

மண்குதிரை said...

சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க

Beski said...

நல்லாயிருக்கு.

மைல்கல் மேட்டர் இதுவரை கேள்விப்படவில்லை.

//Cable Sankar said...
காஞ்சிபுரம் அர்சகர் மேட்ட்ர் செம சூப்பர்.. வீடியோ அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஜூப்பர் மாலு.. :)//
ரெண்டுல ஒன்னு பரவாயில்ல. :)

Ashok D said...

எனக்குகென்னமோ குடும்பத்த குழப்பற்து நீங்கதானோன்னு தோணுது.

31 கோடியா அடப்பாவிங்களா...
புல்லட் கூட வேணாம்ஜி .. அப்டியே கழுத்தபுடிச்சு ஒரு திருவுதான்..

chennai 0 pt இப்போ தான் தெரியுது

காஞ்சிபுரம் மேட்டர எனக்கு யாராவது மெயில் பண்ணுங்கப்பா...

பேப்பர் படிக்காத குறைய நீங்க தீர்த்துவெச்சிர்றீங்க....

குசும்பன் said...

//ரமேஷ் வைத்யா said...
அவனவன் இருக்கிற இடத்தில்தான் வேலை செய்ய முடியும். அர்ச்சகன், ரூம் போட்டா சில்மிஷம் பண்ண முடியும்?
//

சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்!

குசும்பன் said...

Cable Sankar said...
காஞ்சிபுரம் அர்சகர் மேட்ட்ர் செம சூப்பர்.. வீடியோ அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஜூப்பர் மாலு.. :)//

காக்கா இருக்கே காக்கா அதுக்கிட்ட இருந்து நிறைய கத்துக்கவேண்டியது நீங்க இருக்கு!

sathishsangkavi.blogspot.com said...

//(இதுவரை அவனுக்கு 31 கோடி ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.. ம்ம்ம்..ஒரு புல்லட்டில் முடிய வேண்டைய வேலை..)//

நல்லாயிருக்கு.....

thendral said...

«ó¾ ¨Áø ¸ø ¾¢ÉÓõ ô÷÷òÐ ÅÕõ À¡¨¾. ´Õ ¿¡û ¦ºö¾¢Â¡¸ ùÕõ ±É ±¾¢÷À¡÷òо¡ý
þýÀ «¾¢÷. ´Õ Å÷à ôò¾¢¡¢ì¨¸ ÀÊò¾ Á¡¾¢¡¢ þÕóòÐ. ¨¿Â¡ñÊ §¸¡¨Å

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

butterfly Surya said...

வன்முறையில்லாமல் இடை தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற வேண்டும் என்று நேற்று கலைஞர் அறிக்கை படித்தேன்..

செம காமெடி..

வினோத் கெளதம் said...

தல கலக்கல் கலவை..

மணிஜி said...

கேபிள்
ஸ்ரீ.கிருஷ்ணா
ஜெட்லி..
ரமேஷ் வைத்யா
ரோமியோபாய்..
மோகன்குமார்
வானம்பாடிகள்..
சீப் எடிட்டர்...
கரிசல்காரன்..
சீனா ஐயா...
கலகலப்ரியா
பெயர் சொல்ல விருப்பமில்லை
ராஜீ
பூங்குன்றன்
பராரி
க.பாலாஜி
மண்குதிரை
அதிபிரதாபன்
அஷோக்
குசும்பன்
சங்கவி
தென்றல்
டி.வி.ஆர்
சூர்யா

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்...

Thamira said...

அதென்ன கடைசி ஜோக் புரியலையே.. அவன் ஒரே மகனாக பிறக்கணும்னுதானே கேட்டான். மூணு மனைவி இருந்தா ஒண்ணும் பிரச்சினையில்லையே.!?

***

அப்புறம்....

ஆதிமூலகிருஷ்ணன் said...
ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் நடுவுல கோடோ, புள்ளியோ வச்சு பிரிச்சி எழுதுங்கன்னு எத்தினி வாட்டி சொல்றது. சும்மா ஸ்கூல் புள்ளைங்க எழுதுனா மாதிரி சொய்ய்ங்க்னு போனா என்ன அர்த்தம்.?
//

போன பதிவில் போட்டது. இங்கே ரிப்பீட்டு.! திருந்துற வரைக்கும் விடுறதா இல்லை.

//

30.11.09 ல் ஒரு ரிப்பீட்டு.! ஒரு ஸ்டாராவது போடுற வரைக்கும் விடுறதா இல்லை.!

செந்தில் நாதன் Senthil Nathan said...

மானிட்டர் நல்லா இருக்கு..'தில்'லா இருக்கு.. உண்மையா இருக்கு..

ரசித்தேன்...

// க‌ரிச‌ல்கார‌ன் said...
//Cable Sankar said...
காஞ்சிபுரம் அர்சகர் மேட்ட்ர் செம சூப்பர்.. வீடியோ அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஜூப்பர் மாலு.. :)//

த‌ல‌ பார்த்த‌டோட‌ நிறுத்திக்கோங்க‌ .. வ‌ழக்க‌ம் போல‌ விம‌ர்ச‌ன‌ம் எழுதிர‌ப் போறிங்க‌...
//
கேபிள் விமர்சனம் கண்டிப்பா வேணும்.. :)

//போன பதிவில் போட்டது. இங்கே ரிப்பீட்டு.! திருந்துற வரைக்கும் விடுறதா இல்லை.//

ஆதி, இவர் வேனுமனே இத பண்றாரோ?

தண்டோரா அண்ணே, நானும் சொல்லறேன்...ஒரு கோடு போடுணே!!

மணிஜி said...

ஆதி.. கருத்துக்கு நன்றி..ஆனா இந்த கோடு,புள்ளி மேட்டர்தான் தெரியமாட்டேங்குது.

நன்றி செந்தில்