Monday, November 16, 2009

மானிட்டர் பக்கங்கள்........16/11/09
பிரிய நண்பர் கேபிளின் தந்தையார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...மீண்டு வாருங்கள் நண்பரே...

சென்ற வாரம் சென்னை தண்ணீரில் மூழ்கியது நமக்கு தெரியும். அன்று தலைவர் யாரிடமும் சொல்லாமல் திடீரென்று கிளம்பிவிட்டார். எல்லோரும் பதறிவிட்டனர். எதாவது பிரச்சனையா? உண்ணாவிரதம் இருக்கப் போகிறாரா? இல்லை வெள்ளத்தில் அவதிப்படும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறப் போகிறாரா? என்று.. அதெல்லாம் இல்லை ஜெண்டில்மேன்.. தலைவர் போன இடம் ஒரு பிரிவீயூ தியேட்டர். எடுத்த வரை “பெண்சிங்கம்” படத்தை போட்டுப் பார்த்து திருத்தங்கள் சொல்வதற்காக போனாராம்..வாழ்க நீ எம்மான்.. பெண்சிங்கம் படத்தை வண்டலூர்ல ஒரு ஷோ போடுங்கப்பா..

அண்ணன் தானாகவே மத்திய அமைச்சர் பதவியை உதறி விட வேண்டும் என்று திட்டம் போட்டு டார்ச்சர் கொடுக்கிறார்களாம் கை கட்சி கதர்வேட்டிகள்.. தமிழகத்துக்கு திரும்பி தம்பியுடன் அதிகாரத்துக்கு சண்டையிட்டால் காங்கிரசும்,கேப்டனும் தனி அணி அமைக்கலாம்னு திட்டமாம்.. அது சரி உங்க சண்டையை எப்ப நிப்பாட்டுவீங்க..? சத்தியமூர்த்தி பவன் வாசலில் கிழிஞ்ச துணி தைக்கும் டைலருக்கு வியாபாரம் அமோகமாம்.. போதாக்குறைக்கு இப்ப திருநாவுக்கரர் வேறு புது கோஷ்டியோட காங்கிரசில் இணைஞ்சிருக்கார்..
என் நண்பன் ஒருவன் அவன் திருமண பத்திரிக்கையில் இவ்வாறு போட்டிருந்தான்... “There is going to be an additional headache in my Family"


உங்கள் ஊரில் முத்துசாமி...முத்துசாமி என்று ஒருவர் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருப்பார். அவர் நன்றாகப் பாடுவார். இது உங்கள் ஊர் ஆட்களுக்கு மட்டும் தெரியும்.

தானுண்டு தன் டீக்கடை வேலையுண்டு என்றிருக்கும் முத்துசாமிக்கு திடீரென்று இளையராஜா இசையமைப்பில் பாடுவதற்குச் சான்ஸ் வீடு தேடி வந்துவிடும் என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?

நிச்சயமாக நம்பமாட்டீர்கள். ஆனால் இனி நீங்கள் நம்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.
உலகம் முழுவதும் உள்ள பாடகர்கள் முதல் மாடர்ன் ஆர்ட் வரைபவர்கள் வரை கலைத்துறை சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இனி வாய்ப்புகள் வீடு தேடி வரப் போகிறது. அதற்கான ஒரு மேடையை ஒருவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

ஆம். அவர் மனோரஞ்சன். கேரளத்தின் மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த அவர் இப்போது www.vfindu.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணைய தளத்தின் மூலம் தான் வாய்ப்புகள் பல நலிந்த கலைஞர்களுக்கும் தேடி வரப் போகின்றன.

கலைத்துறை சார்ந்த யாராக இருந்தாலும் இதில் தங்களுடைய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். மிமிக்ரி கலைஞர்கள், மேஜிக் நிகழ்ச்சி நடத்துபவர்கள், மேக் அப் கலைஞர்கள், பாடகர்கள், திரைக்கதை எழுதுபவர்கள், மாடலிங் செய்பவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், கதை, கவிதை, பாடல் எழுதுபவர்கள், திரைப்படங்களில் நடிக்கும் மிருகங்களைச் சப்ளை செய்பவர்கள், திரைப்படங்கள் எடுக்கத் தங்கள் குடிசையை வாடகைக்கு விடுபவர்கள் அல்லது பெரிய பங்களாவை வாடகைக்குத் தருபவர்கள் என கிரியேட்டிவ் துறையில் உள்ள யாராக இருந்தாலும் தங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் இந்த இணைய தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ள இப்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். இப்போது பிரபலமாக உள்ள கலைத்துறை சார்ந்த எல்லாரும் இந்த நட்சத்திரங்களைப் போன்றவர்கள். ஆனால் மின்மினிப் பூச்சிகளைப் போல ஒளிவிட்டுக் கொண்டு பல திறமையானவர்கள் உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்..

மைக்கேல் ஜாக்ஸன் உயிரோடு இருந்திருந்தால் இப்போது லண்டனில் அவரது கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கும்.

பல ஆண்டுகால தொய்வுக்குப் பிறகு "மீண்டும் வருகிறேன் பார்' என்ற ரீதியில் தொடர்ந்து ஓர் ஐம்பது கச்சேரிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது.

அதற்காக பிரத்யேக ஒத்திகைகளை நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். அந்த நிலையில்தான் விதி விளையாடி பாப் மன்னர் மண்ணுக்குள் போனார்.

அவர் கச்சேரி நடைபெறுவதாக இருந்த அரங்கில் அவரது நினைவு கண்காட்சி இப்போது நடைபெற்று வருகிறது.

மைக்கேல் ஜாக்ஸன் பயன்படுத்திய சின்னச் சின்ன பொருட்களிலிருந்து பெரிய சைஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார்வரை கண்காட்சியில் இருக்கின்றன.

ஹாலிவுட்டில் அந்தக் காரில்தான் எலிஸபெத் டெய்லருடன் பலமுறை மைக்கேல் ஜாக்ஸன் ஊர் சுற்றியிருக்கிறார்.

அவர் அணிந்த கையுறைகள், ஜொலிக்கும் ஸ்டைல் உடைகள். அவரது நகைகள், பெற்ற விருதுகள், தொப்பிகள், அவர் வாசித்த இசைக்கருவிகள், 1983 இல் அவர் தன் இடது கையில் முதன்முதலாக அணிந்த வெள்ளை உறை, அவரது ஸ்பெஷல் ஷுக்கள் (புவியீர்ப்பை மீறி மிதிக்கின்ற மாதிரியான தோற்றத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்திய (ஆன்ட்டி -கிராவிட்டி லியன் ஷுஸ்') என்று ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இருக்கின்றன.

இன்னொரு தகவல்: மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று குழந்தைகளான பிரின்ஸ் (12), பாரீஸ் (11), பிரின்ஸ் மைக்கேல் (11) ஆகியோர் இப்போது தங்கள் தந்தையின் இழப்பை மனரீதியாக எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான சிறப்பு "தெரபி' சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவல்லிக்கேணியில் ஒரு அடகு கடையில் கன்னம் வைத்து கொள்ளை.. அது பற்றி ஒரு போலிஸ் ரிப்போர்ட்...இதை செய்தவன் ஷேக் என்பவன்.. ஒரே ஒரு முறை மட்டுமே அவன் போலிசில் பிடிபட்டிருக்கிறான்.. அவன் சமீபத்திய புகைப்படம் இல்லை.. அவனை பிடிப்பது கடினம்.. இரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு இடத்தில் அதே பாணியில் கொள்ளை நடை பெற்றது..

ஒரு மாடி வீட்டில் காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்து படுத்து இருந்த பெண்ணின் சங்கிலியை ஒருவன் அறுத்து விட்டு ஓடி விட்டான்.. அந்த பெண் அவனை பார்த்து விட்டாள்.. போலிஸ் ரிப்போர்ட் இது. நானும் அந்த ஸ்பாட்டில் இருந்தேன்.. நண்பரின் வீடு அது..

ஏம்மா. குள்ளமா இருந்தானா?

ஆமாங்க.. மாடியிலிருந்து குதிச்சு ஓடிட்டான்..

அப்ப.. அது குள்ள ராஜேந்திரன் தான்.. அவன் எவ்வளவு உயரமா இருந்தாலும் அசால்ட்டா குதிச்சுடுவானே.. ம்ம்ம் அவனை பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்..

வாழ்க தமிழக காவல் துறை...


நெல்லையில் ஒரு குடிமகன் புல் மப்பில் வேட்டி சட்டையை கழட்டி வைத்து விட்டு தாமிரபரணியில் குளித்து கரையேறினால், சட்டையை காணும். தலைவர் நேராக போலிஸ் ஸ்டேஷன் படியேறினார்.. காணாமல் போன சட்டையில் தான் போக வேண்டிய இடத்தின் விலாசமும்,ரூ 125/- ம் இருந்தது. அதை கண்டுபிடித்து தரும்படி சலம்ப, மக்கா.... நம்ம போலிஸ் அவரை டின் கட்டியிருக்கிறார்கள்.. மப்பர் அடுத்து செய்த காரியம்தான் சூப்பர்.. ஒரு புகார் மனு தயாரித்து ,காவல் நிலையம் வாசலில் இருக்கும் பிள்ளையாரிடம் கொடுத்து விட்டு நடையை கட்டினாராம்.. வடிவேலுக்கு பொருந்தும் இல்ல??

பதிவில் இருக்கும் குசும்பு நேரில் இல்லை. அட.. இந்த புள்ளையும் பால் குடிக்குமான்னு தேமேன்னு காட்சி தந்தார் சரவணன்.. சென்ற வாரம் என் அலுவலகத்தில் நடந்தது சந்திப்பு.. குசும்பன் சிறப்பு விருந்தினர். கேபிள்,ஜாக்கி, டி.ஆர்.அஷோக், ரமேஷ் வைத்யா இவர்களுடன்..ஒரு சூப்பர் ஸ்காட்ச் விஸ்கியுடன் .. நான்,கேபிள்,அஷோக் மட்டுமே அடித்தோம்.. நச்.. சரக்கு...ஒரு டகீலாவும் வாங்கி வந்திருந்தார். அதை பதிவர் சந்திப்பிற்கு பின் போட்டு கட்டுடைத்தோம்.. அதன் பின் கேபிள்
சிபாரிசு செய்த மதுரை அருளானாந்தா மெஸ்ஸில் ஜீவாகாருண்ய சாப்பாடு.. ஏவ்.... நன்றி குசும்பன்.. கடல் கடந்து வரும் பதிவர்கள் தண்டோராவின் அலுவலகத்திற்கு வரவேற்கபடுகிறார்கள்...வெல்கம்....

டிஸ்கி: பீகாரில் டாக்டரிடம் போனால்,எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கூறி நோயாளியை ஒரு குளிர்சாதன பெட்டி முன் நிப்பாட்டி, அதன் கதவை திறந்து மூடுவார்களாம்..பின்னர் மீண்டும் அதை திறந்து, சில்லர் டிரேயில் இருக்கும் பழைய எக்ஸ்ரே பிலிமை கொடுத்து அனுப்பி விடுவார்களாம்.. மருத்துவர் அதை பார்த்து, மருந்து கொடுப்பார்.. நம்ம ஊரில் ஓட்டு வாங்கும் டெக்னிக்கும் கிட்டதட்ட இப்படித்தான் போல.......

29 comments:

vasu balaji said...

அண்ணே! சூப்பர் ஸ்பீடுண்ணே. ஆரம்பத்தில இருந்து முடிவு வரை ரோலர் கோஸ்டர்ல போனா மாதிரி இருக்கு. உங்க ட்ரேட்மார்க் கவிதை தான் மிஸ்ஸிங். சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் கேபிளாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். விரைவில் மீண்டு விடுவார்.

இன்னிக்கு மானிட்டர் பக்கங்கள் அருமை. மிக மிக அருமை.

பீகார் எக்ஸ்ரே விஷயம் ஆடிப்போயிட்டேன். இப்படி எல்லாமா நடக்குது?

iniyavan said...

தலைவரே,

இந்த தண்ணி மேட்டர் இல்லாம ஒரு பதிவும் எழுத முடியாதா???

ஈரோடு கதிர் said...

குள்ள ராஜேந்திரன் மேட்டர்....

ம்ம்ம்ம் என்னத்தச் சொல்ல?

மணிஜி said...

/தலைவரே,

இந்த தண்ணி மேட்டர் இல்லாம ஒரு பதிவும் எழுத முடியாதா??//

விரைவில் உலக்ஸ் சென்னை வரும்போது ஒரு ஐந்து லிட்டர் ஸ்காட்ச் புடிச்சுகுனு வருமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்..ஏ.. அப்பா..அதிவீரப்பிரதாபா.. சொல்லுப்பா உலக்ஸ் கிட்ட..

தராசு said...

அந்த எக்ஸ்ரே மேட்டர் சூப்பருண்ணே, உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ.

கேபிள் அண்ணனுக்கு அனுதாபங்கள்.

மணிஜி said...

உலக்ஸ் நம்பர் கொடுங்க.இல்லை கால் பண்ணுங்க..9193400 89989

R.Gopi said...

//உண்ணாவிரதம் இருக்கப் போகிறாரா? இல்லை வெள்ளத்தில் அவதிப்படும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறப் போகிறாரா? என்று.. அதெல்லாம் இல்லை ஜெண்டில்மேன்.. தலைவர் போன இடம் ஒரு பிரிவீயூ தியேட்டர். எடுத்த வரை “பெண்சிங்கம்” படத்தை போட்டுப் பார்த்து திருத்தங்கள் சொல்வதற்காக போனாராம்..வாழ்க நீ எம்மான்.. பெண்சிங்கம் படத்தை வண்டலூர்ல ஒரு ஷோ போடுங்கப்பா..//

ஓப்ப‌னிங்கே டெர்ர‌ர் த‌லீவா... த‌ல‌ என்னிக்குமே ப்ரிவியூவும் கையுமா இருப்பாரு... இத்த‌ எல்லாம் க‌ண்டுக்காதீங்க‌...

//சத்தியமூர்த்தி பவன் வாசலில் கிழிஞ்ச துணி தைக்கும் டைலருக்கு வியாபாரம் அமோகமாம்.//

வெற்றி கொண்டான் காங்கிர‌ஸாரை ப‌ழித்து ஒருமுறை பொதுகூட்ட‌த்தில் சொன்ன‌து... அவ‌ன் ஒரு ப‌க்க‌ம் போறான்... அவ‌னோட‌ ஜிப்பா ஒரு ப‌க்கம் போகுது...

//இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ள இப்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.//

சூப்ப‌ர் மேட்ட‌ரு.... உங்க‌ வீக‌த்த‌ சொல்லிட்டீய‌ளா??

//ஏம்மா. குள்ளமா இருந்தானா?

ஆமாங்க.. மாடியிலிருந்து குதிச்சு ஓடிட்டான்..

அப்ப.. அது குள்ள ராஜேந்திரன் தான்.. அவன் எவ்வளவு உயரமா இருந்தாலும் அசால்ட்டா குதிச்சுடுவானே.. ம்ம்ம் அவனை பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்..//

எங்க‌ளுக்கு தெரியும்... ஆனா தெரியாது... திருட‌ன் யாருன்னு தெரியும்... ஆனா, பிடிக்க‌ தெரியாது... என்னாத்த‌ சொல்லி... என்னாத்த‌ ஆவ‌போவுது...

த‌லைவா டிஸ்கி ....... குபீர் சிரிப்பை வரவழைத்தது........

மணிஜி said...

கோபி நம்பர் கொடு..இல்லை கூப்பிடு 919340089989

பித்தன் said...

as usual u rocked with news ranges

கலையரசன் said...

அடங்கொன்னியா... இப்டில்லாம் நடக்குதா? நல்லவேளை ஃப்ரிஜ்குள்ள உக்கார வச்சி ஏ.சி ரூமுன்னு சொல்லாம விட்டாங்களே... அதுவரைக்கும் சந்தோஷம்!!

//குசும்பன் ஒரு டகீலாவும் வாங்கி வந்திருந்தார். அதை பதிவர் சந்திப்பிற்கு பின் போட்டு கட்டுடைத்தோம்.. //

அங்க உங்களுக்கு டக்கீலா... இங்க திரும்பி வர்ரப்ப எங்களுக்கு சீவாஸ் ரீகல்!!
வாழ்க குசும்பன்!! வளர்க அவரது புகழ்!!!

க.பாலாசி said...

//“There is going to be an additional headache in my Family"//

என்ன தைரியம்.....

அதான் பேர்லையே கலைஞர்ர்ர்ர்....னு இருக்கே......

Thamira said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் நடுவுல கோடோ, புள்ளியோ வச்சு பிரிச்சி எழுதுங்கன்னு எத்தினி வாட்டி சொல்றது. சும்மா ஸ்கூல் புள்ளைங்க எழுதுனா மாதிரி சொய்ய்ங்க்னு போனா என்ன அர்த்தம்.?
//

போன பதிவில் போட்டது. இங்கே ரிப்பீட்டு.! திருந்துற வரைக்கும் விடுறதா இல்லை.

Romeoboy said...

சரியான நக்கல் பதிவு தல ..

இந்த சைடு வந்து பாருங்க ..

http://ennaduidu.blogspot.com/2009/11/blog-post.html

வினோத் கெளதம் said...

தல செம ஸ்பீடு பதிவு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக மிக அருமை

உண்மைத்தமிழன் said...

தண்ணி வாங்கிட்டு வந்து கொடுத்தானா..? அவ்ளோ பெரிய ஆளாயிட்டானா அவன்..?

நல்ல வேளை.. நான் வரலை.. தப்பிச்சான்..!

நேர்ல பேசிக்கிறேன்..!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்ச,பிடிக்கிற மானிட்டர் பக்கங்கள்.வழக்கம் போல்,சுறு,சுறு,informative,நக்கல்.நடக்கட்டும்..

Ashok D said...

தலைவரே.. பதிவு சூப்பர் Scotch மாதிரியே :)

Beski said...

//என். உலகநாதன் said...
தலைவரே,
இந்த தண்ணி மேட்டர் இல்லாம ஒரு பதிவும் எழுத முடியாதா???//

அண்ணே,
மானிட்டர் பக்கங்கள்ல தண்ணி இல்லன்னா எப்படி? ஆனா மானிட்டர் இன்றே கடைசி. கொஞ்ச நாளைக்கு லீவுல போகுது.
---
ஆணி அதிகமாக இருப்பதால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இனி ஒரு வாரத்திற்கு இப்படித்தான்.
---
மானிட்டர் சூப்பர். இந்த தடவை மிக்ஸிங் கொஞ்சம் ஜாஸ்தி.
---
உ.த. அண்ணன் வாழ்க பல்லாண்டு.
---
//D.R.Ashok said...
தலைவரே.. பதிவு சூப்பர் Scotch மாதிரியே :)//
அது இருக்கட்டும். தலைல கர்ச்சிப் கட்டுன மாதிரி இருக்குற அந்த சின்னப்பையன் படம் உங்களோடதா தலைவா?

Beski said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//போன பதிவில் போட்டது. இங்கே ரிப்பீட்டு.! திருந்துற வரைக்கும் விடுறதா இல்லை.//

ரிப்பீட்டு...

செ.சரவணக்குமார் said...

மானிட்டர் பக்கங்கள் அருமை.

Indian said...

மூணு லார்ஜ் அடிச்ச மாதிரி இருக்கு.

// இப்ப திருநாவுக்கரர் வேறு புது கோஷ்டியோட //

மேலும் புது வேஷ்டியோட வேற...

Ashok D said...

நானும் சித்தப்ஸும் பக்கத்து பக்கத்து கமெண்டு என்ன பொருத்தும். சித்தப்ஸ் ஊர்லயிருந்து வரும்பொது scotch whiskey வாங்ki வந்துடுங்க.(வேறேங்க தண்டோரா ஆபிஸ்லதான்) (யாத்ரா எலலாம் பாக்கமுடியாது என்னா அவரு பெரிய பிஸினஸ் மேன், நான் தறுதலை) நாம்ம சேர்ந்துதான் குடிக்கோனம்.

நல்ல சித்தப்ஸ், நல்ல மகன்ஸ்.

நல்லதோரு குடும்பம்ப்பா

Ashok D said...

எப்பா பிராதபன்,

என் photo எங்க இருக்குப்பா... சுட்டியிடவும்

Ramprasath said...

//பெண்சிங்கம் படத்தை வண்டலூர்ல ஒரு ஷோ போடுங்கப்பா..
//
பார்த்து.. Blue Cross கேஸ் போட்டுர போறாங்க... மிருகங்கள வதை செய்ததற்காக. (அடுத்த வருச அவார்டும் அவருக்குதானா? ரைட் விடு)

//இப்போது www.vfindu.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளார்//
தகவல் சூப்பர்.

டிஸ்கி படித்து வயிறு வலித்தது.

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே....

ரோஸ்விக் said...

அருமையான கலவை தல...உங்களை சந்திக்க விரும்புகிறேன். அடுத்து சென்னை வரும்போது சந்திக்கிறேன். சரக்கோட வர முயல்கிறேன் :-))

vinthaimanithan said...

//சென்ற வாரம் சென்னை தண்ணீரில் மூழ்கியது நமக்கு தெரியும். அன்று தலைவர் யாரிடமும் சொல்லாமல் திடீரென்று கிளம்பிவிட்டார். எல்லோரும் பதறிவிட்டனர். எதாவது பிரச்சனையா? உண்ணாவிரதம் இருக்கப் போகிறாரா? இல்லை வெள்ளத்தில் அவதிப்படும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறப் போகிறாரா? என்று.. அதெல்லாம் இல்லை ஜெண்டில்மேன்.. தலைவர் போன இடம் ஒரு பிரிவீயூ தியேட்டர். எடுத்த வரை “பெண்சிங்கம்” படத்தை போட்டுப் பார்த்து திருத்தங்கள் சொல்வதற்காக போனாராம்..வாழ்க நீ எம்மான்.. //
என்னே ஒரு கலைத்தாகம்!

//அது சரி உங்க சண்டையை எப்ப நிப்பாட்டுவீங்க..? //
நல்ல கதையா இருக்கே? எங்க கட்சியோட அடிப்படை அடையாளத்தை விட்டுக்கொடுக்கச்
சொல்ல உங்களுக்கு எவ்ளோ தைரியம்?

//அப்ப.. அது குள்ள ராஜேந்திரன் தான்.. அவன் எவ்வளவு உயரமா இருந்தாலும் அசால்ட்டா குதிச்சுடுவானே.. ம்ம்ம் அவனை பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்..//

அட ஏங்க நீங்க வேற! எங்களுக்கு மாமூல் வாங்கவும், சல்யூட் அடிக்கவும், போரடிச்சா கற்பழிக்கவுமே நேரம் சரியா இருக்கு! திருடனைக் கண்டுபிடிக்கிறதா? என்ன விளையாடுறீங்களா?