அன்புத்தம்பி பெஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.தண்டமாக இருந்த நீங்கள் தண்டோரா ஆன கதையை எழுதுங்கள் என்று.என்னத்தை எழுதறது?சரி..மேட்டர் கிடைக்காம மண்டையை பிச்சுக்க வேண்டியிருக்கிறது.வர்ற வாய்ப்பை பயன்படத்திக்க வேண்டியதுதானே..
சின்ன வயசுலேர்ந்தே எழுதறதுனாலே எனக்கு வேப்பங்காய்தான்..அப்ப வயசு கோளாறு..கவிதைங்கிற பேர்ல காகிதத்துக்கு பிடிச்ச கேடுகாலம்..ஒரு பொண்ணு நல்லா எழுதறடான்னு சொன்னா..உடனெ அவ மட்டும் சொன்னாப் போதுமா?மத்த பொண்ணுங்கள்ளாம் என்ன நினைக்கிறாங்க நம்ம கவிதையை பத்தின்னு தெரிஞ்சுக்கறதுக்காக,கண்ணுல பட்ட எல்லாத்துக்கும் கவிதை எழுதி,செருப்படி பட்டு சீர்குலைஞ்ச கதை இப்ப தேவையில்லை.அதெல்லாம் ஏற்கனவே வரலாறுல இருக்கு.(தல நடிச்சது இல்லை..நம்ம தறுதலை வரலாறு)
கையெழுத்தை கூட வேற யாராவது போடலாம்னு பேங்க்ல சொன்னா,அப்பாடான்னு மூச்சு விடற ஆளு நானு..தொழில் நிமித்தம் கணீனியை நோண்டும்போதுதான் வலைப்பூக்களை பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்..அப்படியே மேஞ்சுக்கிட்டே இருப்பேன்..அப்பதான் நம்ம ஜாக்கிசேகர்,அப்ப அவரு என் பொண்ணு காலேஜ்ல போட்டோகிராபி ஆசிரியரா இருந்தாரு...அதுக்கும் முன்னாடியே நாங்க அறிமுகமானவங்கதான்.ஒரு குறும்பட போட்டியின் மூலமாக.பாண்டியில போய் தண்ணியை போட்டுட்டு மட்டையானதும் உண்டு.அவரு சொன்னார்.மணி,நான் பிளாக்ல என் கருத்தையெல்லாம் எழுதறேன்.படிச்சுட்டு சொல்லுன்னு சொன்னார்.படிச்சா எனக்கு அனுதாபம் வந்துடுச்சு.அவர் மேல இல்லை.தமிழ் மேலதான்.உடனே போன் பண்ணி தலைவா ஒரு இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணவான்னு கேட்டேன்.சிரிச்சார்.(வேற என்ன செய்வாரு.ஆனா இப்ப ஜாக்கியின் எழுத்தில் பிழைகள் குறைந்திருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம்)
அப்புறம் தொடர்ந்து பிளாக் படிக்க ஆரம்பிச்சேன்.அதுல என்னை மிகவும் கவர்ந்தவர் அன்பு நண்பர் கேபிள்..சுஜாதாக்கம் இருந்தாலும்,அவருடைய ஸ்டைல் எனக்கு பிடித்தது..அப்புறம் லக்கியின் எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடித்தது.வெரைட்டியாக கலந்து கட்டுவார்(இப்ப மல்லு கட்டறது வேற கதை).நம்மளும் ஒன்னு ஆரம்பிச்சுடலாம்னு இறங்கிட்டேன்.
13/02/2009..என் முதல் பதிவு.எடுத்தவுடனே கலைஞரை தாக்கித்தான்.அதை 50 பேர் சாரி..50 வாட்டி நானே படிச்சேன்.அண்ணன் உண்மைத்தமிழனை படிக்க சொன்னேன்.அவர் படிச்சுட்டு ஊக்கம் தந்தார்.அழகியில் டைப் பண்ணிகிடிருந்தேன்.அப்புறம் என்.ஹெச்.எம்.
தண்டோரங்கிற பேர்ல ஒரு அரசியல் சடையர் ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு.அதையே பேரா வச்சுகிட்டேன்.அரசியல் எனக்கு மிகவும் பிடித்த களம்.அப்புறம் கவிதைகள்.கவிதை எளிமையாக இருக்கணும்.2+2=4..2x2=4...அம்புடுதேன் நம்ம கவிதை..அதனால தோணும்போது கிறுக்க வேண்டியது..அப்புறம் கதை..பகடின்னு பொழுது ஓடிட்டிருக்கு.
கடல் கடந்து கோபி, கலை, ஹேமா, குசும்பன், பா.ராஜாராம், பிராபகர்(வாரம் இருமுறையாவது இருவரும் தொலைபேசுவார்கள்), ராகவன்நைஜீரியா, மகேஷ், வினோத்கெளதம் இன்னும் நிறைய அன்பு உள்ளங்கள்...தீபாவளியன்று வாழ்த்து சொல்லி ஆச்சரியபடுத்திய ரம்யா..இன்னும் எத்தனை நண்பர்கள்..அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களும்,நன்றிகளும்
பெஸ்கி.. சாரி.. டிஸ்கி :நண்பர்கள் பெயர் விடுபட்டிருக்கலாம். பொறுத்தருள்க.. அப்புறம் நான் யாரையும் அழைக்கவில்லை
30 comments:
அண்ணே,அவரு லவ்டேல் "மோடி" இல்லை மேடி..!
ச்சே...மோடின்னாலே பிரச்சனைதானோ..?
ஆவ்...
இவ்வளவு வேகமா?
நன்றி, அப்றம்... பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்... பக்கத்தில் இருக்கிறவர் ஒரு மாதிரி பார்த்தார்...
//படிச்சா எனக்கு அனுதாபம் வந்துடுச்சு.அவர் மேல இல்லை.தமிழ் மேலதான்.//
//அதை 50 பேர் சாரி..50 வாட்டி நானே படிச்சேன்//
//ஜ்யோவ்,(யோவ் இல்லிங்க)//
பல இடங்களில் சின்ன சிரிப்பு... அருமையாக ரசிக்கும்படி இருக்கிறது.
தலைப்பே அருமை (இதத்தான் முதலில் சொல்லனும்னு நெனச்சேன்).
//அரசியல் எனக்கு மிகவும் பிடித்த களம்//
உங்க கிட்ட இருந்து நெறையா கத்துக்கலாம்.
//அப்புறம் கவிதைகள்.கவிதை எளிமையாக இருக்கணும்.2+2=4..2x2=4...அம்புடுதேன் நம்ம கவிதை..//
இன்னாது...?
தலைவரே,
நான் உங்கள் நண்பர் இல்லையா???
தலைப்பும் அருமை :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அண்ணா, தண்டோரா நல்லா இருக்குண்ணா. நிறைய தகவல்கள். உங்களை பற்றிய சில புதிய விஷயங்கள். உங்களின் அன்பிற்கு நன்றி. நிறைய எழுதுங்கள். படிக்க ஆவலாய் உங்கள் அன்பு தம்பி....
பிரபாகர்.
கலக்கல் :)
நன்றி ஜாக்கி சேகர்!
கலக்கல் மச்சி!
//கையெழுத்தை கூட வேற யாராவது போடலாம்னு பேங்க்ல சொன்னா,அப்பாடான்னு மூச்சு விடற ஆளு நானு//
:-))))
///பெஸ்கி.. சாரி.. டிஸ்கி :நண்பர்கள் பெயர் விடுபட்டிருக்கலாம். பொறுத்தருள்க.. ///
ம்ம்ம்ம்ம்ம்ம்...... ரைட்டு..!
தலைவரே எனக்கு தெரிந்து சர்காஸ்டிக்கான கவிதைகள் கதைகள் எழுதுவதில் தற்போது இணையத்தில் உங்களை அடிக்க ஆள் இலலைன்னு நினைக்கிறேன். அதற்கு உதாரணம் உங்க தலைப்பே..
நிச்சயம் முதுகு சொறியும் பின்னூட்டமல்ல.. ( என்ன கிரகம்டா சாமி பாராட்டணுமின்னா கூட இவ்வளவு எழுத வேண்டியிருக்கு..)
நல்லாயிருக்கீங்களா அண்ணே....?
"டோரா" நல்லாத்தான் இருக்கு
உங்களை நீங்களே சொல்லிக்கிட்டீங்க.
நல்லாருக்கு.இப்பிடி ஒவ்வொருத்தருக்குள்லயும் எவ்ளொ கதைகள் இருக்கு.
மோடிக்கு என் அன்பையும் வாழ்த்தையும் கண்டிப்பாச் சொல்லிடுங்க.நான் இங்க காணலன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
மாட்டிக்கிட்டாரா.அதான் காணோமா !
/தலைவரே,
நான் உங்கள் நண்பர் இல்லையா???//
இதயத்துல இடம் பத்தாம நிறைய பேர் வெளிய வந்தாங்க..நீங்க அங்கயே தங்கிட்டீங்க போல
உலக்ஸ்ன்னு குறிப்பிட மறந்துட்டேன்
மணிஜி ஆனகதை அடுத்த பார்ட்டா!?
சுவாரஸ்யம் தல(லைப்பு).
// கையெழுத்தை கூட வேற யாராவது போடலாம்னு பேங்க்ல சொன்னா,அப்பாடான்னு மூச்சு விடற ஆளு நானு.//
hahaha
//கண்ணுல பட்ட எல்லாத்துக்கும் கவிதை எழுதி,செருப்படி பட்டு சீர்குலைஞ்ச கதை //
கிகிகிகிகி.)))))))))))
வரிக்கு வரி வெடிச்சிரிப்புண்ணே. :))
தண்டம் தண்டோரா ஆனது மகிழ்ச்சியான விஷயம்தானே... நல்லா எழுதியிருக்கீங்க.
//எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...
ஆவ்...இவ்வளவு வேகமா? நன்றி, அப்றம்... பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்... பக்கத்தில் இருக்கிறவர் ஒரு மாதிரி பார்த்தார்...//
அதி பிரதாபா, ஒரு மார்க்கமாதான் போயிட்டிருக்க நீயி.
nalla ezhuthirukkiingka sir
நீங்களும் ஜாக்கி அண்ணனும்
மட்டையா??
//தண்டமாக இருந்த நீங்கள் தண்டோரா ஆன கதையை//
நான் இந்த பேரிகை, முரசு அப்டின்னு (பெரிய பெரிய செட்டேல்லாம் போட்டு) நெனச்சுகின்னுயிருந்தேனே..
இயல்பான பதிவு..ரசித்தேன்.
http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html
என்னது.. தண்டோரா.. தண்டம் ஆய்ட்டாரா???
=====
///இன்னும் எத்தனை நண்பர்கள்///
என்னையும்.. குறிப்பிட்டதுக்கு நன்றி! ஹி.. ஹி..!
நம்மளையும் ஞாபகமாச் சொல்லிட்டீங்க!!
தலைப்பு அருமை..!
வழக்கம்போல உங்களது கவிதைத்தனம் தெறித்திருக்கிறது கவிஞரே..!
வாழ்க வளமுடன்..!
ஜாக்கி மூலம்தான் வந்தீங்களா..? கெரகம்..!
ஒரு ஆள் உருப்படியா இருந்ததும் பிடிக்கலையாக்கும் அந்தாளுக்கு..?
ஏன் தமிழ்மணம் ஓட்டு போட முடியலை..?
//அகநாழிகை said...
அதி பிரதாபா, ஒரு மார்க்கமாதான் போயிட்டிருக்க நீயி.//
காரணம் நீஙகதான்னு சொன்னா நம்பவா போறா(றீ)ங்க?
//..ஹாலிவுட் பாலா said...
///இன்னும் எத்தனை நண்பர்கள்///
என்னையும்.. குறிப்பிட்டதுக்கு நன்றி! ஹி.. ஹி..!..//
என்னையும்தான்.. ஹி.. ஹி..
Post a Comment