மணிலா கயிறு........
கண்ணீரால் காலை
கழுவினாள்..
மாற்றானுடன்
படுக்கையை
பகிர்ந்து கொண்ட
மனைவி..
வார்த்தை மீறி
பேசி விட்டேன்
மன்னியுங்கள் அப்பா..
ஓடிப்போன மகள்..
தகுதியறியாமல்
நீக்கி விட்டோம்
தயை கூருங்கள்
பணிக்கு திரும்புங்கள்
முன்னாள் முதலாளி...
தெருவில் நடக்கையில்
யானை வீசியெறிந்த
மாலை விழுந்தது
என் கழுத்தில்...
சட்டென்று
அறுந்தது தொடர்பு..
கண் விழித்தேன்
இன்னமும் ஈரம் காயாத
கல்லறைக்குள்....
28 comments:
கடைசி வரிகள் கனவுக்கு பதிலாய் கல்லறை.. நல்லாருக்கு தலைவரே...
மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..
//கண் விழித்தேன்
இன்னமும் ஈரம் காயாத
கல்லறைக்குள்....//
arumai!!
-Kayaar
பேட்டிக்கு வாழ்த்துகள். கவிதை..என்னா கோவம் உங்களுக்கு?
//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!!
//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!!
okay...
மக்கள் டிவி பேட்டி நான் பார்க்கவில்லை நான் ஜெயிலில் இருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை.
கவிதை அருமை....
கவிதையின் கடைசி வரிகள் எதிர்பாரா "பகீர்" ரகம்...
அப்படியே அந்த "மக்கள் டி.வி பேட்டி" பற்றி...
அத்த பாக்கறதுக்கு எதுனா சான்ஸ் கீதா இல்ல லேதா தல....
தல, மக்கள் டிவி மேட்டர் வலையேற்றப் படுமா...?
மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்
மணிஜி,
கவிதை அருமை. பிடித்திருக்கிறது. இறுதி வரிகள் வித்தியாசமான பார்வை.
- பொன்.வாசுதேவன்
டச்சிங்... தலைவரே
pitiththirukkirathu
makkal tv interview va? vaazhththukkal
கவிதை ரசித்தேன்....வேறென்ன சொல்ல....
/கலையரசன் said...
//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!//
வாங்க கலை.நன்றி..குறும்படம் பற்றிய என் நேர்காணல் மக்கள் தொலைகாட்சியில் இன்று காலை ஒளிபரப்பானது..விரைவில் வலையில்..
கோபி..ராஜீ..விரைவில் வலையேற்றுகிறென்..நன்றி
Nice one.
:):)
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!!
அசத்தல் தண்டோரா
வாழ்த்துக்கள் பேட்டிக்கு
அதுனால தான் செத்து போனாரோ!
:) //கண் விழித்தேன்
இன்னமும் ஈரம் காயாத
கல்லறைக்குள்../
கல்லறை கவிதை எதோ செய்து விட்டது
நல்ல கவிதை.மக்கள் டிவி பேட்டியும் அருமை.
Nice....Goood one....
என்னதான் மன்னிக்கும் மனம் இருந்தாலும்...!
வாழ்த்துக்கள் உங்களுக்கு.
அண்ணே கடேசி வரிகள் சான்ஸே இல்லை....
மரணம் உண்டாக்கும் வெற்றிடம் பலரின் மன்னிப்புகளில் நிரப்பபடுகிறது நண்பரே.!! உங்கள் கவிதை அதனை மெய்யாக்குகிறது.
மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//// அந்த சட்டை புதுசா.???? nice...
Post a Comment