Tuesday, May 11, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்................9


(என்ன சொன்னேன் ? இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது!)



ஞாநி வீட்டில் கேணி சந்திப்பு. இந்த முறை எழுத்தாளர் ”கருக்கு” பாமா பகிர்தலுக்கு வந்திருந்தார். எழுத தொடங்கிய சூழல், தங்கள் மக்கள் அதை எதிர்கொண்ட விதம், தலீத் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று அழகாக பகிர்ந்தார். வாசகர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார். முன்னதாக பாமாவின் “சாமியாட்டம்” சிறுகதை ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. அதுதான் நிகழ்வின் ஹைலைட். கூத்துப்பட்டறையில் பயின்ற வினோதினி அசுர அவதாரம் எடுத்தார். மெல்ல பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி பேசும் அவர், மெல்ல அவள் வீட்டு பிரச்சனைக்குக்குள் நுழைகிறார். குடகூலி வாங்கும் பருத்த உடம்புக்காரியை கொஞ்சம் பகடியும் செய்கிறார். இதற்கு நடுவில் தன் வீட்டு வேலைகளும் கை ஓயாமல் செய்து கொண்டிருக்கிறார். அன்னலட்சுமிதான் கதைநாயகி. அவள் புருஷன் குடிகாரன். பெயர் வேங்கபுலி. பெரிய வீரன்லாம் இல்லை. உதார் பார்ட்டி. . ரெண்டு பொட்டை புள்ளைங்க. இந்த கதையை வினோதினி நேட்டிவிட்டி கொஞ்சமும் குறையாமல், உடல் மொழியின் இயல்பு மாறாமல் செய்து காட்டினார். நடித்து என்ற வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை. கடைசியில் அன்னலட்சுமி ஓங்காரமாக உச்சபட்ச ஒலி எழுப்பி சாமியாடும் காட்சியை அவர் கண்முன் நிறுத்தியபோது. கூட்டத்தினர் 10 நிமிடங்களுக்கு விடாமல் கைதட்டினார்கள். ஞாநி சார் . இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துங்கள்.


நொடிக்கொரு முறை சுறா விளம்பரம். படம் பப்படம் ஆகிவிட்டாலும், கழக வாரிசின் படம் இல்லையா? வெட்கம் கெட்டத்தனமாய் இருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் “பெருமையுடன் வழங்கும் “ என்று வேறு போட்டுக் கொள்கிறார்கள். ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும். நிற்க. விஜய்க்கு பேசின சம்பளத்தில் கணிசமாக வெட்டு விழுந்து விட்டது. பெப்பே காட்டி விட்டார்களாம். அடுத்து சிங்கம், தில்லாலங்கடி என்று வரிசையாக சன் பிக்சர்ஸ் படங்கள் வரவிருக்கிறது. கழகத்தின் வாரிசுகள் சினிமாவை சுத்தமாக அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் சினிமாவே எடுக்க முடியாத நிலை வந்தே விட்டது. வாழ்க... வளர்க..

கலைஞர் டிவியிலும் பெண்சிங்கத்தின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்களை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளினால் என்ன ? சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி போலிஸ் மயம். தலைவர் மீண்டும் (எத்தனைவாது முறை ?) பெண்சிங்கம் படம் பார்க்க வந்திருக்கிறார். இந்த வருடம் தமிழக அரசின் சிறந்த படம் அதுதான் போலிருக்கிறது. சமீபத்தில் டெல்லிக்கு பெரியார் மையத்தை தலைவர் திறந்து வைத்தார். 5 மணிக்கு விழா . இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார். காரணம் 4.30 -6.00 ராகுகாலமாம். பகுத்தறிவு சூரியன். வெங்காயம்...

மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர். புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே. உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு. ஒரு கோமாளி முகமூடியும், குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா.

என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் ! கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல். ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட். காலை 10 -12 “சும்மா” என்றொரு நிகழ்ச்சி. வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா. மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார். எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. சொல்லாமல் விட்டு விட்டேன். எதை என்று கேட்காதீர்கள். நல்ல டான்சரும், பாடகியும் கூட. தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன். ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும். அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால், கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம்..


சுஜாதா விருதுகளில் சாருவின் பேச்சு கொஞ்சம் ஓவர்தான். அநியாயத்துக்கு மனுஷ்யபுத்திரனுக்கு சொம்படிக்கிறார் சாரு. என்னமோ உயிர்மைதான் சுஜாதாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது பேச்சு. படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது. மாற்று கருத்து இருக்கலாம்.
பேராசிரியர் ஞானசம்பந்தனின் பேச்சில் கண்ணில் நீரே வந்து விட்டது . சிரித்து, சிரித்து. ஒரிஜினல் சுஜாதாவின் பேச்சு எளிமையாக இருந்தது. நெகிழ்ச்சியாக வும் கூட. சுஜாதா என்கிற மந்திரம் எவ்வளவு வலிமை என்பதற்கு வந்திருந்த கூட்டமே சாட்சி. அன்று இரவு அவர் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஜால்ரா சத்தங்களை தவிர, நல்லதொரு நிகழ்வு.ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.

அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன. சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி(படத்தை காண்க. ) நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள். கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே. எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் ? திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும்.

எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரிதான் என்று ஒரு நண்பர் சொன்னார். அட.. காரைக்”காலும்” பிடிக்கும் சார்..ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான். வேண்டுமென்றால் பாண்டியை மிகவும் குடித்த ஊர் என்று வைத்துக் கொள்ளலாம்..


டிஸ்கி கவுஜை :

சில கேள்விகளுக்கான
பதில்களில் ஒளிந்திருக்கும்
கேள்விகளுக்கு ஏனோ
பதிலே கிடைப்பதில்லை





37 comments:

Vidhoosh said...

ஏனோ பதிலே கிடைக்காத கேள்விகளுக்குள்
ஒளிந்திருக்கும் பதில்களுக்கு
சில பதில்களுக்கான கேள்விகள் ...

கை சுளுக்கிக் கொண்டது. அப்புறம் வரேன்.

சங்கர் said...

லேகா செய்வது விமர்சனம் அல்ல, அறிமுகம் என்பது என் எண்ணம்

வாசிப்பு அனுபவம் என்பதை உணர்வு சார்ந்த நிலை தாண்டி, விவரிக்க முடியாமல் திண்டாடும் என் பார்வையில் அது தகுதியான விருதே

சங்கர் said...

இங்க ஒருத்தரு விமர்சனம் பண்றேன்னு சொல்லிட்டு புத்தகத்தை விட பெருசா ஒண்ணு எழுதியிருக்காரு, படிச்சீங்களா ?

Raju said...

வணக்கம் நண்பரே,

இதென்ன மானிட்டர் பக்கங்களின் நீட்சியா அல்லது அதன் வேறு படிமமா என்பதை சற்று தயை கூர்ந்து விளக்கவும்.

மேலும்,பெரியார் மையம் என்று கூறிப்பிட்டுள்ளீர். அதை கலைஞர் தொலைக்காட்சியில் ”மய்யம்” என்று விளித்ததாக கண்டேன்.இரண்டும் சரியே.!என்கிறது இலக்கியவாதிகளின் தரப்பு.

அட்சயத் திரிதியை அன்று தங்கம் வாங்குவது இப்போது அவுட் ஆஃப் பேஸனாகிவிட்டதாம்.ஒன்லி பிளாட்டினம்தானாம்...! வெள்ளைக் கலர் ஜிங்குச்சா.

உங்களுக்கு மட்டும் புரியறமாதிரி ஒரு சமன்பாடு சொல்கிறேன்.
தீபாவெங்கட் = விஜயசாந்தி.
:-)

vasu balaji said...

அது உமாவா:))

Raju said...

\\வாசிப்பு அனுபவம் என்பதை உணர்வு சார்ந்த நிலை தாண்டி, விவரிக்க முடியாமல்\\

இவ்வரிகளுக்கு எங்கேனும் கோனார் நோட்ஸ் கிடைக்குமா..?

மறத்தமிழன் said...

மணிஜி,

ஜு.வி.படித்த திருப்தி...

நல்ல விளாசல்...

சங்கர் said...

@ ♠ ராஜு ♠


கோனார் பாவம் விட்டிடுங்க, மணிஜி சொல்லுவாரு கேட்டுக்குங்க

மணிஜி said...

ராஜீ என்கிற டக்ளஸ்... உனக்கு தெரியாததா?

மணிஜி said...

மறுபடியும் ராஜீ..எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மணிஜி said...

பாலா சார்.அது உம்மா....

மணிஜி said...

என் சுந்தரி என்று சொன்னால் புரியுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

present maniji

CS. Mohan Kumar said...

சென்னை வெயிலை விட செம சூடா இருக்கே.. ம்ம்ம்

iniyavan said...

//ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.//

எனக்குத் தெரியும் அந்த காரணம். நேரில் சந்தித்த போது பல முறை அன்று உங்களை அறியாமல் சொன்னீர்கள்.

இரும்புத்திரை said...

அந்த விழாவிற்கு போனதின் நான் ரகசியம் சொல்லட்டுமா நானும் கொஞ்சம் பேசட்டுமா

நேசமித்ரன் said...

//ஏனோ பதிலே கிடைக்காத கேள்விகளுக்குள்
ஒளிந்திருக்கும் பதில்களுக்கு
சில பதில்களுக்கான கேள்விகள் ...//

அண்ணே !!!!!!

இடுகை...

சைட் டிஷ் காரம் அங்கங்கே சின்ன வெங்காயம் :)

அபி அப்பா said...

\\என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் ! கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல். ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட். காலை 10 -12 “சும்மா” என்றொரு நிகழ்ச்சி. வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா. மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார். எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. சொல்லாமல் விட்டு விட்டேன். எதை என்று கேட்காதீர்கள். நல்ல டான்சரும், பாடகியும் கூட. தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன். ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும். அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால், கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம்..

\\
வேண்டாம் மணிஜி! விட்டுடுங்க! வலிக்குது!அழுதுடுவேன்!!! இது என் ஏரியா உள்ள வராதீங்க!

Ahamed irshad said...

//ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான்.//

நம்ம ஊரு ஊருதான்..

இப்படிக்கு

தஞ்சாவூர் மாவட்டத்துக்காரன்

Ahamed irshad said...

//ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும். ///

True True....

வால்பையன் said...

//மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர். புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே. உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு. ஒரு கோமாளி முகமூடியும், குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா.//


கொஞ்சம் கூட வெக்கமில்லாம இந்த அரசியல்வாதிங்க இருக்குறாங்களே! வீட்ல பொண்டாட்டிங்கெல்லாம் மதிப்பாங்களா இவங்கள!

பா.ராஜாராம் said...

கோவில் திருவிழாவிற்கு டொனேசன் வாங்க வந்தேன்.கோபமா இருக்கீங்க போல டைரக்டர்...

"நான் கொஞ்சம் பேசிக்கிரட்டுமா?"-ன்னு உமா கேட்பது போல் இருக்கு மணிஜி..புகைப் படத்தில்.

விடுங்க ஸ்வாமி,பேசட்டும்..மனசில் எவ்வளவு இருக்கோ? :-)

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

உங்களுடைய பொங்கித் தீர்த்தலுக்கு என்னுடைய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

நீங்க விளம்பரப் படம் எடுப்பீங்கன்னு தெரியும். அதுக்காக போட்டோவை போட்டு ஆதாரத்தை காட்டணுமா..?

Cable சங்கர் said...

மணிஜி.. நாம் ஏன் அங்க போனோம்னு வெளியிட்டிருராதீங்க.. போட்டி ஜாஸ்தியாயிரும்..

அகநாழிகை said...

//சில ரசனைகள் ரகசியமானவை//

மணிஜி,
என்னோடு போட்டியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

malar said...

''''அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன. சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி(படத்தை காண்க. ) நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள். கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே. எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் ? திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும்.'''




இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லனும்..

நல்ல விமர்சனம்...

Jackiesekar said...

(என்ன சொன்னேன் ? இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது!)//

ஏம்பா அது என்னவெனா பில் பண்ணிட்டு போவட்டும்.. இந்த மாதிரி ஏதாவது சொல்லறச்சே என்னையும் கூப்பிடுப்பா.. வந்து பார்க்கின்றேன்..

பத்மா said...

அந்த புகைபடத்தில நீங்களா மணி ஜி ?
தீபா வெங்கட்டை சொல்றீங்களே ? ராணி முகர்ஜி வாய்ஸ் எப்பிடி ?செம இல்ல?

Chitra said...

சில கேள்விகளுக்கான
பதில்களில் ஒளிந்திருக்கும்
கேள்விகளுக்கு ஏனோ
பதிலே கிடைப்பதில்லை


...... சரி, சரி, சரியே........ சூப்பரா எழுதி இருக்கீங்க...... பாராட்டுக்கள்!

Unknown said...

//என்ன சொன்னேன் ? இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது!//

எங்களுக்கு தெரியாதா என்ன?

Ganesan said...

ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.

அவங்க யாரு??

Thamira said...

வழக்கம் போல எல்லாம் சுவாரசியம்.

//5 மணிக்கு விழா . இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார். காரணம் 4.30 -6.00 ராகுகாலமாம். பகுத்தறிவு சூரியன். வெங்காயம்...
//

சும்மா இந்தப்பத்திரிகைக்காரங்க மாதிரி நேர்ல பாத்தமாதிரியே பேசக்கூடாது..

Romeoboy said...

என்ன தல கலைஞர் இல்லாத செய்தியே வராதுபோல இருக்கு உங்க பதிவு ..

எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

http://romeowrites.blogspot.com/

மணிஜி said...

வித்யா..தென்னமரக்குடி எண்ணெய் அனுப்பவா?

சங்கர்..நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்(லாம்)

டக்ளஸ் அடி பின்னி விட்ருவேன்

பாலா சார் நிச்சயம் உமா இல்லை..ததபா

மோகன் ,உலக்ஸ் நன்றி(நான் சொன்னது எப்ப?)

நன்றி மறத்தமிழன்

நன்றி டிவிஆர் சார்

நன்றி அரவிந்த்

நன்றி நேசமித்ரா

அபி அப்பா..இது அநியாயம்.அடுத்த வாட்டி தீபா கிட்டயே கேட்றலாமா?

வாங்க அஹமத்

வால் நன்றி

பாரா சீக்கிரம் முகம் காட்டு
நன்றி சித்ரா
உத அண்ணே..ஒரு விளம்பரம்தான்

வாசு டீலா..நோ டீலா...

நன்றி மலர்

ஜாக்கி அடுத்தவாட்டி கண்டிப்பா

ஆதி நன்றி

வாங்க பத்மாஜீ

காவேரி அது ஒரு பெரிய ரகசியம் இல்லை. ததபா

கேபிள் அது எல்லாருக்கும் புடிக்கும்.

செந்தில் வாங்க . நன்றி

ரொமியோ நன்றி..உங்க பிளாக் படிக்கிறேனே..

எறும்பு said...

//ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.//

வீட்டில் உள்ள தமிழச்சிக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆயிடும். நான் உங்க மனைவிய சொன்னேன்.
;)))

Unknown said...

முதல் பத்தி அருமையாக இருந்தது மணி...

/--படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது.--/

படித்த புத்தகம் சுவாரஸ்யமாக இருப்பின் அதை லேகா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். விமர்சனமாக அவர் ஏழுதுவதாக எனக்குத் தெரியவில்லை. தீவிர வாசகியின் பகிர்வாகத் தான் எனக்குப் படுகிறது.

நிறைய பேர் எழுதி பாதியில் விட்டுவிடுகிறார்கள். அவருடைய தொடர் முயற்சிகு கிடைத்த நல்ல விருதாகத்தான் எனக்குப் படுகிறது.

காஞ்சி முரளி said...

enunga..
neenga sonneergalnu...
tanjavur ponaa... (en mamiyar orungo)
veyil manusana savadikkuthu...

natpudan..
kaanchi murali...