Friday, May 21, 2010

பேசிக் கொண்டிருக்கிறார்கள்


அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உரக்க ஒலிக்கும் மெளனமே சாட்சியாக
உறங்கி கொண்டிருக்கும்
சில வார்த்தைகளும் அதை
ஆமோதிக்கின்றன

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வெறுமையிலிருந்து வெறுமை நோக்கி
செல்லும் வழியில் இடைப்பட்ட இடத்தில்
விரவியிருக்கும்
பிரியங்களின் மேல் நின்று கொண்டு

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
முதலில் யார் கழட்டுவது முகமூடியை
என்ற யோசனையின் ஊடே

கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
நீதான் இல்லை நான் தான் இல்லை
நாம்தான் என்பது அவர்களுக்கு
தெரிந்தேயிருக்கிறது
ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்
அதுவரை பேசிக்கொண்டே இருக்கட்டும்

20 comments:

vasu balaji said...

பலே!

Thamira said...

புரியலை பாஸ்.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க மணி ஜி !

ஏதோ ஒன்று உடையத்தானே காத்திருப்பு...

ராமலக்ஷ்மி said...

அருமை மணிஜீ.

புரிந்தவரை ரசித்திடணும் ஆதி:)!

செ.சரவணக்குமார் said...

//கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
நீதான் இல்லை நான் தான் இல்லை
நாம்தான் என்பது அவர்களுக்கு
தெரிந்தேயிருக்கிறது
ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்//

இந்த வரிகளிலேயே இருக்கிறேன்.

Excellent Maniji.

ஈரோடு கதிர் said...

அண்ணே...
அசத்தல்

எல் கே said...

//புரியலை பாஸ்.///

repeatt

Vidhoosh said...

இந்த மௌனம் உடைந்தால் பிரளயம்தான்..
இந்த மௌனம் அடர்த்தியா பயம்மா இருக்குங்க மணிஜி..

அகநாழிகை said...

நல்லாயிருக்கு மணிஜி.

கமலேஷ் said...

நல்லா இருக்குங்க...

Paleo God said...

சூப்பர்! :))




(மெரீனாவுக்கு வரும் ஜோடிகள் சார்பா கமிஷ்னர் அபீஸ்ல, இதையே மனுவா கொடுத்துடலாம் தலைவரே!)

பத்மா said...

இடைப்பட்ட இடத்தில்
விரவியிருக்கும்
பிரியங்களின் மேல் நின்று கொண்டு


அங்கே இருந்தாலே போதுமே ..முகமூடி திறந்தாலும் பயம் வராது ..
அருமையான கவிதை மணிஜி

மோனி said...

..//ஆதிமூலகிருஷ்ணன் said...
புரியலை பாஸ்//..

ஆதிக்கே புரியலைன்னா
அந்தத்துக்கு எப்படி புரியும்?

Jackiesekar said...

இது கூடவா பிரியலை..

Chitra said...

அருமை. :-)

பா.ராஜாராம் said...

excelent maniji!!!

Romeoboy said...

கொஞ்சம் புரியுது .. நிறைய புரியல ..

புலவன் புலிகேசி said...

ம் நல்லா இருக்கு தல...

மணிஜி said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே

அம்பாளடியாள் said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ......