
தண்டோரா குடும்ப விருதுகள் -2010
வணக்கம். தண்டோரா குடும்ப விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். அன்புடனா என்றால் இல்லை என்றும் ,ஆமாம் என்றும் இரண்டு விதமாகவும். இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்கிறோம். பரிசு வழங்க வந்திருக்கும் முக்கிய பிரமுகர்களையும் வரவேற்கிறோம்.ஆக்சுவலா நாங்க அவங்களை கூப்பிடலை.அவங்களேதான் வந்தாங்க. சரின்னுட்டோம்
முதலில் சிறந்த நடிகர் விருது. வழங்க வருபவர் ராதிகா .
வனக்கம் அன்பு நேயர்கலே.(அவருக்கு இன்னும் மழலை போகலைங்க)
எங்கப்பாவோட காலத்துலேர்ந்து நான் நடிக்கிறவங்களை பார்க்கிறேன். அவரோட நடிச்சு, இன்னும் எல்லோரோடவும் நடிச்சாலும், யாராலும் வெளியே சொல்லமுடியலை. எதைன்னா அவர் நடிக்கிறாருங்கிறதை. அப்படிப்பட்ட இடத்துல அவரு இருக்கிறாரு. எங்கப்பா ஸ்தானம். என்னோட திருமணத்துக்கெல்லாம் வருவாரு..பலத்த சிரிப்புடன்.அநேகமா அடுத்த வாட்டியும்...கரகோஷம்..அவர் வேற யாரா இருக்கமுடியும் ? நம்ம தலைவர்தான். தமிழனத்தலைவர்தான்
அடுத்து சிறந்த எழுத்தாளர் விருது. வழங்க வருபவர். சொம்பு கவிஞர் வாலி
கொஞ்சம் இருங்க . வெற்றிலை சீவல் போட்டுக்கறேன். தலைவர் தப்பா நினைக்கமாட்டார். வாய் கொப்பளிச்சுக்கிறேன். இப்ப ஆரம்பிக்கிறேன்.
எழுத்தாளர்னு சொல்லிட்டு வேற யாரையும் பற்றி இவர் வாழுற காலத்தில் அல்லது இவர் ஆட்சியில் இருக்கும்போது நினத்துக்கூட பார்க்கமுடியுமா என்ன? பாலைவனத்தில் ரோஜாக்களை பதியம் போட்டவர். பாசப்பறவைகளை ஒன்று சேர்த்தவர் . அப்போது அவர் இதயம் இனித்து, கண்கள் பனித்ததை தமிழகம் மறக்க முடியுமா என்ன? சிறந்த படிப்பிருந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியுமா என்ன? என்ற விதியை தகர்த்து பலரை மந்திரிக்கியாக்கியவர்.(அவர்களில் பலரை எந்திரிக்க சொல்லியும் அவர்கள் இப்போது முடியாதென்கிறார்கள். கரண்ட் கட்டாகிறது)
இன்று கூட இளைஞனாய் இருந்து கொண்டு, பெண் சிங்கத்துக்கு பிரசவம் பார்க்கிறார். பதிபக்தியை பற்றி பக்கம் பக்கமாய் விளக்கம் கொடுக்கிறார்.அதற்கு இவரைத் தவிர வேறு யாருக்கு தகுதி இருக்க முடியும்?ஆகவே சிறந்த எழுத்தாளருக்கான விருதை சொம்மொழி காக்கப்போகும் சிங்கத்துக்கு வழங்குகிறேன். (தலைவரே அப்பல்லோ நன்றிக்கடன் கொஞ்சம் கழிந்ததா?)
அடுத்து சிறந்த வசனகர்த்தா விருது. வழங்க வருபவர் கவிப்பேரரசு( தலையெழுத்துடா தமிழனுக்கு) வைரமுத்து.
சூரியனுக்கு சூடு வைத்த சுடரொளி
சுமாரையெல்லாம் சூப்பராக்கிய
சுடலைமாட சாமி
பேனாவை திறந்தால் ஒன்று
வசனம் இல்லை கடிதம்
இரண்டிலும் மக்கள் நலனே
பிரதானம்
இன்று கூட இளைஞனுக்கு எழுதியதை
தமிழனுக்கு தாரை வார்த்த
தங்கமகன்
அவருக்கு நிகராக
இன்னொருவரை தேட
அடுத்த ஆட்சி மாற்றம் வரை காத்திருக்க
எனக்கு பொறுமையில்லை
அதற்கு சாத்தியமுமில்லை
காசா, பணமா ?எத்தனையோ எனக்கும் செய்த
வித்தகனுக்கு முத்தமிட்டு
முகமன் செய்கிறேன்
முத்தமிழே..உங்களுக்கு பாராட்டு பிடிக்காது(யாருமற்ற இடத்தில்)
என்று தெரியும்.
தமிழுக்காக ஏற்றுக் கொள்ளவேண்டும்
அடுத்து சிறந்த தமிழனுக்கான விருது. வழங்க வருபவர்கள். திரு அமிதாப்பச்சன், திரு சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு பால்தாக்கரே.
மேற்கண்டவர்களுக்கு தமிழை பற்றியும், தமிழனைப்பற்றியும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் ,இவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது யாரைத்தெரியுமா? ஆடியன்ஸ் கைத்தட்டல்.(வீரமணியும், பால்தாக்கரேயும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள
சட்டசபை காவலர்,
திட்டமிடும் திங்கள்
செம்மொழி செவ்வாய்
புரையேறும் புதன்
விடிவெள்ளி வியாழன்
வெள்ளி சனி ,ஞாயிறும்
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
வழங்க இருக்கும்
கடைதேங்காய்
டாக்டர், இஞ்சீனியர்,
கம்பவுண்டர் கலைஞர் அவர்களை
மேடைக்கு அழைக்கிறோம்.
சொல்ல மறந்து விட்டோம்.
பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
34 comments:
சொல்ல மறந்து விட்டோம்.
sooooppppar
அசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்!! :)
//பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.//
ரிப்பீட்டு...........
பாத்துண்ணேய்... ஜூதானமா இருந்துக்குங்க...
//பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.//
பாருங்கண்ணே, இதுவும் ஒரு நாள் நடக்கும்.
நிகழ்ச்சிய தொகுத்து வழங்குனது நக்கீரன் கோபால்தானே?
ஆஹா... விருது.. சூப்பர் அப்பே..
கலக்கலான விருதுகள் மணிஜீ, ஷூட்டிங் நல்லா நடந்ததா?
இட்கையை விட பின்னூட்டத்துலதான் பல மேட்டருங்க தெரியுது:)). நடக்கட்டு!
தாத்தாவை சிறந்த முறையில் திட்டுபவர் என்கிற விருது எனக்கா..? உங்களுக்கா..?
தண்டோரா விருதைப் பெற்ற பதிவர் தலைவனுக்கு பாராட்டு விழா எப்போ?
Present Maniji
கலக்கலு.
aakaaஆகா நான் ஒண்ணுமே சொல்லலப்பா - நல்வாழ்த்துகள் மட்டுமே
சூர்யா ஆதித்யா சன் ன்னு பேர் வச்சு பிலிம் காட்டுனா கணக்கு காட்டுனா நம்புறீங்கல்ல அது மாதிரிதான் இதுவும்
இதையும் நம்பனும் ஏன்னா நாந்தான் தமிழ் தமிழ் தான் நான்
கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டை ஆய் மிதப்பேன்
வர்ற மாசம் வச்சிருவோமா..? பாராட்டு விழாவை
கேபிள் சங்கர்
எப்போ கொடுக்க போறீங்க மணிஜீ.
உங்களோடு பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
சரவணன் பேசினாரா?
அட ச்சே... நானும் ஏதோ புது விருது க்ரியேட் பண்ணி நம்மளுக்கெல்லாம் கொடுக்கறீங்கன்னு நினைச்சேன்.. ஏமாத்திப்புட்டியளே மணிஜி..
அடுத்து சிறந்த வசனகர்த்தா விருது. வழங்க வருபவர் கவிப்பேரரசு( தலையெழுத்துடா தமிழனுக்கு) வைரமுத்து.
//
தண்டோரா சார்!
வாலிக்கு மட்டும் சொம்பு பட்டம் கொடுத்துட்டு கர்வம் புடுச்ச வைரத்துக்கு சொம்பு பட்டம் கொடுக்காம அம்போன்னு விட்டுட்டியளே...
கோவிக்க மாட்டாரா?
அதனால உயர்ந்த சொம்பு என்கிற கண்ணியமான பட்டத்தை வழங்குகிறேன்!
நையாண்டி தர்பார்......
நடத்துங்க...நடத்துங்க...
வாழ்த்துக்களுடன்
ஆரூரன் விசுவநாதன்
கலக்கல் விருதுகள்! ஹி,ஹி,ஹி,ஹி.....
//அடுத்து சிறந்த எழுத்தாளர் விருது. வழங்க வருபவர். சொம்பு கவிஞர் வாலி//
சொம்புன்னா சொம்பு அக்மார்க் முத்திரை வாங்கின சொம்பு தல...சூப்பரு...
:)
கொடுத்து வச்சவர் தான் .கலக்குங்க
அண்ணாச்சி வீட்டுக்குப் பத்து ஆட்டோ நாலு சுமோ பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
சாரி பாஸ். மரண மொக்கை :-(
42 செகண்ட் வேஸ்ட்!
பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
விவேக்க விட்டுட்டீங்களே ஜி :-)
//அண்ணாச்சி வீட்டுக்குப் பத்து ஆட்டோ நாலு சுமோ பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//
அடியாட்கள் நான் அனுப்பட்டுமா...
யெஸ் ஸார். கொஞ்சம் மொக்கைதான் ஸார். இருந்தாலும் பரவால்ல சார்.
அடைப்புக் குறிப்புகள் அட்டகாசம்
Maniji... பாத்து... விலாவை சிறப்பிக்க போறாங்க :))
ஊருக்கு போயிட்டு வந்தாச்சு; நாங்க போன நேரம் கொஞ்சம் மழை; அதனால் வெயிலில் இருந்து ஓரளவு தப்பினோம்
நண்பர்ளின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி...நன்றி கோவியாரின் முதல் பின்னூட்டத்திற்கும்..
அப்புறம் ஸ்பெஷலா தலையில் ஒரு குட்டு வைத்தவருக்கும் நன்றி...(சென்னை வரும்போது சொல்லுங்க)
இது மரண மொக்கையல்ல...
அந்த மொக்கைக்கு கொடுத்த மரண விருது...
பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
முடியல.. :))))
Post a Comment