Thursday, May 13, 2010

சத்யா..வசு..மற்றும் நான்


இன்று நண்பர்கள் தினமாம் . பத்திரிக்கையில் செய்தி படித்தேன். ராகுல் நிறைய ஃப்ரெண்டுஷிப் கயிறுகள் வாங்க காசு வாங்கி கொண்டான். இப்போதெல்லாம் தினம், தினம் நண்பர்கள் மாறுகிறார்கள். முன்பெல்லாம்.. எனக்கு என் பழைய நண்பர்கள் நியாபகம் வந்தது . கொஞ்சநாள் காதலித்து பின் நண்பியாகி போன சத்யாவின் நியாபகமும்..


எதை தேடற டார்லிங் என்றேன்.

வசுமதி. என் மனைவி. பிரோவையெலாம் கலைத்துப் போட்டு எதையோ சீரியஸாக தேடிக்கொண்டிருந்தாள். இந்த நகைசீட்டு புக்கு காணுங்க. அதைத்தான். போன மாசம் நீங்கதானே கட்டினீங்க? உங்க பைக் பெட்டியில் இருக்குமோ? அவள் கண்களில் பொய் தெரிந்தது. அப்பட்டமாக.


வசு எனக்கு பெரிசா ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பிடிக்காது . நான் கொஞ்சம் ஓப்பன் டைப் . வாரம் ஒரு முறை ஃப்ரெண்ட்ஸோட பார்ட்டி உண்டு. ஒரு நாளைக்கு அஞ்சு சிகரெட் பிடிப்பேன். அப்புறம் கல்யாணம் கச்சேரின்னா சீட்டாடுவேன். இதுவரைக்கும் பெரிசா சேவிங்க்ஸ் ஒன்னும் கிடையாது. அவ்வளவுதான். உன்னை பற்றி கொஞ்சம் சொல்லேன். நீ அழகா இருக்கங்கறதை தவிர . ம்ம் இன்னொன்னு . நான் ஒரு பொண்ணை காதலிச்சேன். சத்யா என்றேன் ஒரு சிகரெட் பிடிக்கலாமான்னு அவள் அனுமதியை எடுத்துக் கொண்டபடி முதல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம் . அப்புறம் காதலிச்சோம். வெளியில் எங்கயும் சுத்தினது இல்லை .(ஜானியில் “காற்றில் எந்தன் கீதம் “ பாட்டில் ஸ்ரீதேவியின் அழகுக்கு எதுவும் ஈடில்லை என்று சத்யாவிடம் தேவி பாரடைஸில் கிசுகிசுப்பாய் சொன்னதை மறந்துவிடுகிறேன்) . என்னவோ சின்ன பிரச்சனை . கொஞ்சம் இல்லை நிறைய ஈகோ அவளுக்கு. இல்லை ரெண்டு பேருக்குமே. ஆனா அவளுக்கு கொஞ்சம் அதிகம் என்னை விட . பிரிஞ்சுட்டோம் . வசுமதியின் பார்வை இதை நம்பவில்லை என்றது. சரி வசு உனக்கு எதாவது காதல் அனுபவம் ? சும்மா சொல்லு . இன்னிக்கு நம்ப ஃப்ர்ஸ்ட் நைட் . ஒளிவு மறைவு இல்லாம இருப்பமே என்று நான் சொன்னதை அவள் ரசிக்க வில்லை. சாரி வசு . நான் ஓப்பனா சொன்னதால கேட்டேன் . ஃபர்கெட் இட் .

வசு மும்முரமாக தேடிக் கொண்டிருந்தாள் அந்த பாஸ் புக்கை உன்கிட்ட கொடுத்திட்டேன் வசு. வேற எங்கயாச்சும் வச்சிருப்ப . இல்லைன்னா டூப்ளிகேட் வாங்கிக்கலாம் விடு என்றேன் . சிகரெட்டை அணைத்தபடி. அவள் கண்களில் எதோ கலக்கம். கொஞ்சம் அழுதிருப்பாளோ என்றும் தோன்றியது . அரை நாள் லீவுடா . அதான் சீக்கிரம் வந்துட்டேன். பசிக்குது என்றேன். சாப்பாடு வழக்கத்துக்கு மாறாக இருந்தது . ஏனோ உப்பு சப்பில்லை. கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தேன் . மீண்டும் ஒரு சிகரெட் . அஞ்சு இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. காலை பேப்பரை விரித்தேன்.


இது எப்படி வசுவின் பிரோவில் ? என் கண்ணில் இதுவரை பட்டதில்லையே . அது ஒரு பழைய பிரவுன் கவர். உள்ளே ஒரு குரூப் போட்டோ . வசுவும் அதில் இருந்தாள் . அநேகமாக பள்ளி இறுதி அல்லது கல்லூரி . வசுவின் பக்கத்தில் ஒருவன் . வசீகரமான சிரிப்புடன் . மீசையில்லாமல் இருந்திருக்க வேண்டும். சிகப்பு மையில் மீசை யாரோ அழகாக வரைந்திருந்தார்கள் . அனிச்சையாக மீசையில்லாத உதடுகளை தடவிப் பார்த்துக் கொள்ள தோன்றியது. நீங்க ஏன் மீசை வச்சுக்கலை ? வசு என்னிடம் ஒரு நாள் கேட்டது ஞாபகம் வந்தது. சட்டென்று ஒரு குயுக்தியான எண்ணம். அந்த படத்தை இடம் மாற்றி ஒளித்து வைத்தேன் . வசு கண்டுக் கொள்ளவில்லை. இல்லை எனக்கு தெரியவில்லை.


செய்திதாளில் அந்த கண்ணீர் அஞ்சலி விளம்பரம். அந்த முகம் . அந்த வசீகரமான மீசை . மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி . சசிதரன் ..தோற்றம் .. மறைவு இத்யாதிகள்.. உள்ளே வசு விசும்புவது போல் பட்டது. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். முழுதாக ஒரு மணிநேரம் . வசு கொஞ்சம் வெளியில் போகலாமா என்றேன்.


சாரி. என்னால காட்டிக்கவும் முடியலை. ஆனா முழுசா மறைக்கவும் முடியலை . ஆனா கொஞ்சம் கூட வரம்பு மீறினதேயில்லை . நம்புங்க ப்ளீஸ். வசுவின் முகத்தில் எந்த களங்கமும் இல்லை. என் செய்கை மீது எனக்கு வெட்கம் வந்தது. வசு உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்...

அவள் ஒரு கேள்விக்குறியுடன் என்னை பார்த்தாள்

அந்த புத்தம் புதிய பிரவுன் கவரை பிரித்தேன்.

35 comments:

சங்கர் said...

தலைப்பு??

கிருஷ்ண மூர்த்தி S said...

பிரவுன் கவரைப் பிரிச்சு அப்புறம் என்ன பண்ணீங்க?

ஒரு சாதாரண சம்பவத்தில் கூட கதை சொல்லும் சுவாரசியமானமுடிச்சை போடும் திறமை வெளிப்பட்ட இடம் அது!

ரசித்தேன்!

Unknown said...

கலக்கல்ஸ் மணிஜி....அருமை

Raju said...

தலைப்பில் சசிதரன் ஏன் மிஸ்ஸிங்..?!

அகநாழிகை said...

அருமை.

Vidhoosh said...

பொன் வாசு ஒரு வேரியேஷன் சொல்லிருக்கார் பாருங்க.

கிருஷ்ணார்ப்பணம்..!!!
ததா...ஸ்து!

vasu balaji said...

க்ளாஸ்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

Paleo God said...

ஜீனி மணிஜீ. :)

Unknown said...

பின்னிட்டீங்க அண்ணே... கை குடுங்க ....

செ.சரவணக்குமார் said...

இப்பிடி எழுதி எழுதியே எங்களக் கொல்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா மணிஜீ.

ஒரு சிறுகதையை அதன் எல்லா வடிவங்கள் வாயிலாகவும் முயன்று பார்க்கும் உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட் அண்ணா.

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குதுங்க கதை.

க ரா said...

எக்ஸலன்ட் மணிஜீ.

அன்பரசன் said...

கதை அருமை

Cable சங்கர் said...

cute

Unknown said...

Nalla Thirupangaloda thirumpavum padikka vaithathu

நேசமித்ரன் said...

தன்னிலையில் சொல்லும்போது எப்போதும் கிடைக்கும் ஒரு அணுக்கம்
உங்களின் இந்தக் கதையிலும்

கதையின் கட்டமைப்பில் உங்களின் செதுக்கும் நுட்பம் மிஸ்ஸிங் இதில்

கடைசி வரியில் பிரிக்கும் கண்ணி கதையை முழுமையாக்குகிறது

இரண்டு புள்ளிகளையும் இணைத்திருப்பதில் உங்களின் ட்ரீட்மெண்ட் ட்ரேட் மார்க்

க.பாலாசி said...

இப்பதான் ஆரஅமர படிச்சேன்... செம டச்சிங்.....அப்டியே மனசையும் கலங்கச்செய்யுதுங்க...

பத்மா said...

இந்த புரிதலும் ,துணைக்கு ஒரு space கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் போதுமே .இனிக்கும் இல்லறம் .எழுதும் style ஓஹோ . நிறைவா இருக்கு படிக்க

உண்மைத்தமிழன் said...

அண்ணே..!

எங்கயோ போயிட்டீங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

தலைப்புல கொட்டேஷன் மார்க்ஸ் கொடுக்கக் கூடாதுன்னு எத்தனி வாட்டி சொல்றது..?

அதைக் கொடுத்தா இப்படித்தான் நடக்கும். தமிழ்மணத்துக்கும், கொட்டேஷன் மார்க்குக்கும் பரம்பரை சண்டை..

ஒத்துக்காது..!

இளைய கவி said...

அருமை தல, பின்னி பெடலெடுக்குறீங்க.. வாழ்த்துக்கள், எனக்கு என்ன என்னமோ மனசுல வந்திச்சு..

மணிஜி said...

சங்கர் தலைப்பு தமிழ்மணத்தில் தெரியலை

கிருஷ்ணமூர்த்தி சார் நன்றி

நன்றி ஹனீப்

டக்ளஸ் அது பர்பசாகவே

வாசு இன்னிக்கு உங்கதையை விட இது சுமார்தான்.. கொஞ்சம் செயற்கையாக எனக்கு பட்டது

விதூஷ்..சம்பவாமி யுகெ

ஹீரொ ஊருக்கு வந்தாச்சா?

நன்றி மணியண்ணே

நன்றி லோராண்டி சார்

நன்றி செந்தில்

சரவணா நன்றி..மனுஷ் முழுசா முடிச்சுட்ட போல

ராமலக்‌ஷ்மி மேடம்.. நன்றி..(உங்களுக்கு என் மேல கோபம்னு நினைச்சேன்)

நன்றி ராமசாமி

நன்றி அன்பரசன்

கேபிள் நன்றி

நன்றி அசீம்

நேசன் அப்புறம் கூப்பிடு.. பேசலாம்..நிறைய


பத்மா தினம் ஒரு படம் மாத்தறீங்க?

நன்றி உண்மைத்தமிழன்

நன்றி இளையகவி..அந்த ஒரு புக் ட்யூ இருக்கு உங்களுக்கு

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு மணிஜி..

பா.ராஜாராம் said...

இப்பதான் வாசித்தேன்.

ரொம்ப பிடிச்சிருக்கு மணிஜி. :-)

கிட்டத்தட்ட தினம் ஒரு சிறுகதை, ஷூட்டிங், எப்படி இப்படி?

Prasanna said...

இரண்டு தடவை கதை படிக்க வைக்கும் டெக்னிக் ;) கதை நல்லா இருக்கு..

ராமலக்ஷ்மி said...

இது என்ன புது கத:)?

நர்சிம் said...

மா.பீஸ் மணிஜி

சு.சிவக்குமார். said...

if u don't mistake me..கதை பூர்த்தியாவதற்கு இன்னும் இரண்டு மூன்று வரிகள் பாக்கி இருப்பதாக நினைக்கிறேன்.மற்றபடி..கதை சிறப்பாக இருக்கிறது.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

மணிஜி said...

நன்றி பிரசன்னா..
உங்களின் ஒரு கவிதை(வாரமலருக்கு அனுப்புங்கள்)..அதனால் புண்பட்டிருபிரொ என்று நினைத்திருந்தேன்..சாரியும், நன்றியும்

நன்றி நர்சிம்

நன்றி சிவா

Thamira said...

கதை நன்றாக இருந்தது.

முன் பின்னான பாராக்களை ஹைலைட் செய்வது, வசனங்களுக்கு கொட்டேஷன் போடுவது இதெல்லாம் இருந்தால் இன்னும் எளிமையாக இருக்கும். கரடியா கத்தினாலும் நீங்க கேட்கமாட்டீங்கன்னு தெரிஞ்சும் சொல்றேன் பாருங்க.. என்னை என்ன பண்ணலாம்.?

vinthaimanithan said...

கொன்னுட்டீங்க போங்க!

vinthaimanithan said...

கொன்னுட்டீங்க போங்க!

ரோஸ்விக் said...

அருமை...அண்ணா :-)