Monday, May 10, 2010

ராஜாதீ ..ராஜ...யாரங்கே ?

ஒட்டு போடப்பட்டிருக்கிறது
இளவரசியின் பட்டுப்பாவாடை

இடையில் துருத்திக் கொண்டிருக்கும்
அட்டைக்கத்தின் உட்புறம் குழந்தை வரம்
கேட்டு யாரோ
எழுதிப்போட்ட திருவுளசீட்டு

பட்டத்து மகிஷியின் பதவிசு
பார்க்கிறவர்களுக்கு பொறாமை
இருபது முழம் சேலையும் அழுக்கு பஞ்சு கச்சையும்
கால்கிலோ கவரிங் தோடும்
அரை மணி நேரமாக அவஸ்தை அவளுக்கு
மாசத்தொல்லை மயிரு நாறுது

காது வரை சிரிக்கிறான் விதூஷூகன்
வற்றிய வயிறுக்கு ஏழையின் சிரிப்பு
அறிமுகம் இருக்குமா? உள்ளுக்குள் அறுக்கிறது
ஆத்தாவின் இருமல்

நேற்றிரவின் காரித்துப்பல்களை
அரிதாரம் பூசி மறைத்திருகிறான் ராஜாதிராஜ...
ஆணவமாய் அரியணையில்
துப்பியவன் முன் வரிசையில்

கனவு காணத் தெரியாத புரவி பாவம்
கொள்ளை மறந்தே விட்டது
காலாட்படையினருக்கும் யுத்த மறக்கடிப்பு
அரசு வைத்தியம் இலவசம்
எஞ்சியிருக்கும் துருவேறிய ஆயுதங்களின்
எடைக்கு எடை
காலி பாட்டில்கள் டாஸ்மாக்கில்

முடை நாற்ற திரைசீலைகள்
கரப்பான் முட்டைகளும் ,பல்லி மூத்திரங்களும்
சக பரிவாரங்களாய் வீற்றிருக்கும் அவை
திரை விலகுகிறது
ஆர்ப்பரிக்கும் விருந்தினர்கள்

கந்தலும் கிழிசலும் காஞ்சிபுரமாகின்றன
குடிகள் கோமானாகிறார்கள்

ஒருவன் மன்னனாகிறான்

இன்னொருத்தி அல்லியாகிறாள்

அவள் புருஷனுக்கு
தர்பாரில்
கால் நகத்தில் அழுக்கெடுக்கும் பணிக்கு உத்தரவு

பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது

பட்டத்து யானை
நல்ல வேளை
பிள்ளையார்
கொழுக்கட்டையை
முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு

எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள்
பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சூம்பிய மார்பும் ,செத்த இடையுமாக
அரசு நர்த்தகி
அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி

அஞ்சனம் தீட்டப்பட்டிருந்த விழிகளில்
ஒன்றில் பூ
இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம்
இன்னும் புழக்கத்தில்

சகுனியும், விதுரனும்
சரிபாதி கலந்த
சாணக்கியன்

எச்சில் ஊறுகாய்க்கு சாராயக்கடையில்

சண்டையிட்டதில்
காயம்
தண்டத்தால் ஒத்தடம்

காசென்றால் கதவை அடைக்கும் கூட்டம்

ஓசுக்கு ஊர் திரண்டு வந்திருக்கிறது

கூத்து முடியட்டும்

கூட்டி பார்க்கலாம்

வருவதை பிரித்துக் கொள்வோம் இல்லை
பிரித்துக் கொள்ள
நம்மிடம் எவ்வளவோ....
எதற்கும் ஈரத்துண்டையும்
நனைத்து வையுங்கள்
யாரங்கே?

29 comments:

Unknown said...

எங்கள் ஊரில் என் சின்ன வயதில் ராம, அரிச்சந்திர நாடகங்கள் நடக்கும், பெரும்பாலும் உள்ளூர் கலைஞர்கள் நடிப்பார்கள்,
நாங்கள் பபூனை பார்த்தவுடன் தூங்கிவிடுவோம், இப்போது ஆவலாயிருக்கிறது, நடிக்கத்தான் யாருமில்லை..

அகநாழிகை said...

ஒரு கதைக்கான விஷயம் இக்கவிதையில் உள்ளது. அருமை.

shortfilmindia.com said...

ஆமாம்.. வாசுவை வழிமொழிகிறேன்

கேபிள் சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

vasu balaji said...

சண்ட மாருதம் மணிஜீ! சபாஷ்

Unknown said...

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கிங்க. அருமை

உண்மைத்தமிழன் said...

ஒண்ணும் சொல்ல முடியலண்ணே..!

சிநேகிதன் அக்பர் said...

யாரங்கே! ஒரு சால்வை பார்சல்.

கலகலப்ரியா said...

\\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஒண்ணும் சொல்ல முடியலண்ணே..||

அதேதான்...

என்னை மாதிரி புரியாம எழுதி இருக்கிறதால.. அது என்னன்னாலும் பிடிச்சிருக்கு மணிஜி.. 0))

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு மணிஜி!

யப்போ..

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா..

விஜய் said...

நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

ஒரு கதையா எழுதியிருக்கலாம் !!!

மணிஜி said...

நன்றி செந்தில். நானும் தஞ்சையில் நாடகம், கூத்தெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த கவிதையில் இருக்கும் அரசியல் புரிகிறதா?

வாசு நன்றி...

நன்றி கேபிள்

டிவிஆர் சார் நன்றி

வஞ்சனை இல்லாமல்..நன்றி வானம்பாடிகள் ஐயா

கேவிஆர் நன்றி வருகைக்கு

சரிங்கண்ணெ விட்ருங்க..

யாரங்கே ? அக்பருக்கு ஒரு பிரியாணி (ஒட்டக) பார்சல்..நன்றி அக்பர்...

வா மக்கா...நன்றி மட்டன் சுக்கா..

நாளைக்கு ஹோம் ஒர்க் பண்ணிட்டு வரணும் ஸ்டார்ஜன்

நன்றி விஜய் வருகைக்கு...

மணிஜி said...

நன்றி செந்தழல்.. வழக்கம் போல் உள்குத்து அரசியல்தான்... கதையாகவும் எழுதலாம்..

மணிஜி said...

நன்றி..ப்ரியா.. முதலில் சொல்ல மறந்துட்டேன்..ஒரே ஜாதி நம்ம (புரியாம எழுதறதுல)

Paleo God said...

The King is dead. Long live the King!

செ.சரவணக்குமார் said...

அபாரம் மணிஜீ.

செ.சரவணக்குமார் said...

//நாளைக்கு ஹோம் ஒர்க் பண்ணிட்டு வரணும் ஸ்டார்ஜன்//

இன்னும் நாலு சாத்து சாத்துங்க மணிஜீ.

ஸ்டார்ஜன், இனிமே உள்ளேன் ஐயா சொல்லுவீங்க?

VELU.G said...

//
பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது
பட்டத்து யானை
நல்ல வேளை பிள்ளையார்
கொழுக்கட்டையை முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு
எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள் பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு
//
வரிக்கு வரி பட்டைய கிளப்பறீங்க பாஸ்

பத்மா said...

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு சவுக்கடி
உள்ளுக்குள் அறுக்கிறது ஆத்தாவின் தும்மல்

ஐயோ நிதர்சனம் .

எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள் பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சான்சே இல்ல

இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம் இன்னும் புழக்கத்தில்

ஐயோடா

யாரங்கே?
உண்மையை புட்டு வைக்கும் தண்டோராவை கடலில் கொண்டு போடு !

அருமை சார்

பாலா said...

அண்ணனுக்கு.. ரெண்டு பொற்கிழி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்.....

மங்குனி அமைச்சர் said...

//யாரங்கே?//

யாரங்கே ? யாரங்கே ?யாரடா அங்கே? நான் கூப்டாலும் வரமாற்றிங்க , மணிஜி கூப்டாலும் வரமாற்றிங்க .....................

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு மணிஜீ.

இளைய கவி said...

ரொம்ப அருமையா இருக்கு தல. அருமையான அனுகுமுறை , நல்ல கோணம்...

மணிஜி said...

நன்றி ஷங்கர்

நன்றி சரவணா

நன்றி வேலு

நன்றி பத்மா..(புரொபைல் படம் பழசு போடுங்க
)

பாலா ரொம்ப நாளாச்சு..நன்றி..(போன் பண்ணுய்யா)

நன்றி ராமசாமி கண்ணன்

யேய்... மங்குனிக்கு கூழ் சொல்லுங்கப்பா...

நன்றி இளையகவி நண்பா..உங்களுக்கு நான் ஒரு கடன் பட்டிருக்கேன்

இளைய கவி said...

//நன்றி இளையகவி நண்பா..உங்களுக்கு நான் ஒரு கடன் பட்டிருக்கேன்

May 11, 2010 11:05 AM//

அது என்னான்னு தெரிஞ்க்க ஒரே ஆர்வமா இருக்கு தல.

ராகவன் said...

மணிஜி! உங்கள் கவிதை படித்துவிட்டு எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் போய் விட்டது, நேரமில்லாத காரணத்தால் முடிக்க முடியவில்லை...

பகட்டுகள் ஆரம்பமாகும், பல வண்ண வெளிச்ச பந்தங்களில், முகம் மினுக்கும் இளவரசியின் பருக்கள் அப்பிய அரிதாரத்தின் அடியில் பதுங்கும், வளை எலிகளென. சேர்த்து வைத்துக் கொள்ள முடியாத கனவுகளின் பிரதியில் முகவடிவு தேய்ந்து வளரும், வளர்ந்து தேயும் நிலவென. நிரந்தரமற்ற எதுவும் சொற்ப நேர சந்தோசத்தின் உச்சமென, வாள்முனையின் கூரென ரத்தம் ஏங்கும், நிஜம் தங்கி போகும் சத்திரத்தில் சாசுவத சொகுசுக்காய், சுவர் முழுக்க இரத்தக்கீறல்கள் உராய்ந்து சென்றவனின் சுகம் விட்டு செல்லும் அமில குமிழ்கள் உடலெங்கும் பூத்து கிடக்கும். கண்கள் செருகி கிடந்தவனின் சுயமைதுன கிறக்கங்கள், பொழுது விடிந்ததும் பொசுக்கென்று வடியும், சுகம் ஒரு சருகின் அடியில் காய்ந்த நரம்புகளை போல சுண்டி போன ரத்தம் இழந்து கை பிடிக்க நொறுங்கும். கணக்க சுமந்த தொப்பி இறகுகள் அழுத்தி கொல்லும், பளுக்குண்டுகள் இணைத்த அவயங்களின் அசைவு அவஸ்தையாகும்.

அரவம் தீண்டிய துளைகள், உறிஞ்சி குடித்த உடைந்த மதுக்கோப்பைகள், பிடுங்கி நட்ட மயிர்க்கால்கள், எச்சிலில் மிதக்கும் பூத உடல், மீண்டு காற்று நிரப்பிய பைகளென ஊதி பெருக்கும். ஆடைகள், அணிகலன்கள், அப்பிய அரிதாரம் கொஞ்சம் புன்னகை வெந்தனழ் சுழலில் பற்றி எரியும் கச்சையும், விடாய் துணியும். எல்லாம் எரித்து சாம்பலில் புலரும் சவக்காட்டு ஞாயிறு. இச்சையில் குளிர்ந்து இரப்பையில் அடங்கும், பிசின் வியர்வை, உயிர் துளைக்கும் வண்டாய் நெடி, இறைக்கும் மூச்சு, சொற்க்கடி தடங்கள் எல்லாம் ஆளை புதைத்து தோலை சேர்க்கும்.

கொலை பழகும் கலைகள் மறந்த பொழுதுகளின் ஓரத்தில் குத்தவைத்திருக்கும் துருப்பிடித்த வேல்கம்புகளும், குத்தீட்டிகளும் வாசல் வந்து குருதி துளியும் புள்ளிகளின் மேல் வரைந்த கோலங்களின் சிக்கல்களில் நெளியும் சர்ப்பங்கள் பிளந்த நாக்கின் சாபங்களில் கருகித் தொலைகிறது யவ்வன சொப்பனங்கள்.

அருமையான கவிதை...

அன்புடன்
ராகவன்