Monday, May 17, 2010

கவிதைப்போட்டி முடிவுகள்



கவிதைப்போட்டி முடிவுகள் எப்போது வரும் என்று எல்லோரையும் போல்தான் நானும் காத்திருக்கிறேன். அண்ணன் உண்மைத்தமிழன் போட்டியில் கலந்து கொண்டாரா என்று தெரியவில்லை. பழைய கெமிஸ்ட்ரி புக்கையெல்லாம் படித்து கவிதை எழுதும் நேசமித்ரன் நகத்தை கடித்து கொண்டிருகிறார். பா.ராஜாராமை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவரும் விநாயகமுருகனும் விகடனின் ஆஸ்தான கவிஞர்களாய் விட்டார்கள். செந்தழல் ரவியின் சுன்னவினத்துவ கவிதைக்குத்தான் சிறப்பு பரிசு என்று ஒரு பேச்சும் இருக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இன்னொரு கவலை. எல்லாருமே சூப்பராய் எழுதி தொலைத்திருக்கிறார்கள் . என்ன செய்வது என்று . அநேகமாக அவரும் பைத்தியக்காரன் என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டி வரலாம். இந்த முறை தேர்ந்தெடுக்க பட்டால் நான் தான் அடுத்த பாப்லோ நெருடா என்று கேபிள் சங்கர் சாட்டில் அநேகமாக எல்லோரிடமும் சொல்கிறார். கார்ப்பரேட் கம்பர் இதில் கலந்து கொள்ள வில்லை . நேராக புக்கர்தான் என்கிறார் அவர். கோவை கவிஞர்களில் சஞ்சய்க்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக காழியூர் நாரயணன் கணித்திருக்கிறார். கோவையின் அடுத்த கலாப்ரியா அவராகவும் இருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் சுறா படத்தின் டிக்கெட்டை பத்திரப்படுத்துங்கள். லாவண்யாவின் கவிதையை படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே டெல்லியில் எல்லோரும் செம்மொழி மாநாட்டுக்கு வரவிருக்கிறார்களாம். கார்த்திகை பாண்டியனுக்கு அழகிரியின் கரங்களால் பொற்கிழி வழங்கப்பட இருக்கும் அபாயத்தை நாம் மறந்து விடக்கூடாது. இவ்வளவுக்கும் மத்தியில் சாரு வேறு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார். அது இன்னொரு டிசம்பர் 26 ஆம்.


ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு பட்டறை நடத்தப்பட்டது.அது பற்றிய ஒரு மொக்கை பார்வை..

உங்க எல்லாரையும் பஸ்சுல வரசொன்னதுக்கு காரணம் தெரியுமா?

(கோரசாக) தெரியாது சார்

நீங்க பஸ்சுல வாங்கின டிக்கெட் பின்னாடித்தான் பட்டறை முடிஞ்சவுடனே ஹைக்கூ கவிதை எழுதணும்

தண்டோரா : சார் ,நான் வித்தவுட்ல வந்தேனே.

ஆரம்பத்துலயே கிளப்பாதய்யா..நம்ம ஊர்சுற்றிகிட்ட நேத்து டிக்கெட் இருக்கும்.அதை வாங்கிக்க.இப்ப பொத்திகிட்டு உக்காரு.

அனுஜன்யா..என் பஸ் டிக்கெட் ரொம்ப பெரிசா இருக்கே..அதுவுமில்லாம அதுல ஏற்கனவே யாரோ எழுதியிருக்காங்க.

அப்படியா?நீங்க எந்த பஸ்சுல வந்தீங்க?

ஏர்பஸ்சுல

உக்காருங்க யூத்து.எப்படியும் நீங்க எழுதறது யாருக்கும் புரியபோறதில்லை

சாரி..கொஞ்சம் அக..சாரி நாழிகை ஆயிடுச்சு..வர்ற வழியில வண்டலூர்ல ஒருத்தர் கட்டுரை தரேன்னாரு..அதான்.நான் கவிதை படிச்சுட்டு கிளம்பவா?
ஜி.எச் ல ஒரு கவிஞர் மரணவாக்குமூலம் தரேன்னாரு..இதழ் ரெடியாகிட்டு இருக்குல்ல...

சரி வாசுங்க..சீ..சீ வாசீங்க

சிறைபட்ட காற்றை
உள்வாங்கி
வெளியிட்டது
வால்குழவை

மூச்சின் வெப்பம்
தணித்தது
உள்ளாடை
வியர்வையை

மேல்பாதியில்
வந்தமர்ந்த
யட்சிணி
கீழ்பாதியை
கேட்டாள்
நடுநிசி
கனவில்
நாயூறும்
போர்வையானேன்..

வாசு..இதுக்கு அர்த்தம் அடுத்த அகநாழிகை இதழில் வருமா?

அதற்குள் உண்மைத்தமிழன் யார் கிட்டயாவது ஏ-3 சைஸ் பேப்பர் இருக்கா?

எதுக்கு?

இல்லை.பஸ் டிக்கெட்டை அதுல ஒட்டி பெரிசாக்கத்தான்..

பேப்பர் அடியில ஒட்டி அதுல உங்க பேரையும்,நம்பரையும் எழுதுங்க.உக்காருங்க..

ஹைக்கூ எழுதறது எப்படின்னு இப்ப ஜ்யோவ்ராம் சொல்லுவார்.

எல்லாருக்கும்..ம்ம் எதுக்கு எல்லாருக்கும்..அந்த வார்த்தை தேவையே இல்லை..
வணக்கம்..ம்ம்ம் வணக்கம்ன்னு சொல்லி வேஸ்ட் பண்ணாம கூட இருக்கலாம்
கையை கூப்புகிறார்.

கேபிள்..குரு ஒரு சந்தேகம்...அந்த நல்ல மீன்கள் காமெடி டிராக் நீங்க எழுதினதா?

ஜ்யோவ் கையை குறுக்கால் வீசி வாயை பொத்துகிறார்.

ஆதி...குறுக்கால பேசாதீங்கன்னு சொல்றீங்க..சரியா?

ஜ்யோவ் தலை ஆட்டி விட்டு அமர்ந்து விடுகிறார்..

மைக்கை பிடிக்கும் பைத்தியக்காரன்..இதுவரை ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படின்னு சுந்தர் அருமையாக வகுப்பு எடுத்தார்..அடுத்து அண்ணன் உண்மைத்தமிழன் வகுப்பு எடுப்பார்..

அண்ணே நானா?

ஆமாம் ..நீங்கதான்..ஆனா ஒரு சின்ன திருத்தம் .நீங்க எப்படி எழுதக்கூடாதுன்னு எடுக்கப்போறீங்க..

அண்ணே மன்னிச்சுடுங்க..இப்ப நான் பிஸியா ஒரு கவிதை எழுதிகிட்டிருக்கேன்..அதானால நர்சிம்..

பாஸ் எப்பவும்
நான் கடைசிகேஸ்
இப்ப முதலில்
ரேஸ்..

பரவாயில்லை நர்சிம்..பேசுங்க

பேசறதா?அதுதாங்க நான் எழுதின ஹைக்கூ

கிளிஞ்சது..அடுத்தது யாருப்பா?

கேபிள் வருகிறார்...

வாராவாரம்
சினிமா வியாபாரம்
சிக்சருக்கு சித்து
குத்துக்கு
கொத்து..

ஜ்யோவ்ராம்...உங்க யாருக்கும் கவிதை இலக்கணமே தெரியலை..பா.ராஜாராம் நீங்க வாங்க

சுந்தரா..அன்பு மக்கா..சிவகங்கையில சாப்பிட்டமே மட்டன் சுக்கா..

அது சரி நீங்க எழுதுங்க

கன்ன சுருக்கிலிருந்து
காசு கொடுத்தாள்
கூன் கிழவி

முக்கு கடையில்
வாங்கின முறுக்கு
வாசம் அவள்
இடுப்பு சுருக்கு
பையில்..

அடுத்து மும்பையிலிருந்து நையாண்டி நைனா.

தியேட்டருக்கு
கேபிள்
குவார்ட்டருக்கு
லேபிள்
அவ்வ்வ்வ்வ்..அவ்வள்வுதாங்க..யாராவது எழுதுங்க..நா ஊருக்கு போய் எதிர் கவுஜ போடறேன்..எந்தந்த வகையிலன்னா

அனுஜன்யா பற்றியும்,பற்றாமலும்

எதுங்க?

காலையில டிபன் பத்தலை.அதை சொன்னேன்

நிகழ்வொன்று
நிகழும்போது
நிகழ்ந்தது
நிகழாதென்று
சொன்னது
நிகழ்ந்தது...

ஜ்யோவ்ராம்.. சுத்தம்.இதுக்கு நீங்க என்னை...எனக்கே புரியலை..ஒருவேளை நேசமித்ரனுக்கு புரியலாம்..ஆனா நல்லவேளை .அவர் இங்க வரலை

ஜ்யோவ் உங்க கவிதையையும் படிச்சிட்டீங்கன்னா,நாங்க இருக்கிற ரெண்டு சிண்டையும் பிச்சுகிட்டு..

இந்த கவிதை இப்ப எழுதினது இல்லை.இப்பன்னா ஒரு மூணு நிமிழத்துக்கு முன்னாடின்னு வச்சுக்கலாம்.

அய்யோ..அய்யோ

பாதி படித்த எமிலி டிக்கின்ஸ்
மீதமிருந்த எல்கான்ஸா ரம்
படித்த போதையும்
மீதிக்கு குடித்த களைப்பும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்த
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
வெளியில் சென்று
அரை போத்தல் எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூணை

இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.

அன்புள்ள
என் இனிய வலையுலக
தமிழ் பெருங்குடி மக்களே.
நான் எழுதிய இந்த ஹைக்கூ...
சாரி ஹைட்கூ
உங்களுக்கு பிடிக்கும்...

தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க

இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்

சிவராமன்..அண்ணனுக்கு மூடு கிளம்பிடுச்சு.தொடருங்க அண்ணே

ஏனிந்த
ஏணிக்கு
இப்படி
ஆசை

எத்தனை
படிகள்
தனக்கென
எண்ணி
பார்க்க

இறங்கியவனை
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறேன்
என்றானாம்

இறங்கும்போது
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறென்
என்றானாம்

கோணிக்கு வந்த
கோணல் ஆசை
தோனிக்கு ஒரு
மசால் தோசை

குனிந்த தலையை நிமிராமல் படித்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தால்

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-

-
-
-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-
-
--
-
-
-
--
-
-
-

-

35 comments:

Unknown said...

கவிச் சக்ரவர்த்தி படத்தை எல்லோரின் சார்பாக அண்ணனுக்கு வழங்குகிறேன்..

Unknown said...

சாரி பட்டத்தை ( இப்பதான் மூணாவது லார்ஜ்)

பத்மா said...

சூப்பர் தான் போங்கோ .கிண்டல் தான் கஷ்டம் .எழுதுவது சுலபம் .U HAVE PROVED IT AGAIN .HATS OFF மணிஜி

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

கோணி ஊசியாலயே குத்துறியேண்ணே..!

இனிமே முருகன் சத்தியமா நான் "அதை" உங்கிட்ட கேட்க மாட்டேண்ணே..!

உண்மைத்தமிழன் said...

சொல்ல மறந்திட்டேன். நானும் குத்தி்டடேன்..!

Chitra said...

கலக்கல்...... செம காமெடி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரீ-சைக்கிளிங்? :)

Paleo God said...

திருப்பிப்போட்டாலும்
வட்டமாகவே இருக்கிறது
தோசை...!!

நேசமித்ரன் said...

எகோ ஃபிரண்ட்லி அட்டைக் கோப்பையில் ஆவின் மோர் !

***************************

யாருக்கும் எஸ்கேப்பே இல்ல
மிக்ஸிங் அப்படி :)

vasu balaji said...

:)). சாமி வந்திருச்சிடோய்.:))))))

செ.சரவணக்குமார் said...

கலக்கல் மணிஜீ.

சிவகங்கை ராஜாராம் இன்னும் வர்லியா?

பெசொவி said...

ha....ha...ha....!

//
இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.
அன்புள்ளஎன் இனிய வலையுலகதமிழ் பெருங்குடி மக்களே.நான் எழுதிய இந்த ஹைக்கூ...சாரி ஹைட்கூ உங்களுக்கு பிடிக்கும்...
தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க
இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்
//

எப்படி சார், ........முடியலை!

butterfly Surya said...

ha....ha...ha....!

M.G.ரவிக்குமார்™..., said...

வழக்கமான கலக்கல்!.......

Cable சங்கர் said...

ரீ- எடிட்டட்..:)

தினேஷ் ராம் said...

:D

Vidhoosh said...

அண்ணனை தவிர பாக்கி இருக்கும் எல்லாரும் ஏன் ஓடிட்டாங்க. யாருமே இல்லையா?

anujanya said...

இதே மர்டர் வெறி தொடர்ந்தால் அடுத்த முறை ஏர்பஸ் வராது. ஆட்டோ வரும் :)

அனுஜன்யா

கலகலப்ரியா said...

அப்புறமா வர்றேன்...

Unknown said...

சூப்பர் spoof.

க ரா said...

எம்மா என்ன குசும்பு இது. எப்படி மணிஜீ இது. கலக்கறீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

சிவகாசிப் பட்டாசு போல.. கெளப்புதுண்ணே..:-)))

//கார்த்திகை பாண்டியனுக்கு அழகிரியின் கரங்களால் பொற்கிழி வழங்கப்பட இருக்கும் அபாயத்தை நாம் மறந்து விடக்கூடாது//

கொடுத்த காசுக்கு.. வெயிட்டு.. டாங்க்ஸ் தலைவரே..:-)))

உயிரோடை said...

தண்டோரா ஜி...

டெல்லிக்கு எப்போ வரீங்க.

போஸ்டர் அடிச்சி வரவேற்ப்புக்கு ஏற்பாடு செய்யலாமான்னு யோசிச்சி....

சூப்பரு.. எப்படி இப்படி

Thamira said...

:-))

மரா said...

அண்ணே முடியல...சிரிச்சு சிரிச்சு. :)

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

அடுத்த படத்துக்கு ராஜா சுந்தர்ராஜன் வைச்சு விமர்சனம் தான் போடுவாரு பைத்தியக்காரன்.

முடிவுகள் வருமென்று நம்ப வேண்டாம்

சிநேகிதன் அக்பர் said...

கவித. கவித..

எப்படிண்ணே.. அசத்துறீங்க போங்க.

பா.ராஜாராம் said...

:-)

ஹேமா said...

மணிஜீ...கவிதையெல்லாம் காக்கா கொண்டு போயிடிச்சாம்.நீங்க கவிதையில கிண்டல் பண்றீங்க.

பிச்சைப்பாத்திரம் said...

:-))

மணிஜி said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

மணிஜி said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

CS. Mohan Kumar said...

பல இடங்களில் சிரித்தேன்..

ஆமா என்ன தண்டோரான்னு வருது? மீள் பதிவோ?

மோனி said...

இப்பதான் படிச்சேன்...
கலக்கல் “ஜீ”...

கோணி ஊசியில குத்துனதைத்தான் ரொம்ப்வும் ரசிச்சேன்.

தனிமரம் said...

செமக்குத்து கவிதையும் கருத்துக்களும்.