Monday, May 24, 2010

மசால்வடையும் , ஒரு காதல் கதையும்






முரளி என்னுடன் படித்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. இந்த பெயர் காரணம் ரொம்ப நாள் எனக்கு தெரியவில்லை. நீங்கள் தஞ்சை ஞானம் தியேட்டரில் சினிமா பார்த்திருக்கிறீர்களா ? அது கொஞ்சம் வித்தியாசமான தியேட்டர். கவுண்டரில் ஆங்காங்கே கம்பம் மறைக்கும் என்ற போர்டு இருக்கும். உண்மைதான் . முன்னால் இருப்பவர் தலை மறைத்தால் கொஞ்சம் குனிந்து உட்காருங்கள் என்று கேட்கலாம் கம்பத்திடம் எப்படி கேட்பது. ஆனால் கம்பம் கூட நம் வேண்டுகோளை ஏற்க வாய்ப்பிருக்கிறது . நம்மாளுங்க. ஹீம். சரி அதை விடுங்கள். அந்த தியேட்டரின் இன்னொரு ஸ்பெஷல் மசால்வடை . டிக்கெட் வாங்குவதற்கு அலைமோதுவதை விட , வடை வாங்க கூட்டம் அலையும். அந்த வடைக்கு அப்படியொரு மவுசு . சும்மா சொல்லக்கூடாது . பாதி தோல் உரிக்கப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய் துருத்திக் கொண்டு, கையலகத்திற்கு புடைப்பாக சூப்பராக இருக்கும் .

ஒரு இடைவேளையில் எங்கள் மசால்வடை வாங்கும் முயற்சி தோல்வியடைந்தபோது , என்னை யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . நம்ம முரளிடா என்றான் உலக்ஸ். எங்களுக்கு ஸ்பெஷலாக வடை கொடுத்ததை நிறைய கொள்ளிக் கண்கள் கவனித்தன . எனக்கு பெறர்கரிய நட்பு வாய்த்தாற் போல் உணர்ந்தேன்.

டேய் நீங்களும் என்னை மசால்வடைன்னு கூப்பிடாதீங்கடா என்றான் மசால்வடை. அதான் அவன் இன்னொரு பெயர்.

சே..நீ என்னிக்குமே எனக்கு முரளிதாண்டா என்றேன் வாஞ்சையுடன் (வாசணையுடன்)

முரளி இங்கிலீஷில் கொஞ்சம் வீக் . நான் அவனை விட கொஞ்சமே ஸ்டிராங் . எனக்கு கொஞ்சம் என்று இழுத்தான்.

அவ்வளவுதானே . நான் சொல்லித்தரேன் என்றென்.

அதில்லைடா . உன் பேப்பரை மட்டும் கொஞ்சம் காட்டு போதும் என்றான்.

முரளியுடன் நட்பு வலுப்பட்டதற்கு அதுமட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருந்தது . சுகுணா . அவன் தங்கை . பெரிய வெங்காயத்தை சுருள், சுருளாய் அரிந்தாற்ப்போன்ற கேசம் . நல்ல இளந்தளிர் கொத்தமல்லி நிறம் . என்ன அவள் மீது மசாலா வாசனை அடிக்கவில்லை . கோகுல் சாண்டலில் குளிப்பாள் போல .எங்கள் ஸ்கூலில்தான் படித்தாள் . ஆனால் கவனித்ததில்லை. முரளி வீட்டிற்கு போனபோதுதான் இரட்டைப் பின்னலில் பார்த்தேன் . ஒரு ரோஜாவை இடது பக்கம் சொருகியிருந்தாள். முரளிஎன்னடி இது மசால்வடையா என்றான் . அதற்குப்பிறகு முரளி மீது எனக்கு அக்கறையும் , பாசமும் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. உலக்சுக்கு கூட கொஞ்சம் வருத்தம் . என்னடா மாப்ள என்றான்.

நான் சுகுணாவை காதலிக்கிறன்டா என்றேன்.

எனக்கு கூட அவ மேல ஒரு ஆசைதான் . ஆனா எங்கப்பன் தொலைச்சிடுவான் . எங்க வகையறாவில ஏகப்பட்ட அதிரசங்கள் இருக்குல்ல. எவ வீட்டு தூக்கு சட்டியில தொங்கப்போறேனோ என்றான். ஆனா நீ டிரை பண்றா . நான் ஹெல்ப பண்றேன்.

சரி எப்படிரா அவ கிட்ட சொல்றது ?

ஆனால் சுகுணா அதற்கு சந்தர்ப்பம் கொடுத்தாள் . முரளி எதிரில் என்னை பேர் சொல்லி அழைத்தற்கு அவனுக்கு கோபம் வந்தது . அண்ணான்னு கூப்பிடுறின்னான் . நான் பொறியில் அகப்பட்ட எலியாய் உணர்ந்தேன். ஆனால் சுகுணா ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனாள் .

சாரிடா இவளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி என்றான் முரளி.

விடுறா மச்சான் நம்ம சுகுதானே என்றேன்.

அதன்பின் நிறைய சந்தர்ப்பங்களில் காதலை சொல்லவில்லை . படிப்பு முடியட்டும் என்றேன் உலக்ஸிடம் . ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நானே மசால்வடை செய்ததை அம்மா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா நீ மட்டும் அவளை பார்த்தால் என்று நான் உளறியதை கவலையுடன் அப்பாவிடம் சொன்னாள் .

சுகுணா வீட்டில் (கவனிக்க முரளி வீடு இல்லை) அப்பளமும் இட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள் . ஒரு முறை அவள் வீட்டிற்கு போனேன் . அதற்கு முன் ஒரு சந்தில் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன் . முரளி வெளியில் போவதற்காக . முரளியின் சைக்கிள் மறைந்ததும் உள்ளே போனேன். சுகுணா அப்பளம் இட்டுக் கொண்டிருந்தாள் . என்னை பார்த்ததும் மலர்ந்தாள் . அல்லது இருந்தது . வேறு யாருமே வீட்டில் இல்லை .

சுகு யாரும் இல்லையா ?

தெரிஞ்சுதானே வந்த ..

இல்லை . முரளி கொஞ்சம் கிராமர் பார்க்கலாம்ன்னு சொன்னான் . அதான்

சரி அப்ப போயிட்டு வா என்றபடி உள்ளே போனாள் .

அவள் திரும்பி வரும்போது நான் அங்குதான் இருந்தேன் . ஒரு பொட்டலத்தை நீட்டினாள் .

என்ன என்றேன் காதல் ஜீரத்தில்

வீட்ல போய் பாரு . யாருக்கும் தெரியாமல்.

அவ்வளவு வேகமாய் நான் சைக்கிள் ஓட்டினதே இல்லை . வீட்டில் யாரும் இல்லை. கொல்லையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வேகமாய் கதவை திறந்து அதை பிரித்தேன் . அப்பளம் . அழ வேண்டும் போல் இருந்தது . அம்மா உள்ளே வந்தாள் . பசிக்குதாடா . தொட்டுக்க ஒன்னுமில்ல. பக்கோடா வாங்கிண்டு வர்றியா என்றாள் . எனக்கு சுகுணாவை முழுங்க வேண்டும் போல் இருந்தது . இந்த அப்பளத்தை பொறி என்றேன்.

தட்டில் கோலம் பொட்டுக் கொண்டிருந்தேன். மனசு முழுக்க அவளை சுற்றியே இருந்தது. என்னை தின்னிப்பண்டாரம்னு நினைச்சுட்டாளா? அவ மசால்வடை விக்கற புத்தி எங்க போகும் ? என் காதலை புரிஞ்சுக்கலையே அவ . அம்மா எதிரில் அழுதால் அசிங்கமாக இருக்கும். பசி வேறு . சாப்பிட்டு விட்டு உலக்ஸோடு அரண்மனை கிரவுண்டிற்கு போகலாம். அரை பாக்கெட் சிகரெட் பிடிக்கணும். அழணும். கேன்சர் வரணும் . என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சுகுணா வரணும் . உனக்காகத்தான் சுகுணா.. அவள் அழ வேண்டும் .

ஞானம் தியேட்ட்டர் இப்போது பாராக மாறியிருந்தது. உலக்ஸ் சரக்கு ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷ்டா மாப்ளை என்றான்.

மசால் வடை கிடைக்குமா?

ம்ம்..கிடைக்கும். சுகுணாவே சுட்டுத்தருவா ?

சரி . அப்படியே ரெண்டு அப்பளமும் என்றேன்

ஒரு பெரிய அப்பளத்தை அம்மா பொறித்துக் கொண்டு வந்தாள் . யார்டா கொடுத்தது இதை . பாருடா என்றாள் ..

அப்பளத்தின் நடுவில் அழகாக “ஐ லவ் யூடா என்று “ இருந்தது




22 comments:

Unknown said...

செம கதைன்னே.. நல்ல சினிமா ஐடியா

எறும்பு said...

மிஸ் பண்ணிடீங்களே மணிஜி

vasu balaji said...

நொறுக்கிட்டீங்களா:(

butterfly Surya said...

ஆஹா. அப்பளத்தில் ஒரு காதல் கதையா..??

iniyavan said...

உங்கள் கதைகள் எல்லாமே மனசை பிழியுது தலைவரே!

அம்மா கதை இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

அதற்குள் சுகுணாவா?

இதே போல் பல விசயங்கள் என் மனதிலும் இருக்குது தலைவரே!

அவ்வப்போது அசை போட்டுக்கொள்கிறேன்.

Kumky said...

தலைவரே..,

வார்த்தை வேகம் அபாரம்.



என்னை பார்த்ததும் மலர்ந்தாள் . அல்லது இருந்தது..

சாப்பிட்டு விட்டு உலக்ஸோடு அரண்மனை கிரவுண்டிற்கு போகலாம். அரை பாக்கெட் சிகரெட் பிடிக்கணும். அழணும். கேன்சர் வரணும் . என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சுகுணா வரணும் . உனக்காகத்தான் சுகுணா.. அவள் அழ வேண்டும் .

சிநேகிதன் அக்பர் said...

//எனக்கு சுகுணாவை முழுங்க வேண்டும் போல் இருந்தது //

இங்கதான் மணிஜீ தெரிகிறார்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு மணிஜி..

கிருஷ்ண மூர்த்தி S said...

அந்த நாளைய 'குமுதம்' தனமான கதை!

எஸ் ஏ பி அண்ணாமலை மட்டும் உயிரோடிருந்தாரானால், குமுதம் ஆசிரியர் குழுவில் இந்நேரம் சேர்ந்திருப்பீர்கள்!

Paleo God said...

கலக்கல் மணிஜீ..

ஒரே பீலிங்ஸ் ஆஃப் அப்பள வடை!!

CS. Mohan Kumar said...

முதல் சில வரிகளில் ஞானம் தியேட்டரில் படம் பார்த்த நினைவுகளை அருமையாய் கிளறி விட்டீர்கள். கதையும் முடிவும் இனிமை..

பா.ராஜாராம் said...

இன்னும் எத்தனை அப்பளங்கள் பாக்கி மணிஜி?

நல்ல வேலை, பால்யத்தில் நீர் எனக்கு நண்பனாய் இல்லை.

இப்படிக்கு,

நாலு சகோதரிகளின் ஒரே சகோதரன். :-)

ஆனா, கதை டாப்!

நேசமித்ரன் said...

சைடிஷ் கதைகள்-1

நல்லாருக்கு அண்ணே!

மெயின் டிஷ் கதை எழுதி நாள் ஆச்சு போல ..

:)

எல் கே said...

arumai

Romeoboy said...

கொக்கா மக்கா சான்சே இல்ல .. சூப்பர் தல ..

நர்சிம் said...

வானம்பாடிகள் said...

நொறுக்கிட்டீங்களா:(
//

அதேதான். நன்று தல.

க ரா said...

நல்ல கதை ஜீ.

மணிஜி said...

நன்றி முகிலன்

நன்றி ராஜகோபால்

நன்றி பாலா சார்

சூர்யா நன்றி

உலக்ஸ் நன்றி

கும்க்கி அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு

அக்பர் நன்றி

நன்றி ப்ரியா

நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா

நன்றி ஷங்கர்

நன்றி மோகன்குமார்

பாரா யோவ் இது ரொம்ப ஓவர்யா

நன்றி நேசமித்ரா..

நன்றி எல்.கே

நன்றி ரோமியோ

நன்றி கம்பரே

நன்றி இராமசாமி

பத்மா said...

ஒரு சமயம் இப்படிதான் கல்யாணங்களில் மணமகன் மணமகள் பேர் எழுதி போடுவார்கள் ..அந்த ஞாபகம் வந்தது .அது சரி மொத்தம் எத்தனை காதல்?

மணிஜி said...

//padma said...

ஒரு சமயம் இப்படிதான் கல்யாணங்களில் மணமகன் மணமகள் பேர் எழுதி போடுவார்கள் ..அந்த ஞாபகம் வந்தது .அது சரி மொத்தம் எத்தனை காதல்?
//

இப்படி டக்குன்னு கேட்டா எப்படி? எண்ணித்தான் சொல்லனும்..

பனித்துளி சங்கர் said...

//////ஒரு பெரிய அப்பளத்தை அம்மா பொறித்துக் கொண்டு வந்தாள் . யார்டா கொடுத்தது இதை . பாருடா என்றாள் ..

அப்பளத்தின் நடுவில் அழகாக “ஐ லவ் யூடா என்று “ இருந்தது /////////

அருமை . அதிலும் முடிவு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

மணிஜி said...

நன்றி பனித்துளி சங்கர்