Friday, May 28, 2010

மானிட்டர் பக்கங்கள்.........28/05/10
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் அல்லது மிகப்பெரிய ஜோக் நம்ம தலைவரின் பேச்சுதான் . அதாவது அண்ணா மறைந்த பின் , அடுத்த முதல்வராக இவரைத்தான் எம்ஜிஆர் முதல் அணைவரும் பரிந்துரை செய்தார்களாம். அட . இதையாவது நம்பித்தொலைக்கலாம். அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு கோயபல்ஸ் குண்டு . அதுதான் டாப் . இவர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் (எல்லாரையும் சேர்த்து ) அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதிலும் மக்கள் சேவைக்காகவே வாழ்ந்து மறைந்த திரு முரசொலி மாறன் முக்கியமாக சம்மதிக்க வில்லையாம் . தலைவருக்கு வயதாகி விட்டதால் அவர் உண்மையையே பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த மாதிரி அண்டப்புளுகையையாவது கொஞ்சம் தவிர்க்கலாமே தலைவரே .. பேராசை .

அடுத்து எம்ஜிஆரின் உப்பை தின்று வளர்ந்த சத்யா மூவிஸ் முதலாளி வீரப்பன் . இவருக்கும் அந்த வீரப்பனுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசங்கள் இருந்து விடப்போவதில்லை. இவரும் மந்திரியாக இருந்தவர் . அதுவும் ஜெயலலிதாவிடம் . மு.க சொல்கிறார் . எம் ஜி ஆர் ஆட்சியில் வீரப்பன் மந்திரியாக இருந்தபோதே என்னுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் என்று. ஆஹா .. அருமை தலைவரே . குஷ்பு கட்சியில் சேர்ந்தவுடன் கள்வொழுக்கம் பற்றி தலைவருக்கு நினைவூட்டியிருப்பாரோ ?


மாஜி மகராணிக்கு கொஞ்சம் புத்தி வந்தாப்ல இருக்கு. யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தன்னிடம் மனம் விட்டு பேசலாம் என்று சொல்லியிருக்கிறார் . மனம் விட்டு பேசலாம்தான் . ஆனால் எத்தனை நாளைக்குத்தான் மானம் விட்டு பேசுவது என்கிறார்கள் அணி தாவ முடிவெடுத்தவர்கள் . கண் கெட்ட பின் (உதய) சூரிய நமஸ்காரம் .


30 ஆம் தேதியை எதிர் நோக்கியிருக்கிறார் தமிழ்குடிதாங்கி . அன்றுதான் திமுக செயற்குழு கூட்டம் . அன்புமணியின் கோட்டை கழற்றுவதா , வேண்டாமா என்று அன்றுதான் முடிவெடுக்கப் போகிறார்களாம். தலைவரே ..நீங்க என்ன செய்யலைனாலும் பரவாயில்லை . தயவு பண்ணி அந்த கோட்டையும் , சூட்டையும் உருவிடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும் .மரம் வெட்டினா பாவம்னு கருடபுராணத்தில சொல்லியிருக்கா?

இன்று திருச்சியில் ஒரு புதிய கட்சி உதயம் ஆகிறது . அதாவது போன மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடாம். 20 லட்சம் பேர் கலந்து கொண்டு திருச்சியை நாறடிக்க இருக்கிறார்கள் என்று பாரிவேந்தர் சொல்லியிருக்கிறார். அவர்தான் நிறுவன தலைவர் . அதாவது எஸ் ஆர் எம் நிறுவனத்தின் தலைவர் . வழக்கம் போல் அரசியல் தூய்மை என்ற உளுத்துப் போன கோஷம்தான் . இந்த கட்சியில் சேர்வதற்கு முன் பாரி நற்பணி இயக்கத்தில் ஒரு வருடம் சமூகப்பணி ஆற்றியிருக்க வேண்டுமாம் . தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரங்கள் தூள் பரத்துகிறார்கள் . சின்ன பிள்ளைகள் ரைம்ஸ் சொல்வது போல் கட்சியின் பெயரை கூவுகிறார்கள். நம்ம தலையெழுத்து. மீண்டும் ஒரு ஜாதிக்கட்சி . (உடையார்களாம் ) . ஏற்கனவே ஒரு கல்வி தந்தை ஏசிஎஸ் முதலியார்களுக்காக ஒரு கட்சி ஆரம்பித்தார் . அரை சீட்டுக்கு கையேந்தி , அரசியலை தூய்மை படுத்த போகிறார்களாம். கல்வி விற்ற காசு . அடிச்சு ஆடுங்கப்பு .

ஊருக்கு இளைச்சவ பிள்ளையார் கோயில் ஆண்டி . இதுக்கு என்ன அர்த்தமாம் ? 92.7 ல் கேட்டது . அதாவது எவ்வளவு குண்டான ஆண்டியும், பிள்ளையார் கோயிலை சுத்தினா இளைச்சிடுவாங்களாம்.

கவிதைப்போட்டி முடிவுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஏற்கனவே அக்னி சுட்டெரிக்கிறது. இந்த நேரத்தில் எதற்கு அதை வேறு படித்து என்று நடுவர்கள் விட்டு விட்டார்களோ ? முடிவுகள் வேண்டாம் . அட்லீஸ்ட் நடுவர்கள் யாருன்னாவது அறிவீங்கப்பா . முன்பு பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி துணுக்குகள் வரும். இப்போது அந்த இடத்தை கவிதை போட்டி முடிவுகள் பிடித்துக்கொண்டு விட்டதோ ? இதை ஒரு இடத்தில் பின்னூட்டியபோது பிரசுரரிக்க வில்லை. அதனால் என்ன ?நெல் திருட வந்த
சுண்டெலி
உரலுக்கும்
உலக்கைக்கும் இடையில்

வாலில் சுற்றப்பட்ட
பட்டாசு வெடித்து
சரஸ்வதி அம்மணமாய்
கால் நகத்தை தரையில் பிராண்டி
ஆத்திசூடி எழுதியது நாய்

வானவில்லில் ஏழு வர்ணங்கள்
எட்டாவது வர்ணம்
தலைவர் உபயம்
வர்ணாசிரமம்
27 comments:

Paleo God said...

எம் ஜி ஆர் ஆட்சியில் வீரப்பன் மந்திரியாக இருந்தபோதே என்னுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் //

செம்மொழி!

Vidhoosh said...

வந்திருந்தேன்.

ரமேஷ் வைத்யா said...

Fire brand!

இராகவன் நைஜிரியா said...

எப்போதும் போல் மானிட்டர்... நல்லாவே இருக்கு

விஜய் said...

எப்பொழுதும் போல் நன்று

கவிதை போட்டி முடிவுகள் எப்ப வருமென்றே தெரியவில்லை ?

வாழ்த்துக்கள்

விஜய்

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

மேலவைத் தலைவராக வீரப்பனார் பதவியேற்கலாம் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது..!

அதற்குத் தயாராகத்தான் இந்த கள்ளத்தொடர்பு மேட்டராம்..!

அதோடு இனிமேல் தப்பித் தவறிகூட அ.தி.மு.க. பக்கம் வீரப்பனார் போய்விடக் கூடாது என்பதற்காகவும் முன் எச்சரிக்கையான போட்டுக் கொடுத்தலாம் இது..!

இன்று எனக்குக் கிடைத்த செய்தி இது..!

உண்மைத்தமிழன் said...

ஆமா.. இந்த ரமேஷ் வைத்யான்னு ஒருத்தர் உங்களுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்காரே..

எங்களையெல்லாம் பார்த்தா மனுஷனா தெரியலையா அவருக்கு..?

சொல்லி வைங்க.. நேர்ல பார்த்தேன். கைல இருக்குற பாட்டிலை பிடுங்கி அப்படியே சொருகிருவேன்..!

Sanjai Gandhi said...

முசொமாறன் யார்மக்கள் சேவைக்கு வாழ்ந்தார் என்று சொல்லவில்லையா? :)

மேலவைக் கொண்டுவருவதே தாவும் குரங்குகளுக்கு கிளை அமைக்கத்தானே.. நடக்கட்டும்.. ஜால்றா போடத்தான் நாங்கள் இருக்கிறோமே :))

vasu balaji said...

எப்பவும் போல் ஊருகாய் டாப்பு:)

Santhappanசாந்தப்பன் said...

//மானத்தை விட்டு....///

ஹஹா .ரசித்தேன்..

வழக்கம் போல நல்ல காரம்..

மங்குனி அமைச்சர் said...

//அரை சீட்டுக்கு கையேந்தி , அரசியலை தூய்மை படுத்த போகிறார்களாம். கல்வி விற்ற காசு . அடிச்சு ஆடுங்கப்பு . ////


இல்லை தல , அரசியல் கட்சிகளுக்கு டொனேசன் குடுத்து கட்டுபடி ஆகலையாம் ,(வருசத்துக்கு 10 டு 15 கோடி ஆகுதாம் ) கண்டவனுக்கு குடுக்குறத நாம சாதிஜனத்துக்கு குடுக்கலாம் அப்படின்னு இந்த முடிவு....... (நிஜமா சார்) , கட்சி ஆரம்பிச்சுட்டால் டொனேசன் கேட்ட முடியாதாம் .

பெசொவி said...

என்ன எழுதி என்ன?
நாம்தான் டிவிக்கும், அரிசிக்கும், ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலை போய் விட்டோமே, இன்னுமா இருக்கிறது நம்பிக்கை?

க ரா said...

வழக்கம் போல நக்கல் டாப்பு. கலக்குங்க மணிஜீ.

ரோஸ்விக் said...

மானிட்டர் கிக்காத் தான் இருக்குது. மஞ்சத்துண்டு தலைவருக்கு கள்ளத் தொடர்பு புதிதில்லையோ?

// மங்குனி அமைச்சர் said...

//அரை சீட்டுக்கு கையேந்தி , அரசியலை தூய்மை படுத்த போகிறார்களாம். கல்வி விற்ற காசு . அடிச்சு ஆடுங்கப்பு . ////


இல்லை தல , அரசியல் கட்சிகளுக்கு டொனேசன் குடுத்து கட்டுபடி ஆகலையாம் ,(வருசத்துக்கு 10 டு 15 கோடி ஆகுதாம் ) கண்டவனுக்கு குடுக்குறத நாம சாதிஜனத்துக்கு குடுக்கலாம் அப்படின்னு இந்த முடிவு....... (நிஜமா சார்) , கட்சி ஆரம்பிச்சுட்டால் டொனேசன் கேட்ட முடியாதாம் .//

இதுவும் உண்மையா இருக்குமோ...??

ஈரோடு கதிர் said...

//கண் கெட்ட பின் (உதய) சூரிய நமஸ்காரம் .//

அப்படியும் யூஸ் இல்ல... ஈரோட்ல

Sanjai Gandhi said...

கதிர், மாலை பத்திரிக்கைப் பார்க்கலையா நீங்க? மாலைமலர்னு நினைக்கிறேன்.. உங்க ஆள் நமஸ்காரம் பண்ணப் போறாராம்..

ILA (a) இளா said...

நடக்கட்டும்.. ஜால்றா போடத்தான் நாங்கள் இருக்கிறோமே //
ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்

அகல்விளக்கு said...

இந்த வாட்டி மானிட்டர்...

கியர் டாப்புல இருக்கு...

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மானிட்டர் பக்கங்கள் வந்துருக்கு..

செம ராவா..

vinthaimanithan said...

//மனம் விட்டு பேசலாம் என்று சொல்லியிருக்கிறார் . மனம் விட்டு பேசலாம்தான் . ஆனால் எத்தனை நாளைக்குத்தான் மானம் விட்டு பேசுவது என்கிறார்கள் அணி தாவ முடிவெடுத்தவர்கள்//

கலக்கலுங்கோவ்

சிநேகிதன் அக்பர் said...

சுர்ர்ர்ர்ர்ருன்னு இருக்கு அண்ணே.

ஆனா சீக்கிரம் இறங்கிடும். :)

butterfly Surya said...

சர வெடி..

மணிஜி said...

வருகை தந்து சிறப்பித்த மப்பர்களுக்கு நன்றிகள்..

Kumky said...

மணிஜீ...... said...
வருகை தந்து சிறப்பித்த மப்பர்களுக்கு நன்றிகள்..


நமக்கு இப்பத்தான் தெளிஞ்சது....

ஆனா படிச்சப்பொறவு ஏறிக்கிடுச்சு...மப்பச்சொன்னேன்.

காரம் அதிகம்...பரவால்ல ராவா இருக்கறதுனால....

நறுமுகை said...
This comment has been removed by the author.
நறுமுகை said...

அட விடுங்க இவங்க ஸ்டண்ட் முடியவே முடியாது..


www.narumugai.com

Mugilan said...

//30 ஆம் தேதியை எதிர் நோக்கியிருக்கிறார் தமிழ்குடிதாங்கி//

அவருக்கும் ஆப்பு வச்சாங்கல்ல! சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் தருவாங்களாம்! ஹிஹி!