ஏண்டா நீ கவுஜை எழுதலேன்னு யார் அழுதா என்று கேட்டார் ரமேஷ் வைத்யா. இனிமே கவிதைன்னு வாயை திறந்தே, பாருன்னு ஒரே டார்ச்சர். ஆனா அந்த கவிதை கொஞ்சம் பரவாயில்லைடா என்றார். பேருந்தில் காணவில்லை என்றொரு நோட்டிஸ் பார்த்து எழுதிய கவிதை.. மீண்டும்..
அம்மா எனக்கு கடைசியாக
வாங்கி தந்தது
அந்த ஆரஞ்சு கலர் சட்டை
வெளியில் போகும்போதெல்லாம்
அதைத்தான் போட்டுக்குவேன்
அம்மா செத்துபோன
அன்னிக்கு கூடத்தான்
அப்பா கூட சிலசமயம்
தோசை சாப்பிட போவேன்
சித்திக்கு தெரியாமல்
அந்த ஆரஞ்சு கலர் சட்டைக்கு
சாம்பார் ஊத்துப்பா...
அப்பாவை பெருமையாக
பார்த்துப்பேன்
இந்த சனியனை எங்கயாவது
ஒழிச்சுடுங்க
சித்தி திட்டும்போது..
ஆரஞ்சு சட்டையால்தான்
கண்ணை துடைத்துக்
கொண்டிருந்தேன்
பொருட்காட்சிக்கும்
அதே சட்டைதான்
அப்பாவுடன் எடுத்துக்கொண்ட
போட்டோவில்
சட்டை ஏனோ வெள்ளையாயிருந்தது
பேர் என்ன தம்பி?
ஆரஞ்சு கலர் சட்டைன்னு சொல்லுங்க
ஆரஞ்சு கலர் சட்டை பையன்
இங்கு இருக்கிறான்....
திரும்ப,திரும்ப
கேக்கும்போது எனக்கு
பெருமையாயிருந்தது
ஏனோஅப்பாதான்
வரவே இல்லை.....
ஒரு மொக்கை கவுஜை
அட்சய த்ருதியை
ஆண்மைக்குறைவு
இரட்டை இலையின் கதி
ஈசல் கனவுகள்
உன்மத்த காமம்
ஊத்த வாய் நாற்றம்
எத்தனுக்கு எத்தன்
ஏறு மயில் முருகன்
ஒரு முறை சொன்னால்
ஓட்டுக் களவாணி
ஒளவையார் தற்கொலை
ஓடுறா ஓசியில் குவார்ட்டரும்
ஓடுறா ஓசியில் குவார்ட்டரும்
பிரியாணியும் தர்றாங்களாம்
21 comments:
கண்டனங்கள் வரவேற்கபடுகின்றன
அஃக்.. அஃக்... அஃக்..
(சிரிக்கிறாங்களாமாம்)
முதல்ல நாந்தான்னு நினைச்சேன்...
மொக்கையாத்திச் சூடியிலயே ஔவையார கொன்னாச்சில்ல? இன்னுமா கையரிக்குது?
ஒட்டு போட்டாச்சு மணிஜீ.
பேர் என்ன தம்பி?
ஆரஞ்சு கலர் சட்டைன்னு சொல்லுங்க
ஆரஞ்சு கலர் சட்டை பையன்
இங்கு இருக்கிறான்....
ஒரு நொடி நெஞ்சம் கனத்தது.
அய்யய்யோ இங்க ஒர்த்தரு கொலைவெறி பிடிச்சு அலையறாருடோஈஈஈஈ....
சத்தியமா உங்கள இல்ல மணிஜி.... மீ எஸ்கேப்...
உனக்கு கை அரிக்குதுன்னு எழுதி இப்போ அத படிச்சு எனக்கு உடம்பு முழுசும் அரிக்குது பா...
மணிஜி,
ஏற்கனவே படிச்ச கவிதைதானே இது. மீள்பதிவா?
முதல் கவிதை முன்பே வாசித்திருக்கிறேன்.உங்களின் best 1. (மீள்?)
:-)
அண்ணா நாமம் வாழ்க. புரட்சித்தலைவி நாமம் வாழ்க.
மீள்பதிவு போடுற அளவுக்கு அப்படியென்ன வெட்டி முறிக்கிற வேலை பாக்குறீங்க ஸார்..?
:) முதல் கவிதை ஒரு பெரிய வாழ்க்கை தத்துவம். இரண்டாவது அதற்கு திருஷ்டி
மாஸ்டர் பீஸும் மட்கிய பீட்சாவும்
:)
வேலை அதிகமாண்ணே ?!
:)
முதல் கவிதை மிக அருமை மணிஜீ. ஒரு குறும்படம் போல, சிறுகதை போல அழுத்தமான பதிவு.
முதல் கவிதைக்காக.... அரிக்கிற கையைப்பற்றி குலுக்கலாம்....
மனசு கனக்க.... பிரியாணிக்கு ஓடுகிறேன்
மணிஜீ... உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கவிதய எதிர்பார்க்கவேயில்லை. ஆரம்பிக்கும் போது வழக்கம் போல மொக்கையாத்தான் இருக்கும்னு நினைச்சேன், ஆனா மனசு ரொம்ப கனத்துப்போச்சுங்க. ரெண்டாவது கவிதைய போடாமையே இருந்திருக்கலாம். ஏன்னா ஆரஞ்சு சட்டைத்தான்.. இன்னும் மனசுல ஓடுது
//ஏண்டா நீ கவுஜை எழுதலேன்னு யார் அழுதா என்று கேட்டார் ரமேஷ் வைத்யா//
ரமேஷ் வைத்யா வாழ்க.. வாழ்க..
Consult a good dermatologist! Get well soon.
மொக்கையாத்திச் சூடியிலயே ஔவையார கொன்னாச்சில்ல? இன்னுமா கையரிக்குது?//
இதை நான் வழி மொழிகின்றேன்..
Post a Comment