Thursday, May 27, 2010

முகம் தெரியாத என் காதலா...


கண் கொத்தி பாம்பைப் போல் கவனித்துக் கொண்டே இருந்தாள் மனைவி. அதற்கெல்லாம் அசரும் ஆளா நான் . ஒரு சந்து கேப்பில் சிந்து பாடி விட்டேன். பெரிசா ஒன்னுமில்ல . திருச்சியில் வைகையை பிடிக்க வேண்டும். அங்கு காவிரிதானே என்று கடிக்க வேண்டாம் . ட்ரெயின் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. எதாவது புக்ஸ் வாங்கிட்டு வரேன்னு , விளம்பி விட்டு அவசரமாக வெளியில் வந்தேன் .

ஆட்டோ . இங்க பக்கத்தில் எங்க இருக்கு என்றேன்.

முச பிடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தாலே தெரியும் என்பது போல , ஒயின் ஷாப்தானே சார் . உக்காருங்க என்றான் ஆட்டோ

கொடுமை . அங்கு பார் இல்லை . பக்கத்தில் ஒரு வண்டியில் சாக்கு படுதா மறைவில்தான் குடிமக்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள் . ஒரு 15 வயது பையன் வாயில் சிகரெட்டுடன் நெருப்பு வேணுமா என்பது போல் பார்த்தான். நான் எப்போது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன் என்ற ஆராய்ச்சி இன்னொரு நாள். ஆனால் இந்த தருணத்தில் ஒரு சத்தியம் செய்ய ஆசைப்படுகிறேன். அதாவது அந்த கருமத்தை விரைவில் தொலைத்து விடுகிறேன். பேக் டூ டாஸ்மாக் . 25 பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்பளரை 3 ரூபா கொடுத்து வாங்கினேன் .(ரேஷனில் 3 கிலோ அரிசி வாங்கலாம் . தலிவரின் வெற்றி ரகசியம்) . மூடியை திறக்கும்போது ஒரு டாணாக்காரன் வந்துவிட்டான். லத்தியை சுழற்றியபடியே . இங்க நிக்காதீங்க போங்க என்றான் . மாமூல் உயர்வுக்கு அடி போடுகிறான் போல. எனக்கு நேரமில்லை. இங்கு என் மனைவியைப்பற்றி சொல்ல வேண்டும். ரயில் வரும்போது நான் இல்லையென்றால் அவள் கவலைப்படமாட்டாள் . அவள் பாட்டுக்கு ஏறி போய் விடுவாள் . டிக்கெட்டும் அவளிடம்தான் இருந்தது. ஒரு ஸ்பிரைட் பெட் பாட்டில் வாங்கி , சரக்கை அதில் மாற்றி மறைத்துக் கொண்டேன் . ஸ்டேஷன் உள்ளே நான் நுழையும்போது, வைகை பெருமூச்சோடு வந்து கொண்டிருந்தது.

எங்க போய் தொலஞ்சீங்கன்னு பார்வையால் கேட்டாள் மனைவி. அப்போதுதான் நியாபகம் வந்தது . பேருக்கு கூட ஒரு புத்தகம் வாங்கவில்லையென்பது. வழக்கமான அசடை வழிந்தேன். பூனைக்குட்டியை மடியில் கட்டிக் கொண்டது போல் இருந்தது .ஸ்ரீரங்கம் தாண்டினவுடன் பாத்ரூமுக்கு போய் விட வேண்டியதுதான். கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அவள். என்னையும் அவ்வாறே . உள்ளே இருக்கும் சரக்கை நினைத்தபடியே நானும் . “கடவுளே .. நிம்மதியா குடிக்க வழி பண்ணு”

டாய்லெட்டில் நுழைந்து கதவை தாளிட்டேன் . உள்ளிருந்து வாளை உருவி (அட..பாட்டிலுங்க) வாயில் சரித்துக் கொண்டேன். மீதியை பத்திரப்படுத்தினேன். கதவை திறந்தால் அவள் நின்றிருந்தாள் .

எக்ஸ்யூஸ்மீ சுத்தமா இருக்கா என்றாள் . நான் பதில் சொல்லாமல் நகர்ந்தேன். வாசனை வருமே என்ற நாகரீகம்தான் . மனைவி கேட்டதற்க்கெல்லாம் தவில் வித்வான் மாதிரி தலையை மட்டும் ஆட்டினேன். அந்தப் பெண் எங்கள் எதிரில் வந்து அமர்ந்தாள் . மனைவியை விட அழகாக இருந்தாள் என்று சொல்லலாம் . ஆனால் மனைவி காதில் விழக்கூடாது. அவ்வளவுதான். மீண்டும் மூளையில் மரங்கொத்தி . மீண்டும் பாத்ரூம். அப்போதுதான் அதைப்பார்த்தேன் .

“முகம் தெரியாத என் காதலா... முடிந்தால் என்னை கண்டுபிடிடா “ என்று அழகாக எழுதியிருந்தார்கள் . சற்று முன் இது நிச்சயமாக இல்லை . ஒரு வேளை அந்தப்பெண் எழுதியிருப்பாளோ ? போதையில் சற்று புத்தி தடுமாற , அதன் கீழ் என் அலைபேசி எண்ணை எழுதி விட்டு வெளியில் வந்து விட்டேன். இப்போது அந்த எதிர் இருக்கைகாரியின் பார்வை எனக்கு வேறாக இருந்தது. அவள் பார்வையில் காதல் அல்லது ஏதோ ஒரு தேடல் இருப்பதாக பட்டது. அவள் மீண்டும் பாத்ரூமுக்கு போனாள் . திரும்பி வருகிறாள் . என்னைப்பார்த்து புன்னகைக்கிறாள் . தன் மொபைலை எடுத்தாள். சர்வ நிச்சயமாக என் நம்பரை சேவ் செய்கிறாள் என்று நினைத்தேன்.

அவள் தாம்பரத்தில் இறங்கினாள் . என் மனைவியிடம் வார்த்தையாலும், என்னிடம் பார்வையாலும் விடை பெற்றாள் . அசட்டு துணிச்சலுடன் போன் பேசுவது போன்ற செய்கையை காட்டினேன் .

இரண்டு நாள் போனது. ஒரு அழைப்பு வந்தது . ஹாய் ஹனி என்றது தேன் குரல் . டச் விட்டுப்போனதால் கொஞ்சம் தயங்கி ஹாய் என்றேன்.

முகம் தெரியாத என் காதலா .. முகத்தை காட்டேன்டா என்றது மறு முனை .

அதன் பின் பேசிக்கொண்டது எல்லாம் வேண்டாம். சந்திப்புக்கான இடத்தை குறித்துக் கொண்டோம் .

என்ன சீக்கிரம் வந்துட்டிங்க என்றாள் மனைவி.

ஒரு கிளையண்டோட ரிசப்ஷன் . என் ஜீன்ஸ் அயர்ன் பண்ணியிருக்குல்ல என்றபடி மார்னிங்குளோரியை பீச்சிக் கொண்டேன்.

யார் அது கிளையண்ட் ? உங்களப்பார்த்தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு . ஜிப்பா போட்டு கிட்டு போங்களேன் என்றாள்.

எனக்கு சட்டென்று அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அடிப்பாவி .. சக்களத்தியை பார்க்கப்போறேண்டி..

காரை நிறுத்தி விட்டு காத்திருந்தேன். ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். முகம் தெரியாத காதலிக்கு சிகரெட் வாசனை பிடிக்குமா என்று ஒரு எண்ணம் ஓடியது. மொபைல் அடித்தது. அவள்தான் . வந்துட்டீங்களா ?

வெயிட்டிங் டார்லிங் என்றேன் உற்சாகமாய்

அவள் வந்தாள் . ஆனால் வைகையில் பார்த்த எதிர் சீட்காரி இல்லை. பளிச்சென்று இருந்தாள் . மசெவின் ஓவியம் நீ என்று அவளை வர்ணிக்க வேண்டும். இப்போது இல்லை . இன்னும் இரண்டு ,மூன்று சந்திப்புக்களுக்கு பிறகு.

சாரி நான் கொஞ்சம் லேட் என்று கொஞ்சியவள் மொபைல் அடிக்க ..

ம்ம்.. வந்துட்டாரு . வாங்க என்றாள் .

எனக்கு அடி வயிற்றில் ஐஸ் கத்தியை சொருகியது போல் இருந்தது . யாரை வரச் சொல்கிறாள் ? தர்ம அடியா ? ஈவ் டீசிங்கா ? மகளிர் காவல் நிலையம் .. பான் பராக் போட்ட பெண் இன்ஸ்பெக்டர் ... ஐயோ.. ஒரு நிமிஷம் தலை சுற்றுவது போல் இருந்தது ..ஹலோ என்று இன்னொரு பெண் குரல் கேட்டது. மிகவும் பரிச்சயமான குரல் .. என் மனைவியின் குரல்தான் அது..

30 comments:

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. ஹா..

அண்ணாச்சி கிளைமாக்ஸ் செம காமெடி..!

இது சொந்த அனுபவமாண்ணே..?

வால்பையன் said...

தனியார் புலனாய்வில் இம்மாதிரி செய்வதுண்டு!,

கேரக்டர் அசாசினேஷன்!

iniyavan said...

வாசு சார்ட்ட சொல்லீட்டிங்களா?

அடுத்து உங்க புத்தகம்தான்.

தினமும் ஒரு கதையா கலக்கறீங்க தலைவரே!

Vidhoosh said...

//அயர்ன் பண்ணியிருக்குல்ல//

குரலைக் கேட்டதும், ஏற்கனவே அப்படித்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனாலும் வந்து பண்ணிருவாங்க.. :))

புனைவு நல்லா இருக்குங்க.

பா.ராவும், நேசனும் வந்தாக்க களை கட்டும் வாய்ப்புடைய கதை.

பித்தன் said...

உங்களுக்கு நேர்ந்ததுதானே சும்மா மறைக்காம சொல்லுங்க....

vasu balaji said...

அப்புறம்?:)))))

தராசு said...

முடிவு கலக்கல் தல

Paleo God said...

ஹும்ம் புனைவிலும் ஒரு வாழ்வு இருக்கத்தான் செய்யுது..:-)

Santhappanசாந்தப்பன் said...

ஹா.. ஹா..கலக்கல்!

சொந்த புனைவு.. :))

செ.சரவணக்குமார் said...

அருமையான ஃப்ளோ தலைவரே. கலக்கலான உங்கள் நடையை மிக ரசித்தேன்.

ஆனா, எல்லோரும் சொல்ற மாதிரி சொந்த அனுபவமா இல்லையா என்பது பா.ரா வந்த பிறகுதான் தெரியும்.

நேசமித்ரன் said...

மின்சார வலைன்னு கொஞ்ச வருஷம் முன்னாடி எழுதி வச்ச கதை மாதிரியான ஒண்ணு நினைவுக்கு வருதுண்ணே !

:)

உங்க பிராண்ட் கதை

தன்னிலை மொழிதல்-கொஞ்சம் குடி- கொஞ்சம் extra marital -குட்டி ட்விஸ்ட் கிளைமாக்ஸ்

நல்லா இருக்குண்ணே

CS. Mohan Kumar said...

குஜாலா, காமெடியா, பாவமா இருக்கு.. உங்களை நினைச்சா :))

மதன்செந்தில் said...

அடடா.. பொண்டாட்டி குரல் கூட தெரியாத மக்கா நீங்க?? ஸேம், ஸேம் பப்பி ஸேம்



www.narumugai.com

பா.ராஜாராம் said...

"birds need you this summer"

விதூஸ் தளத்தில் இப்படி ஒரு வாசகம் பார்த்த நினைவு. பார்திருக்கீரா ஓய்?

you / we allways in summer! :-))

நளினி சங்கர் said...

"முகம் தெரியாத என் காதலா..." தலைப்பே ரொம்ப அருமைங்க

////25 பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்பளரை 3 ரூபா கொடுத்து வாங்கினேன் .(ரேஷனில் 3 கிலோ அரிசி வாங்கலாம் . தலிவரின் வெற்றி ரகசியம்)//// .

//// இங்கு என் மனைவியைப்பற்றி சொல்ல வேண்டும். ரயில் வரும்போது நான் இல்லையென்றால் அவள் கவலைப்படமாட்டாள்////.

நான் மிகவும் ரசித்த இடங்கள்...
வாழ்த்துக்கள் மணிஜி

அகநாழிகை said...

கதை அருமை மணிஜி. சொல்லிய விதம் இன்னும் பிடித்தமானதாக இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர்...
 
மனசை தைரியப்படுத்திக்கிட வேண்டியதான்.. வேறு வழியில்லை :-)

ரோஸ்விக் said...

அண்ணே கிளைமாக்ஸ்-ல என்ன நடந்ததுன்னு தெரியலை. ஆனா உங்க எழுத்து நடை அப்படியே எல்லா கதையிலும் கையப்புடிச்சு கூடவே கூட்டிக்கிட்டு வருதுண்ணே...

அ.முத்து பிரகாஷ் said...

// தனியார் புலனாய்வில் இம்மாதிரி செய்வதுண்டு!,
கேரக்டர் அசாசினேஷன்! //
எங்க காலேஜில் சில பசங்களை கலாய்க்க எங்க பொண்ணுங்க எப்படி பண்றதுண்டு ...

// ரயில் வரும்போது நான் இல்லையென்றால் அவள் கவலைப்படமாட்டாள் . அவள் பாட்டுக்கு ஏறி போய் விடுவாள் //

ரசித்தேன் மணிஜ்...

Chitra said...

கலக்கல் முடிவு. :-)

ஈரோடு கதிர் said...

புனைவா!!!!!!!!!!!!!??????

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே அந்த ட்விஸ்ட் சூப்பர். அப்போ எழுதியது அவங்கதானா.

மணிஜி said...

அண்ணே..கொஞ்சம்னு சொல்லலாம்

நன்றி வால்

உலக்ஸ் நன்றி.. புத்தகம் போடறதுதான் எழுதறதை நிறுத்துவதற்கு முதல் அடி

நன்றி விதூஷ்

பித்தன் நன்றி

பாலா சார் சொல்றேன் அப்புறம்

தராசு சார் நன்றி

நன்றி வெண்ணெய்

பிள்ளையாண்டான் நன்றி

சரவணா நன்றி..முடிந்தால் அழைக்கவும்

நேசமித்ரா நன்றி..


நன்றி நம்மூர்காரரே..மோகன்

நன்றி பா.ரா

நன்றி மதன்

வாசு நன்றி

பாராட்டுக்கு நன்றி நளினி சங்கர்

உழவன் நன்றிகள்

நன்றி தம்பி ரோஸ்விக்

நன்றி சித்ரா மேடம்

நன்றி நியோ

நன்றி கதிர் (முடிதாம்யா உமக்கு கவர்ச்சி)

நன்றி அக்பர்

Unknown said...

கிட்டத்தட்ட அல்ல கிட்டத்தடாத இதே மாதிரி ஒரு கான்செப்டில் கொஞ்ச நாள் முன்னாடி வால் ஒரு காமாக் கதை எழுதியதா நினைவு...

ஆமா, வாலே இதைப் பத்திச் சொல்லல உனக்கென்ன வந்ததுன்னு மனசாட்சி கேக்குது.

பத்மா said...

இதுக்குத்தான் எங்க பாத்தாலும் போன் நம்பர எழுதி வைக்க கூடாது ...செம சாத்தா?

Unknown said...

நிதர்சனம் ..

geethappriyan said...

அண்ணே கதை ரொம்ப லைவ்லி,உங்க நேரேஷன் எனக்கு எப்போதும் பிடிக்கும்.எனக்கு ஒரு புத்தகம் பார்சல்

Mahi_Granny said...

சீக்கிரமே சிறு கதை தொகுப்பு ஒன்று வெளியிடலாம் . வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
அப்புறம்?:)))))||

அப்புறம் என்ன.. இவிங்க தவில் வித்துவான் மாதிரி தலைய மட்டும்தான் ஆட்டினாய்ங்க... கச்சேரி எப்பூடின்னு ஆத்துக்காரம்மா சொல்லிக் கொடுத்திருப்பாய்ங்க..

அத்திரி said...

superb